Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Nov 5, 2013

‘ஜெகன் மோகினியை’ எரிப்போம்!

மானமுள்ள தமிழர்கள்... ஜெய மோகன் என்ற அசுரன் எழுதிய அனைத்து குப்பைகளையும் எரிப்போம்.
வீதி வீதியாக சென்று இந்த கயவன் செய்யும் காரியத்துக்கு ‘காரியம்’ செய்ய என் தமிழ் மக்களை திரட்டப்போகிறேன்.

கொலை வாளினை எடடா...கொடியோர் செயலறுக்க...
என்ற நம் பாட்டன் சொல்லுக்கு சக்தி ஏற்றுவோம்.

திக்கெட்டும் தீப்பிடிக்கட்டும்!
அந்தப்புகையில் வேசி மகன் வெந்து சாகட்டும்!!.

வெற்றி வேல்! வீர வேல்!!


இந்தக்கருத்தை நான் நேற்று முகநூலில் என் சுவற்றில் ‘நிலைத்தகவலாகவும்’ நூற்றுக்கண்க்கான நிலைத்தகவல்களில் பின்னூட்டமாகவும் தெரிவித்தேன்.

 ‘வேசி மகன்’ என  ‘ஜெகன் மோகினியை’ திட்டியதால் அறிவுரை கூறும் அறிவாளிகளுக்கு என் எளிய விளக்கம்.
என் தாய் மொழியை கற்பழித்து கொல்ல நினைக்கும் கொலைகாரனை இப்படித்தான் அழைப்பேன்.
அது மட்டுமல்ல... 
அவன் ‘ஏழு தலைமுறையினரையும்’ எட்டி உதைத்து, 
அனைவரையும் இதே அமில வார்த்தையைத்தான் உச்சரித்து அழைப்பேன்.

ஈழ ராஜ பக்‌ஷேயின் நீட்சிதான் இந்த  ‘மலையாள ஜெகன் மோகினி’.
செவிட்டுல அறைஞ்சாதான் செந்தமிழை பற்றி இனிப்பேச மாட்டான்.
செருக்கு எடுத்த செருக்கி மகனை  ‘செருப்பு போட விடக்கூடாது’.

வீணன்...விபீடணன் என அடுக்க நான் கலைஞரில்லை...காட்டாறு.
காட்டாறுதான் கழிவுகளை அகற்றும்.
எரிமலை வெடிக்கும் போது ‘லாவாக்கள்தான்’ வரும்.
 ‘லாகிரித்தமிழ்’ வராது.

மொழியை ஒழிக்க நினைத்தவனை முழியை பிதுக்காமல் வேறேன்ன செய்வது?
வீண் பேச்சு என வீணர்கள் நினைக்கலாம்.
வீரன் செயல் இது என...‘தமிழுக்காக தன்னையே எரித்த சங்கரலிங்க நாடார்’ ஆன்மா என்னை வாழ்த்தும்.

இன்றே ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக வருகிறேன்.
இந்த வீணனின் விஷங்களை வீட்டில் வைத்து இருக்காதீர்கள்.
விஷங்களை என்னிடம் தாருங்கள்.
வீதியில் போட்டு எரித்து விடுகிறேன்.

‘ஜெகன் மோகினி’ தனக்காக ஒரு ரசிகர் மன்றத்தை வைத்துக்கொண்டு, செய்யும் அசிங்கங்களை அம்பலப்படுத்தும் சிங்கமாக இருப்பேன்.
சினிமாவில் சில்லறை சேர்க்க ,
சீட்டியடிக்கும் கூட்டத்தை கூட்டி...
‘கதகளியாடுவதை’ கண்டித்து கர்ஜிப்பேன்.
மதம் பிடித்த மலையாளத்தானின் மண்டையோட்டு கொழுப்பை கரைப்பேன்.

என் இனவெறி கண்டு புருவத்தை நெறிக்கும் நெறியாளர்களே...
புரிந்து கொள்ளுங்கள்.
பாயும் போது, பசுத்தோலை கழட்டி விடும் புலி.

எனக்கு ரசிக்கவும் தெரியும்.
எச்சிலையை எரிக்கவும் தெரியும்.
எச்சிலையே...இனி நான்தான் உனக்கு எமன்.
நரகலை தின்று வாழும் நாசகாரப்பன்றியின் நர மாமிசமே அறுசுவை விருந்து.

தமிழை அழிக்க நினைப்பவன், தரணியில் இருக்கக்கூடாது.
எச்சரிக்கிறேன்! எல்லை தாண்டிப்போ...எச்சிலையே!

வீரத்தமிழ் மறவர்களே!
என்னோடு குரல் கொடுங்கள்!!
இதுதான் மறத்தமிழன் மந்திரம்!!!

வெற்றி வேல்! வீர வேல்!!

Aug 14, 2013

ராஜ சுந்தரராஜன் - இவருடனா சண்டை போட்டேன்!




நண்பர்களே...
போன வருடம்,
எனது பதிவில் ‘ராஜ சுந்தர்ராஜன்’ என்பவரை குறிப்பிட்டு சாடி இருந்தேன்.
 ‘கருந்தேள் ராஜேஷ்’ முக நூலில்,
ராஜ சுந்தரராஜன் திரைக்கலை நுட்பத்தை அபத்தமாக கூறி இருந்தார்.
அதற்கு கண்டனம் தெரிவித்து,
அவரது கூற்றில் உள்ள அபத்தத்தை விளக்கி சொல்லி இருந்தேன்.
அப்போது எனக்கு ‘ராஜ சுந்தர்ராஜன்’ யார் என்றே தெரியாது.
மொழி நடையையை வைத்து ‘இலக்கிய வியாதி’ கோஷ்டியை சேர்ந்தவர் என்று முடிவு கட்டி இருந்தேன்.
தொடர்ந்து அவரது பின்னூட்டங்களை,
பலரது பதிவுகளில் படிக்கும் போது கூட...
‘என்ன எழுதி இருக்கான் மயிராண்டி’ என்ற எள்ளல் பார்வையுடனேயே அதை படிப்பேன்.

ராஜ சுந்தரராஜனும்... கருந்தேள் ராஜேசும் நடத்திய முகநூல் உரையாடல் காண...

இருவரது உரையாடல்களுக்கு எனது அழுத்தமான பதிலும்,விளக்கமும்...காண...

[ நல்லவேளை... நான் இந்தப்பதிவு எழுதும் போது ராஜ சுந்தரராஜனை அறியாமல் இருந்தது.]



நேற்றிரவு ராஜசுந்தரராஜனின் ‘நாடோடித்தடத்தில்’ பயணப்பட்டேன்.
‘ஷிப் ஆப் தீஸியஸ்’ திரைப்படம் பார்க்கும் போது ஏற்பட்டபரவசத்தை அடைந்தேன்.

சும்மா சொல்லக்கூடாது...மனுஷன் ரகளையான ஆளுதான்.
கொஞ்சம் கூட பாசாங்கு இல்லாமல் தன் உணர்ச்சிகளை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
இளம் பெண்களால் ஏற்பட்ட  ‘இலவச காம உணர்ச்சியை’,
அப்பட்டமாக... வாசகனுக்குள் ‘அடக்குகிறார்’ .
காம உணர்ச்சிகளை எழுத்தில் வடிக்க...
 ‘சாரு’ போல்  ‘நாலாந்தர வக்கிர நடையை’ கையாளவில்லை.
இவரது நடையில்...அ. முத்துலிங்கத்தின் ‘முத்தாய்ப்பும்’ இருக்கிறது.
சுஜாதாவின் வசீகர வாள் வீச்சும் இருக்கிறது.

 ‘ ஆழம் இல்லாத கடல்.
நான் இறங்கி முன்னேறிப்போனேன்.
என் கையை பிடித்துக்கொண்டு ஒரு குழந்தையைப்போல் அவளும் என்னில் உரசித்தழைந்து உடன் வந்தாள்.
முழங்கால் ஆழத்துக்கு, மிகத்தொலைவு போய் விட்டோம்.
அவள் அருகாமையால், அதுவரை இல்லாத ஒரு வெதுமை எழ,
என் உடம்பை உணர்ந்தேன்.
அவள் ஏற்றிப்பிடித்திருந்த சேலைக்குக்கீழ் வெளிர்ந்த வெண்கலத்திரட்சி மழி மினுக்கம்!
கால்களின் அழகையே தாங்காத தவிப்பில் கள்ளம் கூசிக்கருத்த என் பார்வையை அவள் கத்தரிப்பூ நிறப்புடவைக்கு உயர்த்தி நிற்பாட்ட முயன்றால்,
குஜாராத்தி பெண்களுக்கே போல் ஓர் இடுப்பை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? ’

குஜராத் நினைவுகள் என்ற முதல் அத்தியாயத்திலேயே இவர் மீது ‘முதல் மரியாதை’ வந்து விட்டது.
ஏற்கெனவே என்னுள் இருக்கும் ‘குஜராத்திக்காதலை’ இன்னும் அகலப்படுத்தியிருக்கிறது.
 ‘கர்பா நடனத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறார் ரா.சு.


‘ திருமண ஊர்வலங்களிலும் கர்பா நடனங்கள் உண்டு.
எங்கள் உணவகம் இருந்ததற்கு பக்கத்து வீட்டில் ஒரு திருமணத்தில்,
மணப்பெண் ஒரு கர்பா சீசனில் கர்ப்பமாகி கலைத்தவள் என்று மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிந்து விட்டது.
ஆனால் அதற்காக அந்தப்பெண் ஒதுக்கப்பட்டு விடவில்லை.
ஐந்து லட்சம் அதிகமாக ‘ஸ்த்ரீதனம்’ கோரப்பட்டு மணம் இனிதே முடிந்தது.
மறைப்பது பெண் வீட்டார் திறமை.
கண்டு பிடித்துக்கொள்வது பிள்ளை வீட்டார் திறமை.
எல்லாம் சில லட்சங்களுக்காக.’

தன்னை பெண்பித்தனாக காட்டிக்கொள்வதில் ‘சாருவிடம்’...
ஒரு ரவுடியின் ரவுசு இருக்கும்.
‘ நாறுகிற திசையெல்லாம் ஓடுகிற நாயாக அல்லாமல்
இருந்த இடத்திலேயே இருந்து தின்னும் சிலந்தியாக’
என்று ரா.சு தன்னை வெளிப்படுத்துவதில் இருக்கும் இலக்கிய நயம் நாகரீகம் மிக்கது.

  ‘வங்கக்கடலினும் வலுத்த அலைகளை எறிவது அரபிக்கடல்’

அத்துணை ஆக்ரோஷ கடலை அழகாக அடக்கி விட்டார் ஒரு வாக்கிய சித்திரத்தில்.



நண்பர்களே...எவ்வளவு நாள் பிந்தினேனோ தெரியவில்லை.
எப்படியோ ‘நாடோடி தடத்தை’ கண்டு பிடித்து வந்து சேர்ந்து விட்டேன்.
நீங்களும் என்னோடு சேர்ந்து நடந்தால் அக மகிழ்வேன்.

நூல் : நாடோடித்தடம்

ஆசிரியர் : ராஜ சுந்தர ராஜன்

வெளியீடு : தமிழினி பதிப்பகம்

விலை : ரூ.250.00.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


Jul 19, 2013

வாலிப கவிஞருக்கு அஞ்சலி.


வாலி புறப்பட்டு போய் விட்டார்.

மெட்டுக்கு எழுதிய கவிஞனே...

[மன்னவனே அழலாமா?]

துட்டுக்கு ‘புழுகிய’ புலவனே...

[மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! = மு.க.முத்து.]

விகடனுக்கு எழுதிய ‘காவிய நாயகனே’...

போய் வா. 


கவிஞரின் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ  நந்தலாலா(2)

உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா


உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா


தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்


நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்


தகினதத ததம்தோம்

ஆடாத மேடை  இல்லை போடாத வேஷம் இல்லை(2)


சிந்தாத கண்ணீர்  இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை


கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)


உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)


பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று


பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)


நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )


________________________________________________________________________




Feb 5, 2013

பதிவர்களின் எழுச்சி !.


நண்பர்களே...
கடந்த ஞாயிறு 03-02-2013 அன்று கோவைப்பதிவர்கள் சங்கம்,
பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழாவை மிகச்சிறப்பாக நடத்தியது.

பதிவர் அகிலாவின் ‘சின்னச்சின்ன சிதறல்கள்’ என்ற கவிதை நூலை வெளியிட்டவர் திரு.கண்ணன் கனகராஜ் [இலக்கிய ஆர்வலர்] .
பெற்றுக்கொண்டவர் திரு.மகேந்திரன் [ தெருவோர மனநலம் குன்றியவர்களை பராமரிக்கும் சமூக ஆர்வலர்] .

பதிவர் கோவை மு.சரளாவின் ‘மவுனத்தின் இரைச்சல்’ என்ற கவிதை நூலை வெளியிட்டவர் திரு.கோவை ஞானி [மிகப்பெரிய தமிழ் அறிஞர் ].
பெற்றுக்கொண்டவர் திரு.ஆனந்த் [ ஆசிரியர்,ஆனந்தம் மாத இதழ் ].

பதிவர் ஜீவானந்தம் எழுதிய ‘கோவை நேரம்’ என்ற பயண நூலை
வெளியிட்டவர் திரு.ஓஷோ ராஜேந்திரன் [ இலக்கிய ஆர்வலர் ].
பெற்றுக்கொண்டவர் திரு.யோகநாதன் [ ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு
பராமரிக்கும் இயற்கை ஆர்வலர் ].

அனைவருமே சிறப்பாக பேசினர்.
சிறப்புரை ஆற்றிய பதிவர் கலாகுமரன் பேச்சு ‘சுறுக்..நருக்’.

தலைமை ஏற்று உரை நிகழ்த்திய அண்ணாச்சி திரு.எட்வின் [ தமிழக வியாபாரிகள் சம்மேளனம் ] , தனது வெள்ளந்தியான பேச்சினால் அசத்தினார்.
அவர் கையை மறைத்த மோதிரம் என்னை மிகவும் கவர்ந்தது.
கரண்ட் கட்டான நேரத்தில்,  சட்னி, துவையல் அரைக்க வசதியான  ‘டூ இன் ஒன் மோதிரம்’.


நூலாசிரியர்கள் மூவரில் பெண் சிங்கங்கள் கச்சிதமாக பேசினர்.
நமது ஆண் சிங்கம் ‘கோவை நேரம்’ ஜீவா கர்ஜிப்பார் என நினைத்தேன்.
அவர் பேச ஆரம்பிக்கும் போது எனக்கு தும்மல் வந்தது.
சைலண்டாக தும்மி விட்டு பார்த்தேன்.
ஜீவா முடித்து விட்டார்.
எப்படிப்பேசுவது என தமிழக அரசியல்வாதிகள் ஜீவாவிடம் கற்றுக்கொள்வது நலம்.

ஜீவாவின் அடியொற்றி அடியேன்,  ‘இரண்டு செகண்ட்’ நன்றியுரை [அனைவருக்கும் நன்றி ] .

நூலாசிரியர்களின் உற்றார் உறவினர் என கணிசமான கூட்டம் அரங்கை
நிரப்பியது.
ஆனால் கோவைப்பதிவர்களின் கூட்டம் ‘குறுந்தொகையை’
நினைவு படுத்தியது.

ஒன்றை தெரிந்து கொண்டேன்.
ஒரு நிகழ்ச்சியோ...திரைப்படமோ...
கஷ்டப்பட்டு தமிழக அரசிடம் 144 தடையுத்தரவு வாங்கி விட வேண்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Apr 8, 2012

எழுத்தாளர் அ.முத்து லிங்கம்-ஈழத்து சுஜாதா

கட்டுரை இலக்கியத்தில்... சுஜாதாவிற்க்குப்பிறகு எனக்கு மிகவும் பிடித்தமானவர் 
அ.முத்து லிங்கம்.
பெரும்பாலும் அவரது கட்டுரைகளில் நகைச்சுவை... 10000 வாலா பட்டாஸ் போல...
வெடித்து தெறிக்கும்.
சமீபத்தில் அவரது கட்டுரை ஒன்று படித்ததில் ஆடிப்போய் விட்டேன்.
கூடங்குளம் அணு உலை வெடித்தது போல்... என்னுள் பாதிப்பு ஏற்படுத்தியது.
இதோ அவரது கட்டுரை... 


நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரே கதையை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கொடூரமான கதை உண்மையாகக்கூட இருக்கலாம். சோமாலியாவில் ஒரு தாயும் சேயும் பாலைவனத்தை கடக்கிறார்கள். மணல் தணல் போல சுடுகிறது. தாய் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஓடுவதும், மர நிழல்களில் சற்று நின்று இளைப்பாறுவதுமாக  முன்னேறுகிறாள். ஓர் இடத்தில் கால் வெந்துபோக வேதனை தாங்க முடியாமல் குழந்தையை கொதிக்கும் மணல்மேல் போட்டு அதன் மேல் ஏறி நிற்கிறாள். எத்தனை வலி என்றால் அந்தத் தாய் அப்படிச் செய்திருப்பாள் என்று நினைக்கும்போதே மனம் பதைக்கிறது.


 ஜெனிவாவில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை நிறைவேறியிருக்கிறது. தண்ணீர் ஊற்றிய தீர்மானம் என்றாலும் வெற்றி வெற்றிதான். மகிழ்ச்சியில், என் உடம்பிலிருந்த அத்தனை ரத்தமும் நாளை விடியாது என்பது போல சுழன்று ஓடியது. அதிசயத்திலும் அதிசயமாக இந்தியா பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தது. சோமாலியா தாய் செய்ததுபோல இந்தியா குழந்தைமேல் ஏறி நிற்கவில்லை. குழந்தை இன்னும் இடுப்பிலே தான் இருக்கிறது. பாலைவனமோ நீண்ட தூரம். எவ்வளவு தூரத்துக்கு இந்தியா குழந்தையை காவும், எப்பொழுது கீழே போடப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.


அவரது கட்டுரை முழுவதும் படிக்க... அவரது இணைய தளத்துக்கு செல்லும் இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்.
http://amuttu.net/home

என்னை பாராட்டி ஐயா திரு. முத்து லிங்கம் அவர்கள் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்கள்.
ஐயாவின் பாராட்டை தக்க வைத்துக்கொள்ள நான் உழைப்பேன்.


நண்பரே,
உங்கள் பதிவு கண்டேன். உங்களுடைய எழுத்தும் வசீகரமானதுதான். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.
அன்புடன்
அ.மு