

இப்படத்தை இயக்கி பாராட்டை குவித்த இரட்டையர்கள் Juan Carlos Cremata&Iraida Malberti Cabrera.


மாலு 12 வயது சிட்டுக்குருவி...அப்பர் கிளாஸ் அம்மா....டைவர்ஸ் அப்பா.....அன்பேசிவமான பாட்டி...
ஜோர்கிடோ 11 வயது குறும்பன்....மிடில் கிளாஸ் அம்மா,அப்பா....

இரண்டு குழந்தைகளும் கிளாஸ்மேட்ஸ்&பிரண்ட்ஸ்.....
இவர்களது பெற்றோர்கள் டாம்&ஜெர்ரிதான்.....
மாலு அம்மா:அவனோட பழகாதே...அவங்கெல்லாம் லோகிளாஸ்
ஜோர்கிடோ அம்மா:அந்த குட்டி கூட பேசாதே...திமிர் பிடிச்ச பணக்கார ஜாதி...
இந்த போதனைகளை எரித்து நட்பு என்கிற பீனிக்ஸ் பிறக்கிறது.மாலுவின் பாட்டி இறந்ததும் மாலுவின் அம்மா தனது காதலனுடன் வாழ அமெரிக்கா செல்ல முடிவெடுக்கிறாள்.மாலு அம்மாவை விட்டுவிட்டு அப்பாவிடம் செல்ல ரகசிய திட்டம் போடுகிறள்.மாலுவுக்கு துணையாக இவனும் ஒடி வர தயார்...இங்கே பிறக்கிறது அழகிய ரோடு மூவி.

கிட்டத்தட்ட காஷ்மீர் To கன்யாகுமரி பயணம்.இங்கே கியூபாவின் ஆன்மாவை தரிசிக்கலாம்...குழந்தைகளின் பயம்,கோபம்,பொறாமை,அன்பு என அனைத்தையும் பாசாங்கில்லாமல் காட்டியிருக்கிறார்கள்
இயக்குனர்கள்.இவர்கள் பயணிக்கும் இடங்கள்...சந்திக்கும் மனிதர்கள் நம் மனதில் பச்சை குத்தி குடியேறுகிறார்கள்.



இப்படம் பார்க்கும் போது சே இன்னும் கியூபாவில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதை உணரமுடிகிறது.நம் தலைவர்கள் எலெக்சன் வரும்போதுதான் காமராஜர்,அண்ணா.எம்ஜியாரை நினைவுபடுத்தி கொண்டாடுவார்கள்.
தயவு செய்து விஜய் படம் பார்க்கும் குழந்தைகளை விவா கியூபா,சில்ட்ரன் ஆப் ஹெவன்,சாங் ஆப் சாரோ,ஸ்பிரிட்டட் அவே பார்க்க வையுங்கள்.நல்லது நடக்கும்.
