Mar 28, 2013

‘எரியும் பனிக்காடை’ ஏன் படமாக்கவில்லை ?


நண்பர்களே...
1969ல்  ‘ரெட் டீ’ என்ற நாவலை பி.எச்.டேனியல் உருவாக்கினார்.
அதை 38 ஆண்டுகள் கழித்து தமிழில் ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார் இரா.முருகவேள்.
இத்தனை ஆண்டுகள் இக்கதை திரைப்படமாக்கவில்லை.
ஏன் முருகவேளோ...அல்லது அவர் சார்ந்துள்ள இயக்கமோ கூட அதைச்செய்யவில்லை.
இத்தனை நாள் குறட்டை விட்டுக்கொண்டிருந்த முருகவேள் இப்போது பாலாவின் பரதேசியை பார்த்து ‘தாம் தூம்’ என குதிக்கிறார்.
இயக்கிய பாலாவுக்கும், கதை-வசனம் எழுதிய நாஞ்சில் நாடனுக்கும் ஜாதீய வர்ணம் பூசுகிறார்.
இன்று கொதிக்கும் முருகவேள் இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்தது ஏன் ?
அட்லீஸ்ட்...ஒரு குறும்படம் கூட எடுக்கவில்லையே முருகவேள் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்கள் முயற்சியால் ‘தேநீர்’ என்றொரு படம் உருவாகி வெளியானது.
கம்யூனிஸ்ட்காரர்கள் கூட அந்த படத்தை பார்க்கவில்லை.
அப்படி ஒரு தரத்தில், படத்தை படுத்தி எடுத்திருந்தார்கள்.
தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் வரலாற்று  அவதிக்கு இணையாக... திரைப்படத்தை காண வந்தவர்கள் வதை பட்டார்கள்.
இந்த வெளக்குமாறுக்கு, கே.பாக்யராஜ் என்ற பட்டுக்குஞ்சலம் கதை-வசனம்.

‘ரெட் டீ’ என்ற நாவல்  மறைந்த ‘விடியல் பதிப்பகம்’ சிவா இல்லையென்றால் தமிழில் எவனும் படித்திருக்க முடியாது.
‘முருகவேள்’ மொழி பெயர்த்து முழி பிதுங்கி அவரே படித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.



தமிழ்நாட்டில்  ‘எரியும் பனிக்காடு’ மூவாயிரம் புத்தகம் கூட இன்று வரை விற்பனை ஆகவில்லை.
அப்படிப்பட்ட ஒரு நாவலை படமாக்க எவனுக்கு துணிச்சல் வரும் ?
பாலாவுக்கு வரும்.

 ‘ரெட் டீ’யை உருவாக்கிய பி.எச்.டேனியல் ஒரு கிருத்துவர்.
தேயிலைத்தோட்டத்தொழிலாளிகள் கிருத்துவ மதத்திற்கு மாற்றப்பட்ட வரலாற்றை மறைத்து நாவலை உருவாக்கி உள்ளார்.
‘ரெட் டீயை’ முனுசாமியோ கந்தசாமியோ உருவாக்கி இருந்தால் அந்த வரலாறு தேயிலைத்தோட்டத்தொழிலாளியின் துயர வரலாற்றோடு சேர்த்தே பதிவு செய்யப்பட்டிருக்கும்.
டேனியல் தூய கிருத்துவர்.
அவரால் எப்படி அந்த வரலாறு எழுத முடியும்.
ஒவ்வொரு வரலாறும்... எழுதுபவன் வரலாறு,சிந்தனை, கொள்கை. கோட்பாடுகள் கட்டாயம் இணைந்தே இருக்கும்.

‘எரியும் பனிக்காட்டில்’ மறைக்கப்பட்டிருந்த வரலாற்றையும் சேர்த்து பாலா படமாக்கி உள்ளார்.
இதில் என்ன தவறு ?
ஆயிரக்கணக்கானோர் அறிந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர் வரலாற்றை கோடிக்கணக்கான தமிழர்கள் அறியும்படியாக ‘பரதேசியை’
பாலா படைத்தது குற்றமா ?

இன்று பாலாவை குறை சொல்லும் இலக்கிய வியாதி கோஷ்டிகள் டேனியல் வாழ்க்கை வரலாற்றை படமாக்குங்களேன் !.
யார் உங்கள் கையை பிடித்து தடுக்கிறார்கள்?
இந்த நாட்டில் கிருத்துவர்கள் எப்படி தோன்றி வளர்ந்தார்கள் என்பதை பதிவு செய்யுங்கள்.
தென் தமிழகத்தில் கடற்கரையோர மீனவக்கிராமங்கள் ஒட்டு மொத்தமாக கிருத்துவர்களாக மாறிய வரலாற்றை படமாக்குங்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத், மெஞ்ஞானபுரம் என கிருத்துவ நாடார்கள்
வசிக்கும் ஊரின் வரலாற்றை தோண்டுங்கள்.
ஆயிரம் திரைக்கதைகள் அங்கே கிடைக்கும்.
குறை சொல்லி காலம் ஓட்டாதீர்கள் ‘இலக்கிய வியாதிகளே’.

1969ல் உருவாக்கப்பட்ட ரெட் டீயை 2012ல் படமாக்கிய பாலாவை போற்ற வேண்டாம்.
குறை  சொல்லாதீர்கள்  ‘கோட்டிக்காரர்களே’.
கோட்டிக்காரர்கள் = மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

Mar 22, 2013

மத மாற்றத்தை படமாக்கலாமா பாலா ?


நண்பர்களே...
பரதேசியை பாராட்டிய அன்பர்கள் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானோர்... கிருத்துவ மதத்துக்கு கொத்தடிமைகளை மாற்ற முயற்சித்ததை படமாக்கியதற்கும்...
படமாக்கிய விதத்திற்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
எரியும் பனிக்காட்டில் அப்படி ஒரு வரலாறு எழுதப்படவில்லை என்ற வாதத்தையும் வைத்துள்ளார்கள்.
பாலா ஒரு வரலாற்று தவறை செய்தது போல் சித்தரித்து உள்ளார்கள்.
மிக நுட்பமாக பாலா  ‘மத மாற்ற வரலாற்றை’ பதிவு செய்திருப்பதை பெரும்பாலும் கவனிக்க தவறி விட்டனர்.

பாலா கொத்தடிமைகளை கிருத்துவ மதத்துக்கு மாற்றப்பட்ட சரித்திரத்தை ஏன் படமாக்கினார் ? எனக்கேட்டவர்கள்...
ஏன் படமாக்கக்கூடாது எனச்சொன்னார்களா?
தேயிலைத்தோட்டத்தின் ரத்த சரித்திரத்தை பரதேசியில் பதிவு செய்த பாலா அதே கால கட்டத்தில் நிகழ்ந்த மத மாற்றத்தை பதிவு செய்யா விட்டால்தான் அது மாபெரும் வரலாற்று பிழையாகி இருக்கும்.

கொத்தடிமைகளை ஏன் கிருத்துவ மதத்துக்கு மாற்றினார்கள்?
இந்த  கேள்விக்கு விடை தெரிய வரலாற்றை பின்னோக்கி பார்க்க வேண்டும்.

[ 1 ] ரோம சாம்ராஜ்ஜியத்திலிருந்து தொடங்குவோம்.
ரோம சாம்ராஜ்ஜியத்தில் கடவுளையும் மன்னனையும் இணையாக கருதி வழிபட்டார்கள் மக்கள்.
மன்னர்களுக்குள் நடந்த யுத்தங்களாலும், நிர்வாக சீர் கேடுகளாலும் மக்கள் சொல்லொணா துயரத்தில் இருந்தார்கள்.
மேலதிகத்தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க.
ரோம சாம்ராஜ்ய வரலாறைக்காண...

ரோம சாம்ராஜ்ஜியத்தில் இருந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி புரட்சி செய்த மாவீரன் ஸ்பார்ட்டகஸ்.
முதல் புரட்சியே முற்றிலும் கோணலாகி ஸ்பார்ட்டகஸ் சிலுவையில் அறையப்பட்டான்.


SPARTACUS \ 1960 \ ENGLISH \ DIRECTED BY STANLEY KUBRICK.

ஸ்பார்ட்டகஸ் வரலாற்றை இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் அற்புதமாக படமாக்கி உள்ளார்.
[ இப்படத்தை தனது மகள் ஸ்ருதியுடன் 30 தடவைக்கு மேல் பார்த்ததாக கமல்
ஒரு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார் ]

[ 2 ] ஸ்பார்டகஸ் மறைந்து, சரியாக 71 வருடம் கழிந்து இயேசு கிறிஸ்து பிறந்தார்.
மனித குல அவலங்களை காணச்சகியாமல் தனது புரட்சிக்கருத்துக்களை மக்களிடையே பரப்பினார்.
அவரையும் சிலுவையில் அறைந்து கொன்றது மன்னராட்சி.


THE GOSPEL ACCORDING TO ST.MATTHEW \ 1964\ ITALY \ PIER PAOLO PASOLINI

இயேசு என்ற புரட்சியாளரின் வரலாற்றை இயக்குனர் பசோலினி மிகச்சரியாக படமாக்கி உள்ளார்.
இயேசு கனல் தெறிக்க உரையாற்றுவதையும்,
சாட்டையெடுத்து அக்கிரமக்காரர்களை விளாசித்தள்ளுவதையும் காட்டி இயேசு ஒரு புரட்சிக்காரன் என காட்சிப்படுத்தி இருப்பார் பசோலினி.

[ 3 ] இயேசு மறைந்த பின்னர் அவரை பின் தொடர்ந்தவர்கள் ரகசிய இயக்கமாகவே 300 ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறார்கள்.
இந்த காலக்கட்டத்தை முதலாம் கிருத்துவக்காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

300 ஆண்டுகள் இரகசிய இயக்கமாக இருந்த கிருத்துவ மக்களை இணைத்து தனது சாம்ராஜ்யத்தை தக்க வைத்து விரிவு படுத்த...
‘கான்ஸ்டண்டைன்’ என்ற மன்னன் கிருத்துவ மதத்தை முதன் முதலாக  ‘அரசு மதமாக’ அங்கீகரித்தான்.
சர்ச் உருவானது.
இயேசுவை உயிர்த்தெழ வைத்து,
புரட்சியாளாரை புனிதராக்கி... கடவுளின் அவதாரமாக்கி...
புதிய பைபிள் உருவாக்கப்பட்டது.
அரசும் சர்ச்சும் இணைந்து இயங்கியது.
மக்களை மதம் மாற்றும் முயற்சியை சர்ச் முன்னெடுத்துச்சென்றது.

[ 4 ] கான்ஸ்டன்டைன் காலத்துக்கு பின்னர் உள்ள கிருத்துவத்தை
 ‘இரண்டாம் கிருத்துவக்காலம்’ என வரையறுக்கிறார்கள் வரலாற்றாளர்கள்.

ஐரோப்பிய கிருத்துவ நாடுகள், தங்கள் காலனிகளை விரிவு படுத்தினர்.
அங்கெல்லாம் சர்ச்சும் தன் ஆட்களை அனுப்பி மக்களை மத மாற்றம் செய்தது.
இந்த வரலாற்றை ஒரு  ‘உலக கவிஞன்’ பதிவு செய்தான் கவிதையில்.

அவர்கள் வந்தார்கள்.
எங்களை மண்டியிடச்சொன்னார்கள்.
மண்டியிட்டோம்.
கண்களை  மூடச்சொன்னார்கள்.
மூடினோம்.
ஜெபிக்கச்சொன்னார்கள்.
ஜெபித்தோம்.
ஜெபித்து விட்டு கண்களை திறந்து பார்த்தோம்.
எங்கள் கையில்  ‘அவர்கள் பைபிள்’ இருந்தது.
அவர்கள் கையில் ‘எங்கள் நாடு’ இருந்தது.

காலனியாதிக்கமும் மதமாற்றமும் ஏன் ஒருங்கே நிகழ்த்தப்பட்டதை ஆய்வு செய்தார்கள் தத்துவவாதிகள்.
இதுதான் வரலாறு.


[ 5 ] ஐரோப்பிய தத்துவ ஞானி  ‘கிராம்ஸ்சி’ [ ANTONIO GRAMSCI ] கூறுகிறார்...

“ ஒவ்வொரு அரசும் தனக்கான குறிப்பிட்ட வாழ்க்கை முறையை உருவாக்கி..
அதற்குறிய குண நலன்களோடு குடிமகனை உருவாக்கி வளர்த்தெடுக்க முயல்கிறது.
பழைய நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து உதறித்தள்ளி 
புதிய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் வளர்த்தெடுக்கிறது.
இந்தப்பணிகளை செவ்வெனச்செய்ய  இரண்டு வழிமுறைகளை கடைப்பிடிக்கிறது.  
  
[ A ] அரசு இயந்திரம் [ STATE APPARATUS ]  = அரசு, ராணுவம், காவல்துறை போன்றவைகள்.

[ B ] கருத்துருவ இயந்திரம்  [ IDEOLOGICAL APPARATUS ] = மத நிறுவனங்கள், நீதி மன்றங்கள்,
அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், 
மருத்துவ மனைகள், ஊடகங்கள், குடும்பங்கள் போன்றவைகள்.

[ ஊடகம் = பத்திரிக்கை,டிவி,சினிமா, இணையம் போன்றவைகள் ]

கிராம்ஸ்சி பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிப்பீடீயாவிற்குள்
நுழையவும்.
கிராம்ஸ்சி பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

[ 6 ] வெள்ளையர்கள் வியாபாரிகளாக வந்து நாடு  பிடித்து நமது வளத்தை சுரண்டினார்கள்.
அந்தப்பணிக்காக இந்தியாவில் வைஸ்ராய், படைத்தளபதிகள், சிப்பாய்கள்,
மத குருமார்கள், தோலான் துருத்தி என தங்கி இருந்த மொத்த வெள்ளையினர் 7,000 பேர் மட்டுமே.

சுரண்டலின் ஒரு பகுதிதான் தேயிலைத்தோட்ட உருவாக்கம்.
அதற்காக கொண்டு வரப்பட்டு கொத்தடிமைகளாக்கப்பட்ட சாலூர் கிராமத்து மக்களின் வாழ்க்கையை ‘தீமாக’ உருவாக்கி பரதேசியை படைத்துள்ளார் பாலா.

[ 7 ] எனவே இத்திரைக்கதையை ‘சப்ஜக்ட் டிராஜிடி’ இலக்கிய பார்முலாவில் வடிவமைத்துக்கொண்டார்.
சப்ஜக்ட் டிராஜிடி = தனி மனிதன் தனது துன்பங்களிலிருந்து வெளியேற வழியிருந்தும் அதற்காக சிந்திக்காமலும் செயல்படாமலும் அத்துனபங்களுக்குள்ளேயே உழன்று கொண்டு இருப்பது .

[ 8 ] கொத்தடிமைகளை ‘பணப்பெட்டியை’ காட்டி குறுகிய காலத்திற்குத்தான் அடிமையாக வைத்திருக்க முடியும்.
நிரந்தரமாக வைத்திருக்க மதமாற்றமே மருந்து என ‘மருத்துவம்’ மூலமாக முயற்சி நடந்ததை பாலா படமாக்கி உள்ளார்.

[ 9 ] மருத்துவன் தனது ஐரோப்பிய காதலியுடன் வருகிறான்.
கொத்தடிமைகளின் மருத்துவ மனையும், குடிசைகளும்,சுற்றுப்புறச்சூழலும் சுகாதாரம் இல்லாமல் இருப்பதைக்கண்டிக்கிறான்.
விரைவில் சரி செய்து விட வேண்டும் என முழங்குகிறான்.
ஒன்றையுமே சரி செய்யாமல்...
மத மாற்றத்தை மட்டுமே செவ்வனச்செய்கிறான்.


[ 10 ] சாலூரில் விபூதி காட்சியளித்த நெற்றியில் சிலுவைக்குறியிடப்படுகிறது.
நாக்கிலும் இடப்படுகிறது.
அதற்காக நாக்கைத்தொங்கப்போட்டு அலையும் காரெக்டரை குள்ளமாகவும்...
வெள்ளைக்காரியை உயரமாகவும் போட்ட பாலாவின் குசும்பை மிகவும் ரசித்தேன்.

[ இத்தாலிக்காரியிடம் நாக்கைத்தொங்கப்பட்டதன் விளைவை
நாமும், ஈழத்தமிழர்களும் இன்றும் அனுபவித்து வருகிறோம்]

[ 11 ] மருத்துவனும் வெள்ளைக்காரியும் குத்தாட்டம் போட்டது எதற்காக ?
எந்த இசையில் நமது ஆட்கள் மயங்குவார்களோ...
அந்த இசையை இசைத்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்து காரியம் சாதித்தவர்கள் மதமாற்றவாதிகள்.

[ 12 ] உணவை மருந்தாக்கி வாழும் கலாச்சாரத்தை உடைக்க,
‘பன் ரொட்டியை’ வீசுகிறார்கள்...பன்றிகளுக்கு வீசுவதைப்போல.
இதன் நீட்சியாகத்தான் இன்று பிஸ்ஸாவும்,பர்கரும் ஊடகம் வழியாக படையெடுத்து வந்து தாக்கி நம் உணவு கலாச்சாரத்தை அழித்துக்கொண்டிருகின்றன.

[ 13 ] வெள்ளைக்காரி,  நம்மவனை மயக்கி நாடகமாடுபவள் என்பதற்கு ‘குத்தாட்டப்பாடலில்’ அவளது  ‘டோப்போ’ கழந்து விழுவதை காட்சிப்படுத்தி இருப்பார் பாலா.
மருத்துவன் - வெள்ளைக்காரி இவர்களுக்குள் தாம்பத்ய உறவு கிடையாது என்பதை மருத்துவன் தனியாக இரவில் மருத்துவ மனையில் தூங்கிக்கொண்டிருப்பதை காட்சிப்படுத்தி இருப்பார்.

[ 14 ] கொள்ளை நோயில் கொத்தடிமைகள் பலியானதை சிரித்துக்கொண்டே அச்செய்தியை வெள்ளைக்காரர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
ஒருவன் மகாத்மாவையும் தரக்குறைவாக பேசுவான்.
அப்போது ஒரே ஒரு பெண் குரல் அவர்களை கண்டித்து மகாத்மாவை துதிக்கும்.
வெள்ளையர்களில் ‘அன்னிபெஸண்ட்’ அம்மையார் போன்ற மாணிக்கங்களும் இருந்தார்கள் என பாலா பதிவு செய்துள்ளார்.

[ 15 ] பேஸ்புக்கில் நாக்கைத்தொங்கப்போட்டு அசிங்கப்பட்ட எழுத்தாளன் பரதேசியில் கிளைமாக்ஸ் காட்சியில் ‘ஒளிக்கீற்று’இல்லை என உளறியதை கண்டிருப்பீர்கள்.

கதாநாயகன் இறுதிக்காட்சியில் உயரமான மலைப்பாறையிலிருந்து பெருங்குரலெடுத்து கத்துகிறான்.
கூலி கிடைக்காததால் கிராமத்து ஹோட்டல் முன்பாக தரையில் உட்கார்ந்து புலம்பியதற்கு நேர் மாறாக இக்காட்சியைப்படைத்துள்ளார் பாலா.
இறுதிக்காட்சியில் கதாநாயகன் பெருங்குரலெடுத்துக்கத்துவதை ஆங்கில இலக்கியத்தில் ‘கிளாரியன் கால்’ என குறிப்பிடுவார்கள்.
அந்தக்கத்தல் தொழிலாளர்கள் காதில் ஒலிக்கிறது என்பதை காமிரா காட்சிப்படுத்தி இருக்கிறது.

[ 16 ] ஓங்கி ஒலிக்கும் குரலோடு பல குரல்கள் இணையும் போது புரட்சி வெடிக்கும் என்பது வரலாறு.


[ 17 ] “ மார்க்ஸிய சித்தாந்தத்தை முன்னெடுக்கும் புரட்சிகர அமைப்புகள்...
வர்க்கப்போராட்டத்தை முன்நிறுத்தும் அமைப்புகள்... மூலமாக மட்டுமே 
அரசு இயந்திரங்கள் & கருத்துருவ இயந்திரங்களின் இடுக்கிப்பிடியிலிருந்து தப்பிக்க முடியும்”.
 - ஐரோப்பிய மார்க்சிய தத்துவ ஞானி ‘பவ்லண்ட்சாஸ்’  
[ NICOS POULANTZAS ]
பவ்லண்ட்சாஸ் பற்றி அறிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க.
பவ்லண்ட்சாஸ் பற்றி மேலும் படிக்க...

நடந்த வரலாறை யாராலும் மாற்றி எழுத முடியாது. 
‘பாலாவின் பரதேசி’ இது வரை இந்தியத்திரையில் வந்த அனைத்து படங்களையும் விட சிறந்த ‘மார்க்ஸிய திரை இலக்கியம்’.

அடுத்தப்பதிவில் சந்திப்போம். 

Mar 20, 2013

‘பரதேசியின் குறையும்...நிறையும்.


நண்பர்களே...
பரதேசியை மூன்று முறை பார்த்து விட்டேன்.
ஒவ்வோரு முறை தரிசனத்திலும் எனக்கு வரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
பரதேசியை நிறை சொல்லி பாராட்டுபவர்கள் அதிக எண்ணிக்கையிலும்...
குறை சொல்பவர்கள்  'பெரியப்பாவுக்கு இருக்கும் வைப்பாட்டிகளை விட’ குறைவான எண்ணிக்கையில் இருப்பதையும் உணர முடிகிறது.
குறை சொல்லும் கூட்டத்தில்  கொடியேற்றுபவன் யார் எனவும்
அறிய முடிகிறது.

பாலாவின் படங்களில் பொதுத்தன்மை நிலவுகிறது என பொத்தாம் பொதுவாக
குற்றம் சொல்கிறார்கள்.
அப்படி பார்த்தால்...  ஹிட்ச்ஹாக், ராபர்ட் பிரஸ்ஸன்,குரோசுவா என அனைவரையும் இந்த வட்டத்துக்குள் கொண்டு வந்து சாத்தி சாகடிக்கலாம்.

குறை சொல்லும் கோமான்கள் ஆரண்ய காண்டத்தையும், ஆடுகளத்தையும்
ஒப்பிட்டு பரதேசிக்கு எஃப். ஐ. ஆர் எழுதுகிறார்கள்.
இவர்கள் எழுதும் எப்.ஐ.ஆர்களுக்கு  காலம் தீர்ப்பெழுதும்.


ஒரு ரசிகனாக பரதேசியில் உள்ள குறைகளை சொல்ல அனுமதியுங்கள்.
மிகப்பெரிய குறை வேதிகா.
அவளது நடிப்பும், உடல் மொழியும் சகிக்கவில்லை.
வேதிகா  பிதாமகன் லைலாவின் அப்பட்டமான ஜெராக்ஸ்.

 ‘பிதாமகன் லைலாவை’ ரசிக்க முடிந்தது.
காரணம் அந்த கதாபாத்திரம் பிரஷ்ஷாக இருந்தது.
 ‘நந்தா லைலாவிற்கு’ நேர் எதிராக இருந்தது.

அதர்வா கூட  ‘பிதாமகன் சூர்யாவை’ சில இடங்களில் பிரதிபலித்து கடுப்பேற்றினான்.
இவர்கள் குறை குடங்களாக காட்சியளித்த காட்சிகளுக்கு...
முழுப்பொறுப்பும் பாலாவையே சேரும்.

அதே போல் பந்தியில் உட்கார்ந்தவனுக்கு பறிமாறாமல் இருப்பதும்,
பரிகசிப்பதும் அபத்தக்காட்சிகள்.
பந்தியில் உட்கார்ந்து விட்டால் பரம எதிரியைக்கூட எழுப்ப மாட்டார்கள் .
 “காலையிலிருந்தே வெறும் வயித்தோட வேலை செய்றீயே” என
அதட்டும்  ‘ஒட்டுப்பெருக்கியின் பெரியம்மை’ போன்றவர்களைத்தான் யதார்தத்தில் சந்திக்க முடியும்.

இசையை பற்றி எல்லோருமே தர்ம அடி கொடுத்து விட்டார்கள்.
அந்தக்கூட்டத்தில் முதல் ஆளாக அடிக்க ஆசைப்பட்டது நாந்தான்.
இளையராஜாவை விட சிறந்த பின்னணி இசை,
அமைக்க ஆள் அமையும் வரை திரும்ப அவரிடமே போங்கள் பாலா.
தப்பில்லை.

மொத்தப்படத்தையே  குறியீடாக அமைத்த பாலாவிற்கு பலத்த கரகோஷம் செய்யுங்கள்.
இலங்கை தமிழர்கள்,
மலேசியா,சிங்கப்பூர் மற்றும் வளை குடா நாடுகளுக்கு வளைத்துச்செல்லப்படும் தமிழர்கள்,
கார்ப்பரேட் கங்காணிகளால் வதைக்கப்படும் சாப்ட்வேர் சந்ததிகள்...
என பாதிக்கப்படும் பாட்டாளிகளின் அனைவரது வாழ்க்கைக்கும்
இப்படம் குறியீடே.

எனக்கு கலைஞரும் கங்காணியும் ஒன்றாகப்படுகிறார்கள்.
காரணம் கலைஞரின் கடந்த கால வரலாறு.
இருந்தாலும் இப்போது,
வெள்ளைக்காரியை எட்டி மிதிக்க காலை ஓங்கியபடி
கூட்டணியை  முறித்ததும்...
‘கங்காணியின் பொட்டி காட்டும் நாடகமும்... ஒன்றா ?
காலம்தான் சொல்லும்.



பரதேசியை மீது வைக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் உள்ள அம்சங்களும் அதற்கான விளக்கங்களும்.

சாலூர் மக்கள் என்ன ஜாதி என்று காட்டப்படவில்லை.

ஜாதிப்பெயரை சொல்ல சென்சார் இப்போது அனுமதிப்பதில்லை.
ஏனென்றால் நம் நாட்டில் இப்போது சாதிகள் இல்லை.
ஒழிந்து விட்டது.
எனவே இனி சினிமாக்கரன் ஜாதி பெயரை சொல்லி கதை விட முடியாது.
இருந்தாலும் சாலூர் மக்கள் எந்தப்பிரிவைச்சார்ந்தவர்கள் என்பதை பாலா
விசுவலாக காட்டி உள்ளார்.

அக்காலத்தில் நிலவிய ஜாதிக்கொடுமைகள் சொல்லப்படவில்லை.

தனது ஜாதியை சேர்ந்த  ‘ஒட்டுப்பெருக்கியை’  ‘அங்கம்மாவின் தாய்’ மருமகனாக ஏற்க மறுப்பது பொருளாதார ஏற்ற தாழ்வே.
ஆனால்  ‘ஒட்டுப்பெருக்கி’ வேலை தேடிப்போன இடத்தில்,
ஹோட்டலில்  ‘மேட்டுகுடியினர்  இடத்தில்’ உட்கார்ந்ததுக்கு அடி வாங்குகிறானே...அது ஜாதிக்கொடுமை.

தாழ்த்தப்பட்டவர்கள் தரையிலும், உயர் குடியினர் உயரத்திலும் உட்கார்ந்து சாப்பிடுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தோளில் ஒட்டுப்பெருக்கி கை வைத்ததற்கு கங்காணி பார்க்கும் பார்வையில்
ஜாதீயக்கொடுமை இருக்கிறது.

எரியும் பனிக்காடை ஏன் அப்படியே படமாக்கவில்லை ?

எதற்கு அப்படியே எடுக்க வேண்டும் ?.

சினிமா என்பது விசுவல் மீடியா.
அதற்கு தோதுப்படும் காட்சிகள், கதாபாத்திரங்களை மட்டுமே ஒரு படைப்பாளி எடுத்துக்கொள்வான்.

எரியும் பனிக்காட்டிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் இது வரை அதற்கு ஒரு பதிவாகிலும் எழுதி வெளிச்சம் போட்டுள்ளீர்களா?

ஏன் சாலூர் மக்களை வறண்ட பகுதிகளிலேயே நடத்திக்கூட்டிப்போக வேண்டும்.

கங்காணிக்கு ஜெட் ஏர்வேசில் இடம் கிடைக்கவில்லை!.


 கங்காணி, தனது அடிமைகளை மற்றவர்கள் கண்ணில் படாமல்
அழைத்து செல்லவே விரும்புவான்.

தண்ணீரை ஏன் வாய் வைத்து குடிக்க வேண்டும்?

ஊரில் ‘தேங்காய் சிரட்டையில்’குடித்த மக்கள்,
மாக்களாக மாறி விட்டார்கள் என்பதற்கே,
நீர் நிலைகளில் வாய் வைத்து குடிகின்ற ஷாட்டை போட்டார் பாலா.

சாலூர் பஞ்சப்பிரதேசமா ?

நிச்சயமாக இல்லை.
அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
அவர்கள் ‘ரெமி மார்ட்டின்’ குடிக்க வழியில்லை என கத்தவில்லை.
விமர்சிப்பவர்கள் தங்கள் வாழ்வியலோடு சாலூர்வாசிகளை ஒப்பிட்டு தப்பாக கணிக்கிறார்கள்.

போகிற வழியில் ஒரு கோயில் கூடவா இல்லை ?

1930களில் இருந்த கோயில்கள் இன்று எப்படி இருக்கிறது ?
பார்த்தாலே வாந்தி வரும் வர்ணம் அடிக்கப்படாத கோயில்களை காட்ட முடியுமா உங்களால்?

அட... அட்லீஸ்ட்... டெம்ப்ளேட் இல்லாமல்... பதிவெழுதிக்காட்டுங்கள்.

மிக முக்கியமான ‘மத மாற்றம்’ பற்றிய விமர்சனங்களுக்கு
அடுத்தப்பதிவில் பதில்.

Mar 19, 2013

‘பரதேசி’ - சாருவுக்கு பதிலடி.


நண்பர்களே...
பரதேசி படத்தை காவியம் என நாடே கொண்டாடிக்கொண்டிருக்க
‘போலி  இலக்கியவாதி’ சாரு நிவேதிதா மட்டும் வழக்கம் போல் தனியாவர்த்தனம் வாசித்திருக்கிறார்.
இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
மலம் தின்னும் பன்றியின் வாயில் நரகல் வாடைதானே வீசும்.


பரதேசி படம் பாலாவின் படைப்புகளிலேயே உச்சம்.
இந்திய திரைப்படங்களின் உச்சம் எனக்கொண்டாடி இருக்கிறார்  ‘இலக்கியகர்த்தா’ எஸ்.ராம கிருஷ்ணன்.

உலகசினிமா என்ற தொடரை ஆனந்த விகடனில் எழுதிய,
செழியனின் காமிரா கை வண்ணத்தில் பரதேசியை உலக சினிமாவாக்கி இருக்கிறார் பாலா.
அறிமுக கலை இயக்குனர் சி.எஸ்.பாலச்சந்தர் கை வண்ணத்தில் உருவான சாலூர் கிராமத்தில் செழியனின் ‘ஸ்டெடிகேம் காமிரா’...
கிராமம் முழுக்க சுற்றிப்பார்க்க  ‘இடுவை’ வழியாக பயணிக்கிறது.
இடுவை = வீடுகளுக்கிடையேயான குறுகிய சந்து.

1930களில் ஒரு தெக்கத்தி கிராமத்தின் அதிகாலைப்பொழுதை அழகாக பதிவு செய்திருக்கிறார்.
திண்ணை வைத்த வீடும், தூங்கி கொண்டிருக்கும் ஒரு பரதேசியும் கவனமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கோடாலி தூக்கி  ‘சோலிக்கு’ புறப்படுபவன்,
தெருவைப்பெருக்கி தண்ணி தெளிப்பவள்,
அம்மி அரைப்பவள் என மிக நுணுக்கமாக தெக்கத்தி கிராமம் ‘தினப்பொழுதுக்கு’ தயாராவதை செதுக்கி இருக்கிறார் பாலா.
இதைத்தான் ‘7 ஸ்டார் கிராமம்’ என கிண்டலடித்திருக்கிறது
‘இலக்கிய கூமுட்டை சாரு’.
 ‘ஆன் லைனில் பிச்சையெடுத்து’ தாய்லாந்துக்கு...
‘சோலி’ பாக்கப்போகும்  ‘பரதேசிக்கு’ கிராமத்தை பற்றி என்ன தெரியும்?.
*********************************************************************************
சோலி = வேலை, உடலுறவு
இரு பொருளில் பயன்படுத்தப்படும் கிராமத்து சொல்லாடல்.

“ சோலி முடிஞ்சதும் வீட்டுக்கு வரணும்.
சாராயக்கடைக்கு போனீரு... விளக்குமாறு பிஞ்சுரும்”

“ அந்த பச்சை புள்ளய சோலி பாத்து வயத்துல லோடை ஏத்திட்டான்”
*********************************************************************************
கலப்பை ஏந்தி ஒருவன் கூட கிளம்பவில்லை என்பதை பாலா காட்சி படுத்தி இருப்பது  ‘முண்டக்கலப்பை சாருவுக்கு’ தெரியுமா?

 ‘நுவான்ஸஸ்’ பரதேசியில் இல்லையென அங்கலாய்த்திருக்கிறது ‘நுனிப்புல்’சாரு.
ஒரு பானை சோத்துக்கு...இந்தா பிடி ஒரு சோறு.
மகளுக்கு கருப்பட்டியும் எள்ளும் போட்டு இடிப்பாள் கதாநாயகியின் தாய்.
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் தேதியை கணக்கிட்டு கிராமத்து தாய் செய்யும்
‘எள்ளுருண்டை’ அது.
மாத விடாய் அசவுகரியங்களை போக்கும் அருமருந்து அது.
உணவையே மருந்தாக்கிய எளிய கிராமத்து வழி முறை.

இப்படி மகளை கண்ணும் கருத்துமாய் கிராமத்து தாய் கண்காணித்து வளர்ப்பதால்தான்...
‘தேதி தப்பியதை’ வைத்து  குழந்தை உருவானதை கணக்கிட முடிகிறது.
பொருளாதாரத்தால் தாழ்த்தப்பட்டவனாகிய  ‘ஒட்டுப்பொறுக்கி’ வாரிசை வயிற்றில் சுமப்பதைக்கண்டு கொதித்து தூக்கிப்போட்டு மிதிக்கிறாள் தாய்.

நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் சேர்ந்து கூத்தடிச்ச  ‘கூந்தல் பனை’ சாருவிற்கு
இது புரியுமா ?

கூந்தல் பனை = ஒரு பிரயோஜனம் இல்லாமல் ஆள் மட்டும் வளர்ந்து அறிவு வளராத ஜந்துக்களை கிராமத்தில் இந்த பெயரிட்டுதான் திட்டுவார்கள்.



எடிட்டர் கிஷோருடன் இணைந்து,
ரஷ்யத்திரை மேதை ஐஸன்ஸ்டைன் பாணியில் மாண்டேஜ் ஷாட்களை படைத்துள்ளார் பாலா.
சாலூர் கிராம மக்கள் பெரும்பாலோர் கங்காணி பேச்சை நம்பி ஊர்வலமாய் கிளம்பிப்போகும் காட்சி.
 [1 ] சூரியன் அஸ்தமிப்பதை அண்மைக்காட்சியாக்கி ஒரு ஷாட்.
[ 2 ] அடுத்த ஷாட்... அனைவரும் வெட்ட வெளியில் உறங்கிக்கிடப்பார்கள்.
இந்த இரு ஷாட்டையும் இணைத்து பாருங்கள்.

[ 3 ] இவர்கள் வாழ்வு அஸ்தமித்து...
செத்து சுண்ணாம்பாகப்போகிறார்கள் என்ற காவிய அர்த்தம் உதயமாகவில்லையா ?

ஐஸ்ன்ஸ்டைன் மாண்டேஜ் தியரியை விளக்கி எழுதப்பட்ட ஹேராம் பதிவைக்காண்க...
ஹேராம் = 018 பதிவைக்காண்க.

உலகின் தலை சிற்ந்த பத்து இயக்குனர்களில் ஒருவர் மைக்கலேஞ்சலோ அண்டனியோனி.

LA AVENTURA \ 1960 \ ITALY \ DIRECTED BY MICHELANGELO ANTONIONI.



இவரது காவியங்களில் ஒன்றான ‘லா அவென்சுரா’ என்ற படத்தில் கதாநாயகன் தனது காதலியுடன் ஒரு தீவுக்கு பிக்னிக் போவான்.
காதலி காணாமல் போய் விடுவாள்.
காவலர், நண்பர்கள், பொது மக்கள் அனைவரும் பரபரப்பாக தேடுவார்கள்.
ஊடகம் முதற்கொண்டு அனைவரும் அதைப்பற்றியே பேசுவார்கள்.
அவள் கிடைக்கவே மாட்டாள்.
படத்தின் ஆரம்பக்காட்சிகளிலேயே இப்பரபரப்பு தோன்றி மறைந்து விடும்.
படத்தின் எஞ்சிய காட்சிகளில் அவளைப்பற்றிய பேச்சோ செய்தியோ இருக்காது.

சாரு போன்ற குறைமதியுள்ள ஒரு ரிப்போர்டர் அண்டனியோனியிடம் கேட்டான்.
“அவள் என்னவானாள் ?”
அண்டனியோனியின் பதில்...
“எனக்கும் தெரியாது”.

ஏன் இது போன்று ஒரு காட்சி அமைத்தார் அண்டனியோனி ?
ஒரு விஷயத்தை பரபரப்பாக பேசுவோம்.எழுதுவோம்.
அதை விட வேகமாக மறந்து போவோம்.
அதைக்கடந்து புதிய பரபரப்புக்கு தாவி விடுவோம்.
உ.ம் : 2ஜி ஊழல்.

பரதேசியில் இப்படி ஒரு காட்சி அமைத்திருக்கிறாரே பாலா.
கண்ணுக்கு புலப்படவில்லையா ?
கதாநாயகனின் பெரியப்பா மரணமடைய அவரது சடலத்தை மறைத்து அவரது  மகள் திருமணத்தை ஊரே நடத்துகிறது.
பந்தி நடக்கிறது.
விருந்தாக  ‘நெல்லுச்சோறு’ படைக்கப்படுகிறது.

படத்தில் பெரியப்பா சடலத்தின் இறுதிச்சடங்குகள் காட்டப்படவில்லை.
காட்டப்பட்டிருந்தால் அது சாதாப்படம்.
காட்டப்படாததால்  ‘பரதேசி’ காவியப்படம்.

வாழைப்பழத்தை உரித்து வாயில் சவைத்து மென்று...
அதைத்தான் சாரு போன்ற மசாலா மண்டைகளுக்கு வாயில் ஊட்ட வேண்டும்.
பாலா போன்ற படைப்பாளிகளின் படம்...
சாரு போன்ற மர மண்டைகளுக்கு புரியாமல் கதறும் ரகசியம் இதுதான்.


‘பரதேசி’ கிளைமாக்சில் ‘ஒளிக்கீற்று’ இல்லையென புலம்பிய
‘கருத்துக்குருடன்’ சாருவுக்கு பதில் அடுத்தப்பதிவில்.

இலக்கியகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணனின் பரதேசி பற்றிய படைப்பைக்காண...
எஸ்.ராவின் பரதேசி பற்றிய பதிவு

Mar 15, 2013

பரதேசி = பாலாவின் பிரதேசம்


நண்பர்களே...
பாலாவின் பரதேசியை முதல் காட்சி பார்த்து விட்டேன்.
கதி கலங்கிப்போய் இருக்கிறேன்.
என்ன எழுதுவது ?
எதை எழுதுவது ?
இப்படி ஆரம்பித்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
எல்லோரும் சற்று விலகி நில்லுங்கள்.
பாலாவிடம் நான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.


அவன் இவன் பார்த்து விட்டு...கோபத்தில் ‘அவன் இவன் இயக்கியது எவன் ?என எக்காளமாக கேட்டவன் நான்.
‘வாடா வக்காளி’ என என்னை  ‘வதைத்து’ அனுப்பி விட்டார் பாலா.
 ‘பாலாவுக்கு கிரியேட்டிவ் இம்பொடன்ஸ் வந்து விட்டது’ என எழுதிய என்னை எட்டி உதைத்து  ‘என் கிரியேட்டிவிட்டியை பாரடா’ என பறையடித்து விட்டார்.
எனக்கே இப்படியென்றால்  ‘டீஸரை’ பார்த்து கொதித்த  ‘மனிதகுலமாணிக்கங்கள்’ கதி...

இது வரை வந்த தமிழ் சினிமாவின் குப்பைக்கோபுரங்கள்  அனைத்தையும் மண்ணோடு மண்ணாக்கி
அந்த களத்து மேட்டில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் பாலா.
தமிழ் சினிமாவின் போலி படைப்பாளிகளை குறைப்பிரசவமாக்கி
சவமாக்கி இருக்கிறார் பாலா.

நம் வாழ்வையும் வளத்தையும் சூறையாடிய வெள்ளைப்பேயை விலா எலும்பு முறிய வேப்பிலையால் விரட்டி விரட்டி அடித்து வெளுத்தெடுத்திருக்கிறார் பாலா.
மாரியின் பெயராலும்...
மேரியின் பெயராலும்...
பாட்டாளிகளை சுரண்டிய பாதகர்களின்  பட்டையை உரித்தெடுத்திருக்கிறார்.
கூட்டணி போட்ட ‘பாயையும்’ விடவில்லை பாலா.

‘பீல் குட் மூவி’ மட்டுமே பார்க்கும்  ‘பால் குடி ரசிகர்கள்’ பரதேசி ஓடும் தியேட்டர் இருக்கும் சாலையில் கூட செல்லாதீர்கள்.
நீலகிரி மலையில்...நீளமான வரிசையில் பாலா அடுக்கி வைத்திருக்கும் பிணங்களின் வாடையிலேயே மயக்கம் போட்டு விடுவீர்கள்.

தமிழ் ரசிகர்கள் ஒரு தடவையாவது இப்படத்தை தியேட்டரில் பார்த்து
பாலாவிற்கு மரியாதை செய்யுங்கள்.
இப்படம் தோற்றால் மீண்டும் பாலா ‘அவன் - இவன்’ எடுக்க வேண்டிய நெருக்கடி வரும்.
ஏற்க்கெனவே 14 கோடி நஷ்டத்தை சரிக்கட்டவே ‘அவன் - இவன்’ எடுத்தார் பாலா என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம் சொன்னார்.


உலக சினிமா போல்...தமிழ் சினிமா ஒன்று கூட இல்லை என்று ‘பண்டிதர்கள்’
புளுத்தினால் அவர்கள் புடுக்கை அறுத்து பாலா கையில் கொடுங்கள்.
அதுவே பாலாவிற்கும்...
அவரது குழுவினருக்கும்...
மிகச்சிறந்த பாத காணிக்கை.

இப்படம் பார்த்தவர்கள்...
இனி டீ குடிக்கும் போது...டீயில் ‘பரதேசிகளின்’ இரத்தம் கலந்திருப்பதை கண்டால்...
கோப்பையின் கீழ் பாலா என பெயர் இருப்பதையும் காணலாம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


Mar 14, 2013

பாலாவை பாராட்டுகிறேன்.


நண்பர்களே...
தமிழ் சினிமாவை உலக சினிமா தரத்துக்கு உயர்த்திப்பிடிக்கும் வல்லமைகளில் பாலாவும் ஒருவர்.
நான் கடவுள் தந்த அதிர்ச்சிக்கு இணையாக...
உலகில் எந்த உலக சினிமாவும் இது வரை தந்ததில்லை.

செம்பட்டையன், கறை படிந்த பல்லன், மாறு கண்ணன், நர மாமிச பட்சிணி என அவர் வீதியோர விளிம்புகளையே கதாபாத்திரங்களாக காட்சிப்படுத்துவதை வழமையாக கொண்டவர் பாலா.
கமல் - ரஜினி கையில் கிடைத்தால் கூட அவர்களையும் மாற்றிச்சித்தரிக்கும்
மந்திரக்காரன் பாலா.



படைப்பாளிகள் உள்ளும் புறமும் வேறாகத்தான் இருப்பார்கள்.
புறத்தோற்றத்தை புனுகு பூசி காட்டுபவர்கள் மத்தியில் பாலா மட்டும்தான் தனியாக நிற்கிறார்.
தன்னைப்பற்றிய பிம்பத்தை தானே உடைத்தெறிவதில் அந்த போராளிக்கு  நிகர் யாருமே கிடையாது.
‘ தனக்கு  ‘மனநிலை பிறழ்வு’ இருக்கு’
‘கஞ்சா பழக்கம் இருக்கு’
என அதிரடியாக தன்னை எழுத்தில் வெளிப்படுத்தியவர் பாலா.

 ‘பரதேசியின்’ அதிரடியான டீஸரை வெளியிட்டு புயலை கிளப்பி உள்ளார்.
அனைத்துமே புனைவு காட்சிகள்தான்.
நிழலை நிஜமாக்கி அனைவரையும் நம்ப வைத்து...
கொதிக்க வைத்து...
ஜெயித்து விட்டார்.

இயக்குனர் இங்மார் பெர்க்மன் ஸ்டைலில் டீசரை அமைத்துள்ளார் பாலா.
உதாரணமாக ஒரு பெண் தனது  ‘குறியை’ உடைந்த பாட்டில் கொண்டு சிதைப்பதை காட்சிப்படுத்தி நம்மை பதற வைப்பார்.
அடுத்தக்காட்சியிலேயே அந்தப்பெண் ‘டாக் டாக்’கென்று  நடப்பதை காட்டி முந்தைய காட்சியை மறுப்பார் பெர்க்மன்.
பார்வையாளராகிய நாம்தான்...
‘ஓ..அந்தக்காட்சி...அவளது கற்பனைக்காட்சி’
என்ற விளக்க உரையை நமக்கு நாமே  எழுதிக்கொள்ள வேண்டும்.
அல்லது....பெர்க்மனுக்கு படமெடுக்கத்தெரியவில்லை என பதிவெழுத வேண்டும்.
விஸ்வரூபத்துக்கு அப்படித்தானே சிலர் பதிவெழுதினார்கள்.

இப்படி ஒரு விளம்பரத்தை...
எந்த படைப்பாளியும் கனவில் கூட கற்பனை செய்ய மாட்டான்.
பாலாவுக்கு மட்டும்தான் இந்த கற்பனை ஊற்றெடுக்கும்.
திரையில் வடித்துக்காட்டும் ஆண்மையும் இருக்கும்.

மாபெரும் அதிர்ச்சிக்கு ஆடியன்சை தயார் செய்யும் உத்தியாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.
திரையில் வெடிக்கும்  நிபுணனின்... கதகளியாட்டத்தை காணத்தயாராகி விட்டேன்.

வெள்ளையன் கசக்கி பிழிந்த ரத்ததில் ஒரு துளியை
ஆவணப்படுத்த முனைந்திருக்கும் பாலாவுக்கு...
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
பற்றியெறியும் பனிக்காட்டை வெள்ளித்திரையில் காணுங்கள்.

 ‘அவன் இவன்’ இயக்கியது எவன் ? என உரிமையோடு கோபித்த எனக்கு
பாசத்தோடு பாராட்ட கடைமையும் இருக்கிறது.
பரதேசியில் வாய்ப்பளித்திருப்பார் பாலா என ஆணித்தரமாக நம்புகிறேன்

சர்ச்சை கிளப்பிய காணொளி காண...


இந்திய இயக்குனர்  ‘அனுராக் காஷ்யப்’ பாலாவைப்பற்றியும்...
பரதேசி படத்தை பற்றியும் புகழ்ந்துரைப்பதை
தமிழ் சப்-டைட்டிலுடன் காணொளியில் காண்க...



அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Mar 11, 2013

சொர்க்கமே என்றாலும் சொந்த வீடைப்போல வருமா ?


நண்பர்களே...
சொந்த வீட்டின் அருமை...இல்லாதவனுக்குதான் தெரியும்.
பரம்பரை வீட்டில் வசிப்பவர்களுக்கு, வீடற்ற நாடோடி அனுபவம் இருக்காது.
‘மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு’... சொந்த வீடு என்பது நிரந்தரக்கனவு.
பலிக்காத கனவோடு வாழ்ந்து... ‘சமரசம் உலாவும் இடத்தில்’ மக்கிப்போனவர்கள்தான்  ‘மெஜாரிட்டி’.

‘ஐரோப்பிய திரைப்பட திருவிழா’...
கோவையில் குமரகுரு பொறியியல் கல்லூரியில் தினமும்   ‘பெண்களை கொண்டாடி’ வருகிறது.
தொடக்க விழவில் திரையிடப்பட்ட காவியம் ‘த ஹவுஸ்’.
‘ஹவுஸ் திரைப்படம்’ மாணவர்களால் மட்டுமே  ‘ஹவுஸ் புல்லாகியது’.

‘வீடு’  என்ற கனவு நனவாகும் அவஸ்தையை...
செல்லுலாய்டில் செதுக்கியவர்,
தமிழ்நாட்டில்...‘இயக்குனர் பாலுமகேந்திரா’.
ஸ்லோவாக்கியாவில்... 'இயக்குனர் ZUZANA LIOVA'.

இயக்குனர் பெண்ணாக இருப்பதால் ஸ்லோவாக்கியாவில் பெண்களை  எவ்வாறு சங்கிலி கட்டி சுதந்திரமாக ஆடவிட்டிருக்கிறார்கள் என்பதை சுதந்திரமாக சொல்லியிருக்கிறார்.



பள்ளி மாணவி ஈவாவின் கனவு... ‘லண்டன் செல்ல வேண்டும்’.
மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும்
ஈவாவின் தந்தையின் கனவு...
‘வீட்டை கட்டி முடிக்க வேண்டும்’.


குறைந்த கூலிக்கு வேலை செய்ய ‘பீகார் மக்கள்’ அங்கு இல்லை.
ஈவாவின் தந்தையே சித்தாள்...பெரிய ஆள்...மேசன்...சகலமும்.


அப்பாவும் மகளும்  ‘உழக்கில் கிழக்கும் மேற்குமாக’ இருக்கிறார்கள்.

தந்தை... ‘பலாப்பழம்’ என்பது தெரியாமல்...
முள் குத்தும் என நெருங்க மறுக்கிறாள் ஈவா.


தந்தையின் கடமை...கண்ணியம்...கட்டுப்பாடை உடைத்தெறிய உழைக்கிறாள் ஈவா.
திருமணமான ஆங்கில வாத்தியாரிடம் ‘உடல் கல்வி’ பயிலுகிறாள்.

கணவனுக்கும்...மகளுக்கும் இடையில் மத்தளமாக தாய்.

ஏன் இந்த இடைவெளி ?
விடை கிடைக்கிறது...ஈவாவின் அக்கா மூலமாக.
பேரக்குழந்தைகளை கூட ஏறெடுத்தும் பார்க்காமல் விரட்டுகிறார் ஈவாவின் தந்தை.
“ வீட்டுக்குள்ளே காலை வைக்காதே ...ஓடு காலி நாயே ”.

அக்காவின் குடும்பம் படும் கஷ்டத்தைக்கண்டு இன்னும் மண்டைக்கு ஏறுகிறது ஈவாவுக்கு.
அப்பாவின் தப்புக்கு... தப்பு பண்ணுகிறாள் பதிலடியாக ஈவா.
மகளின் தப்புக்கு ‘அப்பு’...கொடுக்கிறார் உடனடியாக அப்பா.

[ இக்காட்சி என் தந்தையை நினைவு படுத்தியது.
“என்ன தப்பு செஞ்சாலும் பொட்டை புள்ளய கை நீட்டக்கூடாது” ]

ஆங்கில வாத்தியார் ஆலிங்கனம் செய்தது அம்பலத்துக்கு வருகிறது.
வாத்தியாருக்கு வேலை போகிறது.
ஈவாவுக்கு படிப்பு போகிறது.

தந்தை அடிக்க பதிலடியாக ஈவா வீட்டை விட்டு ஓடுகிறாள்.

ஈவா திருந்தி & திரும்பி வந்தாளா ?
ஈவாவின் தந்தை மூத்த மகளை ஏற்றுக்கொண்டாரா ?
வீடு கட்டி முடிக்கப்பட்டதா ?
முக்கியமாக ஈவாவின் தந்தையை...
[குடும்பத்தினருக்கு தெரியாமல்  மறைத்த] இருதய நோய் பலி கொண்டதா ?
ஈவாவின்  ‘லட்சிய லண்டன்’ போனாளா ?
இத்தனை கேள்விகளுக்கும் விடையாக இருப்பது ‘கிளைமாக்ஸ்’.

இந்தக்கேள்விகள் அனைத்திற்கும்...  ‘விசுவல் ட்ரீட்மெண்ட் விடையை’
படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஐரோப்பிய திரைப்பட திருவிழா நடைபெறும் நகரங்களும் தேதிகளும்...
[ கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது ]



நண்பர்களே... ‘ஹேராம்’, ‘டச் ஆப் ஸ்பைஸ்’ படங்களுக்கான விமர்சனத்தொடரை முடிக்கும் வரை புதிதாக இனி எந்தப்படத்துக்கும் விமர்சனம் எழுதப்போவதில்லை.
எனவே  ‘உலக சினிமா அறிமுகப்பதிவுகள்’ மட்டுமே தொடரும்.

 ‘த ஹவுஸ்’ படத்தின் காணொளி காண்க...


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Mar 9, 2013

விசிலடிக்கும் கல்லூரிப்பெண்கள்.


நண்பர்களே...
நேற்று குமர குரு பொறியியல் கல்லூரிக்கு சென்றேன்...முதன் முறையாக.
பெங்களூரூ விதான் சவுதாவை பிரதியெடுத்த பிரம்மாண்ட கட்டடம்தான் வரவேற்றது.
உள் அழகு இன்னும் மிரட்டியது.
இங்கு படிப்பவர்கள் சொர்க்க லோகம் போனால் மிரள மாட்டார்கள்.
எங்கு பார்த்தாலும் தேவதைகள்...கண்களை வதைத்தார்கள்.

மகளிர் தினமும்... ‘பெண்களைப்போற்றும்’ ஐரோப்பிய திரைப்பட விழாவும் ஒரே நாளில் அமைந்தது இனிய பொருத்தமே !
அரங்கு நிறைந்த மாணவக்கூட்டத்தை பார்த்து அதிசயித்து போனேன்.
சேவல்களை விட மயில்கள் அதிகம்.இது மற்றொரு அதிசயம்.

விழாவை ஆங்கிலத்திலேயே தொடங்கி... ஆங்கிலத்திலேயே முடித்தார்கள்.
படத்தை பற்றிய குறிப்பை எல்லோருக்கும் வழங்கி விட்டு...அதை மைக்கில் வாசித்தது வேஸ்ட்.
அதன் தமிழாக்கத்தை வாசித்தது மற்றொரு வேஸ்ட்.

விளக்கை அணைத்ததும் விசிலும்...ஆரவாரமும் வெடித்தது.
முன் வரிசையில் இருந்த நான் திரும்பி பார்த்தேன்.
மயில்கள் விசிலடிப்பதை தரிசித்தேன்.
என்னா அழகா அடிக்குதுங்க...
எம்.ஜி.யார் ரசிகர்கள் டெப்பாஸிட் இழந்து விடுவார்கள்.
விசிலடிப்பது பகுதி நேர வகுப்பாக இருந்தால்...நானும் விண்ணப்பிப்பேன்.


ஸ்லோவாக்கியா நாட்டின்  ‘த ஹவுஸ்’ திரைப்படம்தான் பிள்ளையார் சுழி.
முதல் படமே...பட்டாஸ்.
சத்தியமா சொல்றேன்.
எண்பது லட்சம் போதும்...இப்படத்தை எடுக்க.
எங்கேயாவது பணத்தை கொள்ளையடிச்சாவது இப்படத்தை எடுக்கணும்னு  ‘டெம்ட்’ ஆயிருச்சு.
‘காப்பியடிச்சு எடுத்திருக்கான்னு’ பெங்களூர் கோஷ்டி பதிவெழுதுனாலும் பரவாயில்லை.


பாலுமகேந்திராவின் ‘வீடு’ படத்திற்கு இணையானது இப்படம்.
ஆனால் பல்வேறு தளங்களில் இப்படம் பயணித்திருக்கிறது.

பெண்களின் அகப்போராட்டத்தை அற்புதமாக சித்திரித்து உள்ளது.
பெண்ணியம் பேசும் கோவைப்பெண் வீராங்கனைகள் ஒருவர் கூட இவ்விழாவிற்கு வரவில்லை.
எல்லோரும் ‘சரவணன் மீனாட்சியில்’ பிஸியாகி விட்டார்கள் போலும்!

43 லட்சம் கோவை ஜனத்தொகையில் மொத்தம் பத்து பேர்தான் இவ்விழாவிற்கு வந்திருந்தனர்.
அனைவருமே கோணங்கள் பிலிம் சொசைட்டி தீவிரவாதிகள்.

படத்தை திரையிட்ட  ‘மாணவ ஆப்ரேட்டர்’ சென்சாரில் இருக்க வேண்டியவன்.
ஸ்கர்டை கழட்டுவதற்குள் ‘டிஜிடல் புரஜக்டர்’ வீடியோ& ஆடியோவை ம்யூட் பண்ணி விடுகிறான்.
அந்த கேப்பில் மாணவர்கள் அடிக்கும் கமெண்ட்...அது தனி அட்டகாசம்.
‘பொழைச்சு போங்கன்னு’  ‘லிப்லாக்கை’ மட்டும் அனுமதித்தான்  ‘சென்சார்’.
நேற்று எத்தனை பேர் டவுண்லோடினார்களோ தெரியாது.
நான் பண்ணி விட்டேன்.

அடுத்தப்பதிவு...  ‘த ஹவுஸ்’ விமர்சனம்தான்.
காத்திருக்கவும்.

Mar 8, 2013

வசந்த மாளிகை - ரசிகர்களின் கொண்டாட்டமும்... டிஜிட்டல் ஏமாற்றமும்.


நண்பர்களே...
வசந்த மாளிகை டிஜிட்டலில் வெளியிடப்பட்டதை அறிந்து,
என்னுள் உறங்கி கிடந்த  ‘சிம்மக்குரலோன் சிவாஜி ரசிகன்’ சிலிர்த்தெழுந்து விட்டான்.
 ‘கடமை வீரன் கந்தசாமியாக’  காலைக்காட்சியே சென்று விட்டேன்.








கோவை மாநகரத்திலுள்ள சிவாஜி ரசிகர்கள் பெருவாரியாக திரண்டிருந்தனர்.
அர்ச்சனா தியேட்டரை அலங்கரித்த,
நடிகர் திலகத்தின் வண்ண வண்ண பிளக்ஸ் பேனர்கள், வாழைத்தோரணங்கள், மலர் மாலைகள் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு சவால் விடுத்தன.
அதிரடி அட்ராக்‌ஷனாக ஒரு பாண்ட் கோஷ்டி ’என்னடி ராக்கம்மாவை’
அதிர வைத்துக்கொண்டிருந்தது..
ரசிகர் கூட்டம்  ‘நாஸ்டால்ஜியாவில்’ ஆடிக்கொண்டிருந்தது.
ஒன்றிரண்டு பேர் மட்டும், டாஸ்மார்க் உபயத்தால் ஆடிக்கொண்டிருந்தார்கள்.


கையகல பேட்ஜ்களை ஒரு ரசிகர் வாரி வழங்கி கொண்டிருந்தார்.
வந்திருந்த ரசிகர்கள் பட்டாளம் அனைவருமே நாற்பது, ஐம்பது, அறுபதை தாண்டியவர்கள்.
விஜய், அஜீத் பட ரசிகர்கள் ரேஞ்சுக்கு, வயதை தொலைத்து விட்டு இளமை கொண்டாட்டம் போட்டார்கள்.

 ‘டிஜிடல் ரெஸ்டோரேஷன்’ என்ற பம்மாத்து வேலை கர்ணனலிருந்து வசந்தமாளிகைக்கும் பரவியிருக்கிறது.
கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்
பகல் கொள்ளை வியாபாரிகள்.


நான் ஏழாவது படிக்கும் போது,
வசந்தமாளிகையை  சென்னை சாந்தி தியேட்டரில் இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.
ஈஸ்ட்மென் கலரில் அப்போது  ‘ஜொலித்தது...
இப்போதும் என் கண்களில் தேங்கி இருக்கிறது.
இப்போது டிஜிட்டலில், பாதி ஜொலிப்பு கூட தேறவில்லை.


‘மயக்கமென்ன’ பாடலையும்...
‘யாருக்காக’ பாடலையும்... மட்டுமே பட்டி பார்த்து டிங்கரிங் செய்துள்ளார்கள்.
அதுவே பரிதாபமாகத்தான் பல்லிளிக்கிறது.

சிவாஜி ரசிகன் என்ற பெருமிதம் நினைவில் நிரம்பி வழிய...
12 வயது பாலகனாக உரு மாறி...
மறைந்த எனது தாயும் தந்தையும் என்னருகில் அமர்ந்திருக்க படம் பார்த்தேன்.

‘ஓ மானிட ஜாதியே’ என சிவாஜி திரையில் தோன்றும் காட்சியில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து  எழுப்பிய ஓசையில் அடியேனுடையதும் அடக்கம்.
மெலோ டிராமா காட்சிகளில் இப்போதும் நடிகர் திலகம் என்னை உருக வைத்தார்.

நாகேஷ்-வி.கே.ராமசாமி-ரமாப்பிரபா நகைச்சுவை கூத்துக்கள்,
ஆபாச அபத்தங்களாக இப்போது நெருடுகிறது.

திரைக்கதை ‘அரிஸ்டாட்டில்’ பாணியில் மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது.
 பிளாக் & ஒயிட் ‘தேவதாஸ்’ கதையையே...
ஈஸ்ட்மென் கலரில் வசந்த மாளிகையாக்கியிருக்கிறார்கள்.
வசந்த மாளிகையை காலத்திற்கேற்றார் போல் நவீனப்படுத்தி,
கமல்-ஸ்ரீதேவி நடிப்பில்  'வாழ்வே மாயம்’ ஆக்கப்பட்டது.
அனைத்துமே வெள்ளி விழா படங்கள்.

இப்போதும் இக்கதையை கல்லா கட்டலாம்.
கட்டாயத்தேவை ...
முந்தையவர்களைப்போல...குளோசப்பில் நடிக்கத்தெரிந்த நடிப்புக்கலைஞர்கள்.
அது வரை காத்திருக்கட்டும் இத்திரைக்கதை.

தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெள்ளி விழா கொண்டாடியது.
இலங்கையில் வசந்த மாளிகை வருடக்கணக்கில் ஓடி சாதனை படைத்தது.
அப்போது இலங்கை தமிழ்ச்சேவை ஒலிபரப்பில்,
‘வசந்தமாளிகை சிறப்பு நிகழ்ச்சிகள்’... கே.எஸ்.ராஜாவின் இனிய குரலில் ஒலிபரப்பாகியது என்னுள் இப்போதும் அழிக்க முடியாமல் பதிவாகியிருக்கிறது.

கே.வி.மகாதேவனின் இன்னிசையில் கவியரசரின் வரிகள்...
சிவாஜியையும் வாணிஸ்ரீயையும் நேரடி ஒளிபரப்புகிறது.

நாயகன் [முன்னாள் குடிகாரன்] : அன்னத்தை தொட்ட கைகளினால்
மதுக்கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்.

நாயகி [ குடிகார நாயகனை திருத்தியவள் ] : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விடமாட்டேன்.
இப்பாடலில் இருக்கும் முரண்சுவையை ரசிக்க மூன்றாம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

கதையோடு ஒட்டிப்பிறந்த பாடல்களை...
இனி இந்த நாட்டில்...
இந்த ஊரில்...
என்று காண்போமோ .

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Mar 5, 2013

பெண்களை கொண்டாடுவோம் - ஐரோப்பிய திரைப்பட திருவிழா .


நண்பர்களே...
‘பெண்களை  கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் கோவையில்  ‘ஐரோப்பிய திரைப்பட திருவிழா’ நடைபெறுகிறது.
கோவை சரவணம்பட்டியில் உள்ள 
குமரகுரு தொழில் நுட்பக்கல்லூரியில்
மார்ச் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை திரையிடப்படுகிறது.

8ம்தேதி  தொடக்க விழாவில்  ‘த ஹவுஸ்’ என்ற ஸ்லோவாக்கிய திரைப்படம் திரையிடப்படுகிறது.
ஏனைய நாட்கள் இரண்டு அரங்குகளில் இரண்டு காட்சிகளாக நான்கு படங்கள்
காட்டப்படுகிறது.
திகட்ட திகட்ட திரையிடுகிறார்கள்.
முதல் படம் ரம்பம் போட்டால் இரண்டாம் படத்துக்கு ஓடி விடலாம்.
இரண்டுமே காவியமாக அமைந்தால் ஒன்றை இழக்கும் பரிதாபம் இருக்கிறது.


நிகழ்ச்சியின் அட்டவணை இதோ...



படங்கள் பற்றிய சிறு குறிப்பு...

                        CELEBRATING WOMEN
European Union Film Festival
(8-14 March 2013)
Coimbatore

Synopsis

The House (DOM) | Dir.:Zuzana Liová | Slovakia | Czech Republic|2011|90'

Stone by stone, Imrich is building a small house for his daughter Eva almost entirely on his own. 
But for Eva, who is about to graduate from school, the prospect of moving into the house is about as appealing as being imprisoned in a jail she herself has helped to build. 
She has very different plans for her future. 
Her grumpy, stingy, controlling father has already broken with Eva’s sister, Jana, after she got herself involved with a scoundrel with whom she now has three children. 
So the father is twice as vigilant with Eva, but she still manages to indulge in a few little freedoms: skipping school for a couple of days, doing little jobs to save up cash for the trip she longs to make to London, and an affair with an older man who turns out to be her English teacher. 
A generational conflict in a milieu where even the minor characters are described in such detail that one suspects the film has been modeled on directors like Mike Leigh or Ken Loach. 
But the speechlessness and deeply entrenched feelings of the parent generation here also reflect the profound impact of radical social change and the struggle to come to terms with that change. 
This makes Zuzana Liová’s feature a notable example of young, intelligent cinema from Eastern Europe.



She gave him her eyes or Take My Eyes (Te doy mis ojos)| Dir.:Icíar Bollaín |Spain|2003|109'
Pilar, a meek housewife living in Toledo, gathers few belongings one night and flees her apartment with her seven year old son, Juan. They find shelter with Pilar's sister, Ana, who would soon marry her Scottish live-in boyfriend. 
Antonio, Pilar's husband, tries to make her change her mind, but she is tired and fearful of his abusive behavior. 
Determined to start a new life on her own, Pilar sends her sister to retrieve her belongings from the apartment she shared with her estranged husband. 
Once there, Ana discovers through medical bills that her sister has also been physically abused by Antonio. 
When he arrives they have a confrontation.


Roads and Oranges | (Dromoi kai portokalia) | Dir.:Aliki Danezi-Knutsen | Cyprus|1996|100'
This drama from Cyprus concerns two sisters whose father has been presumed dead since Turkish forces invaded their nation in 1974. However, when they receive word that their father may be alive in Turkey, they set out to find him. 
Wavering between courage and fear, the sisters finds themselves wandering through a strange and unfamiliar land, looking for a man who may not want to be found.



It’s a Jungle out there |(Nach Fünf im Urwald)| Dir.:Hans-Christian Schmid | Germany|1995|99'
Anna, 17 years old, is happy to throw her first big birthday party without her parents, but some of her guests are so stoned that they leave a big chaos and, even worse, destroy the favorite record of Anna's father. 
After the return of her shocked and angry parents, Anna runs away to Munich with her admirer Simon. 
They discover the nightlife jungle and get to know some typical urban guys. 
Meanwhile, Anna's parents get in touch with Simon's and try to find their children. 
On the way across Munich, they remember their own wild and restless youth...




Princess | (Prinsessa) | Dir.:Arto Halonen | Finland|2010|104'
In 1945, Finland's Kellokoski Psychiatric Hospital welcomes a new patient, former cabaret dancer Anna Lappalainen. 
Diagnosed with manic depression and schizophrenia, she refuses to answer to her real name, insisting instead that she is a Princess of the British royal family. 
“Princess” demands to be treated with respect, declares the hospital her castle, and holds court with a makeshift collection of ladies-in-waiting. 
The primitive psychiatric procedures of the time—insulin shots, electroshock therapy, and malaria treatments—have no effect on her condition, and soon the stern Doctor Grotenfelt recommends the modern procedure of lobotomy to end her royal delusions. 
But before his treatment can begin, Princess's eccentric grande dame manner has a surprisingly positive effect on the staff, the patients, and the local villagers. 
Based on a true story, actress Katja Küttner won the Finnish Jussi Prize for her charismatic performance as a woman who is judged ill by society, but whose presence heals all around her.


Installation of love | (Instalacija ljubezni) |Dir.: Maja Weiss | Slovenia|2007|98'
"Installation of Love" is a bizarre and crazy satire constructed as a film in a film in a film. 
For her first feature film "Guardian of the Frontier", Maja Weiss, the director and co-writer won Manfred Salzgeber award for the most innovative European film at Berlinale 2002. 
"Installation of Love" is also a unique project concerning the story telling even though that the main plot of the film is conventional and universal. 
It is a search for love, or how to rediscover or re-install love in your life - love in its widest sense.



32A (32A) | Dir.: Marian Quinn | Ireland|2008|89'
This story is set in the "in-between" time of a girl's life, when she is no longer a child and not yet a woman. 
We open with our heroine, Maeve, putting on her new snow white bra, and stepping out into the world as a young woman. 
She has an obsession with breasts and bras and can't help but stare at other girls and women, even the head nun doesn't escape her gaze. 
Otherwise, her world revolves around her three friends, Ruth, Claire and Orla, who are more experienced in the ways of the world. 
They wear bras already (except Claire the feminist) and they've all had boyfriends. 
The new bra is a start but they really hope Maeve can find a fella, even offering kissing lessons to prepare her. 
What no one expects, least of all Maeve, is that she should snare the local sixteen-year old heartthrob. 
Maeve is so smitten with him that she lets her friends down when they need her the most. 
In trouble with her friends and in school, she gets dumped by the heartthrob when she sneaks into the local dance with him and he leaves with another girl. 
Her parents find out and she ends up in trouble at home, where she takes on extra domestic duties. 
She does the laundry and even her bra has lost its former brilliance. Maeve realizes what she has lost. 
Her friends rally round for her 14th birthday, Maeve returns to the fold a little older and a little wiser.



Your Name Is Justine (Masz na imie Justine) | Dir.: Franco de Peña | Luxembourg / Poland|2005|97'
While living with her grandmother in Poland, a young woman falls in love. 
Her boyfriend is charming and suggests they travel around Europe and work here and there to pay for their trip. 
Unfortunately, the boyfriend isn't as he seems and the young woman is sold as a prostitute when they cross over to Germany. 
We follow her ordeal as she tries to free herself and to stay sane as time goes by and her captors try to break and condition her to a new life of servitude.



My Sex Life (Viata mea sexuala) | Dir.: Cornel George Popa | Romania|2010|94'
A very tired woman strolls before the video camera in the Budapest park with the microphone attached to her skirt from behind. 
She is a single mother of 26. 
A guy whom she knew in the nursery school and has completely forgotten since, learns that she is employed in a sex shop and persuades her to record a video about her work which is still shocking in the post-Soviet space.



The First Assignment ( Il primo incarico) | Dir.: Giorgia Cecere | Italy|2010|90'
Nena, a girl from the south of Italy, has to travel far from home to get her first job as a teacher. 
She is sad, not because she has to leave her mother and sister, with whom everything is clear and sometimes difficult, but because she is having a serious love affair with someone from her village to whom she is very committed: a young upper-middle class man who seems to sincerely feel the same. 
They promise that nothing will change between them. 
It is only until June and then she can ask for a transfer. 
And so she leaves, a little sad and a little curious about what is in store for her. 
But what she finds is completely different from what she imagined. It's much worse: a school isolated on a high mountain plain, wild children, people she has nothing in common with and a hostile environment. 
She sticks it out because of pride and because Francesco loves her for her courage, until one cold February day when everything goes wrong, everything seems lost forever... but it isn't so, it's never that bad. 
Nena will find this out day by day.



Fast Girls (Fast Girls) | Dir.: Regan Hall | UK|2012|91'
The movie follows the story of athletes Shania Andrews (Lenora Crichlow) as she competes against Lisa Temple (Lily James) at a local level, and follow the duo as they work their way into the British 4x100 metres relay team and compete in the World Championships.



My Name is Ki (Ki) | Dir.: Leszek Dawid | Poland|2011|93'
Ki is a young woman who refuses to play the part of a tired single mother. 
She wants to live a fast-paced and colourful life. 
Will her difficult relationships with men help her become mature enough to embrace love and responsibility for herself and her son?


Well Kept Secrets  (Athanasia) |Dir.: Panos Karkanevatos |Greece|2008|100'
A young American woman, Angela, returns to her Greek roots in an effort to uncover the identity of her real father. 
In the process, she shatters the very myths constructed to protect her, exposing an unlikely relationship between a nomadic photojournalist captivated by a Greek island girl who was exiled by her community. 
When Angela eventually meets her father, his stories paint a vivid picture of her mother, Athanassia, and the strange paths of love she walked.


Eszter's Inheritance (Eszter hagyatéka) | Dir.: József Sipos | Hungary|2008|90'
Since the charismatic but untrustworthy Lajos jilted Esther and married her sister twenty years ago, Esther has lived in seclusion with her cousin Nunu on a hillside overlooking beautiful Lake Balaton. 
Now Lajos is returning for a visit, and unexpected, unwanted feelings reawaken, old mysteries beg to be resolved. 
Taking place over the course of a single September afternoon, filmed in the fulsome yellow-brown hues of autumn, Márai’s wondrous novel comes to the screen in a gorgeous production full of wit, elegance and a profound understanding of the human heart.


Lora from Morning Till Evening | Dir.: Dimitar Kotzev | Bulgaria|2011|93'
After a night of partying with her friends Lora has to get herself together and attend an important meeting. 
At her office she finds two packages which contain two mysterious dice. 
The sides of one of them are all marked with the number two and of the other - with the number five. 
In the course of the day Lora will have to find out the truth behind the magical properties of a set of six dice. 
Lora would be betrayed and helped, chased and abducted. 
She'd fall in love and she'd help a friend deal with a complicated relationship. 
After this roller-coaster ordeal she'll come out stronger and happier having reasserted the importance of true friendship.


Fragments of Grace (Altiplano) | Dir.: Peter Brosens | Belgium|2009|109'
War photographer Grace, devastated after a violent incident in Iraq, renounces her profession. 
Her Belgian husband, Max, is a cataract surgeon working at an eye clinic in the high Andes of Peru. 
Nearby, the villagers of Turubamba succumb to illnesses caused by a mercury spill from a local mine. 
Saturnina, a young woman in Turubamba, loses her fiancé to the contamination. 
Ignorant of its true source, the villagers turn their rage on the foreign doctors, and in the ensuing riot Max is killed. 
Grace sets out on a journey of mourning to the place of Max's death. 
Saturnina takes drastic measures to protest against the endless violations towards her people and her land. 
Grace and Saturnina's destinies merge. ALTIPLANO is a lyrical and probing film about our divided but inextricably linked world.


The Dark House ( Terug naar de kust) | Dir.: Will Koopman | The Netherlands|2009|110'

Single mother Maria starts to receive anonymous death threats. Together with her children, she flees to her former parental home, where her older sister Ans now lives. 
During those cold winter days in the secluded seaside house she is confronted with her traumatic childhood memories. 
But as the people close to her begin to question her state of mind, her assailant closes in.


Back in your Arms (Kai apkabinsiu tave) | Dir.:Kristijonas Vildziunas | Lithuania| Germany|2010|90'
On the eve of World War II, a young woman was taken by her mother to the United States, and was separated from her father as he was trapped in Soviet occupied Lithuania.  
It’s now 1961 and she has come to West Berlin for a chance to see her father, who is held captive by KGB agents.  
Back To Your Arms is thrilling and poignant. 
In this moment in time before the Berlin Wall was erected, her life is in danger at every step.


Little Girl Blue (Tajnosti) | Dir.: Alice Nellis | Czech Republic / Slovakia|2007|93'
Julie, a translator, has just moved into a new house with her successful husband Richard and teenage daughter Cecilie. 
Their life is supposed to be that of the perfect happy family. 
When she hears that her favourite singer has died Julie has the sudden realization that her life is not what she wants it to be. 
Acting on an impulse she decides to buy a piano, and en route her life changes completely. 
But first she has to resolve her past and present if she is to start the new life she desires. 
In this film about the various shapes of love, the role of Julie is an acting comeback for the singer and violin player Iva Bittova.


Applause (Applaus) | Dir.:Martin Zandvliet | Denmark|2009|85'
Critically acclaimed and famous actress Thea Barfoed has gone through turmoil which has resulted in a divorce and the loss of custody of her two boys. 
She delivers great performances night after night on the stage, yet her attempts at picking up the pieces of her shattered personal life stemming from a long bout of alcoholism – fail repeatedly. 
She now wants to break with the past, regain control over her life and get her children back. 
Her ex-husband Christian is quickly persuaded by her tough and manipulative but charming personality and she must prove to both herself and him that she is capable of getting her life back on track. As Thea is up against the rigorous demands of stage life and a past that haunts her, she must face her inner demons while clinging to the goal she has set for herself.


Graveyard Keeper's daughter (Surnuaiavahi tütar) | Dir.: Katrin Laur | Estonia|2011|100'
The film focuses on the ruination of a family caused by alcoholism, unemployment and poor living conditions. 
In the middle of the downfall spiral is a young schoolgirl Lucia who struggles with her school assignments and at the same time tries to take care of her sister with Down’s syndrome. 
The family undergoes a spare moment of joy when the father can take his family to Finland where he has been invited. 
But as they return to Estonia nothing has really changed – not in their personalities, ambitions or mentality.


Beyond (Svinalängorna) | Dir.:Pernilla August | Sweden|2010|99'
A poignant story, told with sincerity and humor, about a young woman´s dramatic childhood and about her grief and the struggle to move on. 
A morning just before Christmas, Leena, 34, receives a phone call from a hospital in her childhood hometown telling her that her mother is dying. 
This news takes her on a journey to face her mother for the first time in her adult life. 
Leena has fought all her life to let go of her grief over her lost and dark childhood. 
She is now forced to deal with her past to be able to move on.


Water Lilies (Naissance des pieuvres) | Dir.:Céline Sciamma|France|2007|85'
Three girls, each about 15, deal with puberty, the onset of sexual attraction, and, for two, the pressure of virginity. 
Marie, who's slight and diffident, quiet and nearly expressionless, is friends with Anne, who's a bit chunky and impulsive and has decided that François will be her first love. 
Watching synchronized swimming, Marie is suddenly attracted to the team captain, Floriane, beautiful, aloof, tall, and rumored to be a slut. François pursues her. 
Marie begins to hang around her; they trade favors, and soon it's an odd sort of friendship. 
Each of the three experiences her own first, and Marie must sort out attraction and friendship.


Eccentricities of a Blonde-haired Girl (Singularidades de uma Rapariga Loura) |Dir.:Manoel de Oliveira| Portugal / Spain / France|2009|64'
On a train to the Algarve, Macário tells his story to a sympathetic woman he's just met. 
In flashbacks he arrives in Lisbon to work as an accountant and a broker for his uncle. 
From his office window, he sees a young woman, Luísa: he's intrigued and finds her beautiful; she holds a Chinese fan near her face. 
He arranges to meet her, and they fall in love. 
When he tells his uncle he wants to marry, not only does his uncle disapprove, he fires Macário who then leaves his uncle's home to live on his own. 
Penniless, he takes a job in Cape Verde to earn some money so Luísa and he can wed. 
Will she wait, and what of her peculiarities? His seatmate on the train wants the whole story. 

படங்கள் சென்சார் செய்யப்படாததால் வாலிப வயோதிக அன்பர்களை சூடேற்றும் காட்சிகள் ஏராளமாக இருக்கும்.
கில்மா ரசிகர்கள் தாராளமாக வரலாம்.

உலகசினிமாவை இன்று , டிவிடியும், இணையமும் சேர்ந்து நம்மிடையே சல்லிசாக புழங்க வைத்திருக்கிறது.
இதனால் திரைப்பட திருவிழாக்கள், பொலிவிழந்தாலும்...
தீவிர சினிமா ரசிகர்களிடையே  இன்னமும் இதன் வசீகரம் குறையவில்லை.
திரைப்படம் பார்த்து விட்டு, டீயை குடித்துக்கொண்டே படத்தை பற்றி விவாதிக்கும் சுகம் எந்த ஹோம் தியேட்டரும் தராது.

கோவைப்பதிவர்கள் இந்நிகழ்ச்சி பற்றி, பதிவெழுதி சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.