மனிதநேயம் பிறப்பதும்...மரிப்பதும் போர்க்களத்தில்தான்.
ஈழத்தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன் என்பவர் பார்க்க வேண்டிய படம் இது.
1937ல் ஜப்பானியர்கள் நான்ஸிங் நகரை தகனம் செய்தார்கள்.
அந்த படுகொலையில் 3,00,000 பேரை கொன்று குவித்திருக்கிறார்கள்.
20,000 பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை கட்டாயம் பாருங்கள்.
http://en.wikipedia.org/wiki/Nanking_Massacreஆனால் ஜப்பானிய ஜெயமோகன்கள் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கதைத்து கொண்டிருக்கிறார்களாம்.
இந்த கொடூரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலை...திரைக்கதையாக்கி மிகப்பிரமாண்டமாக படத்தை உருவாக்கி உள்ளார் ஜாங் யிமூ.
சைனா திரைஉலக வரலாற்றில்... பெரும் பொருட்செலவில் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
சிதிலமடைந்த நகரத்தை அப்படியே செட் போட்டு உருவாக்கியிருக்கிறார்.
ஜப்பானிய ராணுவம் துரத்த...தப்பித்து ஒடி வரும் சிறுமிகளிலிருந்து படம் துவங்குகிறது.
ஒடுகிற வழியெல்லாம் பிணங்கள்....பிணங்கள்....பிணங்கள்.
ஒடிப்போய் சர்ச்சில் அடைக்கலமாகின்றனர்.
இறந்தவர்களை ஒப்பனை செய்யும் கலையில் வல்லுனரான ஒரு அமெரிக்கனும் அடைக்கலமாகிறான்.
சிறுமிகள் அனைவருக்கும் ஒரு சிறுவனே பாதுகாவலன்.
விபச்சார விடுதியிலுள்ள பாலியல் தொழிலாளிகளும் அடைக்கலம் தேடி வருகின்றனர்.
சிறுவன் அனுமதிக்க மறுக்கிறான்.
எதிர்ப்பை புறக்கணித்து அத்து மீறி நுழைகின்றனர்.
சிறுமிகளும் அவர்களை உதாசீனப்படுத்துகின்றனர்.
அமெரிக்கன் சர்ச்சில் இருக்கின்ற ஒயினை குடித்து காசை சுருட்டிக்கொண்டு தப்பித்து ஒடுவதிலேயே குறியாக இருக்கிறான்.
எல்லோரும் சுயநலமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில்...அவர்கள் அனைவரையும் பொது நலம் என்ற மையப்புள்ளியில் இணைக்க ....ஜப்பான் ரானுவத்தினர் வருகிறார்கள்.
பாலியல் தொழிலாளிகள் மறைந்திருக்கும் பகுதியில் ராணுவத்தினர் நுழையாமல் தடுப்பதற்க்காக ....சிறுமிகள் அவர்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பி...தப்பித்து ஒடுகின்றனர்.
வெறி கொண்டு துரத்தும் ராணுவத்தினரை நிறுத்தி அமெரிக்கன்...பாதிரியாக தன்னை பிரகடனப்படுத்தி அனைவரையும் வெளியேறும்படி கட்டளையிடுகிறான்.
கட்டளை வந்த வாயில் ரத்தம் வர வைத்து விட்டு...சிறுமிகளை வேட்டையாட ஒநாய்கள் மீண்டும் துரத்த ஆரம்பிக்கின்றன.
இதைத்தான் இலங்கையில் இந்திய ராணுவம் செய்தது.
சிங்கள ராணுவமும் செய்தது.
ஸ்னைப்பர் ஷாட்டில் வல்லவனான ஒரு சீன ராணுவன் தனியாளாக மொத்த கூட்டத்தையும் அழித்து அமரனாகிறான்.
அதற்கு பின்னால் பசுத்தோல் போர்த்திய புலி தலைமையில் ஒரு ராணுவக்கூட்டம் வந்திறங்குகிறது.
சிறுமிகள் அனைவரும் ஜப்பான் உயர் அதிகாரிகள் முகாமில் வந்து பாட வேண்டும் என கட்டளையிட்டு செல்கிறான்.
சிறுமிகளின் பாட்டை ரசிப்பது நோக்கமல்ல...ருசிப்பதுதான் என்பதை உணர்ந்த பாலியல் தொழிலாளிகள் சிறுமிகளுக்குப்பதிலாக “நாங்கள் போகிறோம்” என சொக்கத்தங்கமாக உருமாறுகிறார்கள்.
அவர்களால் சிறுமிகளை காப்பாற்ற முடிந்ததா? என்பதையும்...
ஹிட்ச்ஹாக்கின் திரில்லர் பாணியில்...
இக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் திரைப்படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
படத்தில் ‘மோ’ என்ற பாலியல் தொழிலாளியாக நடித்துள்ள ‘நி நி’...
தால் படத்தில் வந்த ஐஸ்வர்யா ராயை தூக்கி சாப்பிட்டு விட்டார்....நடிப்பிலும்...அழகிலும்....
சுத்தமானா சைனா வெண்ணெயில் செய்த அழகு ஐஸ்க்ரீம்.
அமெரிக்கனாக வந்து அசத்திய கிறிஸ்டியன் பேல்
உட்பட...
எல்லோருமே அவர்கள் காரெக்டரில் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் அளவுக்கு மீறிய அழகியலோடு படமாக்கப்பட்டுள்ளது படத்தின் திரைக்கதை ஒட்டத்தை சிதைக்கிறது.
யுத்தக்காட்சிகள் நம் மனதில் பாரம் ஏற்றாமல் ஒதுங்கிப்போகின்றன.
ஆரம்பத்தில் பாலியல் தொழிலாளிகள் ஏதோ பேஷன் பரேடுக்கு புறப்பட்டது போல வருகின்ற காட்சி...யுத்தக்காட்சியின் நம்பகத்தன்மையை குலைக்கின்றது.
லோ பட்ஜெட் படங்களில் அசத்தும் ஜாங் யீமூ பிரம்மாண்டத்தில் சற்று பிறண்டு விட்டார்.
சற்றுதான்...என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.
டிரைலர் காண....
அடுத்தப்பதிவில் ஹேராமோடு வருகிறேன்.