Jun 29, 2012

Hey Ram-கூடல் வரும் பின்னே... [2000\ஹேராம்=013]


ஹேராமில் இந்தப்பகுதி எல்லோருக்கும் பிடித்த பகுதி.
அதற்கு காரணம்...காதல்&காமம்.
ஆனால் உளவியல் ரீதியாக... இக்காட்சியை நாம் விரும்புவதற்கு காரணம் காட்சியின் எளிமை.
ஆனால் உண்மையில்... இக்காட்சி அத்தனை எளிதாக அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பி பார்த்தோமானால்...இல்லையென்றே விடை கிடைக்கிறது.                                                                                                                                                 

பியானோவில் ராம் அபர்னாவை சாய்த்து முத்தமிடும் போது...
அக்காட்சி ஒளிப்பதிவில் தகத்தகாயமாக ஜொலிக்கும்.
இக்காட்சியில் ஒளிப்பதிவாளர் திருவும்,இசையமைப்பாளர் இளையராஜாவும் கமலோடு கை கோர்த்து காவியத்தன்மையை அதிகப்படுத்தி உள்ளார்கள்.  “இந்தக்காதல் தெய்வீகமானது” என இளையராஜா இசையால் சொல்லும்போது அதற்கு அப்பீல் இருக்க முடியுமா என்ன?
இதற்கு நேர் எதிர்மறையான ராம்-மைதிலி எந்திர மயமான காதலை பின்னால் பார்ப்போம்.

பியானோவில் வாசித்த ட்யூனை வாயில் ஹம் பண்ணியபடி வராந்தாவில் படுக்கையை விரித்து ராம் கீழே படுக்கிறான்.
அபர்னா அவன் மேல் அமர்கிறாள்.
அவள்தான் ராம் சட்டையை கழட்டுகிறாள்.
அபர்னாவின் காரெக்டர் தன்மை... ரசிகர்களிடம் வெகு எளிதாக கடத்தப்படுகிறது.

இந்தக்காட்சியை படமாக்கும் போது... இயக்குனர் கமல் ஷாட் வைத்திருக்கும் பாங்கை பார்ப்போம்.
ராம்-அபர்னா... கலவிக்கு தயாராகும் காட்சியை சற்று வெளியில் காமிராவை வைத்து டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில் ஷாட் வைத்திருக்கிறார். குறுக்கும்... நெடுக்குமாக சட்டகங்கள் உள்ள பிரேம் வழியாக ஷாட் வைத்திருப்பார்.
இவர்களிருவரையும் பிரேம் பண்ணி விட்டார்கள் என்பதின் குறியீடாக தோன்றவில்லையா!
அந்த சட்டகங்கள் பச்சை வண்ணத்தில் பெயிண்ட் பண்ணியிருப்பது குறியீட்டீன் ஆழத்தை அகலப்படுத்துகிறது.
இங்கேயும் விக்டோரியா மஹாலை குறியீடாக்கி உள்ளார்.
அதிகாரவர்க்கம் ரணகளத்தை எதிர்பார்த்து அமைதியாக காத்திருக்கிறது. காதலர்கள் இதை அறியாமல் கிளுகிளுப்பாக இருந்தார்கள் என்பதே இக்குறியீட்டீன்... கோனார் தமிழ் உரை.  இன்னும் குறியீடுகள்... அடுத்தப்பதிவிற்காக காத்திருக்கின்றன.

இக்காட்சியின் காணொளி இங்கே...

4 comments:

 1. காதல்.. அந்த பியானோ.. இளையராஜா கொன்னுட்டாரு.

  ReplyDelete
  Replies
  1. ராஜாவுக்கு மிகவும் பிடித்தமானது பியானோ.
   படத்திலேயே பியானோ வரும் போது கேட்கவா வேண்டும்!
   பூந்து விளையாடி விட்டார்.

   Delete
 2. இந்த குறியீடு குறியீடு என்கிறீர்களே! அது நீங்களே கண்டுபிடித்ததா இல்லை எங்காவது இது அப்படித்தான் என்று இருக்கிறதா? நிஜமாகவே தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. குறியீடு என்பது எல்லாவற்றிலும் இருக்கிறது.உங்கள் பின்னூட்டத்திலும் இருக்கிறது.
   என்னை மட்டம் தட்டும் பிரதான நோக்கமே அதில் இருக்கிறது.
   உங்களிடம் ‘எல்லாம் எமக்கு தெரியும்’ என்ற மனோபாவம் இருக்கிறது.

   குறியீடுகளை தேடிப்பார்த்து பழகி விட்டால்...படமே பார்க்காமல்...விக்கிப்பீடீயாவை மொழி பெயர்த்து... விமர்சனம் என பம்மாத்து செய்திருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.

   Delete

Note: Only a member of this blog may post a comment.