Showing posts with label ஜப்பான். Show all posts
Showing posts with label ஜப்பான். Show all posts

Dec 5, 2013

பெற்றால்தான் பிள்ளையா?

நண்பர்களே...
கோவோ திரைப்பட திருவிழாவில்   ‘போட்டி பிரிவில் கலந்து கொண்டு’
ஒட்டு மொத்த ரசிகர்களின் ஆதரவையும்...கரகோஷத்தையும் அள்ளிய படம் ‘லைக் பாதர், லைக் சன்’.


இந்தப்படத்திற்கு கோவா திரைப்பட திருவிழாவில் ஒரு விருது கூட வழங்க மாட்டார்கள் என மிகச்சரியாக கணித்தேன்.
ஊரறிந்த பார்ப்பானுக்கு எதுக்கு பூணுல்?
கொரீதாவிற்கு எதற்கு கீரீடம்?

Like Father, Like Son | 2013 | Japan | Directed by : Hirozu Koreeda.  


இயக்குனர் கொரிதாவின் மற்றொரு  ‘முன்னாள் மாஸ்டர்பீஸ்’,
‘நோபடி நோஸ்’ படத்துக்கு ஏற்கெனவே நான் பதிவெழுதி உள்ளேன்.
 ‘இந்நாள் மாஸ்டர்பீஸ்’ அந்தப்படத்தை விஞ்சி நிற்கிறது.
தன் படத்தை தானே தாண்டும் ’தாண்டவராயன்’ கொரீதா!.

கதை அப்படியே நம்ம ஊர் ‘பார் மகளே பார்’ கதைதான்.
கொரீதா சொல்லிய விதத்தில்  ‘பீம்சிங் படம்’ உலக சினிமாவாகி விட்டது.
ஒரு பணக்கார தம்பதிக்கும்...நடுத்தர வர்க்கத்து தம்பதிக்கும் பிறந்த குழந்தைகள் மருத்துமனையில்  ‘மாற்றப்பட்டு’ மாறி வளர்கின்றன.
ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வரும் போது,
வரும் பிரச்சினைகளை நயமாக...நாசூக்காக...நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கொரீதா.

இந்தக்கதையை காட்சிக்கு காட்சி  ‘நெஞ்சை நக்க’ வைத்து நாறடித்து விடுவார்கள் ‘நம்ம ஊரு தங்க மீன்கள்’.
குழந்தைகள் உலகத்தையும்...பெரியவர்கள் உலகத்தையும் எத்தனை எதார்த்தமாக சித்தரிக்கிறார் கொரிதா.
குழந்தைகளை மருத்துவமனையில் மாற்றிய நர்சை கூட வில்லியாக்காமல் ‘ஹேராம் கமல் போல்’...
‘ஓநாயின் பார்வையில்’ பார்த்து அதற்குரிய நியாயத்தையும் கற்பிக்கிறார் இயக்குனர் கொரீதா.


பணக்காரன் ‘கடமை...கண்ணியம்...கட்டுப்பாடு’ என கடைந்து...குடைந்து... குழந்தையை    ‘சாப்ட்வேராக்குகிறான்’.
‘சாப்ட்வேர்கள்’ சிந்திக்காது.

[ சாப்ட்வேர்கள் = திராவிடக்கட்சி தொண்டர்கள் ]

பணக்காரன், வாழ்க்கையை பளபளப்பாக்குவது பணமே என எண்ணி ‘எந்திரனாகிறான்’.
நடுத்தரன், வாழ்க்கையை வளமாக்குவது  ‘அபரிமிதமான அன்பே’ என வாழ்ந்து ‘மனிதனாகிறான்’.


மசாலா படங்களை  ‘மல்லு கட்டி’ ரசிக்கும் ரசிகர்களை கூட,
இந்தப்படம் வசீகரிக்கும் வல்லமை வாய்ந்தது.

உதாரணமாக இரு குடும்பங்களும் ஒரு நதிக்கரையில் கூடுவார்கள்.



 
குறியீடுகளுக்கு கோனார் நோட்ஸ் போடும் ‘தற்குறிகளை’ தலை குனிய வைக்க இந்த புகைப்படங்களே போதும்.

குழந்தை குட்டியோடு பார்த்து குதுகலிக்க அருமையான படம் மக்களே...
மிஸ் பண்ணிடாதீங்க!
பணம் இருப்பவர்கள் ஜப்பானுக்கு பறந்து போயாவது பார்த்து விடுங்கள்.
பணம் முக்கியமில்லை...இந்தப்படம் அவ்வளவு முக்கியம்.

பெற்ற விருதுகள்...[ தகவல் உபயம் IMDB ]

Asia Pacific Screen Awards 2013

Nominated
Asia Pacific Screen Award
Best Film
Kaoru Matsuzaki (producer)
Hijiri Taguchi (producer) 
Achievement in Directing
Hirokazu Koreeda 

Cannes Film Festival 2013

Won
Jury Prize
Hirokazu Koreeda 
Won
Prize of the Ecumenical Jury - Special Mention
Hirokazu Koreeda
Tied with Miele (2013).
Nominated
Palme d'Or
Hirokazu Koreeda 

London Film Festival 2013

Won
Best Film
Hirokazu Koreeda 

Oslo Films from the South Festival 2013

Nominated
Films from the South Award
Best Feature
Hirokazu Koreeda (director) 

San Sebastián International Film Festival 2013

Won
Waki.TV Audience Award
Hirokazu Koreeda 

கேரள திரைப்பட திருவிழாவுக்கு செல்கிறேன்.
பார்க்கும் படமெல்லாம் ‘லைக் பாதர். லைக் சன்’ போல் அமைய வாழ்த்துங்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.   

Aug 31, 2012

சிவாஜி நடித்தது....கமலுக்கு பிடித்தது....?

நண்பர்களே...
மனசு சரியில்லை...காரணம் நீங்க நினைக்கிறது இல்லை.
மதுரை புத்தகக்கண்காட்சியில் நான் இல்லை.
தொடர்ந்து போன் வந்து கொண்டே இருக்கிறது.
ஏன் வரல?

என்னா ஊர் தெரியுமா?
என்னை அங்கே கொண்டாடுவார்கள்...சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு.
பல்கலை கழக பேராசிரியர்கள் முதல் ஓய்வு பெற்ற நீதிபதிகள் வரை...
எல்லோரும் எனக்கு வாடிக்கையாளர்கள் அல்ல...ரசிகர்கள்.
நான் சொல்ற படத்தைதான்  வாங்குவாங்க...
சொல்ற பணத்தை தருவாங்க.

புதிதாக வந்திருக்கும்  ‘பப்பாசி’ நிர்வாகிகளுக்கு...உலகசினிமா  ‘கற்பூரம்’ என அறியாதவர்கள்.
முன்னாள் நிர்வாகிகள்...உலக சினிமாவும் இலக்கியமே...
அது மக்களை சென்றடைய வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள்.
அதே போன்ற  ‘கொள்கை தங்கங்கள்’ பதவிக்கு வரும் வரை காத்திருக்கிறேன்.

ஹலோ மதுரை...வருவேன்...மீண்டும் வருவேன்.

கடந்த எனது பதிவுகள்...என்னை ஒரு ரவுடியாக...போக்கிரியாக சித்தரித்து விட்டது.
காரணம் நானேதான்.
என்னை ஒரு கோணத்தில் சித்தரித்து இருந்தேன்...
இப்போது... மற்றொரு கோணத்தில் நான்...

அதற்கு முன்பாக உங்களிடம் மூன்று கேள்விகள்.
1. ரோஷமான் பார்த்திருக்கிறீர்களா?
2. அந்த நாள்?
3.அட்லீஸ்ட்... விருமாண்டி?
பாத்தவங்க உள்ளே வந்து  ‘நாற்காலில’ உக்காருங்க...
பாக்காதவங்க என் முன்னாடி தரையில உக்காருங்க...

உண்மை... என்பது என்ன?
அதை தேடிய படங்கள்தான்...மேற் சொன்ன மூன்று படங்கள்.

எளிய உதாரணம்...
ரோட்டில்  ‘கார்-சைக்கிள்’ விபத்து.
போலிஸ்காரர் வருகிறார்.
எப்படி நடந்திச்சி... ?

நான் உடனே...
“ சார்... கார்காரன் மேலதான் தப்பு.
அவன் பயங்கர ஸ்பீடா வந்தான்.
சைக்கிள்காரரு...பாவமா...ஓரமாத்தான் போய்ட்டிருந்தாரு.
அவன் ஹார்ன் அடிக்கல..பிரேக்கும் பிடிக்கல..
இடிச்சு தள்ளிட்டு ஓடப்பாத்தான்.
நாந்தான்... குறுக்காட்டி மறிச்சு நிறுத்துனேன்....”
என  ‘உண்மையை’ ஹிட்&ரன்னாக்கினேன்.

பேசும் போது எனது கையிலிருந்த  ‘சேகுவேரா...வாழ்வும் போராட்டமும்’ என்ற புத்தகத்தை போலிஸ்காரர் கண்ணில் படாமல் தவிர்த்தேன்.

சம்பவத்தை முழுவதும் கண்ணால் பார்த்த அய்யர்...
“ நேக்கு ஒண்ணும் தெரியாது...பகவான் சாட்சியா நான் எதுவும் பாக்கல ”

கார்க்காரன் உண்மை...
“ நான் நார்மல் ஸ்பீட்லதான் வந்தேன்.
ஹார்ன் அடிச்சேன்.
சைக்கிள்காரன் அவனா உள்ளே வந்து விழுந்தான் ”.

சைக்கிள்காரன் உண்மை...
“ நான் சிவனேன்னு ஒரமா போயிட்டிருந்தேன்.
இந்த கார்காரன் கொலை வெறியோட வேகமா வந்து இடிச்சு தள்ளிட்டு ஓடப்பாத்தான்.
அய்யாதான் நிறுத்துனாங்க... ”

இப்படி பத்து பேர்...பத்து உண்மையை சொல்கிறார்கள்.

விவரமான போலிஸ்காரர்...
கார்காரரை தனியே தள்ளிக்கொண்டு போகிறார்.
இப்போது ரிசர்வ் பேங்க் நோட்டுகள்..ஒரு உண்மையை எழுதுகிறது.

அப்புறம் உண்மை... பத்திரிக்கை,லோக்கல் டிவி,வக்கீல்கள்,ஜட்ஜ் என பல்வேறு வடிவமெடுக்கிறது.

இப்படி ஒரு சம்பவத்தை...  ‘புளோஅப்’ படத்தில் இயக்குனர் அண்டனியோனி..ஒரு உண்மையை எழுதுவாரு...
 ‘சம்பவமே நடக்கல’

கடவுளே வந்து ஒரு உண்மையைச்சொன்னாலும்...
இயக்குனர் மணிவண்ணன் மறுப்பாரு.
“ யோவ்...நீ மேல  ‘டாப் ஆங்கிள்ள’ உக்காந்துட்டு பாத்தா...
 எப்படி பெர்பக்டா தெரியும்.?
கண்ணுல... என்ன ஜூம் லென்ஸ் வச்சிருக்கியா?

இப்போ புரியுதா... ‘100% உண்மை’ என்ற ஒன்று கிடையாது.
உண்மைக்கு மிகநெருக்கமான ஒன்றைத்தான் நாம் உண்மை என உணருகிறோம்...அல்லது உணர வைக்கப்படுகிறோம்.

இப்போது நான் கடந்த பதிவில் குறிப்பிட்ட  ‘வெட்டுச்சம்பவத்துக்கு ’ போவோம்.
எனது நண்பன் பார்வையில்...
“ வருகைப்பதிவேடு ஐடியா அவனோடதுதான்.
ஆனா சண்டைக்கு..நாந்தான் அவனை இழுத்துட்டு போனேன்.
எல்லோர் கையிலயும் வெட்டருவா வச்சிருக்கோம்.
இவன் வச்சிருந்த அருவா இருக்கே...
ஒருத்தன் தலையை குனிஞ்சு வெட்டிக்கன்னு...தலையை குடுத்தாக்கூட துண்டாக்கிறதுக்கு பத்து நாளாகும்.
அவ்வளவு ஷார்ப்பான  அருவாளைத்தான் தேர்ந்தெடுத்து வச்சுகிட்டான்.
சண்டை ஆரம்பிச்சதும் அதைக்கூட வீசி எறிஞ்சிட்டு ஓடுன ஓட்டம் இருக்கே...ஒலிம்பிக்ல கூட ஓட முடியாது.

அவன் வீசி எறிஞ்ச அருவா...என் பெரியப்பா கையில பட்டு பெரும் காயம் ஆயிருச்சு,
அதுக்கு... பாண்ட் எய்டு ஒட்டி...காயத்தை மறைச்சோம்.”

 “ டேய்... என் இமேஜ்ஜை டோட்டலா டேமேஜ் பண்ணிட்ட..
நான் கஷ்டப்பட்டு  ‘ரோஷமான் ஆங்கிள்’ போட்டு ரவுடி மாதிரி பார்ம் ஆனா... போட்டு உடச்சிட்டியே...”

 ‘ரோஷமான் ’ சொல்லும் நீதி என்னன்னா...
உண்மையை தேடுறதெல்லாம் தேடு....
ஆனா, மனித நேயத்தோடு வாழுன்னு முடிச்சிருப்பாரு அகிராகுரோசுவா.

என்னோட மனிதாபிமானத்தை... நான் அப்பப்போ..பதிவுகளில் சொல்றேன்.


இப்போ...நடிகர் திலகம்-கமல் மேட்டர்.
சாந்தி என்ற படம்.
கவியரசர் கண்ணதாசன் பாட்டெழுதி...மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி...இசையமைத்து...டி.எம்.எஸ் வசீகரக்குரலில் பாடி ரெக்கார்டிங் ஆகி விட்டது.
சிவாஜி சார்...சூட்டிங்குக்கு  ‘டேட்’ தரல...
இழுத்துகிட்டே போனாரு.

தயாரிப்பாளரும்...இயக்குனரும் நேரில போய் கேட்டதுக்கு...
 “ மூணு பேரும் மாஸ்டர் பீஸ் மாதிரி கொடுத்துட்டாங்க...
நான் சரியா பண்ணலன்னா...  ‘ஸ்கீர்ன்ல’ நான் காணம போயிருவேன்.
என்னை நான் காப்பாத்தியாகணும்.
என்ன பண்றதுன்னு முழிச்சுகிட்டு இருக்கேன்.
கொஞ்சம் டைம் கொடுங்க ” என்று வேண்டுகோள் விடுத்தார்.

 ‘ஐடியா’ கிளிக் ஆனதும்... கூப்பிட்டு  ‘டேட்’ கொடுத்தார்.
என்னா...ஆக்டிங்.
அவரு கையில இருக்கிற சிகரெட்...அந்தப்புகை..
அது கூட அற்புதமா நடிச்சிருக்கு..
பாட்டை பாருங்க...[ பாடல் பிரதியின் தரம்...பேய் பட எபெக்ட்ல...பயங்கரமா இருக்கு ]
இந்தப்பாட்டுதான் கமலுக்கு மிகவும் பிடித்த சிவாஜி பாடல். இந்தப்பாட்டை பல்வேறு நடிகர்களின் பாணியில் கமல் பாடி நடித்ததை... பாக்கணுமே... அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும். இந்தப்பதிவு எந்தப்பதிவரையும்...உள் குத்தவில்லை. ஏன்னா...நான் எந்த வீடீயோ பதிவையும் பார்க்கவில்லை. இனி யார் வீடீயோ பதிவு போட்டாலும்  ‘சூப்பர் ’ன்னு சொல்லப்போறேன். அடுத்தப்பதிவுக்கு...  ‘முகமூடி’ அணிஞ்சுட்டு வாரேன்.

Nov 2, 2011

Nobody Knows-2004[Japanese] பசியை பகிர்ந்துண்ணும் குழந்தைகள்


மிக மெல்லிய இதயம் படைத்தவர்கள் இந்தப்படம் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
காரணம்....
 இது ஹாரர் படமா?
இல்லை ....அதை விட பயங்கரமானது.

கோணங்கள் பிலிம் சொசைட்டியில் படம் திரையிடும் போது பட முடிவில் கலந்துரையாடல் நடைபெறும்.
இந்தப்படத்திற்க்கு கலந்துரையாடல் நடைபெறவில்லை.
பேசும் நிலையில் யாரும் இல்லாமல்.... கனத்த இதயத்துடன் கலைந்து சென்றோம்.
ஜப்பானில் 1988ம் வருடம் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் 2004ல் Hirokazu Koreeda எழுதி இயக்கிய துன்பியல் கவிதைதான் Nobody Knows.

12 வயது அகிராவும், அவனது தாயும் புது வீட்டுக்கு குடி வருகிறார்கள்....
சாமான் செட்டெல்லாம் இற்க்கி வைத்து விட்டு பேக்கர்ஸ்&மூவர்ஸ் சென்றவுடன் முதலில் பெரிய சூட்கேசை திறந்தால் 5 வயது யூகி, “அப்பா...என்ன ஒரு புழுக்கம்”என ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்குவது போல் வெளியே வருகிறாள்.

மற்றொரு பெரிய சூட்கேஸிலிருந்து ஷிகுரு என்ற பம்ப்ளிமாஸ் குண்டன், “ஹாய்”என அன்பே வா எம்ஜியார் போல் குதித்து வருகிறான்.
படத்தில் நம்மை குதூகலிக்க வைப்பது இந்த குட்டிப்பிசாசுதான்.
11 வயது க்யாகோ ரயிலில் வந்து....
 செகண்ட் ஷோ பார்த்து விட்டு திருட்டுத்தனமாக ஹாஸ்டலுக்கு வந்து சேருவதைப்போல வந்து சேருகிறாள்.

இவர்களெல்லாம் யார்?
எதற்க்கு இந்த திருட்டுத்தனம்?
என்ற கேள்விகள் விஸ்வரூபமெடுக்கின்றன.
இவர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளே!
ஆனால் தகப்பன் மட்டும் வெவ்வேறு!!!!!!!
இந்த ஜப்பான் குந்தியை ஏமாற்றுவது.... கடலை மிட்டாய் வாங்குவதை விட எளிதானது ஆண்களுக்கு.

பிள்ளைகள் ஒருவரைக்கூட இவள் பள்ளிக்கு அனுப்புவதில்லை.
தாய் :  “பெரிய மேதைகள் பள்ளிக்கே போனதில்லை”
அகிரா : “அதில் ஒரு ஆளைச்சொல்லு?”
 தாய் :  “காமராஜர்”
இவளது சமாளிபிகேசன் அனைத்துமே மதன் ஜோக்ஸ் அல்லது சிபியின் ‘அட்ரா சக்க’ ஜோக்ஸ்.
ஆனால் நாலு சுவற்றுக்குள் ஒரு மிடில் கிளாஸ் சொர்க்கத்தை அமைத்து தருகிறாள்.

தற்ப்போது ஒரு பாய் பிரண்டை பிடித்துள்ளதாகவும்...
 அவன் பெரிய வீட்டில் நம்மை ஒன்றாக வாழ வைப்பான் என நம்பிக்கையுடன் கூறுகிறாள்.
பிள்ளைகளோடு சேர்ந்து நாமும் அலறுகிறோம்....மறுபடியுமா?????

ஒரு நாள் கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு தாய் மாயமாகிறாள்.
கிறிஸ்துமசுக்குள் வந்து விடுகிறேன் எனக்குறிப்பு எழுதி வைத்து விட்டுப்போனவள் படத்தின் இறுதி வரை வரவேயில்லை... சண்டாளி.
படம் பார்க்கும்போது நீங்கள் அவளை இன்னும் மோசமாக திட்டுவீர்கள்.

அகிரா அந்தக்குழந்தைகளுக்கு தாயாக.... தந்தையாக.... நண்பனாக மாறுகிறான்.


யூகிக்கு பிறந்த நாள் என்பதால் ஸ்பெசலாக அவளை மட்டும் வெளியே அழைத்து செல்கிறான்.
அப்போது தலைக்கு மேலே மிக உயரமான பாலத்தில் ரயில் போல ஒன்று போகிறது.
யூகி: அது என்ன?
அகிரா:அதுதான் மோனோ ரயில்.அது ஏர்போர்ட்டுக்கு போகிறது.
யூகி:நாமும் அதுல போலாமா?
அகிரா:கட்டாயம் ஒரு நாள் உன்னை அழைத்துச்செல்கிறேன்.

ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் மோனோரயில் பறப்பதை காமிராமேன் வெகு அழகாக படம் பிடித்திருப்பார்.
[சென்னை ஏழைகளுக்கும் மோனோ ரயில் வரப்போகிறதாம்]

 காமெடிக்குண்டன் ஷிகுருவின் ஒரே லட்சியம் பால்கனிக்கு போய்...
 உலகத்தை பார்ப்பது...
ஒரு விளையாட்டு சாமானை பால்கனியில் எறிந்து விட்டு...
 அதை எடுப்பது போல் நைசாக பால்கனிக்குள் அடியெடுத்து வைக்கிறான்.
அவன் முகத்தில்தான் எத்தனை மலர்ச்சி...தமிழ் ஈழம் கிடைத்தது போல்!!!!!!!!

கையிலிருக்கும் பணம் காலியாக
வீட்டில் வாட்டர் கட்..
கரண்ட் கட்...
கேஸ் கட்....
கடைசியாக சாப்பாடும் கட்.
குண்டன் மட்டும் பபுல்கம் மெல்வது போல் வாயை அரைக்கிறான்.
துப்புடா... என அகிரா ஆணையிட வெள்ளையாக கொழகொழவென்று துப்புகிறான்.
“என்னடா இது?”
“பேப்பர்”

இந்தக்காட்சி என்னை எனது பால்ய பருவத்திற்க்கு தூக்கியெறிந்து விட்டது.
நான் எனது ஏழாவது வகுப்பு பெரியம்மா வீட்டில் இருந்து படித்தேன்.
அப்போது அவர்கள் வீட்டில் பகிர்ந்துண்ண வறுமையைத்தவிற வேறொன்றும் இல்லை.
காலையிலிருந்தே ஒன்றும் சாப்பிடவில்லை.
பெரியம்மா...அவரது பிள்ளைகள் மூவர்...ஆக ஐவரும் உண்ணா விரதம்.
 மாலையில் பசி பொறுக்க முடியாமல் சமையல் அறையை உருட்டினேன்.
அரிசிப்பானையில் ஐந்தாறு அரிசி கிடைத்தது.
வழித்தெடுத்து வாயில் போட்டு அரைத்தேன்.
பெரியம்மா பார்த்து விட்டார்கள்.
 “என்னடா வாயில்?”
 “அரிசி பெரியம்மா”என வாயை ஆவெனக்காட்டினேன்.
என்னைக்கட்டிப்பிடித்து அழுத பெரியம்மாவின் கண்ணீர் இன்றும் சுடுகிறது.

இனி வறுமை டான்ஸ் ஆடிய ஜப்பான் அப்பார்ட்மெண்ட் போவோம்

ஏற்க்கெனவே பசியால் பாதி உயிர் போயிருக்க....
ஸ்டூலில் இருந்து தவறி விழுந்து மீதி உயிரை துறக்கிறாள் யூகி.

என்ன செய்தான் அகிரா?
மிச்சமிருக்கும் குற்றுயிர்கள் என்னவானார்கள்?
படம் பாருங்கள்....குறிப்பாக தாய்மார்கள்.

[எனக்கு பிடித்த]
சூர்யா பிடித்து...
ரமணா,கஜினி பார்த்து.... முருகதாசையும் பிடித்ததால்....
ஏழாம் அறிவு பார்த்து ஏமாந்தவர்களே....
பிராயச்சித்தமாக இப்படத்தை பாருங்கள்.

இப்படம் பெற்ற விருதுகள்:
Yūya Yagira won the award for Best Actor at the 2004 Cannes Film Festival.[17] He was the first Japanese actor to win this category at theCannes Film Festival.[18] The film had also won the "Best One" award for Japanese film at the 78th Kinema Junpo Ten Best awards. [19]Additionally, at the same awards, You won the best supporting actress and Yūya Yagira won the best new actor award.[19]
At the 47th Hochi Film AwardNobody Knows won the best film award.[4] Director Hirokazu Koreeda also won the "Best Director" award.[4]

தகவல் உபயம்
விக்கிப்பீடீயா.
நன்றி.

Aug 2, 2011

DEPARTURES-Japan[2008]இவன்தான் கலைஞன்.


காட்பாதர் பீவரில் இருந்து விலக ஒரு நல்ல படத்தை தேடினேன்.
இதோ நான் இருக்கிறேன் என்று முதல் ஆளாக வந்தது டிபார்ச்சர்ஸ்.
கோணங்கள் பிலிம் சொசைட்டியில் திரையிட்டபோது முதன் முதலாக பார்த்தேன்.
பதிவெழுத இரண்டாம் முறை பார்க்கும் போது இப்படம் இன்னும் அதிகமாக வசீகரித்தது.
என்னுள் இருந்த காட்பாதரை கரைத்துவிட்டது இப்படம் என்றால்... இது மிகை இல்லை.

இந்த ஜப்பான்காரனுங்க ரொம்ப மோசம்.
அந்த காலத்துல ஓசூ,குரோசுவா,கோபயாஷின்னு பெரிய பெரிய ஆளுங்க நல்ல நல்ல படம் எடுத்தாங்க.
அந்த பாதையிலதான் பயணிப்போம்ன்னு இந்த தலைமுறை இயக்குனர்களும் புறப்பட்டா எப்படி?
ஜப்பான் முன்னோடிகளின் நேரடி வாரிசாக உதித்துள்ளார் Yojro Takita.

இப்படத்தின் நாயகன் செலோ என்ற வயலின் வகை வாத்தியத்தில்
வைத்தியநாதன்.

இவன் வாசிக்கும் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கூட்டம் வராததால் குழுவை கலைத்து விடுகிறார்.[கூட்டம் எல்லாம் முத்து படம் பாக்க போயிருச்சா?]

வேலை இல்லாத கொடுமையால் சொந்த ஊருக்கே திரும்பி வருகிறான்.
சொந்த ஊரில் இவனுக்கு கிடைக்கும் வேலை...???
உங்களுக்கு ஒரு சவால்....
உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்.
என்ன வேலையாக இருக்கும் என்று யோசியுங்கள்.
ரூம் போட்டு யோசித்தாலும் நம்மால் கண்டு பிடிக்க முடியாது.
இவனுக்கு கிடைத்த புதிய வேலை ...மேக்கப் போடுவது.
இது என்ன பெரிய வேலை...?
இதற்க்கா இவ்வளவு பில்டப்புன்னு அடிக்க வாராதீங்க சாமிகளா....

இவன் மேக்கப் போடுவது பிணங்களுக்கு....!!!

உயிரற்ற முகத்தை ஒவியமாக்குகிறார்கள் ஜப்பானியர்கள்.
கலையின் உச்சமாக எனக்கு தெரிந்தது.
ஒரு தாய் தனது குழந்தையை குளிக்க வைத்து.... தலை துவட்டி....பவுடர் பூசி.... பொட்டிட்டு... கொஞ்சுவாளே ...அதே நேர்த்தி இவர்கள் செய்யும் பணியில் இருக்கிறது.
சவக்களையை போக்கி உயிர் கொடுக்கும் கலையில் இவர்கள் மாமன்னர்கள்.

நம்மூர்ல கல்யாண வீட்டுல நம்ம பொண்ணுங்களை மேக்கப் போட்டு பொணமாக்குறாங்க.

மரண பயத்தை மரணிக்க வைக்கிறது இக்கலை.
மரணத்தை நேசிக்க ...எதிர் கொள்ள நம்மை தயார் படுத்துகிறது .

மேலை நாடுகளில் இருந்து கண்ட கருமாந்திரங்களை காப்பியடிக்கிறோம்.
இக்கலையை காப்பியடிக்கலாம் தப்பில்லை.

ஒரு படத்தின் அத்தனை தொழில் நுட்பங்களும் என்னை மயக்கியது...
கிம் கி டுக்கின் ஸ்பிரிங் ...சம்மர்...ஃபால்ஸ்...விண்டர்.
அதற்க்குப்பிறகு இந்தப்படம்தான்.

இப்படத்தை பார்த்து ஆஸ்கார் மட்டுமல்ல...உலகமே பேச்சு மூச்சில்லாமல் விருதுகளை வாரி வழங்கிவிட்டது.