Showing posts with label துருக்கி. Show all posts
Showing posts with label துருக்கி. Show all posts

Oct 8, 2012

A Touch Of Spice - 2003 \ Greece & Turkey \ மளிகைக்கடை அண்ணாச்சி \ பாகம் = 05

நண்பர்களே...
கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் இடம் பெற்ற
‘எ டச் ஆப் ஸ்பைஸ்’ என்ற படைப்பின் காவியத்தன்மையை திறனாய்வோம்.


இப்படத்தின் கடந்த பதிவில் நாம் பார்த்த...
‘நீண்ட நெடிய ஷாட்டில்’ இடம் பெற்ற
 ‘கான்ஸ்டாண்டி நோபில் 1959’ என்ற டைட்டிலை பற்றி முதலில் விரிவாக பார்ப்போம்.
அதற்கு உறுதுணையாக விக்கிப்பீடீயாவின் வரலாற்று சான்றை படிக்கவும்.


After the creation of the Republic of Turkey in 1923, the various alternative names besides İstanbul became obsolete in the Turkish language. 

With the Turkish Postal Service Law of March 28, 1930, the Turkish authorities officially requested foreigners to cease referring to the city with their traditional non-Turkish names (such as Constantinople, Tsarigrad, etc.) and to adopt Istanbul as the sole name also in their own languages.

[14] Letters or packages sent to "Constantinople" instead of "Istanbul" were no longer delivered by Turkey's PTT, which contributed to the eventual worldwide adoption of the new name.
In English the name is usually written "Istanbul". 
In modern Turkish the name is written "İstanbul" because in the Turkish alphabetdotted i (capital İ) is a different letter from dotless ı (capital I).


கி.பி.330 முதல் கிபி.1930 வரை  ‘கான்ஸ்டாண்டிநோபில்’ என்றழைக்கப்பட்ட நகரம்...
கி.பி.1930 முதல்   ‘இஸ்தான்புல்’ என்று மாற்றப்பட்டு...
இன்றளவும் இப்பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.
அப்படி இருக்க...இயக்குனர் ஏன் மேற்படி டைட்டிலை போட்டார்?.
இப்பெயர் மாற்றத்தை கிரீஸ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவேதான்,
இப்படத்தின் இயக்குனர் கிரீஸ் நாட்டு குடிமகனாக இருப்பதால்...
மேற்படி டைட்டிலை போட்டார் என எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

 ‘கான்ஸ்டாண்டிநோபில்’...  
‘இஸ்தான்புல்’... என பெயர் மாற்றம் ஏன் நடந்தது ?
என ஆர்வம் எழுந்தால்...விக்கிப்பீடியாவை விரிவாக காண்க.

இஸ்தான்புல் பெயர் மாற்ற வரலாற்றை காண ‘கிளிக்’கவும்.

கடந்த பதிவில்... ‘நீண்ட நெடிய ஷாட்டில்’ பாதியை பார்த்தோம்.
மீதியை இப்போது பார்ப்போம்.

காமிரா, இப்போது அவுட்டோரிலிருந்து இன்டோருக்குள் பாய்கிறது.
மாடி வீட்டு ஜன்னல் திரையை விலக்கி, அனுமதியில்லாமல் நுழைந்து...
ஒரு பணக்கார தம்பதியின் தொழுகையை கலைக்காமல் கடந்து...
ஒரு ஏழை சாம்ராஜ்யத்தின் வறண்ட பிரதேசங்களை கவனமாக  ‘கவரேஜ்’ செய்து...
மார்க்கெட் தெருவுக்குள்  ‘லேண்ட்’ ஆகிறது.
உலகமெங்கும்,
ஏழை எளிய மக்களுக்கான அங்காடித்தெரு, ஒரே மாதிரி இருப்பதை...
காமிரா, கவிதையாக காட்டியிருப்பதை...
கவனமாக கவனித்தால்...
துருக்கி ராணுவ வீரர்களும் மார்க்கெட் தெருவில் இருப்பதை கவனிக்க முடியும்.

இந்த ஷாட்டின் இப்பகுதி 1955 ல் நடைபெற்ற  ‘இஸ்தான்புல் கலவரத்தை’ 
‘கனேட்டேஷன்’ செய்கிறது.
ஏனென்றால் இக்கலவரத்தின் நீட்சியாகத்தான்...
படத்தில் இனி வரும் காட்சிகள் இருக்கிறது.

எனவே இக்கலவரத்தின் சரித்திரப்பின்னணியை விக்கிப்பீடீயா உதவியுடன் தெரிந்து கொள்வோம்.

The Istanbul riots (Greek: Σεπτεμβριανά Septemvriana, "Events of September"; Turkish: 6–7 Eylül Olayları, "Events of September 6–7", sometimes known as the "Istanbul pogrom"), were organized mob attacks directed primarily at Istanbul's Greek minority on 6–7 September 1955. 

The riots were orchestrated by the Turkish government of the time under the Prime Minister Adnan Menderes
The events were triggered by the false news that the Turkish consulate in Thessaloniki, north Greece—the house where Mustafa Kemal Atatürk had been born in 1881—had been bombed the day before.
[4] A bomb planted by a Turkish usher at the consulate, who was later arrested and confessed, incited the events. 
The Turkish press almost fully under Menderes' control, conveying the news in Turkey was silent about the arrest and instead insinuated that Greeks had set off the bomb.
A Turkish mob, most of which had been trucked into the city in advance, assaulted Istanbul’s Greek community for nine hours. 
Although the mob did not explicitly call for Greeks to be killed, over a dozen people died during or after the attacks as a result of beatings and arson
Jews and Armenianswere also harmed.
The riots greatly accelerated emigration of ethnic Greeks from Turkey, and the Istanbul region in particular. 
The Greek population of Turkey declined from 119,822 persons in 1927,[5] to about 7,000 in 1978. 
In Istanbul alone, the Greek population decreased from 65,108 to 49,081 between 1955 and 1960.
[5] The 2008 figures released by the Turkish Foreign Ministry place the current number of Turkish citizens of Greek descent at 3,000–4,000;[6]however, according to Human Rights Watch, the Greek population in Turkey was estimated at 2,500 in 2006.[7]
Some see the attacks as a continuation of a process of Turkification that started with the decline of the Ottoman Empire,[8][9][10] rather than being a contemporary, bilateral issue. 
To back this claim they adduce the fact that roughly 40% of the properties attacked belonged to other minorities.
[4]Historian Alfred-Maurice de Zayas has written that in his view, despite the small number of deaths, the riots met the "intent to destroy in whole or in part" criterion of the Genocide Convention.[11]
இப்போது வரலாற்றிலிருந்து...அகிலா கிரேன் ஷாட்டுக்குள் செல்வோம்.

இந்த  ‘நீண்ட நெடிய ஷாட்டில்’ அங்காடித்தெரு பகுதியில்...
‘த அப்படைசர்’ [ The Appetizer ] என்ற வார்த்தை திரையில் தோன்றி மறைகிறது.
இப்படத்திரைக்கதையின் மூன்று பாகத்தையும்...
பொருத்தமான தலைப்பிட்டு வழங்கியிருக்கிறார் இயக்குனர்.

மீண்டும் காமிரா அவுட்டோரிலிருந்து இன்டோருக்குள் இணைகிறது.
‘மிடில் கிளாஸ்’ மளிகை கடைக்குள்...
போயஸ் தோட்டத்தில் நுழையும்  ‘மாண்பு மிகு’ போல் மரியாதையுடன் தவழ்ந்து போய்...
மசாலா வகையறாக்களை  மங்களகரமாக காட்டுகிறது.

அவுட்டோர்...இன்டோர்... என காமிரா மாறி மாறி பயணித்து...
'சிங்கிள் ஷாட்' போல் மாயத்தோற்றமளித்தாலும்...
உண்மை அதுவல்ல.

‘தேர்ந்த திட்டமிடல்’ மூலம்...
ஐந்து ஷாட்களில் இக்காட்சி படமாக்கப்பட்டு...
‘ஒரே ஷாட்’ என்ற மயக்கத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தி...
வெற்றி கண்டிருப்பது...
இயக்குனர்,ஒளிப்பதிவாளர்,கலை இயக்குனர்,இசையமைப்பாளர் மற்றும் எடிட்டர் .
*********************************************************************************
இது போன்ற  ‘ஸ்மாலஸ்ட் டூ லார்ஜஸ்ட் ஷாட்’ ... [ Smallest To Largest ]  
‘திரையுலக மாமேதை’ ஹிட்ச்காக்கின்  'பேவரைட் ஷாட்' ஆகும்.

‘கமல்’ நடித்து...
‘வேணு’ ஒளிப்பதிவில்...
‘சந்தான பாரதி’ இயக்கத்தில் வந்த...
‘குணா’ படத்திலும் [ Guna - 1991 \ Tamil \ Directed by Santhana Bharathi ] 
இதே முறையில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
இப்பாடலை...காணொளியில் காண்க...


*********************************************************************************

மளிகைக்கடையில் பெனிஸ்சும்...
‘கோட் அணிந்த மளிகைக்கடை அண்ணாச்சி’ போல் தோற்றமளிக்கும் அவனது தாத்தாவும் இருக்கிறார்கள்.
கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம், தாத்தா அந்யோன்னியமாக உரையாடுவதை அடுத்த பதிவில் காண்போம்.

*********************************************************************************
இது போன்ற சில்லறை வணிகத்தை ஒழித்து கட்ட...
‘அந்நிய அன்னை சோனியாவின்’ அடி பணிந்து நடக்கும் மத்திய அரசு...
முரசு கொட்டி விட்டது.


‘உலகமயமாக்கல்’ என்ற பெயரில் இந்தியாவை மீண்டும் அடிமையாக்கி விட்டார்கள் நம் அரசியல் வியாதிகள்.
எனவே, ‘இப்படிப்பட்ட அந்நிய அநியாயங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கும்’
என்பதை கணித்த கமல்,
2003 லேயே... கதை - திரைக்கதை எழுதிய ‘அன்பே சிவம்’ படத்தில்...
கம்யூனிஸ்ட் தோழர்களுடன் இணைந்து...
‘வீதி நாடகம்’ ஒன்றை நடத்தி காட்டினார்.
இக்காட்சியை காணொளியில் காண்க...



இப்போதும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து குரலெழுப்பி உள்ளார் கமல்.
கமலின் எதிர்ப்பு குரலை.. நண்பர் சண்டியர் கரனின் பதிவில் காண்க...

அந்நிய முதலீட்டுக்கெதிராக கமலின் பேட்டியை பார்க்க...படிக்க...‘கிளிக்’கவும்.

*********************************************************************************

மளிகைக்கடை அண்ணாச்சி சொல்லும்...
‘செக்ஸ் மசாலாவை’ கலந்து ...
அடுத்தப்பதிவை சமைக்க இருக்கிறேன்.
வாலிப வயோதிக அன்பர்களே ! காத்திருங்கள்.

Oct 1, 2012

A Touch Of Spice - 2003 \ Greece & Turkey \ மெட்ராஸா...சென்னையா... \ பாகம் = 04



நண்பர்களே...
கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்ட,
‘ எ டச் ஆப் ஸ்பைஸ்’ திரைப்படத்தில்,
புலம் பெயர்தலின்... ‘சுனாமி தாக்குதலில்’ சிக்குண்ட  ‘திக்கற்ற தாத்தாக்களை’ பார்த்தோம்.
 ‘இன்னும்’ பலரை...பார்க்கவிருக்கிறோம்.

இப்போது பெனிஸ்ஸின் டெலிபோனை ஓட்டுக்கேட்போம்.


Isn't he here?
What do you mean he's not?

Maybe he got lost...

What?

Where did it happen?


இக்காட்சியின்  ‘ஷாட் கம்போசிசனை’ [ Shot Composition ] ... ஏற்கெனவே ‘ஹேராமில்’ [ Hey Ram - 2000 \ India \ Directed by Kamal Hassan ]  பார்த்தோம்.
மீண்டும் விளக்கம் பெற... ஹேராம் பதிவை காண்க...

எக்ஸ்டர்னல் - இண்டர்னல் ஷாட் கம்போசிஷேன் விளக்கம் காண ...ஹேராம் பதிவிற்குள் செல்க...

பெனிஸ்ஸின் உரையாடல் மூலமாக...
தாத்தா வரவில்லை...
உடம்பு சரியில்லை...
என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது.
ஆனால்....Where did it happen?... என்ற கேள்விக்கு...
எதிர் முனையில்... என்ன பதில் கிடைத்தது?
தெரியாது.

இது போன்ற,  ‘சஸ்பென்டட் ஆன்சர்’ [Suspended Answer ] இலக்கியத்தில் சுவையூட்டுகின்றன என...
பிரான்ஸ் நாட்டின், இலக்கிய திறனாய்வாளர்
 ‘ரோலன் பார்த்’ [Roland_Barthes ]குறிப்பிடுவார்.
இக்கேள்விக்கான விடையை இயக்குனர் நமக்கு பின்னால் விளக்குகிறார்.
நாம் அப்போது விரிவாக அலசுவோம்.

இஸ்தான்புல்லில், தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை...
இரண்டு ‘ ஷாட்’ மூலம் விளக்குகிறார் இயக்குனர் .

இப்போது படம் பிளாஷ்பேக்கில் பயணிக்கிறது.

காமிரா, அகிலா கிரேனில் சவுகரியமாக அமர்ந்து கொண்டு....
இஸ்தான்புல்லின்  ‘டாப்காபி’ அரண்மனையை உள்ளடக்கிய அழகிய காட்சியில் தொடங்கி...

கூட்டமாக பறக்கும் பறவைக்கூட்டங்கள் ,சிறகடித்து கலைவதை பதிவு செய்து...
‘திரைவலதில்’ பிரவேசிக்கும் மதகுரு, வானுயர்ந்த மசூதி ஸ்தூபியில் நின்று கொண்டு ; அரபிக்குரலில் துதிப்பதை, பக்தியோடு கடந்து...
அராபிய கட்டிடக்கலையின், வட்ட வடிவமைப்போடு கூடிய மசூதி
மேற் கூறையை மரியாதையோடு கடந்து...
வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் தரைக்கம்பளத்தை அலட்சியமாக ஒதுக்கி...
ராணுவ அணி வகுப்பு போல் வரிசையாக நின்றிருக்கும் புகை போக்கிகளின்
சல்யூட்டை ஏற்று...
கடந்து வரும் போது,
ஊடாக ‘ கான்ஸ்டாண்டிநோபில் 1959 ’ என்ற வார்த்தைகள் தோன்றி மறைகிறது .

1959 ல்  ‘இஸ்தான்புல்’ என்றழைக்கப்பட்ட நகரை...
அதன் பழைய பெயரான  ‘கான்ஸ்டாண்டிநோபில்’ என இயக்குனர் குறிப்பிட்டதன் நோக்கம் என்ன?

மெட்ராஸா...சென்னையா என்ற கேள்வி போலத்தான்,
கான்ஸ்டாண்டிநோபிலா...இஸ்தான்புல்லா என்ற கேள்வியும்.

இந்தக்கேள்வியும்...இதற்கான விடையும்தான்... இந்தப்படமே.

நீண்ட... நெடிய  ‘சிங்கிள் ஷாட்டின்’ மற்றப்பகுதிகளை  அடுத்தப்பதிவில் காண்போம்.

 ‘சிங்கிள் ஷாட்டை’ காணொளியில் காண்க....




Sep 26, 2012

A Touch Of Spice - 2003 \ Greece & Turkey \ திக்கற்ற தாத்தாக்கள். \ பாகம் 03

நண்பர்களே...
 ‘புலம் பெயர்தல்’ இந்த நூற்றாண்டின் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.
விருப்பமோ அல்லது பலவந்தமோ...
எதுவாகிலும்  ‘புலம் பெயர்தல்’ மனிதர்களுக்கு பதட்டத்தையும்...
மன உளைச்சலையும் தரும்.

இருப்பிடம்,
வேலை,
தட்ப வெப்பம்,
நட்பும் - உறவும் அற்றுப்போதல்,
உயிர் உத்திரவாதமின்மை,
பொருளாதார நிரந்தரமின்மை,
என அக,புற நெருக்கடிகள்
‘மெகா சீரியலாக’ வந்து கொண்டே இருக்கும்.

 ‘புலம் பெயர்தலை’ மையமாக வைத்து,
‘எழுத்துலக மாமேதை’ சுஜாதா அவர்கள்...
‘பிரிவோம் சந்திப்போம்’ இரண்டாம் பாகத்தை படைத்திருந்தார்.
எப்போது படித்தாலும், அதில் சொல்லப்பட்ட பிரச்சனைகள் உயிருடன் இருப்பதை உணர முடியும்.

வாருங்கள்...போவோம்...பெனிஸ் வீட்டுக்கு.
தாத்தாவுக்கும்,அவரது நண்பர்களுக்கும்  ‘அறுசுவை உணவு’ சமைக்கும் வாசம் மூக்கை துளைக்கிறதல்லவா !.



அடடா...பெனிஸ்  ‘தனக்குத்தானே’ பேசிக்கொண்டிருக்கிறானே !.

So grandpa will sit here

and his friends there...

No, grandpa will sit there.

Resembles the Last Supper...
No, grandpa will sit here...

Good... And now,
grandpa's friends...

Grandpa's friends are an unusual
clan because they're from lstanbul.

Their origin sets them apart both
historically and biologically.

தாத்தாவின் நண்பர்கள் ஒன்றாக நடந்து வருகிறார்கள்.
சிறுவனோடு வரும் ஒரு தாய் இவர்களிடம் வழி கேட்கிறாள்.

 Can you direct me
to Halcyone Street?

[ பெனிஸ்ஸின் பின்னணிக்குரலில்...]
தாத்தாவின் நண்பர்கள் காம்பஸ் முள் போல...
180 டிகிரிக்குள், வலது பக்கத்திலிருந்து-இடது பக்கத்துக்கும்,
இடது பக்கத்திலிருந்து-வலது பக்கத்துக்கும் திரும்பி பார்த்து...
ஒரு தீர்மானத்துக்கு வந்து... முகவரி சொல்வதை...
காட்சி ரூபமாக காணமுடிகிறது. 

First and foremost,
they are "magnetized."

It's like a compass that with
every geographical question...

it re-orients their identity.

Who they are, their origins
and where they are going.

-That way.

-Thank you...

This idiosyncracy is related
to their dietary habits.

For most, food involves the
sense of smell and taste.

For grandpa's friends it also
involves sound and sight.



தாத்தாவின் நண்பர்களை வரவேற்கிறான்.
வந்தவர்கள்  ‘டைனிங் டேபிளை’ பார்த்து மலைத்து நிற்கிறார்கள்.
நாமும் தான்.
பைவ் ஸ்டார் ஹோட்டல் நேர்த்தியுடன் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு
அலங்கரிக்கப்பட்டு தயாராக இருக்கிறது.

 Hello to you all! 
You all arrived at the same time. 
Come in!
-Did you find it easily?

-We came from THlSSEAS Street.

தாத்தாவின் நண்பர்கள்... தாங்கள் வந்த திசையை காட்டுகிறார்கள்.

But THlSSEAS Street isn't
that way, it's that way.

பெனிஸ்...நேரெதிராக... சரியான திசையை அடையாளம் காட்டுகிறான்.

He's right,
that's how we came.

ஒத்துக்கொள்கிறார்கள் தாத்தாக்கள்.

திக்கற்ற தாத்தாக்கள்.

இவர்கள் அந்த தாய்க்கு சரியான வழியை சொன்னார்களா ? 

இவர்கள், 
இஸ்தான்புல்லிலிருந்து பிடுங்கப்பட்டவர்கள் [ Uprooted ] ... 
ஏதென்ஸ் நகரத்திற்குள்  ‘நடப்பட்டவர்கள்’.
இவர்கள் இறுதி வரைக்கும்...திசை தெரியாமல் குழம்பத்தான் போகிறார்கள்.

‘புலம் பெயர்தலில்’ ...முதியவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை...
கவிதையாக...
நகைச்சுவை கலந்து வடிவமைத்துள்ளார் இயக்குனர். 

பெனிஸ்,
தாத்தாவின் நண்பர்களோடு அளவளாவும் காட்சியில்...
பெனிஸ்ஸின் குரலே, பின்னணியாக ஒலிக்கிறது.

I fear certain sounds when

they occur just before a meal.



Every major event in my life

began with the sound of a doorbell, 
or the sound of a phone.


பெனிஸ் வாழ்க்கையில்,
காலிங்பெல்லும்...
டெலிபோன் மணியும்...
முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னால்...
‘சங்கு’ ஊதுகின்றன.

இப்போது, டெலிபோன் மணி ஒலிக்கிறது.

டெலிபோன் உரையாடலை... அடுத்த பதிவில் கேட்போம்.

Sep 24, 2012

A Touch Of Spice - 2003 \ Greece & Turkey \ புலம் பெயர்ந்தவர்களின் வலிகள் \ பாகம் = 02


கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் இடம் பெற்ற
‘எ டச் ஆப் ஸ்பைஸ்’ படத்தின் மையக்கருத்தாக இருப்பது...
 ‘புலம் பெயர்தலின் வலிகள்’.

 ‘புலம் பெயர்தல்’...
சுயவிருப்பம், பொருளாதாரம், அரசியல்,
உள்நாட்டு-வெளிநாட்டுப்போர்கள், பிரிவினைகள் போன்ற...
பல்வேறு காரணிகளால்  ‘ சமைக்கப்பட்டு ’ திணிக்கப்படுகிறது.
இப்படத்தின் உள்ள  புலம் பெயர்ந்தவர்களின் வலியை...
 ‘புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்’ மட்டுமே நன்கு உணர முடியும்.
எனக்கு  ‘அந்த வரலாற்று சாபம்’ இல்லாததால்... புரிந்து கொள்ள மட்டுமே முடிந்தது.
ஏனெனில்  ‘மத்திய அரசின் பழுத்த பங்கில்’ நாம் இருக்கிறோம்.
இது ஒரு மாதிரியான  ‘இருத்தலியல்’ சூழல் [ Existential Situation ] .

 ‘பெனிஸ்’ என்ற கதாநாயகப்பாத்திரத்தின் பின்னணிக்குரலின் வாயிலாக இப்படம் துவங்குகிறது.
இருப்பினும், கதையில் உலாவும் பல்வேறு கதாபாத்திரங்களின்
‘ பாய்ண்ட் ஆப் வியூ’  மூலமாக  திரைக்கதை இயங்குவது...
இதன் தனிச்சிறப்பு.
இதுவே இத்திரைக்காவியத்தின் ‘ திரைக்கதை Presentation ’

போன பதிவில் நாம் பார்த்த காட்சியில்....
பெனிஸ்ஸின் குரலில் ஒலித்தது இதுதான்.

Granpa often said that the Greek word for
"dream" conceals within the word "belch". 

Initially, I paid no notice as
I could only do these 2 things.

Years after, I realised he was
referring to food and stories.

Both require an essential
ritual in order to be tastier.

That is, the presentation.

முதல் காட்சியின் முடிவில்... 
தொடரும் டைட்டில் காட்சியில்...
அகண்ட வான வெளியில், கோள்களுக்கு மத்தியில்...
 ‘சிவப்பு வண்ணக்குடை’ சுழன்று வருகிறது.
அற்புதமான சர்ரியலிசக்காட்சியில்...
 ‘சிவப்பு வண்ணக்குடையை’ மட்டும், நினைவில் பத்திரப்படுத்துங்கள்.

காலம் : கி.பி.2003 ; இடம் : ஏதென்ஸ் நகரம்.
படத்தின் நாயகன் பெனிஸ்,  ‘வானவியல்’ பேராசிரியர்.
மாணவர்களுக்கு வகுப்பெடுத்து கொண்டு இருக்கும் போது...
அவனைப்பார்க்க, தாத்தாவின் நண்பர் வருகிறார்.
வந்தவர், பெனிஸ்ஸின் தாத்தா...   ‘முதன் முறையாக’ ஏதென்ஸ் வரவிருப்பதை தெரிவிக்கிறார்.

“ நான் விமான நிலையம் சென்று அவரை அழைத்து வருகிறேன்.
உனது தாத்தாவின் நண்பர்களும் ஒன்று கூடி... அவரை வரவேற்க...
உனது வீட்டிற்கு  வருகிறார்கள்.
நீ எல்லோருக்கும் சமைத்து...உன் தாத்தாவை ஆச்சரியப்படுத்து ” என்கிறார்.

தாத்தா எங்கிருந்து வருகிறார் ?
துருக்கியிலிருக்கும்,
அன்றைய  ‘கான்ஸ்டாண்டிநோபில்’ [ Constantinople ] ...
இன்றைய  ‘இஸ்தான்புல்லிருந்து’ [ Istanbul ] ...
கிரேக்க நாட்டிலிருக்கும்,
 'ஏதென்ஸ்' [ Athens ] நகரத்துக்கு  ‘முதன் முறை’ வரவிருக்கிறார்.


பெனிஸ் கல்லூரியை விட்டு  வெளியே வருகிறான்.
கிரேக்க அரசியலின்,
‘பவர் சென்டராக’ விளங்கிய ‘அக்ரொபொலிஸ்’ [ Acropolis ]
கம்பீரமாக வீற்றிருக்கும்...
‘ஏதென்ஸ்’ நகரத்து எழில் மிகு காட்சியை கண் முன் விரிக்கிறார் இயக்குனர்.

*********************************************************************************
  ‘அக்ரொபொலிசை’, தமிழ் சினிமாவில்...
 சிம்ரன்,ஸ்நேகா இடுப்பை அசைப்பதற்கு பின்னணியாக்கி...
கொலை செய்திருப்பார்கள்.
சிம்ரன் \  படம் : 12 பி \ இயக்கம் :  ‘மறைந்த’ ஜீவா
சிநேகா \ படம் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே \ இயக்கம் : வசந்த்


*********************************************************************************


கடந்த பதிவில் இஸ்தான்புல் வரலாற்றை தெரிந்து கொண்ட நாம்...
இங்கே, ஏதென்ஸ் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
நமக்குத்தான்  ‘விக்கி பகவான்’ இருக்கிறாரே !.


ஏதென்ஸ்... ‘லாஜிக்கின்’ பிறப்பிடம்.
ஏன்?
எதற்கு?
எப்படி?
என கேட்க கற்பித்த...  ‘தத்துவ ஞானி’ சாக்ரடீஸ் [ Socrates ] அவதரித்த புண்ணிய பூமி.

********************************************************************************
சாக்ரடீஸ் என்றதும் எனக்கு எப்போதும் நினைவுக்கு வருவது...
நடிகர் திலகம்தான்.
ராஜாராணி என்ற திரைப்படத்தில் வரும் ஓரங்க நாடகத்தில்,  
‘கலைஞரின்’ சொல்லோவியத்தில்...  
‘நடிகர் திலகம்’ அவர்கள்...சாக்ரடீஸாக வாழ்ந்து காட்டியிருப்பார். 

இக்காட்சி யூ ட்யூப்பில் கிடைக்கவில்லை.
நண்பர்கள் யாராவது முயற்சித்து...யூ ட்யூப்பில் இணைக்கவும்.

*********************************************************************************
பெனிஸ் தாத்தாவை வரவேற்க நாமும் ...அடுத்த பதிவிற்கு செல்வோம். 

 ‘எ டச் ஆப் ஸ்பைஸ்’ பட முன்னோட்டம் காணொளியில் காண்க...






Sep 21, 2012

A Touch Of Spice - 2003 \ Greece & Turkey \ ‘ மசாலா ’ உலகசினிமா.\ பாகம் = 01

நண்பர்களே...
 ‘மசாலா’ தலைப்பிட்டு...
இங்கே உங்களை வரவழைத்ததற்கு காரணம் இருக்கிறது.
பதிவை படித்த பின்னும்...படம் பார்த்த பின்னும்...
இதை விட...
பொருத்தமான தலைப்பிருக்க முடியாது என ஒத்துக்கொள்வீர்கள்.

கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில்,
இடம் பெற்ற காவியங்களில்...
ஜூலை 12ம் தேதி திரையிடப்பட்ட
இக்காவியம்...பலத்த கரகோஷம் பெற்றது.



ஹேராமைப்போலவே,
இப்படத்தின் இயக்குனர் Tassos Boulmetis...நம்மை வரலாற்றின் பக்கம் அழைத்து செல்கிறார்.


இப்படத்தை பார்ப்பதற்கு முன்  ‘இஸ்தான்புல்’ நகரத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வது நல்லது.

இஸ்தான்புல் வரலாற்றை தெரிந்து கொள்ள கிளிக்கவும்.

இது போன்ற உலகசினிமாக்கள் மூலமாகத்தான்...
கொஞ்சமாவது சரித்திரத்தை தெரிந்து கொள்ள முடிகிறது.
இல்லையென்றால் சரித்திரம் தெரியாத தரித்திரனாகவே இருந்திருப்பேன்.

இப்போது துருக்கியின்  ‘அரசியல் சரித்திர கேக்கிலிருந்து’ சிறு துண்டு இதோ...

By 18 September 1922, the occupying armies were expelled, and the new Turkish state was established. On 1 November, the newly founded parliament formally abolished the Sultanate, thus ending 623 years of Ottoman rule. The Treaty of Lausanne of 24 July 1923, led to the international recognition of the sovereignty of the newly formed "Republic of Turkey" as thesuccessor state of the Ottoman Empire, and the republic was officially proclaimed on 29 October 1923, in the new capital of Ankara.[11] The Lausanne treaty stipulated a population exchange between Greece and Turkey, whereby 1.1 million Greeks left Turkey for Greece in exchange for 380,000 Muslims transferred from Greece to Turkey.[39]

யோவ்...  ‘உ.சி.ர’ ! ...
[ என் பதிவுலக நண்பர்கள் வைத்த...எனக்கும் பிடித்த... செல்லப்பெயர் ]
ஏய்யா! உசிரை வாங்குற...
இந்த வரலாறு தெரியலன்னா...விளங்காதா ? என கோபிக்க உங்களுக்கு  ‘உரிமை’ இருக்கிறது.
விளக்கமளிக்க எனக்கு  ‘கடமை’ இருக்கிறது.

ஒருவர், “ இந்தாங்க திருப்பதி லட்டு ” எனத்தருகிறார்.
 ‘திருப்பதி’ எந்த திசை ? என அறியாதவராயிருந்தாலும்...
 ‘திருப்பதி லட்டு’ சுவையில் உங்களை வீழ்த்தி விடும்.
நீங்கள் திருப்பதி சென்றவராயிருந்தால்...
அந்த லட்டின் மகிமை,கிடைத்தலருமை,புனிதம் எல்லாம் உங்கள் சிந்தனையில் ஓடி..
கைகள் தானாக... பிரசாதம் வாங்க...பவ்யமாக... நீளும்.

வரலாறு படித்தவர்களும், ‘கட்டடித்தவர்களும்’ வாருங்கள்...
படத்திற்குள் செல்வோம்.

இப்படத்தின் முதல் ஷாட்,
இன்று முதல்...
உங்கள் சிந்தையில் பத்திரமாக இருக்கப்போகிறது.

அழகிய மார்பகங்கள்...
குளோசப்பில் பளீரென...பிரம்மாண்டமாக தெரிகிறது.
இக்காட்சியின் தீடீர் தாக்குதல்...
சிந்தையில்,  ‘உணர்ச்சிகள்’ கொப்பளிப்பதற்குள்...
ஒரு குழந்தை ‘திரை வலதில்’ காட்சிப்படுத்தப்படுகிறது.
முதல் ஷாட்டின் சில பிரேம்களிலேயே...
நம்மை காமுகனாக்கி...
அடுத்த சில நொடிகளில்,
நம்மை குழந்தையாக்கி...
‘மேஜிக்’ செய்திருக்கிறார் இயக்குனர்.

குழந்தை, பால் குடிக்க மறுக்கிறது.
தாயின் கரங்கள்...கொஞ்சம் சர்க்கரையை மார்பின் மேல் தூவுகிறது.
உடனே குழந்தை மார்புக்காம்பை கவ்வி பலமாக உறிஞ்சத்துவங்குகிறது.
 'A Touch Of Spice' என்ற தலைப்பு திரையில் ஒளிர்கிறது.


படத்தின் முதல் காட்சியிலேயே... தலைப்பின் மகிமையை உணர முடிகிறது.

இலக்கியம் [திரை இலக்கியம் & நூல் இலக்கியம்]
கலவி [ஹேராமில்...சாகேத்ராம் & அபர்னா சங்கமிப்பது.]
கவிதை
தாய்மை
இவை அனைத்துமே நம்மை மயங்கச்செய்வதில்...
சம வலிமை படைத்தவை.

பல்கேரிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள சில வாசகங்கள்...
 ' Motherhood is a Noble Function...
Because We All Have Mothers'...
தாய்மையின் பெருமையை உணர்த்துகிறது.

தாய்மைக்கு முதலிடம்...
குழந்தையின் தனித்தன்மை...
ஒரு சேர உணர முடிகிறது.

ஒரே ஒரு காட்சியை வைத்து...ஒரு பதிவை ஓட்டி விட்டான்...
என சிலர் நினைக்கக்கூடும்.

எழுத்துலக மாமேதை சுஜாதாவிடம்....
‘அணுகுண்டு செய்வது எப்படி?’ என அரைப்பக்கத்திற்குள் எழுதி தரச்சொன்னார் ஒரு பத்திரிக்கைக்காரர்.
சுருங்கச்சொல்லி விளங்கச்செய்வதில் மேதையான சுஜாதாவே... அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இந்தப்படத்திற்கும்...பல பதிவுகள் தேவைப்படுகிறது.

இதற்கான நியாயத்தன்மை காண...காணொளி காண்க...



  

Sep 17, 2012

Once Upon a Time in Anatolia - 2011 \ Turkey \ எங்கே தேடுவேன்...பிணத்தை, எங்கே தேடுவேன் ?

 ‘ஹேராம்’ என்ற  ‘உலகசினிமா ஆலமரத்திலிருந்து’ தாவ...
சரியான மரத்தை தேடிக்கொண்டிருந்தேன்.
 ‘கோண்ங்கள் பிலிம் சொசைட்டி’ அடையாளம் காட்டியது.
நன்றி... கோணங்களுக்கு.


 ‘துருக்கி’ சரமாரியாக உலகசினிமாவுக்கு...
‘தவப்புதல்வர்களை’ தந்து கொண்டே இருக்கிறது.
அவர்களில்  ‘தலைமகன்’ என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் இயக்குனர்
Nuri Bilge Ceylan.


 ‘முன்பு ஒரு காலத்துல’...என தலைப்பிலேயே கதை சொல்ல ஆரம்பித்தவ்ர் தான் ஒரு வித்தியாசமான  ‘கதை சொல்லி’ என...
தனது எல்லா படங்களிலும் நிரூபித்து வருகிறார்.

இவரது மாஸ்டர்பீஸ்களில் ஒன்றான   ' டிஸ்டண்ட் ' [ Distant ] என்ற படத்தை, செழியன் அவர்கள்  ஆனந்தவிகடனில் எழுதிய போதே நாம் இவரை
அறிந்திருந்தோம்.
2011ல் இப்படத்தை இயக்கி, கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய...
‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை... மீண்டும் அள்ளிக்கொண்டு போய் விட்டார்.
இனி அவரை, அள்ள விடாமல் தடுக்கும் பெரும் பொறுப்பு...
நம் தமிழ் சினிமா இயக்குனர்கள் கைகளில் இருக்கிறது.

இருட்டில் மலைச்சரிவில் செதுக்கிய சாலையில் மூன்று வாகனங்கள் ஒளியை ஓவியமாக பாய்ச்சியபடி செல்கின்றன.
நீதித்துறை வல்லுனர்,காவல்துறை அதிகாரி,மருத்துவர்,இரண்டு கைதிகள்,காவல்துறை வீரர்கள்,மற்றும் பணியாளர்கள் என ஒரு சிறு குழு ஒரு இரவு முழுக்க  'குற்றவாளிகளால்' புதைக்கப்பட்ட பிணத்தை தேடி அலைகிறார்கள்.
‘ இருக்கும் இடத்தை விட்டு...
இல்லாத இடம் தேடி...
எங்கெங்கோ அலைகிறார்கள்...
இந்த ஞானத்தங்கங்கள் ’.

அலைகிறார்கள்...அலைகிறார்கள்...அப்படி அலைகிறார்கள்.
அவர்களோடு நாமும் அலைந்து களைப்புறுகிறோம்.

ஆனால் அந்த களைப்பினூடே...
நீதித்துறை வல்லுனர்,காவல்துறை அதிகாரி,மருத்துவர் ஆகிய...
முக்கிய மூவருக்கிடையில் நடக்கும் உரையாடல்கள் மூலமாக...
இப்படம்...
உயர் தளத்தில் இயங்குவதை அடையாளம் கண்டு கொள்கிறோம்.


ஒரு கட்டத்தில் களைப்பாகி... அனைவரும் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று கிராமத்தலைவர் வீட்டில் தங்கி இளைப்பாறி பசியாறுகின்றனர்.
இங்கும்  ‘பவர் கட்’ வந்து சூழலை இருட்டாக்குகிறது.
 ‘இருட்டு’இப்படத்தின் மிக முக்கிய குறியீடாக  ‘பவர்ஃபுல்லாக’ பயன் படுத்தப்பட்டுள்ளது.

உலகத்தின் அத்தனை இருட்டையும் ஒரு நொடியில் போக்கும் வல்லமை படைத்த  ‘ஆதவன்’ எழும் நேரமான...
அதிகாலைப்பொழுதில்...
'இடம்' அடையாளம் காணப்படுகிறது.
எப்படி?

யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல்...
‘இருட்டையே’ துணையாகக்கொண்டு... ஒரே ஒரு நாய்...
அந்தப்பிணம் இருக்கும் இடத்தை  ‘கண்டு பிடித்து’...
தோண்டிக்கொண்டிருக்கும்.

‘கண்டு பிடித்த’ நாயை விரட்டி விட்டு...
இவர்களே... ‘அரும்பாடு பட்டு கண்டு பிடித்த ’
இடத்தை தோண்டுவார்கள்.
அப்போது  ‘ நாய் ’ பாய்ண்ட் ஆப் வியுவில் ஒரு ஷாட் போட்டிருப்பார் இயக்குனர்.
“ அட நாய்களா...
இந்த இடத்தை கண்டு பிடிக்கவா...
இவ்வளவு கஷ்டப்பட்டீங்க !”

கைகளும்,கால்களும் கட்டப்பட்ட நிலையில் பிணம் புதைக்கப்பட்டு இருக்கிறது.
இறந்தவனது உடல்... மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
அங்கே இறந்தவனது மனைவி,சிறு வயது மகனும் காத்திருக்கின்றனர்.


கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி மீது...
அச்சிறுவன் கல்லை தூக்கி அடிக்கிறான்.
வீசியெறியப்பட்ட கல்லில்... அச்சிறுவனின்  ‘கோபம்’ இருக்கிறது.
அவனது  ‘மொத்த கோபமும்’ அக்கல்லில் இறக்கி வைக்கப்பட்டு விட்டதை படத்தின் இறுதிக்காட்சி மூலம் நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்.

 ‘நீதியும்’, ‘காவலும்’ விடைபெற்றுச்செல்ல  ‘மருத்துவர்’ மட்டுமே இருக்கிறார்.

மருத்துவர்,
பிணத்தை அறுத்து பரிசோதிக்கும் மருத்துவர்,
போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை டைப் செய்பவர்,
மற்றும்  ‘இறந்தவர்’...
என இவர்களை மட்டுமே பிரதானமாக வைத்து...
இறுதிக்காட்சி பின்னப்பட்டுள்ளது.

 ‘லங்க்சை’ பரிசோதிக்கும் போது அதில் ‘மணல்’ இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது.
எனவே உயிரோடு புதைக்கப்பட்டு கொல்லப்பட்டது
தெரிய வருகிறது.
ஆனால் மருத்துவர்... அந்த உண்மையை போஸ்ட்மார்ட்டம் ர்ப்போர்ட்டில் குறிப்பிடாமல் மறைக்கிறார்.
ஏன் ?

இது போல...
பல கேள்விகள்... படத்தில் எழுப்பப்படுகிறது.
விடைகள், படத்திற்கு...  ‘உள்ளேயும்...வெளியேயும்’ இருக்கிறது.
அவற்றில்,
வாழ்க்கையின் தத்துவங்கள்...யதார்த்தங்கள்...பரிகாசங்கள் இருக்கிறது.

நான் கண்டு பிடித்த கேள்விகளையும்...விடைகளையும் எழுதி...
எனது கோணத்தில்... இப்படத்தை நீங்கள் பார்ப்பது...
இப்படத்திற்கு நான் செய்யும் துரோகம்.


படத்தின் ஒளிப்பதிவாளருக்கு தனி  ‘அந்தாதியே’ பாடலாம்.
மலைச்சரிவுகளில் காமிராவை இடம் மாற்றி...
ஒவ்வொரு பிரேமையும் ஒவியமாக்கி இருக்கிறார்.
காட்சியில் இடம் பெற்ற வாகனங்களின்  ‘ஹெட்லைட்டை’ மட்டும் துணையாகக்கொண்டு இவர் வடித்திருக்கும் ஓவியங்கள்...
நமது  ‘இன்றைய’ ஓளிப்பதிவாளர்களுக்கு பாடங்கள்.


[ தமிழில்  ‘பாலுமகேந்திரா’ மட்டுமே... இந்த ஆளுமையில் வல்லவர்.]

அற்புதமான ஒரு உலகசினிமாவை...
உங்களுக்கு அறிமுகம் செய்த பெருமிதத்தோடு...
விடை பெறுகிறேன்...
அடுத்து,
கோவை ஐரோப்பிய திரைப்படத்திருவிழாவில் கண்ட...
மற்றொரு  ‘அற்புதத்தை’ காணத்தருகிறேன் !.

இப்படம் பெற்ற விருதுகள்...இயக்குனரின் ஏனைய படைப்புகள்...
விக்கிப்பீடீயா உபயத்தோடு...

Awards

[edit]Won

[edit]Nominations




Filmography

Films, Television & Video
YearTitleCredited asNotes
DirectorProducerWriter
1995Cocoon (OriginalKoza)YesYesYesShort film.
1998Small Town (OriginalKasaba)YesYesYesFeature debut.
2000Clouds of May (OriginalMayıs Sıkıntısı)YesYesYes
2002Distant (OriginalUzak)YesYesYes
2006Climates (Originalİklimler)YesYesYes
2008Three Monkeys (OriginalÜç Maymun)YesYesYes
2011Once Upon a Time in Anatolia (OriginalBir Zamanlar Anadolu'da)YesYesYes


படத்தின் முன்னோட்டம் காணொளி காண்க...




May 14, 2012

Sinyora Enrica-[Turkey]2010 உறவுகள் தொடர்கதை...


நாய்களும்...ஆண்களும் உள்ளே வரக்கூடாது....
என வாசலில் ஒரு சிதிலமடைந்த போர்டு தொங்கும் வீட்டின் உரிமையாளர் சையநோரா என்ரிக்கா.
பேரிளம் பெண்.

கை விட்ட கணவனிடமிருந்து...கைப்பற்றிய வீட்டை, படிக்கும் பெண்களுக்கு வாடகைக்கு விட்டு வாழ்கிறாள்.
வீட்டில் ஆண்களை அனுமதிக்காத என்ரிக்கா... எகின் என்ற துருக்கி தேசத்து டீனேஜ் பையனை... இரண்டு மடங்கு வாடகைக்காக....அனுமதிக்கிறாள்.

எரின் வீட்டிற்க்குள் வந்ததும் அம்மண தரிசனம் கிடைக்கிறது.
நிலைக்கண்ணாடியில் ஒரு பெண்ணின் முழு நிர்வாண பிம்பம் தெரிகிறது.
நிர்வாண போஸ் கொடுத்து அசத்தியவள் வேலண்டினா.

கண்டதும் காதல் வந்து தொலைக்கிறது பையனுக்கு.
ஐ லவ் யூ... என இத்தாலியில் சொல்வதற்க்கு தீவிரமாக இத்தாலி கற்க ஆசைப்படுகிறான்.
என்ரிக்கா இத்தாலி கற்றுத்தர முன் வருகிறாள்.
என்ரிக்கா இத்தாலி மட்டுமா கற்றுத்தருகிறாள்?
பேரிளம் என்ரிக்காவுக்கும்... டீனேஜ் எரிக்குக்கும்... இடையே ஒரு புதிய உறவு பூக்கிறது.
அது நட்பா?பாசமா? காதலா?
படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களை விட என்னை மிகவும் கவர்ந்தது ஒரு ஒயின் பாட்டில்.
உலகின் டாப் 10 இயக்குனர்களில் ஒருவரான பெலினி...என்ரிக்காவுக்கு  பரிசாக கொடுத்த ஒயின் பாட்டிலை... ஒரு கதாபாத்திரமாக திரையில் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர் Ali Ilhom.

அந்த ஒயின் பாட்டிலை எரிக் ஒப்பன் பண்ணி பருகுவதும்...
என்ரிக்கா.... துருக்கி சாராயத்தை... எரிக் டிப்ஸ்படி மிக்ஸ் பண்ணி குடிப்பதும் படத்தின் எடிட்டிங் கவிதை.

அவள் அப்படித்தான்... என்ற படத்தில்,
இளையராஜாவின் பியோனோ இசையில் பூத்த புதுக்கவிதையாக வரும்....

உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் புதுக்கதை...
ஒரு கதை... இன்று முடியலாம்...
முடிவிலும்... ஒன்று தொடரலாம்...
இனியெல்லாம்... சுகமே....

என்ற பாடலுக்கு...இப்படத்தின் காட்சிகளை தொகுத்தால் அழகிய காவியம் ரெடி.


விருதுகள் பற்றிய தகவல் உபயம்: IMDB

Antalya Golden Orange Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2010WonGolden OrangeBest Actress
Claudia Cardinale
Special Jury AwardBest Film
Elvan Albayrak
 


Oct 20, 2011

BLISS [Turkish]2007-பெண்ணே நீ ஒழிக...


பெண்ணாய் பிறத்தற்க்கே மாதவம் செய்திடல் வேண்டும் எனக்காலகாலமாக ஜல்லியடித்து ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரை கொடுமைப்படுத்தப்படும் இனம் பெண்ணினம்.
வாச்சாத்தி கொடுமைக்கு நிவாரணம் பெற எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது?
ஒவ்வொரு நொடியும் பெண்கள்.... உலகில் ஏதாவது ஒரு மூலையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அந்த துன்பக்கடலின் ஒரு துளிதான் மரியம்.
அந்த அனிச்ச மலருக்கு வயது 17.

துருக்கி தேசத்து மலைகிராமத்தில் ....
நெடிதுயர்ந்த மலையின் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கும்...
 சலனமில்லாத குளத்தின் கரையில்...
 துவைத்துப்போட்ட துணி போல் கிடக்கிறாள் மரியம்.
படத்தை உற்று பாருங்கள்.
அந்த இளங்குருத்தின் குருதி தொடை வழியே வழிந்தோடி குளத்து நீரில் கலப்பதை காண முடியும்.

முதல் காட்சி....முதல் ஷாட்டிலேயே இத்துன்பத்தை...துயரத்தை காட்டிய விதத்திலேயே 'நான் ஒரு உலகசினிமா வித்தகன்' என்பதை சொல்லி விட்டார் இயக்குனர் Abdullah Oguz.

நடந்த கொடுமைக்கு நிவாரணம் தேடாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் ரணமாக்குவதானே நமது குல வழக்கம்.
தாயில்லாத மரியத்துக்கு பேயாக சித்தி.
கற்பழிக்கப்பட்ட பெண்ணை அழிப்பதுதான்....எங்குமே சாத்திரம்...சம்பிரதாயம். “தொங்கு”என கயிரை பரிசளிக்கிறாள் சித்தி.
உடலும்,மனமும் ரணமாகிப்போன மரியத்துக்கு ஆதரவு அன்றும்...இன்றும்...என்றும் ஒரே ஒரு பாட்டிதான்.

அவரிடம் கூட தன்னைக்குலைத்த மாபாதகனை காட்டிக்கொடுக்க மறுக்கிறாள் மரியம்.
மரியத்தை ஒழிப்பது எப்படி என்று ஊரே ஒன்று கூடி பேசுகிறது.
முடிவாக ஒரு ராணுவ வீரனிடம் பணியை ஒப்படைக்கிறார்கள்.
கொலைக்களனாக இஸ்தான்புல் நகரத்தை தேர்ந்தெடுத்து மரியத்தை பலியாடாக அழைத்துச்செல்கிறான்.
புண் பட்ட மரியத்தின் மனதுக்கு ஒவியம் போல் காட்சியளிக்கிறது இஸ்தான்புல் நகரம்.
நகரம் மறைந்திருக்கும் நரகம் என்பதறியா பேதை.
ராணுவத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக பணிபுரிந்தவனுக்கு போட்டுத்தள்ள சரியான இடம் சொல்லியா தர வேண்டும்?

துடிக்கும் துப்பாக்கியால் மரியத்தின் உயிரை குடிக்க முடியாமல் தவிக்கிறான்.
காரணம்....சிறு வயது முதல் அவனால் நேசிக்கப்பட்டவள் மரியம்.
தன்னை நேசித்தவன்... யாசிப்பது உயிர்... என்பதறிந்து  “எடுக்கவேண்டாம்....கொடுக்கிறேன்”என தற்கொலைக்கு துணிகிறாள்.
 “தூயவனே! செல்...என் தந்தையிடம் சொல்...
மரியம் மாசற்றவள்.....சொர்க்கத்தில் என் தாயை சந்திக்க செல்கிறேன்” என மரணத்தை நோக்கி மரியம் பாய்கையில் தடுத்து விடுகிறான் மாவீரன்.
பல்லாயிரம் உயிரைக்குடிக்கும் அணு உலையை திறக்கத்துடிக்கும் மத்திய அரசா அவன்?
மனிதநேயம் மிகுந்த மனிதன்.

இக்காட்சியை நூறு முறை பார்க்க வேண்டும் நமது படைப்பாளிகள்.
நடிப்பு,ஒளிப்பதிவு,எடிட்டிங்,பின்னணி இசை ...இவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒரு காட்சியை எப்படி வீர்யமாக்குகின்றன என்பதற்க்கு இலக்கணம் இக்காட்சி.
இது போன்ற படங்களை நேசித்து பார்க்கும் படைப்பாளிகளிடம் வேலாயுதமும் ஏழாம் அறிவும் தோன்றாது.

வாழ நினைத்தால் வாழலாம்....
வழியா இல்லை பூமியில்.... என புறப்பட்ட ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஒரு பேராசிரியர்.
அலை கடலில் ஒரு தோணி...
அதில் வாழ்வதே என் பாணி....
என உல்லாசப்படகில் உலகம் சுற்றும் வாலிபன் அவர்.



அவரது தாடி மட்டும் வெள்ளையில்லை.. மனமும்.. என எண்ணுகிறாள் மரியம். 
அவர்,  பாலா....பாலிடாலா....என சந்தேகிக்கிறான் மாவீரன்.

மரியத்தை கெடுத்த மாபாவி யார்? என்ற முதல் கேள்வியிலிருந்து....
பேராசிரியர் நல்லவரா?கெட்டவரா?
மரியத்தை மாவீரன் ஏற்றானா?மறுத்தானா?
மரியம் வாழ்வாளா?வீழ்வாளா?
துப்பாக்கி வெடிக்குமா?வெடிக்காதா?
[மரியத்தின் உயிரைக்குடிக்க நினைத்த துப்பாக்கி... இன்னொரு காட்சியில் குளோசப்பில் காட்டப்படுகிறது.
துப்பாக்கிக்கு குளோசப் ஷாட் போட்டால் அது வெடிக்க வேண்டும் என்பது மாமேதை ஹிட்ச்ஹாக் கடைப்பிடித்த கோல்டன் ரூல்.]
என பல துணை கேள்விகளோடு படம் பயணிக்கிறது.


வாருங்கள்....அவர்களோடு பயணித்து விடை தேடுவோம்.

என் முதல் பதிவில் குறிப்பிட்டபடி...
களவாணியில் நம்பிக்கையாகி....
 இன்று வாகை சூடி...
 நட்சத்திரமாக ஜொலிக்கும் இயக்குனர் ஏ.சற்க்குணத்துக்கு...
 இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.