Mar 26, 2012

Jalsaghar-[The Music Room]இசையை ரசித்து...வறுமையை ருசித்தவன்.


கோண்ங்கள் பிலிம் சொசைட்டியில் மார்ச் 25 ஞாயிறு... பவர்கட் மாலையில்... சத்யஜித்ரேயின் ஜல்சாகர் திரையிடப்பட்டது.
படத்தின் பிரிண்ட் குவாலிட்டி பார்த்து அதிசயித்துப்போனேன்.
கிரைட்டீரியான் நிறுவனத்தார் வெளியிட்ட டிவிடி அது...
அப்பா...என்னா குவாலிட்டி....
பிரேம் டூ பிரேம் ஜொலிக்குது.
ரேயின் பதினேழு படங்களை இதே மாதிரி டிஜிடல் ரீ மாஸ்டர் செய்து வெளியிட்டுள்ளார்களாம்.
எப்பா... கிரைட்டீரியா...நீ வாழ்க...உன் குலம் வாழ்க...

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் முதன் முதலாக பெருமை தேடித்தந்த பிதாமகன் சத்யஜித்ரே.
அவரது மாஸ்டர்பீஸ் வரிசையில் பதேர் பஞ்சலி,அபராஜிதோ,
அபு சன்சார்,சாருலதா மட்டுமே அடுக்கியிருந்தேன்.
இந்த நிமிடம் முதல்....  ஜல்சாகரையும் சேர்த்து விட்டேன்.


ஒரு ஊரிலே...ஒரு ஜமீந்தார்...
நாட்டிலுள்ள இசை கலைஞர்களை வரவழைத்து...
 தனது அரண்மனையில் கச்சேரி செய்ய வைத்து...
 நண்பர்களோடு கூடி குடித்து...இசையை ரசிப்பதே முழு நேர தொழில்.
வறியவர்களுக்கு வாரி வளங்குவது உப தொழில்.
உட்கார்ந்து சாப்பிட்டா இமயமலையே காணாம போயிரும்.
சொத்தும் போய்...மனைவியும், மகனும் வெள்ளத்தில் போய்...
 ஜமீந்தார் தனி மரமாகிறார்.
ஆசை மகன் மரணித்த அதிர்ச்சியில் கச்சேரி கொண்டாட்டங்களை நிறுத்தி விடுகிறார்.
ஜமீன் வாழ்க்கையின் எச்சமாக...
 இரண்டு விசுவாச வேலைக்காரர்களும்,
மகனால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு யானையும்,ஒரு குதிரையும்,
 300 ரூபாய் பணமும் மிச்சமாக இருக்கிறது.
சரஸ்வதியும்...மகா லட்சுமியும் வெளியேறி...வவ்வாலும்..சிலந்தியும் குடி புகுந்த  அரண்மனையில் மீண்டும் இசை ஒலித்ததா?
படம் பாருங்கள்.

ரே ஒவியராக இருப்பதால் அவரது படங்கள் ஷாட் பை ஷாட் ஒவியங்களாக இருப்பதை நீங்கள் உணர முடியும்.
பதேர் பஞ்சலியில் ரேவுடன் இணைந்த ஒளிப்பதிவாளர் சுபர்ணோ மித்ரா.... ஜல்சாகரிலும் தனது கை வரிசையை காட்டி உள்ளார்.
ரேவும் சுபர்ணோ மித்ராவும் இணைந்ததில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.
அடிப்படையில் சுபர்ணோமித்ரா ஸ்டில் காமிரா கலைஞர்.
ஒரு திருமணத்தில் மித்ரா எடுத்த புகைப்படங்களை பார்த்து வியந்த ரே தனது பதேர் பஞ்சலி படத்தில் பணி புரிய அழைத்தார்.
அதற்க்கு மித்ரா...
“எனக்கும் ரொம்ப நாளா மூவி கேமராவை பார்க்கணும்னு ஆசை”என்றார்.

என் வாழ்நாளில்... இனி மறக்க முடியாத திரைப்படத்திலிருந்து....
 மறக்க முடியாத ஒரு காட்சி...
ஜமீந்தார் தனது அரண்மனையில் மொட்டை மாடியில் நின்று பார்க்கிறார்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மருந்துக்கு கூட ஒரு மரம் இல்லை.
வறிய பிராமணனின் மார்பில் வளைந்து ...திரிந்து ...நைந்து கிடக்கும் பூணுல் போல...
 ஒரு மணல் பாதை மட்டும் கிடக்கிறது.
தொலை தூரத்தில் அவருக்கும்...அவரது மகனுக்கும் பிரியமான யானை நின்று கொண்டிருக்கிறது.
அப்போது ஒரு புது பணக்காரனது கார் புழுதி பறக்க வேகமாக செல்கிறது.
அப்போது கிளம்பும் புழுதிப்புயலில் அவரது யானை மறைந்து விடுகிறது.
இத்தனை நிகழ்வுகளையும் ரே சிங்கிள் ஷாட்டில் அடக்கி இருக்கிறார்.
நான் இத்தனை வார்த்தைகளை செலவு செய்தும் அந்த ஷாட்டின் கவித்துவத்தை ஒரு சதவீதம் கொண்டு வர முடியவில்லை எழுத்தில்.....
ஏனென்றால் சினிமா...பவர்புல் விசுவல் மீடீயா.

“சூரிய உதயத்தை பார்த்து ரசிக்காதது எவ்வளவு பெரிய குற்றமோ....
அதை விடப்பெரிய குற்றம் ரேயின் படங்களை பார்க்காமலிருப்பது”
நான் சொன்னது அல்ல...
உலகசினிமாவின் பிரம்மா அகிரா குரோசுவா சொன்னது.

விக்கிப்பீடீயா உபயத்தில் இப்படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் விபரம் :
(On screen) - Begum Akhtar, Roshan Kumari, Ustad Waheed Khan, Bismillah Khan
(Off screen) - Dakhshinamohan Thakur, Ashish Kumar, Robin Mazumdar, Imrat Khan

18 comments:

  1. படம் பார்க்கணும் போல இருக்கு...உங்க விமர்சனம் படிச்ச வுடன் ...

    ReplyDelete
  2. எவ்ளோ விஷயங்கள் தெரியாமலே இருக்கின்றன...நன்றி!

    ReplyDelete
  3. //சூரிய உதயத்தை பார்த்து ரசிக்காதது எவ்வளவு பெரிய குற்றமோ....
    அதை விடப்பெரிய குற்றம் ரேயின் படங்களை பார்க்காமலிருப்பது //

    பதேர் பாஞ்சலியும் சாருலதாவும் 4 மாசமா என் கம்யூட்டர்ல தூங்குது இந்த வாரமாவது பாக்கணும் :)

    ReplyDelete
  4. @கோவை நேரம்

    //படம் பார்க்கணும் போல இருக்கு...
    உங்க விமர்சனம் படிச்சவுடன் ...//
    நண்பரே!
    நீங்கள் இந்தப்படம் பார்த்தால் எனக்குத்தான் அந்த புண்ணியம் வந்து சேரும்.

    ReplyDelete
  5. @விக்கியுலகம்

    //எவ்ளோ விஷயங்கள் தெரியாமலே இருக்கின்றன...நன்றி!//
    எனக்கு மிகவும் பிடித்த வியட்நாமை உங்கள் பதிவுகளின் மூலம் நான் அறிந்து கொள்கிறேன்.
    எனக்கு தெரிந்த உலகசினிமாவை எனது பதிவுகளின் மூலம் நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.
    நம்மை இணைத்த பதிவுலகிற்க்கு நன்றி சொல்வோம்.

    ReplyDelete
  6. @ஆனந்த்
    //பதேர் பாஞ்சலியும் சாருலதாவும் 4 மாசமா என் கம்யூட்டர்ல தூங்குது... இந்த வாரமாவது பாக்கணும்//

    பதேர் பஞ்சலி முதலில் பார்த்து விடுங்கள் நண்பரே!
    அந்தப்படத்தின் தாக்கமே மற்ற படங்களை தேடிப்பிடித்து பார்க்க வைத்து விடும்.
    பதேர் பஞ்சலிக்கு அந்த மந்திர சக்தி உண்டு.

    ReplyDelete
  7. வழக்கப்படி, இந்தப் பதிவையும் படிக்கல. காரணம், இந்தப் படத்தைப் பார்க்கணும். பார்த்துபுட்டுதான் இதைப் படிப்பேன் :-) ...பெர்சனலா, ரே பத்தி நினைக்கும்போது, ரித்விக் கடக் பத்தி நினைக்காம இருக்க முடியல. ரேவுக்கும் முன்னோடி கட்டக். ஆனா..........? :-(

    ReplyDelete
  8. இந்திப் படங்கள் பற்றி பெரிதாக ஆர்வமில்லை. நீங்க சொன்ன பிறகு பார்க்க ஆர்வமாக இருக்கிறது. எங்காவது நல்ல க்வாலிட்டி ப்ரிண்ட் இணையத்தில் கிடைக்கிறதா என்று பார்ப்போம். நன்றி ரசிகரே.

    ReplyDelete
  9. @Rajesh Da Scorp
    //ரே பத்தி நினைக்கும்போது, ரித்விக் கடக் பத்தி நினைக்காம இருக்க முடியல. ரேவுக்கும் முன்னோடி கட்டக். ஆனா......//

    ரே ஐரோப்பிய படங்களின் தாக்கத்தில் படமெடுத்தவர்.
    கட்டக் பக்கா ஒரிஜினல்.

    ReplyDelete
  10. @ஹாலிவுட் ரசிகன்
    நண்பரே!
    ஜல்சாகர் இந்திப்படமல்ல...வங்காள மொழிப்படம்.
    ரேயின் படங்கள் இணையத்தில் கிடைக்கிறது.
    எனது வேண்டுகோள்...முதன் முதலாக பதேர்பஞ்சலியிலிருந்து ரேயின் படம் பார்க்க துவங்குங்கள்.

    ReplyDelete
  11. முழுசா ரேயின் ஒரு படத்த கூட இன்னும் நா பாத்ததில்ல. ஏதாச்சு வேல வந்து கெடுத்திரும். மறுபடியும் பாக்கணும்ன்னு ஏன் தோணலைனு தெர்ல........

    இந்த வாரம்....இதான் வேல........

    ReplyDelete
  12. @உலக சினிமா ரசிகன்: எனக்கு சத்ய ஜித்ரே படம்னா ரொம்ப பழசா போர் அடிக்கும்னு ஒரே பீலிங்கு இருக்குது.. உங்க பதிவு அந்த பீலிங்க கம்மி பண்ணி இருக்கு பாப்போம்..

    ReplyDelete
  13. கொழந்த
    //முழுசா ரேயின் ஒரு படத்த கூட இன்னும் நா பாத்ததில்ல. //

    ரேயின் படம் பார்க்காத இந்தியருக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை என்று பார்த்தேன்.
    ஆள் உயர அண்டாவில் கழுத்தளவு தண்ணீரில் 24 மணி நேரம் வேக வைத்து புல் பாயில் செய்வார்களாம்.
    பரவாயில்லையா...?

    ஆனால் வருகிற பவுர்ணமிக்குள் அபு டிரையாலஜி பார்த்து விட்டால்
    தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  14. @காஸ்ட்ரோ கார்த்தி
    //எனக்கு சத்ய ஜித்ரே படம்னா ரொம்ப பழசா போர் அடிக்கும்னு ஒரே பீலிங்கு இருக்குது..//

    ரேயின் படங்கள் போர் அடிக்கும் என்பது ரேயின் படங்கள் ஒன்று கூடப்பார்க்காதவர்கள் கிளப்பி விட்ட வதந்தி...
    நீங்கள் மணிரத்னத்தின் இருவர்...
    பாலாவின் பிதாமகன்....ரசித்தவர் என்றால்...
    ரேயின் படங்கள்...
    உங்களுக்கு திருநெல்வேலி அல்வா போல...

    ReplyDelete
  15. hello sir,
    this is senthil from cbe. ur writing flow is too good. surprisingly i saw ur profile u also in cbe. if u have a time, plz send ur cell NO. I have a question to create a blog and tamil writing. so plz

    thanking you

    senthil kumar.S

    ReplyDelete
  16. @செந்தில்
    என்னுடைய மொபைல் எண் 90039 17667 தொடர்பு கொள்ளவும். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  17. Can I have your mail id?

    ReplyDelete
  18. அந்த இயக்குனர் பிதாமகனை சில மாதங்களுக்கு முன்னம் அறிய தெரிந்தேன்.ஒரு வாரம் முன்புதான் பாதர் பாஞ்சலியும் பார்த்து வியந்தேன்..என்ன அற்ப்புதமான கவித்துவமான படைப்பது.உண்மையான சினிமாவை கண்ட மௌனத்தை சில மணி நேரங்கள் உணர்ந்தேன்.
    அதற்குள் அவரது இன்னொரு படத்தை பற்றிய தங்களது விமர்சனம்.என்னை தூண்டிவிட்டது..பார்க்கிறேன்..ரசிக்கிறேன்.நன்றி அண்ணா.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.