நண்பர்களே...
இருபதுக்கும் மேற்பட்ட உலகசினிமாக்களை பார்த்து விட்டேன்.
எழுதுவதற்கு, ஒரு படம் கூட தேறவில்லை.
நேற்று சில மலையாளப்படங்கள் டிவிடி வாங்கினேன்.
அதில் ஒன்று... ‘செல்லுலாய்ட்’.
பதிவுலக நண்பர் கோவை ஆ.வி.
இப்படம் பற்றி விதந்தோதி என் காதில் சங்கு ஊதியும்...
‘மாற்றுத்திறனாளியாகத்தான்’ இருந்தேன்.
நேற்றிரவு 11 மணிக்கு ‘செல்லுலாய்ட்’ பார்த்து முடித்தேன்.
விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தூங்க முடிந்தது.
காரணம்...மலையாளத்தில் முதல் சினிமாவை தயாரித்த
J.C. டேனியல் நாடார்.
மலையாள சினிமாவின் பிதாமகன் J.C. டேனியல் நாடார்,
வாழ்க்கை வரலாற்றை... மிக நேர்த்தியான திரைக்கதையின் மூலம்... காவியம் படைத்திருக்கிறார் இயக்குனர் கமல்.
இவரது இயக்கத்தில் வந்த ‘பெருமழைக்காலமும்’ என் தூக்கத்தை கரைத்திருக்கிறது.
சினிமாவின் வலிமையான ஆயுதங்களை பிரயோகித்து பார்வையாளர்களை வீழ்த்துவதில் சூரன் இயக்குனர் கமல்.
இவரது ஆளுமைக்கு... சமீபத்திய கட்டியம் ‘செல்லுலாய்ட்’.
ஹிந்தியில் ‘தாதா சாகேப் பால்கே’...
தமிழில் ‘நடராஜ முதலியார்’ போன்றவர்கள்...
திரைப்பட தயாரிப்பில் ‘முதன் முதல்கள்’.
இவர்களின் தாக்கத்தால்... மலையாளத்தில் முதன் முதலாக திரைப்படம் தயாரிக்க ஆசைப்படுகிறார் பி.சி.டேனியல் நாடார்.
தலித் வகுப்பை சேர்ந்த ரோஸம்மாவை ‘ரோஸியாக்கி’ கதாநாயகியாக்குகிறார் டேனியல் நாடார்.
கேரளாவில், தலித்தை விட தாழ்த்தப்பட்ட சமூகமாக...
மிதிக்கப்பட்ட நாடார் வகுப்பை சார்ந்தவர் ’டேனியல்’.
உயர் ஜாதி வகுப்பை சார்ந்த நாயர்களும், நம்பூதிரிகளும் படத்தை ஓட விடாமல் தடுத்து ’டேனியல் நாடாரை’ நடுத்தெருவில் நிறுத்துகின்றனர்.
கடனும்...வறுமையும்...கைகோர்த்து துரத்த..
தமிழ்நாட்டிலுள்ள ‘அகஸ்தீஸ்வரத்துக்கு’ புலம் பெயர்ந்து அங்கேயே மரித்துப்போகிறார் டேனியல் நாடார்.
இப்படத்தின் திரைக்கதை ‘தங்கமீன்களை’ போல தறி கெட்டு ஓடவில்லை.
ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறது.
சினிமா எடுத்து நலிந்து போன டேனியல் நாடார்,
பல் மருத்துவம் படித்து பிரபலமான மருத்துவராக புதுக்கோட்டையில் வாழ்ந்ததை சொல்கிறது.
புதுக்கோட்டையில் ‘ஓகோவென’ வாழும் போது...
அன்றைய ‘சூப்பர் ஸ்டார்’ பி.யூ.சின்னப்பாவால் ஏமாற்றப்பட்டு மீண்டும் வீழ்ந்ததை ‘விழுமியமாக்குகிறது’.
மலையாளத்தில் முதல் சினிமாவாக...
தயாரிப்பாளர் + இயக்குனர் ‘மாடர்ன் தியேட்டர் சுந்தரம் அய்யர்’ உருவாக்கிய ‘பாலன்’ திரைப்படம் கொண்டாடப்பட்ட போலித்தனத்தை ‘போட்டுத்தாக்குகிறது’.
ஒரு பத்திரிக்கையாளன்,
பசியால் பரிதவிக்கும் டேனியல் நாடாருக்காக...
அரசு அதிகார வர்க்கத்திடம் போராடி...
ஜாதீய காரணங்களால் தோற்றுப்போகும் துயரத்தை துணைக்கதையாக்குகிறது.
படத்தின் கதாநாயகி ரோஸம்மாவை...படத்தை பார்க்க விடாமல் துரத்தியடிக்கின்றனர் மேல் ஜாதி இந்துக்கள்.
ஜாதிக்கொடுமையின் கொடூர கூச்சலை உக்கிரமாக காட்டி...
பார்வையாளர் இருதயத்தில் ஆணியடிக்கிறது ‘திரைக்கதை’.
இத்திரைக்கதையின் மிக வலுவான பக்கங்கள் இவை.
இத்திரைப்படத்தின் தாக்கமும்...
தமிழ் திரைப்பட பிதாமகன்கள் வரலாறு படமாக்கப்படாத ஏக்கமும்...
இன்னும் சில தூக்கமில்லா இரவுகளை...உருவாக்கும்.