நண்பர்களே...
நல்ல படம் நம்மை அலைக்கழிக்கும்.
தேட வைக்கும்.
‘ஷீப் ஆப் தீசியஸ்’ என்னை ‘பிளாட்டோ’ தத்துவத்திற்குள் துரத்தியது.
என் கையில் வைத்திருக்கும் ‘பிளாட்டை’ விற்க படாதபாடு பட்டுக்கொண்டு
இருக்கிறேன்.
இச்சூழலில்,
‘பிளாட்டோவை’ தேடிப்படிக்கும் முரண்சுவை... சுவாரஸ்யமாக இருக்கிறது.
‘பிளாட்டோ’ என்ற தத்தவஞானியின் பெயரிலிருந்துதான்...
‘பிளாட்’ என்ற பெயரே உருவாகி இருக்கிறது.
*********************************************************************************
பிளாட்டோ பற்றிய அறிமுகமாக தமிழ் விக்கிப்பீடியா குறிப்பை அப்படியே தருகிறேன்.
பிளாட்டோ (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார்.
இவர் சாக்கிரட்டீசின் சீடர்,அரிஸ்டாட்டிலின் குரு.
பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் அறிஞராவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவ தர்க்கங்களை எழுதியுள்ளார்.
இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் அகாடமியை நிறுவினார்.
இவர் தனது ஆதரவாளர் சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டிலின் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
பிளாட்டோவின் உரையாடல்கள், தத்துவம், தர்க்கம், நெறிமுறைகள், சொல்வளம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளை கற்பிக்க பயன்பட்டது.
*********************************************************************************
பிளாட்டோ பற்றி படிக்கும் போது அவர் உருவாக்கிய முக்கிய கருத்தாக்கம் என்னை பிரமிக்க வைத்தது."மக்களை ஆளும் அரசாங்கம் நேர்மை தவறாதிருக்க வேண்டும்.
அரசாங்கத்தில் மக்களின் சார்பாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு கடுமையான சட்டத்திட்டங்கள் இருக்க வேண்டும்.
அவர்களுக்கென்று சொத்துக்கள் வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கக் கூடாது.
சம்பளமும் கிடையாது.
பொது உணவு நிலையங்களில் உணவும்,
அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள அரசாங்க கட்டடத்தில் தங்கவும்,
தூங்கவும் அனுமதிக்க வேண்டும்.
அப்படி செய்வதால் சுயநலம் அவர்களிடம் இருக்காது.
இலஞ்சங்களுக்கு விலை போகமாட்டார்கள்.
அவர்களுடைய குறிக்கோள் சமூதாயத்தில் ´நேர்மை´ என்னும் அறத்தை நிலைநாட்டுதல் ஒன்றையே குறியாக கொண்டு செயல்பட வேண்டும்."
நமது பெருந்தலைவர் காமராஜர் இந்த தத்துவத்தை படித்தாரா என எனக்குத்தெரியாது.
ஆனால் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
அந்த படிக்காத மேதைக்கு இப்பதிவை காணிக்கையாக்குகிறேன்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.