Sep 19, 2011

எங்கேயும் எப்போதும்-பதற வைக்கும் படம்


2011ல் தமிழ் சினிமா மிகவும் மோசமான பாதையில்
 பயணித்துக்கொண்டிருந்த போது
ஒரு விபத்தாக வந்திருக்கிறது எங்கேயும் எப்போதும்.
அதுவும் ஒரு விபத்தை களமாக அமைத்து.
இந்த முயற்ச்சி பாராட்டப்படவேண்டிய முயற்ச்சி.
மனிதாபிமானத்தை வலுவாக வேறூன்றச்செய்யும் தரமான தமிழ் படம்
 இது என்பதில் தமிழனான எனக்கு சற்று கர்வம் கலந்த பெருமை.

பைனல் டெஸ்டினேசன் பார்ட் 1,2,3,4,5 என ஹாலிவுட் மசாலாப்படம் மனிதாபிமானத்தை கொன்று காசு பார்க்கும் அவலத்தை கண்டு பொறுமிக்கொண்டிருந்தேன்.
சமீபத்திய வரவான பைனல் டெஸ்டினேசன் பார்ட்5 த்ரீடியில் பார்க்கும் கொடுமைக்கு ஆளானேன்.
என் பக்கத்தில் ஒருவன் தனது காதலியுடன் வந்திருந்தான்.
அந்தப்படத்தில் மனிதர்களை விதவிதமாக கொத்துக்கறி போடுவதை சத்தம் போட்டு சிரித்து ரசித்து மகிழ்ந்தான்.
நிச்சயம் அந்தப்பயல் 100% சைக்கோ.
அந்தப்பெண்ணுக்கு அந்தக்காதல் தோற்று அந்த சைக்கோவிடம் இருந்து விடுதலை கிடைக்க நாமெல்லாம் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.

எ.எ தயாரித்த முருகதாசுக்கு முதல் வணக்கம்.
குரு தந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திய சிஷ்யன் சரவணனுக்கும் முதல்மரியாதை.
இரண்டு பஸ்கள் நேரடியாக மோதி விபத்துக்குள்ளாகிறது.
அதில் பயணிக்கும் பயணிகளின் கதியை...அவஸ்தையை மிக விஸ்தாரமாக காட்டி கலவரப்படுத்துகிறது படம்.
பாடல் படமாக்கப்பட்ட விதத்தில் ‘மகேந்திர’ஜாலம் தெரிகிறது.

படத்தில் வரும் காதல் காட்சிகள் புத்தம்புதுசாய் இருக்கிறது.
அஞ்சலி என்ற அதிசயப்பிசாசு என்னாமாய் ஜாலம் காட்டுகிறது!!!!!!!!!!!!!.

ஜெய் இப்படத்தில் அற்ப்புதமாக நடித்து முந்தைய பட பாவங்களுக்கு பரிகாரம் தேடி உள்ளார்.
ஒட்டு மொத்த டீமே அசத்தி உள்ளார்கள்.
இப்படத்திற்க்கு நியாயமான வெற்றியை தமிழ் ரசிகர்கள் வழங்க வேண்டும்.
இதுதான் என்னுடைய இப்போதைய உடனடிக்கவலை.
இல்லையென்றால் மங்காத்தா பார்ட் 2,முனிபார்ட் 3 போன்ற மசாலாக்கள்தான் கதியென்றாகிவிடும்.
இப்படத்தின் மிகப்பெரிய குறை ....
இரண்டாம் முறை பார்க்க முடியாது.
அந்த விபத்துக்காட்சிகளை இரண்டாம் முறை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.ஆனால் இரண்டாம் முறை பார்க்க வேண்டும் என்ற தவிப்பு அலையாய் அடிக்கிறது. 

Sep 1, 2011

மரணதண்டனையை கண்டிக்கும் Dancer In The Dark&12 Angry Men

மரண தண்டனையை நீக்கு.... என தமிழ் நாடே கொந்தளித்தது.
போலி காங்கிரஸ்காரன் மட்டும் மரண தண்டனையை நிறைவேற்று என கூப்பாடு போட்டான்.
இடைக்கால நிவாரணம் நீதிமன்றம் வழங்கியது.
நீதிமான்களுக்கு நன்றி.
மூவரும் விடுதலை ஆகும் நன் நாளே....
 சகோதரி செங்கொடியின் ஆன்மா சாந்தியடையும்.

மரண தண்டனையை பற்றி மிக முக்கியமான இரண்டு படங்கள் வந்துள்ளன.
ஒன்று.... டான்சர் இன் த டார்க்.
மற்றொன்று.... 12 ஆங்கிரி மேன்.

டான்சர் இன் த டார்க்கை இயக்கியவர் லார்ஸ் வான் டிரயர்.

இவரது படங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிக்கும் கருத்து கண்டிப்பாக இருக்கும்.

இந்தப்படத்தில் அமெரிக்காவில் குடியேறிய ஒரு தாய் தனது மகனின் கண் பார்வை சிகிச்சைக்காக பணம் சேர்த்து வருகிறாள்.
அந்தப்பணத்தை திருடுகிறான் ஹவுஸ் ஒணர்.
இவன் ஒரு போலிஸ்காரனும் கூட...
அந்தத்தாய் தடுத்து போராடும்போது விபத்தாக துப்பாக்கி வெடித்து மரணமகிறான்.
கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்க நீதிமன்றம் அந்ததாய்க்கு மரணதண்டனையை பரிசாக வழங்குகிறது.

அகதியாக வந்தவரை கொலை வழக்கில் சிக்க வைத்து மரண தண்டனை வழங்குவதில் இந்தியாவும் அமெரிக்காவும் அண்ணன் தம்பிகள்.

12 ஆங்கிரி மேனை இயக்கியவர் சிட்னி லூமேட்.

இந்தப்படத்தின் மூலம் அமெரிக்க நீதி மன்றத்தை காயடித்திருக்கிறார்.
மிகச்சரியாகச்சொன்னால் *த்தடித்து சுண்ணாம்பு தடவியிருக்கிறார்.
12 ஜூரர்கள் ஒரு சிறுவன் வழக்கில் தீர்ப்பு சொல்ல கூடுகிறார்கள்.
வந்ததும் வராததுமாய் அந்தச்சிறுவனை குற்றவாளி என தீர்ப்பெழுத தயாராகிறார்கள்.
ஒரே ஒருவர் மட்டும் எதிர்க்கிறார்.

உண்மையை தனது வாதத்திறமையால் திறம்பட எடுத்துரைத்து மற்றவர் அனைவரையும் தனது பக்கம்...அல்ல..அல்ல...நியாயத்தின் பக்கம் இழுத்து வெற்றி காண்பதே படம்.

இந்த இரண்டு படங்களையும் பார்த்தால்....
மரண தண்டனை வேண்டும் என அடம் பிடிக்கும் பன்னாடைகள் கூட திருந்திவிடும் .

செப்டம்பர் 2 முதல் 12ம் தேதி வரை மதுரை புத்தகக்கண்காட்சியில்....
 அரங்கு எண் 15 ல்....
 உலக சினிமா டிவிடி கலெக்‌ஷன் காண வாருங்கள்.
நேரில் சந்திப்போம்.