Showing posts with label காஸ்டா கவ்ராஸ். Show all posts
Showing posts with label காஸ்டா கவ்ராஸ். Show all posts

Jul 6, 2013

AMEN = 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட வரலாறு.



நண்பர்களே...
‘ஆமென்’ படத்தில் காட்சி ரூபமாகவும்,
வசன ரீதியாகவும் வரலாற்று நிகழ்வுக்குள் நம்மை அழைத்து செல்கிறார் இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.


AMEN \ 2002 \ German, Romanian and French \ Directed by Costa - Gavras \ Part - 3.

போன பதிவில்,
யாரைச்சுட்டான்? என்ற கேள்வியோடு முடித்திருந்தேன்.
விடையை தெரிந்து கொள்ள...
‘ஆமென்’ படத்தை கொஞ்சம் ‘ரிவைண்ட்’ செய்து பார்ப்போம்.

‘துப்பாக்கி இளைஞன்’ உலகநாடுகள் சங்க உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அரங்கினுக்குள் நுழைகிறான்.
ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார்.
“ This year of 1936,
consequently we must Today..."

நுழைந்தவன், மேடையில் அமர்ந்திருக்கும் கனவான்களிடம் ‘நோட்டிசை’ விநியோகிக்கின்றான்.


மேடையில் அமர்ந்திருந்த ஒரு தாடிக்கார கனவான் காவலர்களை அழைக்கிறார்.
" Guards...Guards..." 

நோட்டிசை வீசி எறிகிறான்.
அனைவரும் ஆவலோடு ‘காட்ச்’ செய்கின்றனர்.
நோட்டிஸ் முழுவதையும் வீசி எறிந்து விட்டு,
சபையோரை பார்த்து முழங்குகிறான்.


" My name is Stephan Lux.
I am Jewish.
The Jews are being persecuated in Germany and the World dosen't care." 

எனப்பேசிக்கொண்டே,
துப்பாக்கியை வெளியே எடுக்கிறான்.
துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு தொடர்கிறான்.


" I see no other way to reach people's hearts."
எனச்சொல்லி விட்டு,
தன்னைத்தானே சுட்டுக்கொண்டு...
தற்கொலை செய்து கொள்கிறான்...
‘யூத முத்துக்குமார்’.
_________________________________________________________________________________

ஹிட்லர் உலகம் முழுக்க 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்தான்.

இது பற்றிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ செய்தியை அப்படியே தருகிறேன்.

பெரும் இன அழிப்பு என்பது,
மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் 
ஜெர்மனியில் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை, 
குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான 
ஹோலோகாஸ்ட்(Holocaust) என்பதற்கு 
இணையாகப்பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இது அக்காலத்தில் ஜெர்மனியில் ஆட்சியில் இருந்த,
அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான, 
இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது. 
யூதர்கள் தவிர வேறு பிற இனத்தவர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களுள், 
ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர், பொதுவுடமைவாதிகள்
போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர்
மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள் ஆகியோர்கள் அடங்குவர். 

பல அறிஞர்கள், 
பெரும் இன அழிப்பு என்னும் போது, 
மேற்படி எல்லாப் பிரிவினரையும் சேர்த்துக்கொள்ளாமல் 
யூதர்களின் படுகொலையை மட்டுமே குறிப்பர்.
ஜெர்மன் அரசு, 
இதனை "யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு" என வர்ணித்தது. 

நாஸி ஜெர்மனியில் 
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் 
மொத்தத்தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் 
எனக்கருதப்படுகிறது.
இத் தொல்லைகளும் படுகொலைகளும் ஜெர்மனி அரசினால் 
பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. 

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னரே இயற்றப்பட்டது. 

வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, 
அங்கே கொண்டு வரப்படுபவர்கள் களைப்பாலும், 
நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். 
கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளை  கைப்பற்றிய ஜெர்மனி, 
சிறப்புப்படையணிகள் மூலம், 
யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. 

யூதர்களும், ரோமாக்களும்... 
நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டு, 
பின்னர் அங்கிருந்து சரக்குத்தொடர்வண்டிகள் மூலம் 
நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த 
கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 
பலர் வழியிலேயே இறந்து போயினர். 
எஞ்சியோர் நச்சு வாயு அறைகளுள் அடைத்துக்கொல்லப்பட்டனர். 

அக்கால ஜெர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும், 
இக்கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. 
ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசாக விளங்கியது என 
ஓர் அறிஞர் குறிப்பிட்டார்.

ஹோலோகாஸ்ட் பற்றி மிக அற்புதமாக எனது நண்பர் கீதப்ரியன் எழுதி உள்ளார்.
ஹோலாகாஸ்ட் பற்றிய தகவல்கள், ஆவணப்பட ங்கள் பற்றிய விபரங்கள் என அனைத்தும் ஒரு ‘கலைக்களஞ்சியமாக’ அவரது பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

‘ஹோலோகாஸ்ட்’ பற்றிய நண்பர் கீதப்ரியன் பதிவிற்கு இந்த இணைப்பில் செல்க...

________________________________________________________________________

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம் 1939 - 1945 என வரலாறு குறிப்பிடுகிறது.


“ This year of 1936,
consequently we must Today...”

“ The Jews are being persecuated in Germany and the World dosen't care.” 

என்ற வசனங்களின் மூலமாக,
இரண்டாம் உலகப்போருக்கு முன்பே...
ஹிட்லர் ஜெர்மனியில் யூத அழிப்பை தொடங்கி விட்டதை எடுத்துக்காட்டுகிறார் இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.


‘கான்சன்ட்ரேஷன் & லேபர் கேம்ப்ஸ்’ [ Concentration and Labor Camps ]
என்ற பெயரில் முகாம்களை அமைத்து,
1933 - 1945 வரை ஹிட்லர் ‘யூத இன அழிப்பு’ செய்தான்.

1935ல் ‘நியூரம்பர்க் சட்டம்’ என சட்டம் ஒன்றை இயற்றி,
‘யூத இன அழிப்பை’ தீவிரப்படுத்தினான் ஹிட்லர்.

1936ல் உலகநாடுகள் சங்கம் கூடியதை,
ஆமென் படத்தின் துவக்க காட்சியாக வைத்து...
யூத இன அழிப்பு விவகாரத்தில்...
‘உலக நாடுகள் சங்கம்’ என்ற அமைப்பு செயல்படாத தன்மையை எடுத்துக்காட்டுகிறார் இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.

 ‘உலக நாடுகள் சங்கம்’ இரண்டாம் உலகப்போரில் முடிந்து போனது.
ஆனால்,  ‘யூத இன அழிப்பு’ விஷயத்தில்...  
‘மற்றொரு அமைப்பும்’ செயல்படாமல் இருந்ததை எடுத்துக்காட்டவே 
‘ஆமென்’ படத்தையே எடுத்திருக்கிறார் இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.

ஆனால் அந்த அமைப்பு இன்றும் பொலிவுடன் இருக்கிறது.
அந்த அமைப்பு எது ?

அதைத்தான் இனி வரும் பதிவுகளில் பார்க்கவிருக்கிறோம்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
  

Jul 3, 2013

AMEN = ‘அப்படியே ஆகுக’.



நண்பர்களே...
இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து, 
ஏகப்பட்ட ‘பன்றிக்குட்டிகளை’ வாரி வழங்கி இருக்கிறது  ‘ஹாலிவுட்’.
அவை அனைத்திலும், 
நம்மை உணர்ச்சி வயப்படுத்தி கொந்தளிக்க வைத்து காசு பார்க்கும் கலையே பிரதானமாக இருக்கும்.
உலகசினிமா இயக்குனர்கள் படங்களில் இத்தகைய செப்பிடு வித்தைகள் இருக்காது.
பிரச்சனையின் ஆணி வேர்களை அலசும் இவர்களது படங்கள்.
மறைந்திருக்கும் உண்மைகளை ‘சந்திக்கு’ இழுத்து வருவார்கள்.
இந்த அணியில் உள்ள முக்கியமான இயக்குனரான காஸ்டா கவ்ராஸ் ‘இரண்டாம் உலகப்போரை’... 
‘மற்ற இயக்குனர்கள் பார்க்க மறுத்த கோணத்தில்’ பார்த்தார்.
அதன் விளைவே ‘ஆமென்’.

AMEN \ 2002 \ German, Romania, French \ Directed by : Costa - Gavras \ Part - 2
_________________________________________________________________________________


# 1. காஸ்டா கவ்ராஸ் தனது படங்களில், 
முக்கியமான அரசியல் கருத்தை... 
‘தீமெட்டிக்காக’ வைத்து படம் முழுக்க  ‘வெடிக்க’ வைத்து விடுவார்.
எவ்வளவு பெரிய அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கும் 
‘ஆண்மை மிக்க இயக்குனர்’ காஸ்டா கவ்ராஸ்.
இவரது துணிச்சலான முயற்சிக்கு ‘ஆமென்’ படமே முக்கிய சாட்சி.

படத்தின் தலைப்பே, படத்தின் மையக்கருத்தை பறை சாற்றுகிறது.
‘ஆமென்’ என்ற சொல்... 
கிருத்துவ மத பிரார்த்தனையில் இறுதியாக சொல்லப்படுவது.
ஆமென் = அப்படியே ஆகுக.
[ Amen = So be it.]

1963ல் எழுதி நடத்தப்பட்ட,  
‘த டெபுடி’ என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு...
‘ஆமென்’ திரைக்கதையை...
நடிகர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என 
பன்முக ஆளுமையுடைய  Jean-Claude_Grumberg என்பவருடன் இணைந்து அமைத்திருக்கிறார் இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.
_________________________________________________________________________________

மேலும் இப்படம் பற்றிய முக்கியமான  'விக்கிப்பீடியாவின்’ தகவல்கள், அப்படியே உங்கள் பார்வைக்கு...

The film is based on a 1963 play by Rolf HochhuthThe Deputy, a Christian Tragedy
which was widely attacked in Catholic and Jewish circles for its unrealistic portrayal of Pope Pius XII
The German-language version of the film was released under the play's original title 
Der Stellvertreter.

In addition to the criticism that had already been raised about The Deputy for its portrayal of the role of the Catholic Church during the Holocaust
the film created controversy in Catholic circles by its poster (created by controversial Italian photographer Oliviero Toscani) representing a mix of a Christian cross and a swastika.




ஹேராம் படத்தில் ஸ்வஸ்திக் சிம்பல்,
தாமரை போல மலர்ந்து...,
தாமரை இதழ்கள்... பளபளக்கும் ஆயுதங்கள் போல...
உருமாறுவதை கிராபிக்சில் காட்டியிருப்பார் கமல்.



இது பற்றி விரிவாக நாம் பின்னால் ஹேராம் பதிவில் காண்போம்.
முக்கியமான குறிப்பு...
ஹேராம் வெளியான ஆண்டு 2000.
ஆமென் வெளியான ஆண்டு 2002.

‘ஆமென்திரைப்படம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவுக்குள் செல்க...

# 2. ஆமென் படத்தின் துவக்க காட்சியே ‘திரில்லர் இலக்கணம்’.


நமது பாராளுமன்றம் போன்ற, 
பிரம்மாண்டமான கட்டிட வளாகத்தில்... 
வேகமாக பரபரப்பாக வருகிறான் ஒரு இளைஞன்.
வந்தவன், ஒரு இடத்தில் நின்று... 
தனது ‘கோட்டுக்குள்’ இருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து...  
அதை ‘தயார்படுத்துகிறான்’.


மீண்டும் அதை  ‘கோட்டுக்குள்’ மறைத்து விட்டு வேகமாக நடக்கிறான்.
அவனை பின் தொடரும் ‘கேமரா’,  
ஒரு  ‘பெயர் பலகையை’ பிரதானமாக நமக்கு காட்டுகிறது.

“ துப்பாக்கி தம்பி...கொஞ்சம் நில்லுங்க...
இந்த பெயர் பலகை என்னன்னு விளக்கிச்சொல்லி விடுகிறேன்.
அதுவரைக்கும், கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க..ப்ளீஸ்”.



இந்தப்பெயர் பலகை முக்கியமானது.
லீக் ஆப் நேஷன்...ஜெனிவா [ League of Nations...Geneva ], 
என்ற சொற்களோடு இருக்கிறது பெயர் பலகை.
லீக் ஆப் நேஷன் = உலக நாடுகள் சங்கம்.
ஜெனிவா = ஸ்விட்சர்லாந்திலுள்ள மிக முக்கியமான நகரம்.
_________________________________________________________________________________

முதலாம் உலகப்போர் முடிவில் தோற்றுவிக்கப்பட்டஓர் அமைப்புதான் ‘உலக நாடுகள் சங்கம்’ [ 1919 - 1946 ]
முக்கியமான நாடுகள் ஒன்று கூடி பல நன்மைகளை செய்திருந்தாலும்,
மிக முக்கியமான நேரங்களில் இந்த அமைப்பு செயலிழந்தே காணப்பட்டது.
குறிப்பாக வல்லரசுகளை ‘தட்டிக்கேட்கும்’ பணியில் செயலிழந்து  ‘மன்மோகன் சிங்காக’ இருந்தது.

இரண்டாம் உலகப்போரில் இந்த அமைப்பு வெறுமனே கூடி, 
டீ,காபி, வடை, பஜ்ஜி சாப்பிட்டு கொண்டிருந்தது.
எனவே இரண்டாம் உலகப்போர் முடிவில் இந்த அமைப்பை, 
‘ஊத்தி மூடி விட்டார்கள்’.
[ மாறாக, ‘ஐ.நா.’ [ U. N. ] என நாம் அழைக்கும்  
 ‘ஐக்கிய நாடுகள் சபை’ [ United Nations ] தோற்றுவிக்கப்பட்டது. ]


‘உலக நாடுகள் சங்கம்’ பற்றி, ‘தமிழ் விக்கிப்பீடியாவின்’ குறிப்பை... 
இப்போது பார்ப்போம்.

உலக நாடுகள் சங்கம் (League of Nations, LON) என்ற பன்னாட்டு அமைப்பு 
பாரிஸ் அமைதி மாநாட்டின்படி முதல் உலகப் போர் முடிந்த பின்னர் உருவானது.   

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னோடியான இதுவே 
தனது முதற் குறிகோளாக அமைதிப்பேணலை கொண்ட 
முதல் நிரந்தர பன்னாட்டு உலகப் பாதுகாப்பு அமைப்பாகும். 

தனது உச்சநிலையில், 
28 செப்டம்பர் 1934 முதல் 23 பிப்ரவரி 1935 வரை, 
58 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. 
அதனுடைய வரைமொழியின்படி முதன்மையான நோக்கங்களாக 
கூட்டுப் பாதுகாப்பு மூலமாக போர்த்தடுப்பு, 
ஆயுதங்கள் குறைப்பு, பன்னாட்டு முறையீடுகளுக்கு 
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணுதல் மற்றும் பன்னாட்டு மத்தியஸ்தம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

[1] மேலும் தொழிலாளர் நலன், பழங்குடியினர் உரிமை பாதுகாப்பு, 
மனித அடிமைகள் போக்குவரத்து, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், உலக நலன் மற்றும் சுகாதாரம், போர்க்கைதிகள் போன்ற 
பல பிரச்சினைகளும் இவ்வமைப்பால் கவனிக்கப்பட்டது.[2]

நூறாண்டுகளுக்கும் மேலாக நாடுகள் கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து ஓர் திருப்புமுனையாக பன்னாட்டளவில் பாதுகாப்பு தேடும் ஓர் அமைப்பாக உலகநாடுகள் சங்கம் அமைந்தது. 

இதற்கென தனி படைத்துறை இல்லாததனால், 
தனது தீர்மானங்களை செயல்படுத்தவும், 
பொருளியல் தடைகளை நிலைநிறுத்தவும் அல்லது தேவையான நேரங்களில் படை ஒன்றை அனுப்பவும் பேராற்றல் நாடுகளை நாடவேண்டி வந்தது. ஆனால் அந்நாடுகள் மிகுந்த தயக்கம் காட்டின.
பொருளியல் தடைகள் உறுப்பினர் நாடுகளிலும் தாக்கமேற்படுத்தியதால் அவற்றை செயல்படுத்தவும் தயங்கின.

இத்தாலிய படைவீரர்கள் செஞ்சிலுவை மருத்துவ கூடாரங்களைத் தாக்குவதாக சங்கம் குற்றஞ்சாட்டியபோது பெனிட்டோ முசோலினி
" குருவிகள் சண்டைக்கே சங்கம் சிறந்தது, 
பருந்துகள் சண்டைக்கல்ல" என்று மொழிந்தார்.[3]

பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் 
1920களில் சந்தித்த உலகநாடுகள் சங்கம் 
1930களில் அச்சு நாடுகளின்ஆக்கிரமிப்பிற்கு எதிராக செயலற்றுப் போனது. 

மே 1933இல் பிரான்சு பெர்ன்ஹெய்ம் என்ற யூதர் மேல் சிலேசியாவில் ஜெர்மனி அரசால் தமது சிறுபான்மை உரிமைகள் மீறப்படுவதாக முறையீடு செய்தார். 
இதன் விளைவால் இப்பகுதியில், 
1937ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவிற்கு வரும்வரை, 
பல ஆண்டுகள் ஜெர்மானியர்களின் யூத எதிர்ப்பு சட்டங்கள் தள்ளிப்போடப்பட்டன. 

1937க்குப் பிறகு சங்கத்தின் அதிகாரத்தை நீடிக்க மறுத்து யூத இனவழிப்பு செயல்களில் ஈடுபட்டனர்.
[4]இட்லர் இந்தக் கட்டுப்பாடுகள் ஜெர்மனியின் அரசாண்மையில் குறுக்கிடுவதாக குற்றஞ்சாட்டினார். 
எனவே சங்கத்திலிருந்து ஜெர்மனி விலகியது. 

தொடர்ந்து ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட பிறநாடுகளும் விலகின.
இரண்டாம் உலகப் போர் துவக்கம் 
உலகநாடுகள் சங்கம் 
தனது குறிக்கோளான உலகப் போரை தடுக்கின்ற வல்லமையில் தோல்வியடைந்ததை குறிப்பிடுவதாக அமைந்தது. 

இந்த உலகப் போரின் பின்னால், 
கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், 
நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனம் 
சங்கத்தினால் துவக்கப்பட்ட பல்வேறு முகமைகளையும் நிறுவனங்களையும் வரித்துக் கொண்டது.

_________________________________________________________________________________

# 3 “ துப்பாக்கி தம்பி...நீங்க வந்த வேலையை பாருங்க...”

இளைஞன் நூற்றுக்கணக்கானோர் நிரம்பிய, 
பிரம்மாண்ட ‘ஹவுஸ்புல்’ அரங்கினுள் நுழைந்தான்...சுட்டான்.
‘யாரைச்சுட்டான் ?’...
அடுத்தப்பதிவில் காண்போம்.  

Jul 1, 2013

காஸ்டா கவ்ராஸ் - உண்மையான ‘இயக்குனர் இமயம்’.


" All Cinema is Political " - Costa Gavras. 

நண்பர்களே...
காஸ்டா கவ்ராஸ்...  ‘ஹாலிவுட்’ கொண்டாடும் இயக்குனர் அல்ல.
ஆனால் உலகமெங்கும் உள்ள உலகசினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு அற்புதமான இயக்குனர்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் போல இவரை உலகம் தெரிந்திருக்கவில்லை.
காரணம் இவர் அவர்களைப்போல் ‘பாக்ஸ் ஆபிஸ் ஹிட்’ கொடுத்தவரில்லை.
ஆனால் இவரை தெரிந்தவர்கள்,
இவரைத்தான் உயர்வான இடத்தில் வைத்து கொண்டாடுவார்கள்.
‘அப்படிக்கொண்டாடுபவர்களில் ஒருவன்’ என்ற பெருமிதம்,
எனக்கும் உண்டு.


இவரது மாஸ்டர்பீஸ்களில் ஒன்றான ‘இஸட்’ [ Z ] பற்றி,
ஆனந்த விகடனில், செழியன் வரைந்த எழுத்தோவியத்தின் மூலமாக
நாம் அறிந்தோம்.
‘சுஜாதாவும் கமலும்’ என்ற எனது பதிவிலும் பார்த்தோம்.

இவரது எல்லா படங்களிலும் அரசியலும் மார்க்சிய சித்தாந்தமும் மையக்கருத்தாக இருக்கும்.
காரணம் இவரது வாழ்க்கை வரலாற்றிலேயே இருக்கிறது.

இவர் க்ரீஸ் நாட்டில் பிறந்து,
இரண்டாம் உலகப்போரின் பேரழிவை நேரடியாக தரிசித்தவர்.
இவரது தந்தை கம்யூனிஸ்ட் சித்தாந்த இயக்கத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதால்,
வறுமையின் உச்சங்களை தரிசித்தவர்.
பிரான்சில் ‘திரைப்படக்கலை’ பயின்று இன்று அங்கேயே மையம் கொண்டு தனது படைப்புகளை வழங்கி வருகிறார்.
இவரைப்பற்றி மேலதிகத்தகவல்களுக்கு ‘கார்டியன்’ [ The Guardian ] பத்திரிக்கையில் வந்த காஸ்டா கவ்ராஸின் பேட்டியை படிக்கவும்.

காஸ்டா கவ்ராஸ் - ‘த கார்டியன்’ பத்திரிக்கை பேட்டியை படிக்க இங்கே செல்லவும்...


நான் இவரது எல்லாப்படங்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
இவரது மிக முக்கியமான படமான ‘ஆமென்’ பற்றி எழுதுவதாக,
ஏற்கெனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன்.
இப்பதிவு... ‘ஆமென்’ பதிவுக்கு ஒரு முன்னோட்டம்.

AMEN \ 2002 \ German, Romania, French \ Directed by : Costa - Gavras \ Part - 1

காஸ்டா கவ்ராஸ் படைப்புகளின் பட்டியல் இதோ...
[ உபயம் : விக்கிப்பீடியா ]

Filmography[edit]



வெற்று ஆரவாரத்தின் மூலமாக தனது இருப்பை நிலை நிறுத்தி, 
கிரியேட்டிவ் மலட்டுத்தன்மை ‘கொடி’ யை இறக்கி காட்டி ...  
‘முதல் மரியாதையை’ இழந்து கொண்டிருக்கிறார்கள்  நமது படைப்பாளிகள்.

எண்பது வயதிலும் சளைக்காமல், 
படைப்புத்திறன் குறையாமல்... 
தனது படைப்புகளை வழங்கி வரும்... 
‘காஸ்டா கவ்ராஸ்தான்’ உண்மையான இயக்குனர் இமயம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
 ‘ஆமென்’.