Aug 24, 2013

கோவை ‘பன் மால்’...அக்கிரமம்...அநியாயம்...அராஜகம்.


நண்பர்களே...
கோவை பன்மாலில் உள்ள  ‘உணவு வளாகத்தில்’ நண்பரோடு சாப்பிடச்சென்றேன்.
500 ரூபாய் கொடுத்து ‘அட்டை’ வாங்கினேன்.
அட்டைக்கு ‘20 ரூபாய்’ ஸ்வாகா செய்யப்படும்.
‘480 ரூபாய்க்கு’ மட்டுமே உணவு வாங்கிக்கொள்ளலாம் என்றாள்
ஒரு ‘தமிழ் மகள்’.

 “குடிக்க தண்ணீர் எங்கு இருக்கிறது?”

 “தண்ணீர்  ‘பாட்டில்தான்’ வாங்க வேண்டும்”.

உடலெங்கும் கோப மின்சாரம் பரவியது.
என் மகளை போலிருந்தாள்  அந்தப்பெண்.
வார்த்தைகளில் உஷ்ணத்தை... பில்டர் செய்து...
“ தண்ணீர் வேண்டும் என கேட்பது என் உரிமை...
தரவேண்டியது உங்கள் கடமை... 
புகார் புத்தகம் இருக்கிறதா? ” என்றேன்.

ஒரு புத்தகத்தை நீட்டினாள்.
நண்பன் புகாரை எழுதி கையெழுத்து போட்டான்.
நானும் போட்டேன்.

இந்த புத்தகம் படிக்கப்படாது... எடைக்குப்போகும் சாத்தியமே  அதிகம்.
எனவே இவ்விவகாரத்தை தொடர்ந்து மேலெடுத்து செல்ல தீர்மனித்தேன்.
முதலில்  ‘பேஸ்புக்கில்’ ஸ்டேட்டஸ் போட்டேன்.

*********************************************************************************
கோவையில் உள்ள ‘பன் மாலில்’ உள்ள ‘புட் கோர்ட்டில்’
குடி தண்ணீர் வைக்கப்படவில்லை.
கேட்டால் ‘பாட்டில்’ தண்ணீர் வாங்கி குடிக்கணுமாம்.
புகார் புத்தகத்தில் இக்குறையை நீக்கச்சொல்லி, ஒரு வாரக்கெடுவும் கொடுத்து வந்துள்ளேன்.
ஒரு வாரத்திற்குள் அவர்கள் திருந்தவிலையென்றால் என்ன செய்வது?
எப்படி அவர்களை திருத்துவது?
ஐடியா கொடுங்க...மக்களே.



*********************************************************************************
நண்பர்கள் கீதப்பிரியன், ‘மெட்ராஸ் பவன்’ சிவா’...  ‘பதிவர் கேபிள் சங்கரை’
தொடர்பு கொள்ளச்சொல்லி பின்னூட்டம் போட்டு இருந்தார்கள்.
சிவாவிடம், கேபிள் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டேன்.
கேபிள் இந்த மாதிரி விவகாரங்களில் தொடர்ந்து போராடி வெற்றி கண்டு வருபவர்.
அவர் வகுத்து தந்த திட்டப்படி இந்தப்பிரச்சனையை மேலெடுத்து செல்லப்போகிறேன்.
இந்த ஆப்பரேஷனில் முதல் படியே இந்தப்பதிவு.

என்னோடு இணைந்து போராட உங்கள் அன்பும் ஆதரவும் தேவை.


வாருங்கள் தோழர்களே...
'கேட்டால் கிடைக்கும்’.

‘கேட்டால் கிடைக்கும்’ முகநூல் குழுமத்தில் இணைய இந்த இணைப்பில் செல்க...

அடுத்தப்பதிவில் சந்திப்பொம்.