Showing posts with label பாலு மகேந்திரா. Show all posts
Showing posts with label பாலு மகேந்திரா. Show all posts

Sep 17, 2012

Once Upon a Time in Anatolia - 2011 \ Turkey \ எங்கே தேடுவேன்...பிணத்தை, எங்கே தேடுவேன் ?

 ‘ஹேராம்’ என்ற  ‘உலகசினிமா ஆலமரத்திலிருந்து’ தாவ...
சரியான மரத்தை தேடிக்கொண்டிருந்தேன்.
 ‘கோண்ங்கள் பிலிம் சொசைட்டி’ அடையாளம் காட்டியது.
நன்றி... கோணங்களுக்கு.


 ‘துருக்கி’ சரமாரியாக உலகசினிமாவுக்கு...
‘தவப்புதல்வர்களை’ தந்து கொண்டே இருக்கிறது.
அவர்களில்  ‘தலைமகன்’ என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் இயக்குனர்
Nuri Bilge Ceylan.


 ‘முன்பு ஒரு காலத்துல’...என தலைப்பிலேயே கதை சொல்ல ஆரம்பித்தவ்ர் தான் ஒரு வித்தியாசமான  ‘கதை சொல்லி’ என...
தனது எல்லா படங்களிலும் நிரூபித்து வருகிறார்.

இவரது மாஸ்டர்பீஸ்களில் ஒன்றான   ' டிஸ்டண்ட் ' [ Distant ] என்ற படத்தை, செழியன் அவர்கள்  ஆனந்தவிகடனில் எழுதிய போதே நாம் இவரை
அறிந்திருந்தோம்.
2011ல் இப்படத்தை இயக்கி, கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய...
‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை... மீண்டும் அள்ளிக்கொண்டு போய் விட்டார்.
இனி அவரை, அள்ள விடாமல் தடுக்கும் பெரும் பொறுப்பு...
நம் தமிழ் சினிமா இயக்குனர்கள் கைகளில் இருக்கிறது.

இருட்டில் மலைச்சரிவில் செதுக்கிய சாலையில் மூன்று வாகனங்கள் ஒளியை ஓவியமாக பாய்ச்சியபடி செல்கின்றன.
நீதித்துறை வல்லுனர்,காவல்துறை அதிகாரி,மருத்துவர்,இரண்டு கைதிகள்,காவல்துறை வீரர்கள்,மற்றும் பணியாளர்கள் என ஒரு சிறு குழு ஒரு இரவு முழுக்க  'குற்றவாளிகளால்' புதைக்கப்பட்ட பிணத்தை தேடி அலைகிறார்கள்.
‘ இருக்கும் இடத்தை விட்டு...
இல்லாத இடம் தேடி...
எங்கெங்கோ அலைகிறார்கள்...
இந்த ஞானத்தங்கங்கள் ’.

அலைகிறார்கள்...அலைகிறார்கள்...அப்படி அலைகிறார்கள்.
அவர்களோடு நாமும் அலைந்து களைப்புறுகிறோம்.

ஆனால் அந்த களைப்பினூடே...
நீதித்துறை வல்லுனர்,காவல்துறை அதிகாரி,மருத்துவர் ஆகிய...
முக்கிய மூவருக்கிடையில் நடக்கும் உரையாடல்கள் மூலமாக...
இப்படம்...
உயர் தளத்தில் இயங்குவதை அடையாளம் கண்டு கொள்கிறோம்.


ஒரு கட்டத்தில் களைப்பாகி... அனைவரும் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று கிராமத்தலைவர் வீட்டில் தங்கி இளைப்பாறி பசியாறுகின்றனர்.
இங்கும்  ‘பவர் கட்’ வந்து சூழலை இருட்டாக்குகிறது.
 ‘இருட்டு’இப்படத்தின் மிக முக்கிய குறியீடாக  ‘பவர்ஃபுல்லாக’ பயன் படுத்தப்பட்டுள்ளது.

உலகத்தின் அத்தனை இருட்டையும் ஒரு நொடியில் போக்கும் வல்லமை படைத்த  ‘ஆதவன்’ எழும் நேரமான...
அதிகாலைப்பொழுதில்...
'இடம்' அடையாளம் காணப்படுகிறது.
எப்படி?

யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல்...
‘இருட்டையே’ துணையாகக்கொண்டு... ஒரே ஒரு நாய்...
அந்தப்பிணம் இருக்கும் இடத்தை  ‘கண்டு பிடித்து’...
தோண்டிக்கொண்டிருக்கும்.

‘கண்டு பிடித்த’ நாயை விரட்டி விட்டு...
இவர்களே... ‘அரும்பாடு பட்டு கண்டு பிடித்த ’
இடத்தை தோண்டுவார்கள்.
அப்போது  ‘ நாய் ’ பாய்ண்ட் ஆப் வியுவில் ஒரு ஷாட் போட்டிருப்பார் இயக்குனர்.
“ அட நாய்களா...
இந்த இடத்தை கண்டு பிடிக்கவா...
இவ்வளவு கஷ்டப்பட்டீங்க !”

கைகளும்,கால்களும் கட்டப்பட்ட நிலையில் பிணம் புதைக்கப்பட்டு இருக்கிறது.
இறந்தவனது உடல்... மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
அங்கே இறந்தவனது மனைவி,சிறு வயது மகனும் காத்திருக்கின்றனர்.


கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி மீது...
அச்சிறுவன் கல்லை தூக்கி அடிக்கிறான்.
வீசியெறியப்பட்ட கல்லில்... அச்சிறுவனின்  ‘கோபம்’ இருக்கிறது.
அவனது  ‘மொத்த கோபமும்’ அக்கல்லில் இறக்கி வைக்கப்பட்டு விட்டதை படத்தின் இறுதிக்காட்சி மூலம் நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்.

 ‘நீதியும்’, ‘காவலும்’ விடைபெற்றுச்செல்ல  ‘மருத்துவர்’ மட்டுமே இருக்கிறார்.

மருத்துவர்,
பிணத்தை அறுத்து பரிசோதிக்கும் மருத்துவர்,
போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை டைப் செய்பவர்,
மற்றும்  ‘இறந்தவர்’...
என இவர்களை மட்டுமே பிரதானமாக வைத்து...
இறுதிக்காட்சி பின்னப்பட்டுள்ளது.

 ‘லங்க்சை’ பரிசோதிக்கும் போது அதில் ‘மணல்’ இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது.
எனவே உயிரோடு புதைக்கப்பட்டு கொல்லப்பட்டது
தெரிய வருகிறது.
ஆனால் மருத்துவர்... அந்த உண்மையை போஸ்ட்மார்ட்டம் ர்ப்போர்ட்டில் குறிப்பிடாமல் மறைக்கிறார்.
ஏன் ?

இது போல...
பல கேள்விகள்... படத்தில் எழுப்பப்படுகிறது.
விடைகள், படத்திற்கு...  ‘உள்ளேயும்...வெளியேயும்’ இருக்கிறது.
அவற்றில்,
வாழ்க்கையின் தத்துவங்கள்...யதார்த்தங்கள்...பரிகாசங்கள் இருக்கிறது.

நான் கண்டு பிடித்த கேள்விகளையும்...விடைகளையும் எழுதி...
எனது கோணத்தில்... இப்படத்தை நீங்கள் பார்ப்பது...
இப்படத்திற்கு நான் செய்யும் துரோகம்.


படத்தின் ஒளிப்பதிவாளருக்கு தனி  ‘அந்தாதியே’ பாடலாம்.
மலைச்சரிவுகளில் காமிராவை இடம் மாற்றி...
ஒவ்வொரு பிரேமையும் ஒவியமாக்கி இருக்கிறார்.
காட்சியில் இடம் பெற்ற வாகனங்களின்  ‘ஹெட்லைட்டை’ மட்டும் துணையாகக்கொண்டு இவர் வடித்திருக்கும் ஓவியங்கள்...
நமது  ‘இன்றைய’ ஓளிப்பதிவாளர்களுக்கு பாடங்கள்.


[ தமிழில்  ‘பாலுமகேந்திரா’ மட்டுமே... இந்த ஆளுமையில் வல்லவர்.]

அற்புதமான ஒரு உலகசினிமாவை...
உங்களுக்கு அறிமுகம் செய்த பெருமிதத்தோடு...
விடை பெறுகிறேன்...
அடுத்து,
கோவை ஐரோப்பிய திரைப்படத்திருவிழாவில் கண்ட...
மற்றொரு  ‘அற்புதத்தை’ காணத்தருகிறேன் !.

இப்படம் பெற்ற விருதுகள்...இயக்குனரின் ஏனைய படைப்புகள்...
விக்கிப்பீடீயா உபயத்தோடு...

Awards

[edit]Won

[edit]Nominations




Filmography

Films, Television & Video
YearTitleCredited asNotes
DirectorProducerWriter
1995Cocoon (Original: Koza)YesYesYesShort film.
1998Small Town (Original: Kasaba)YesYesYesFeature debut.
2000Clouds of May (Original: Mayıs Sıkıntısı)YesYesYes
2002Distant (Original: Uzak)YesYesYes
2006Climates (Original: İklimler)YesYesYes
2008Three Monkeys (Original: Üç Maymun)YesYesYes
2011Once Upon a Time in Anatolia (Original: Bir Zamanlar Anadolu'da)YesYesYes


படத்தின் முன்னோட்டம் காணொளி காண்க...




Sep 16, 2012

தமிழ்த்திரை மேதை பாலுமகேந்திராவை படியுங்கள்...


வலையுலகம்... இப்போது மேதைகளின் உலகமாகி விட்டது.
தமிழர்கள் நெஞ்சில் அழியாத கோலமிட்டவர்...வலையுலகத்தில் நர்த்தனமாட வந்து விட்டார்.
சிங்கம் கர்ஜிக்க தொடங்கி விட்டது.

திரையில் சாதித்த  ‘தங்கம்’.... வலையில்  ஜொலிக்க வந்து விட்டது.

கல்லூரிப்பருவத்தில் என்னை மயக்கிய திரை ஆசான்....
வண்ணத்தமிழில் வலைப்பக்கத்தில் வடிக்கும் சிற்பங்களை காண அழைக்கிறேன்.
பாலுமகேந்திரா வலைப்பக்கம் காண...கிளிக்கவும்.
அள்ளுங்கள்....பருகுங்கள்.

Sep 9, 2012

Hey Ram - 2000 \ திரை மொழி இலக்கணம் \ ஹேராம்=022

நண்பர்களே...
ஹேராம்=020  ‘வாதமா?பிடிவாதமா?’ பதிவில்...
திரு.ராஜா சுந்தர்ராஜன் அவர்கள் புரிந்த...
கமல் மற்றும் மகேந்திரனுக்கு எதிரான வாதங்களையும்...
நண்பர் கருந்தேள் ராஜேஷின்  ‘ஆமாம்...சாமியையும்’
இடம் பெறச்செய்தேன்.
அந்தப்பதிவில் விவாதம் செய்ய மறுத்திருந்தேன்.
ஏனென்றால் சமீபத்தில்தான்  ‘இயற்கை விஞ்ஞானி’ ஐயா...நம்மாழ்வார் அவர்கள் எழுதியதை படித்திருந்தேன்.
“ விவாதம் செய்யாதீர்கள்...
நண்பர்களை இழந்து விடுவீர்கள் ”

இருந்தாலும் தீவிர சினிமா வேட்கை உடைய இருவர் அதில் இடம் பெற்ற திரை நுட்பங்களை பற்றிய விளக்கம் கேட்டனர்.

///நண்பர் screen space occupied என்பதைத்தான் size of the composition என்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன். இது ஐஸன்ஸ்டீன் உருவாக்கிய இலக்கண விதி என்று நினைக்கிறேன்.////

சார்... இதைப்பற்றி விளக்க முடியுமா?

எனது விளக்கம் :
 “ இரண்டும் ஒன்றே...
 ‘ஸ்கீரின்ஸ்பேஸ் ஆக்குபைடு’ ரஷ்ய திரை மொழி.
 ‘சைஸ் ஆப் கம்போசிஸேசன்’ ஹாலிவுட் திரை மொழி ”.

///திரைமொழி கற்றவன் இல்லை நான். ஆனால் திரை-வலதில் (screen right) சரியான நிலைபாடு எடுப்பவரும் திரை-இடதில் தவறான கொள்கையரும் இருக்க வேண்டும் என்பது எனது இலக்கணம். அதன்படி, ‘முள்ளும் மலரும்’ சட்டக யாப்பு பல இடங்களில் உதைக்கிறது. தமிழனாக எனக்கு அர்த்தமாவது தமிழனல்லாதவனுக்கு அர்த்தமாகுமா என்னும் ஐயம் எழுகிறது.///

எனது விளக்கம் :

முதலில் சினிமா மொழி தெரியாதவர்கள் கமல்,மகேந்திரன் போன்ற ஜாம்பவான்களை விமர்சிக்க கூடாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

 ‘எனது இலக்கணம்’ என ஒன்றை அவர் அவருக்குள் வைத்துக்கொள்வதில் யாரும் ஆட்சேபிக்க முடியாது.
ஆனால் இலக்கணம் பொதுவானது.
 ‘சினிமாவின் இலக்கணம்’....
 கிரிபித்,ஐஸன்ஸ்டைன்,புதோவ்கின்,கோடார்டு என ஜாம்பவான்கள் எழுதியது.
அதில் கை வைக்க முடியாது.

ஏற்க்கெனவே இருக்கின்ற இலக்கணத்தை உடைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால்...
திரு ரா.சு. அவர்கள்  ‘திரை வலது-திரை இடதுக்கு’ அவராக எழுதிய  இலக்கணப்படி ...  ஒரு படம்  எடுத்துக்காட்டி காவியமாக்கட்டும்.
இரு கரம் தட்டி வரவேற்கலாம்.

உலகசினிமா ஜாம்பவான்கள் பலரும் கடைப்பிடிக்கும் சினிமா மொழியின்படி,
எனது விளக்கம்... 
நாம் எழுதும் போதும்,படிக்கும் போதும்  ‘இடதிலிருந்து வலதுக்கு’ இயங்குவோம். 
எனவே நமது சப்-கான்ஸியஸ் மைண்ட் ‘முக்கியவற்றை’ இடதிலும், முக்கியமல்லாதவைகளை வலதிலும் குறித்துக்கொள்ளும்.
[ அரபு,ஜப்பான் போன்ற இடதிலிருந்து வலது பழக்கமுடைய நாட்டவர்களுக்கு எதிர் மறையாக இருக்கும்.]
எனவே படைப்பாளிகள்  ‘திரை வலது-திரை இடதை’ ஹீரோ-வில்லன் என்பதை வைத்து தீர்மானிக்க மாட்டார்கள்.
திரைக்கலையின் பல்வேறு அம்சங்கள் தீர்மானிக்கும் விஷயம் அது.

அவற்றில் முக்கிய சிலவற்றை மட்டும் சொல்கிறேன்....
காட்சியின் தன்மை...
அடுத்து வரும் காட்சிக்கு தொடர்பு படுத்துவது...
காரெக்டர் பாய்ண்ட் ஆப் வியூ...
டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியூ...
கன்டெண்ட் பாய்ண்ட் ஆப் வியூ...
ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப்  வியூ...
கடவுள் பாய்ண்ட் ஆப் வியூ...
*********************************************************************************


Titanic-1997 \ English \ Directed by James Cameron
 ‘கடவுள் பாய்ண்ட் ஆப் வியூ ஷாட்’ டைட்டானிக் படத்தில் வருகிறது.
கப்பலை படைத்தவர்...
 “ இக்கப்பலை கடவுளால் கூட ஒன்றும் செய்ய முடியாது ” என கொக்கரிப்பார்.
 ‘‘கடவுள் சிரித்தார்’.

கப்பல் மூழ்கும் போது,  ‘எக்ஸ்ட்ரீம் டாப் ஆங்கிளில்’....
 கடவுளின் பாய்ண்ட் அப் வியூவில் அந்த ஷாட்டை படைத்திருப்பார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

*********************************************************************************
இப்படி பல விஷயங்கள் திரை வலது-திரை இடதை தீர்மானிக்கும்.



இப்போது உதாரணத்துக்கு ஹேராமுக்குள் நுழைவோம்.
அபயங்கரை திரை இடதிலும்...
ராமை திரை வலதிலும்  ‘எண்ட்ரி’ கொடுத்து கம்போஸ் செய்திருப்பார் இயக்குனர் கமல்.

ஏன் அப்படி செய்தார்?
 ‘கில்ட்டி கான்சியஸ்ஸில்’ இருக்கும் ராம்...
  ‘தெளிவற்ற மனநிலையில்’ இருப்பதால் திரை வலதிலும்,
சிந்தையிலும்...சித்தாந்தத்திலும் தெளிவாக இருக்கும் அபயங்கரை...
 திரை இடதிலும் இடம் பெறச்செய்தார் இயக்குனர் கமல்.

[ இயக்குனராக மகேந்திரனும்...ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவும் இணைந்து உருவாக்கிய  ‘முள்ளும் மலரும்’ படத்திலும்...
இதே சிச்சுவேஷன்தான்...
இதே நிலைப்பாடுதான்.]

இரு தரப்பு வாதங்களை கேட்ட உங்களுக்கு...
 சினிமா மொழி தெரியாத காரணத்தால் மட்டுமே ஹேராமை புரியாமல் விமர்சிக்கின்றனர் என்ற முடிவு கிடைக்கிறதா!

இனி திரைக்கதையிலிருந்து...
*********************************************************************************

           l edit this paper.
lt has my address on it.

Come and meet me.
We have a lot to do. 

Don't go like this. 

People won't know what you are. 

Good hunting.
************************************************************
 குங்குமத்தை நெற்றியிலிட்டு  ‘ஹிந்து’ என அடையாளப்படுத்தி அனுப்புகிறான் அபயங்கர்.

இனி அடுத்த பதிவில்... ‘ஹாலிவுட் பாலா மேட்டரோடு’  சந்திக்கிறேன்.





Jul 30, 2012

Hey Ram- சுஜாதா,கமல்,மகேந்திரன்... முட்டாள்களா? \ 2000 \ ஹேராம் =016


போன ஹேராம் பதிவு மிகவும் சூடாகி விட்டது.
அதை பற்றி கிளைமாக்சில் பார்ப்போம்.

 ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’
கவியரசரின் தெய்வ வாக்கு மீண்டும்...மீண்டும் என் வாழ்வில் தொடர்கிறது.
அவரது அடுத்த வரி...என்னை எப்போதுமே வெளியே கொண்டு போய் விட்டு விடும்.


ஹேராம் பதிவின் மிக முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்.
இந்தக்காட்சியை நடந்து முடிந்த...
‘சரித்திரத்தின் ஆவணமாக’ எடுத்து கொள்ள வேண்டும்.

உணர்வுகளுக்கு தீனி போடும் களமாக ஆக்கி விடக்கூடாது என்பதை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால்...
Hey Ram Is An Experiment With Truth By Kamal Haasan

இப்பதிவின் தொடக்கமாக... வேறொருவரின்... பதிவின் தொகுப்பை...
முதலில் பார்ப்போம்.
*********************************************************************************
” ஹேராமைப் போன்றதொரு கதைக்களத்தில் பெரும்பணத்தைக் கொட்டி, போட்ட பணம் வருமா, வராதா என்று அஞ்சாமல், தனக்கு சோறு போடும் தமிழ் சினிமாவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட கமலின் எண்ணம், ஏனைய கலைஞர்களுக்குப் பாடம்.


1947ல் கொல்கத்தாவில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தைப் படமாக்கியிருந்த விதம், சினிமாவுக்கும் சரி, கமல் சொல்ல வந்த கருத்துக்கும் சரி, நல்ல தீனி. 


கடந்த காலக் கொல்கத்தாவைக் காட்ட அமைத்த பிரம்மாண்ட அரங்குகளைக் கலவரத்தின் போது எரித்ததாகக் காட்டப்பட்ட காட்சிகளில், அவற்றைக் கொளுத்தும்போது, தமிழ் ரசிகர்களின் ரசனையை நம்பி காசைப் போட்டு எரித்து, அந்தத் தீயிலேயே கையைச் சுட்டுக்கொண்டாரே என்றுதான் எனக்குத் தோன்றும்.


ஹேராம் ஒரு இந்து மதச்சார்புப் படம் என்று வாதிடுபர்கள், கலவரக் காட்சிகளில் இந்துக்களும், சீக்கியர்களும், முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளைக் காட்டப்பட்ட காட்சிகளில்தான் குரூரம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 


ஒரு சீக்கிய முதியவர், 5 அல்லது 6 வயதே நிரம்பிய ஒரு இஸ்லாமியச் சிறுவனைத் தீயில் போடுவார். 
அதேபோல, ஒரு இந்துச் சிறுவன், ஒரு இஸ்லாமிய முதியவரைக் குத்திக் கொல்வான்.


என்னதான் கதைக்காக, படத்தின் நாயகனாக வரும் இந்துவின் மனைவி, இஸ்லாமியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக், கொலை செய்யப்பட்டதாகக் காட்ட வேண்டியிருந்தாலும், அதை ஈடுசெய்ய, கலவரத்தின் போது இந்துக்கள் செய்த கொடுமையையும் காட்டியது கதையின் நடுநிலைமைக்கு, ஒரு சோறு பதம்”.


முழுப்பதிவையும் படிக்க இங்கே செல்லவும்

வேறொரு தளத்தில் எழுதப்பட்ட இக்கருத்தை தனது பதிவில் வெளியிட்டவர்

திரு.அலி என்ற இஸ்லாமிய சகோதரர்.
பத்திரிக்கையாளர்.
இப்பதிவுதான் கமலுக்கு கிடைத்த ஆஸ்கார்.
**********************************************************************************

 வெள்ளைக்காரன் புத்தியை புரிந்து கொண்டு... எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில்  சாகேத் ராம் வீட்டுக்கு திரும்புகிறான்.
கூர்க்கா செத்து கிடப்பது வன்முறை வீட்டுக்குள் வந்து விட்டதை ராமோடு நாமும் புரிந்து கொள்கிறோம்.
சூழ்நிலையை இன்னும் சரியாக கணிக்க தவறியதால்...வெகு எளிதாக அடிக்கப்பட்டு வீழ்கிறான்.
 பியானோவில் கட்டி வைக்கப்படுகிறான்.

பியானோ ‘தீமட்டிக் எக்ஸிஸ்டெண்ட்டாக’ ஹேராம் படத்தில் தொடர்ந்து காட்டப்படுகிறது. 
‘படிப்பவன்’ என்றால் பிரேமில் புத்தகங்கள் இருக்கும்.
 ‘குடிப்பவன்’என்றால் டாஸ்மாக் சரக்கிருக்கும்.
ராம் ‘ இசைப்பவன்’ என்பதை காட்ட  பியானோ இருக்கிறது.
பியானோ, அம்ஜத்-ராம் நட்பின் சின்னமாக  ‘ராமரானாலும்,பாபரானாலும்’ பாடலில் காட்டப்பட்டது.
 மீண்டும் பியானோ,ராம்-அபர்னா காதலின் சின்னமாக இருவரும் இணைந்து வாசித்த கவிதை காட்சியில் பங்கு பெற்றது.

 வன்முறையாளர்கள், கண்களுக்கு பியானோவாக தெரியாது.... மரத்தாலான  மேஜையாகத்தான் தெரியும்.
ராம்-அபர்னா காதல் வாழ்க்கையை கட்டமைத்த பியானோவில்...  ராம் கட்டப்பட்டிருப்பது முரண்.

 அல்தாப் வாயில்  ‘கத்தியை’ கவ்விக்கொண்டு பால்கனி வழியாக போகிறான். 

‘எக்ஸ்டர்னல் கம்போசிஷேசனாக’ அபர்னாவின் அலறலும்....
 ‘இண்டர்னல் கம்போசிஷேனாக’ ராமின் கதறலை வடிவமைத்துள்ளார்  ‘இயக்குனர் கமல்’ .

இதையே  ‘இண்டர்னல் கம்போசிஷேனில்’ அபர்னா கற்பழிக்கப்படுவதையும்...  ‘எக்ஸ்டர்னல் கம்போசிஷேனில்’ கமல் கதறுவதையும்... காட்டத்தெரியாதா  ‘இயக்குனர் கமலுக்கு’?

வன்முறையை வலிந்து காட்டி காசு பார்க்கும் ஈனப்பிறவி அல்ல கமல்.

அவருக்குள்ள சமூக அக்கறைக்கு...பொறுப்பு உணர்ச்சிக்கு இந்த ஒரு  ‘ஷாட் கம்போசிஷேசன்’ போதும்.  

தனது நீண்ட நாள் ஆசையை தணித்து கொண்ட அல்தாப்...
இப்போது மற்றவர்களை வரவேற்கிறான்.

 ‘இவன் எனக்குப்போதும்’என்று ஒருவன் மட்டும் ராமோடு இருக்க மற்றவர்கள் அபர்னாவை சீரழிக்க செல்கிறார்கள்.

ராமோடு இருக்க ஆசைப்பட்டவன் ‘ஹோமோசெக்ஸ்’விரும்பி.

அவன் ராமை தடவுவதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும்.  இக்காட்சியில் நடித்த நடிகர் பெயர் சத்யஜித்.
 ‘பதினாறு வயதினிலே’ படத்தில் டாக்டராக நடித்தவர். *********************************************************************************

இவரை, நான் தயாரித்து இயக்கிய  ‘ஆர்.எஸ்.தென்னமரக்குடி எண்ணெய்’ விளம்பர படத்தில் மாடலாக்கினேன்.
அப்போது ஹேராம் வெளியான நேரம். அந்த அனுபவத்தை இடைவேளையின் போது பகிர்ந்து கொண்டார்.

அவரிடம்  கமல்.... ‘ஹோமோ’காரெக்டர் பற்றி  சொல்லவேயில்லை..
அக்காரெக்டர் தன்மையை... சப்-டெக்ஸ்டாக காட்ட விரும்பியிருக்கிறார்
 ‘இயக்குனர்’ கமல்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிகவும் நேசிக்கும் இஸ்லாமிய சகோதரர்களை மிக மோசமாக காட்ட விரும்பவில்லை.

இப்பதிவை படிக்கும் வரை சத்யஜித்துக்கு...தனது காரெக்டர் பற்றி தெரியப்போவதில்லை.

இக்காட்சியின் இறுதி கட்டமாக... மாடியிலிருந்து சத்யஜித் கீழே விழும் காட்சி பற்றி குறிப்பிடும் போது...
 “நான் நடிக்கப்பயப்பட்டேன்.
தைரியமா வாங்க...
நான் விழுந்து காண்பிக்கிறேன்.
அதை வந்து...முதல்ல  பாருங்க....என்று பால்கனியின் விளிம்புக்கு அழைத்துப்போய்....
தள்ளி விட்டு விட்டு போய் விட்டார்...பாவி மனுஷன் ”.
என்றார் சத்யஜித். 

**********************************************************************************

பல நேரங்களில் நடிகர்களை இப்படி ஏமாற்றித்தான் படமெடுக்க முடியும்.

நான் ஒரே ஒரு டயலாக்கை ஐம்பது டேக் எடுத்திருக்கிறேன்.
அந்த கஷ்டமான....நீளமான.... டயலாக்.... ‘வாவ்’
 அந்த  ‘பெரிய டயலாக்’ மாடலுக்கு எக்ஸ்பிரஸிவாக வரவேயில்லை.

கேமிராவை ஒட விட்டு... காமிரா பீல்டுக்கு வெளியே நின்று கொண்டு... காட்சிக்குறிய  ‘எம்மோட்டிவ்னஸ்ஸை’ கொண்டு வர ...
 கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
இப்போது கேமராவுக்கு வெளியே நின்று கொண்டு...
 நான் நடித்து கொண்டிருந்தேன்.
  “ அட நாயே...இந்த சின்ன டயலாக்கை... பேசத்தெரியாம... என்ன மயித்துக்கு... மாடல்னு வந்து... உயிரை வாங்குற” என்ற டயலாக்கை எனக்குள் பேசிக்கொண்டு...
 என் கோபத்தை ஒரு சதவீதம் கூட முகத்தில் காட்டாமல்....
“இதை பாரும்மா...ஐம்பது டேக்குமே... ஒ.கே டேக்குதான்...
ஆனா உங்கிட்ட இன்னும் பெட்டர்  ‘வாவ் ’ஒண்னு இருக்கு...
 எனக்கு அது வேணும்...”
இப்படி கால் மணிநேரம் கூசாம புளுகி தள்ளினேன்.
 இறுதியாக...
 “ உனக்கு எந்த ரெஸ்ட்டாரண்ட் பிடிக்கும்”
 “பார்க் ஷெரடன் தக்‌ஷின்”

 “ஆக்டர்ல யாரை பிடிக்கும்”
“ஷாருக்னா உயிரு”

 “உனக்கு பக்கத்து டேபிள்ள ஷாருக் வந்து உக்காந்தா உனக்கு எப்படி இருக்கும்?”
“வாவ்”
கட்...
டேக்... ஒ.கே.

இப்படி அனுபவப்பட்ட ஹிட்ச்ஹாக்,. “ நடிகர்கள் அனிமல்ஸ்”
என்று சொன்னார்.
இப்படி பட்டவர்த்தனமாக உண்மையை போட்டு உடைத்ததுக்கு வாங்கி கட்டிக்கொண்டது தனிக்கதை.

நடிப்பை பற்றி...சில வார்த்தைகள்....
நாடகத்தில்....நடிப்பை இரண்டு வகைகளாக பிரித்தார்கள்.
ஒன்று...மெத்தட் ஆக்டிங்.
இரண்டு....நேச்சுரல் ஆக்டிங்....
இவ்விரண்டையும் தனக்கே உரிய வகையில் உள்ளடக்கி
‘ஸ்கீரின் ஆக்டிங்கை’ உருவாக்கியது சினிமா.
 ‘ஸ்கீரின் ஆக்டிங்’ஷாட்டின் கால அளவுக்குள் அடங்க வேண்டும்.
இது சினிமா மீடியத்தின் நிர்ப்பந்தம்.
 ‘ஸ்கீரின் ஆக்டிங்கை’ நடிகர் மட்டும் தீர்மானிக்க முடியாது.
நடிகர்,இயக்குனர்,ஒளிப்பதிவாளர்,எடிட்டர்...ஏன் கலை இயக்குனர் கூட சேர்ந்து  உருவாக்குவதுதான்  ‘ஸ்கீரின் ஆக்டிங் ’
ஆனால், ரசிகர்கள் கை தட்டல்... கிடைப்பது நடிகனுக்கு மட்டுமே.

 ‘ஹ்யூமன் எமோஷன்சை’ எட்டு வகைகளாக மேற்கத்திய தத்துவம் பிரிக்கிறது.
நம் இந்தியாவில் ஒரு படி மேலே போய் ஒன்பது வகைகளாக பிரித்தார்கள்.   அதை ‘நவரசம்’என ஒரே பெயரில் அடக்கினார்கள்.

‘நவரசத்திலும்’ கொடி கட்டி பறந்தது உலகிலேயே இரண்டே பேர்தான்.
ஒன்று...நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இரண்டு...கமல்ஹாசன்.

அல்பசினோவாக இருக்கட்டும்...
மார்லன் பிராண்டோவாக இருக்கட்டும்...
உலகின் ஜாம்பவான்கள் அனைவருமே ஒரு சில வகை நடிப்பில் மட்டுமே கொடி கட்டி ஜெயித்தவர்கள்.
ஒனபதிலும் ஜெயித்தவர்கள் சிவாஜி,கமல் மட்டுமே.
நான் மேலே குறிப்பிட்ட நான்கு நடிகர்களின் மாஸ்டர்பீஸ் படங்கள் அனைத்தையும் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.

நடிப்பை பற்றி ஒரு தொடர் எழுத இருக்கிறேன்.
அப்போது கிளிப்பிள்ளைக்கு சொல்லித்தருவது போல் அனைத்தையும் சொல்லித்தருகிறேன்.
காத்திருக்கவும்.
அது வரை அல்பசினோ மாதிரி நடிக்க வருமா என்று உங்கள் வட்டத்தில் ஜல்லி அடித்து கொண்டிருங்கள்.

நாடக நடிப்பை விட சினிமா நடிப்பு மிகக்கடினமானது.
சினிமாவில் ஷாட் பை ஷாட்டாக எடுக்கப்படுவதால்
‘எம்மோட்டிவ் கண்டினியுட்டி’ தேவைப்படும்.
உதாரணமாக...ஹேராம் முந்தைய பதிவின் ஒன்றில் குறிப்பிட்டதை எடுத்துக்கொள்வோம்..


ராணி முகர்ஜி :  “கராச்சியில என்ன சாப்டீங்க”

அந்த ‘கிக்’ குரலில்  ‘டயலாக் டெலிவரி’, பேஸ் ரியாக்‌ஷன், பாடி லாங்குவேஜ் அனைத்திலும் சரஸக்கலையின் உச்சத்தை தொட்டிருப்பார் ராணி முகர்ஜி.

கமல் உடலுறவு முடிந்த களைப்பு...திருப்தி...அனைத்தையும் தனது
 ‘பேஸ் ரியாக்‌ஷன்’...மற்றும் ‘பாடி லாங்குவேஜில்’ கொண்டு வந்து
பக்கத்தில் படுத்திருப்பார்.
இது ஒரு ஷாட்.

[இப்பட ஷூட்டிங் நாட்களில் இருவருமே  ‘வாழ்ந்திருக்கிறார்கள்’.
இந்த விஷயத்தில் நம்ப ஆள்  ‘கிண்டன்’]

இதற்கு கவுண்டர் ஷாட்...


கமல் :  “அப்ப இண்ணைக்கு ராத்திரி பால்கனியில படுத்துக்கலாம் ”

என்று வழிவார் பாருங்கள்....
சான்ஸே கிடையாது...அப்படி ஒரு நடிப்பு...

இந்த இரண்டு ஷாட் எடுப்பதற்க்கு நடுவில் இடைவெளியில் பல மணி நேரம் தேவைப்பட்டிருக்கும்.
இயக்குனர் கமலும்,ஒளிப்பதிவாளர் திருவும் மட்டுமே அறிந்த உண்மை.
பல மணிநேர இடைவெளியில் நடிகர் கமலும், ராணி முகர்ஜியும்  ‘நடிப்பை’ விட்டு வெளியில் வந்து...
மீண்டும் அடுத்த ஷாட்டில்... ‘ நடிப்பிற்குள்’ வந்து...
‘எம்மோட்டிவ் கண்டினியுட்டி’ மெய்ன்டெய்ன்ட் பண்ணத்தெரிந்தால் மட்டுமே அடுத்த ஷாட்டில் நடிக்க முடியும்.  

இது போன்ற அவஸ்தைகள் பற்றி...
கொஞ்சம் கூட தெரியாத காரிகன் வகையறாக்கள்...  கமல்,சுஜாதா,மகேந்திரன்னு...
ஆரம்பிச்சு தமிழ் சினிமா ஜாம்பவான்கள் அனைவரையும் முட்டாள்கள் என தீர்ப்பெழுத முடிகிறது.
முழு விபரம் அறிய எனது முந்தைய பதிவின் பின்னூட்ட யுத்தத்தை காண்க...    

*********************************************************************************

இந்தப்பதிவில் நாம் யாரும் காரிகன் வகையறாக்களை காயப்படுத்தி பின்னூட்டம் இட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

 நானும் காரிகனும் நடத்திய யுத்தம்...
‘ கிளேடியேடர் ஸ்டைல்’
 இருவரில் ஒருவர் மட்டுமே உயிரோடு இருக்க முடியும்.

நான் காமெடி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து கொண்டு... தப்பித்து போய் ஆடியன்ஸோடு உட்கார்ந்து கொண்டேன்.
ஆடியன்சாக வந்த கிஷோகரையும் அவன் பகைத்தது... வெற்றி சுலபமாகியது. அதற்கு பிறகு தர்ம அடிதான்.

 ஆனால் இந்த யுத்தம்...எனக்கு பிடிக்கவில்லை.
என்னுடைய கிரியேட்டிவ் எனர்ஜி போய்... முழுக்க நெகட்டிவ் எனர்ஜி இயங்கியது.

இனி இது போன்ற பின்னூட்டங்களை அனுமதிக்கப்போவதில்லை.

 பின்னூட்ட யுத்தம் காண... கிளிக்கவும். 

**********************************************************************************  

ஆனால் நேர்மையான கருத்து மோதலை வரவேற்கிறேன்.

நான் கருந்தேள் பதிவில்  ‘சைனாவை கட்டமைத்த மாமேதை’ மாவோவை... பற்றி அவரிடம் வாதிட்டேன்.
 எனக்கு ஆதரவாக கணேசன் வந்தார்.
கருந்தேளும் பெருந்தன்மையாக ஒத்து கொண்டார்.

 ஒரு வாதம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இருவருமே உதாரணமாக நடந்து கொண்டோம்.
எங்களது கருத்து மோதல்கள் எங்கள் நட்பை மேலும் வளப்படுத்துகிறது.


அவர் சமீபத்தில் எனது கடைக்கு வந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
நிறைய பேசினோம்...
நிறைய சிரித்தோம்.
இப்படி பேசி சிரிக்க... இன்னும் மோதுவோம்.

அந்த ஆரோக்கிய மோதல் இருவருக்கும் நல்லது.

ஹேராம் படத்தின் காட்சியை காணொளியில் காண்க...

மீண்டும் ஹேராமை...அடுத்த பதிவில்... விரிவாக காண்போம். இப்பதிவில்  குறைகள் இருப்பின்  மன்னிக்க.

Apr 25, 2012

கடன் கேட்ட பாலுமகேந்திராவும்...கொடுக்காத கமலும்....


பாலுமகேந்திராவை காதலிக்க தொடங்கியது முள்ளும் மலரும் படத்தில்தான்.
நடிகர்கள் பெயர் திரையில் தோன்றியதும் கை தட்டி மகிழும் ரசிகர்கள் மத்தியில் டெக்னீசியன்களுக்கு கை தட்டி வரவேற்ப்போம்...
 நானும் எனது நண்பர்களும்...
அந்தப்பழக்கத்தின் பிள்ளையார் சுழி... முள்ளும் மலரும்...
கை தட்டல் வாங்கியது பாலுமகேந்திராவும்,மகேந்திரனும்.
 பாலுமகேந்திராவுக்கு ஏரிபிளக்ஸ் கேமிரா சற்று வாஞ்சையுடன் செயல்பட்டதோ என்ற சந்தேகம் இன்றும் தீரவில்லை.

பாலு மகேந்திராவின் முதல் படம் கோகிலாவில் கமல்தான் ஹீரோ...
அன்று தொடங்கிய வளர்பிறை பந்தம்....
மூன்றாம் பிறையில் இந்திய அரசின் சிறந்த நடிகர் பட்டத்தை சொந்தமாக்கியது கமலுக்கு....

பாலுமகேந்திரா பிழைக்கத்தெரியாத பிறவிக்கலைஞன்.
வெள்ளிவிழா படங்களை தந்தாலும்...வெள்ளிப்பணத்தை அள்ளுவதை பிரதானமாக்கியதில்லை.
லட்சங்களை மதிக்காமல் லட்சியத்துடன் படமெடுத்த போராளி.
இவரது காமிராவால் கவனிக்கப்படாத ஊட்டி லொகேசன்கள்.... சற்று நாணி தலை குனிந்து இருப்பதை பார்க்கலாம்.
அவர் படமெடுத்து தள்ளிய பைன் மரக்காடுகள் கர்வத்தோடு அலைவதை கண்டு களிக்கலாம்.

பல காரணங்களால் பணத்தட்டுப்பாடு வந்தது பாலுமகேந்திராவுக்கு....
கேட்கப்போன இடங்களில் எல்லாக்கதவுகளும் சாத்திக்கொண்டன...
மிகுந்த தயக்கத்துடன் கமலுக்கு போன் செய்து...
தனது நிலையை விளக்கி இரண்டு லட்சம் கடனாக கேட்டார்.
கமல் ஆபிசுக்கு வருமாறு அழைத்தார்.

தனது கம்பீரத்தை அடகு வைத்து... கடன் வாங்க...
காமிராக்கலைஞன்.... கமல் அலுவலகத்துக்கு வந்தார்.
கமல் எப்போதும் போல் அவரை வரவேற்று பேசினார்.
உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை அனைத்து விஷயங்களையும் பேசியவர் கடன் மேட்டரை...மறந்து கூட பேசவில்லை.
சரி...கமலிடம் பைசா...பெயராது ...எனத்தீர்மானித்து...
 போறேன்...கமல்... என புறப்பட்டார்.

ஸாரி..இருங்க....நான் உங்களை வரச்சொன்ன காரணத்தை சொல்லவேயில்லையே....
எனது கம்பெனி ராஜலக்‌ஷ்மி புரடக்‌ஷனில் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன்.
நீங்கள்தான் இயக்கிதர வேண்டும்.
இந்தாங்க... அதற்க்குறிய சம்பளம்...என இருபது லட்சம் எழுதப்பட்ட செக்கை கொடுத்தார்.

அந்தப்படம்தான் சதி லீலாவதி.
தனக்கு ஜோடியாக கோவை சரளாவை போடச்சொல்லி நிர்ப்பந்தித்ததும் கமலே...
ஒரு நகைச்சுவை நடிகையை ஜோடியாக்கும் ஆண்மை....
 கமல் ஒருவருக்கு மட்டுமே இன்று வரை சாத்தியமாகி உள்ளது.
ஆனால் இன்று வரை பாலுமகேந்திரா கேட்ட கடனை கமல் கொடுக்கவேயில்லை.