Apr 8, 2012

எழுத்தாளர் அ.முத்து லிங்கம்-ஈழத்து சுஜாதா

கட்டுரை இலக்கியத்தில்... சுஜாதாவிற்க்குப்பிறகு எனக்கு மிகவும் பிடித்தமானவர் 
அ.முத்து லிங்கம்.
பெரும்பாலும் அவரது கட்டுரைகளில் நகைச்சுவை... 10000 வாலா பட்டாஸ் போல...
வெடித்து தெறிக்கும்.
சமீபத்தில் அவரது கட்டுரை ஒன்று படித்ததில் ஆடிப்போய் விட்டேன்.
கூடங்குளம் அணு உலை வெடித்தது போல்... என்னுள் பாதிப்பு ஏற்படுத்தியது.
இதோ அவரது கட்டுரை... 


நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரே கதையை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கொடூரமான கதை உண்மையாகக்கூட இருக்கலாம். சோமாலியாவில் ஒரு தாயும் சேயும் பாலைவனத்தை கடக்கிறார்கள். மணல் தணல் போல சுடுகிறது. தாய் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஓடுவதும், மர நிழல்களில் சற்று நின்று இளைப்பாறுவதுமாக  முன்னேறுகிறாள். ஓர் இடத்தில் கால் வெந்துபோக வேதனை தாங்க முடியாமல் குழந்தையை கொதிக்கும் மணல்மேல் போட்டு அதன் மேல் ஏறி நிற்கிறாள். எத்தனை வலி என்றால் அந்தத் தாய் அப்படிச் செய்திருப்பாள் என்று நினைக்கும்போதே மனம் பதைக்கிறது.


 ஜெனிவாவில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை நிறைவேறியிருக்கிறது. தண்ணீர் ஊற்றிய தீர்மானம் என்றாலும் வெற்றி வெற்றிதான். மகிழ்ச்சியில், என் உடம்பிலிருந்த அத்தனை ரத்தமும் நாளை விடியாது என்பது போல சுழன்று ஓடியது. அதிசயத்திலும் அதிசயமாக இந்தியா பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தது. சோமாலியா தாய் செய்ததுபோல இந்தியா குழந்தைமேல் ஏறி நிற்கவில்லை. குழந்தை இன்னும் இடுப்பிலே தான் இருக்கிறது. பாலைவனமோ நீண்ட தூரம். எவ்வளவு தூரத்துக்கு இந்தியா குழந்தையை காவும், எப்பொழுது கீழே போடப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.


அவரது கட்டுரை முழுவதும் படிக்க... அவரது இணைய தளத்துக்கு செல்லும் இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்.
http://amuttu.net/home

என்னை பாராட்டி ஐயா திரு. முத்து லிங்கம் அவர்கள் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்கள்.
ஐயாவின் பாராட்டை தக்க வைத்துக்கொள்ள நான் உழைப்பேன்.


நண்பரே,
உங்கள் பதிவு கண்டேன். உங்களுடைய எழுத்தும் வசீகரமானதுதான். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.
அன்புடன்
அ.மு

8 comments:

  1. நல்ல எழுத்தாளர்

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான கட்டுரை சார்.. அவரது ஏனைய கட்டுரைகளையும் தொடர்ந்து வாசிக்கப்போகிறேன். எழுத்தாளர் முத்துலிங்கம் பற்றிய அறிமுகமாக இந்தப் பதிவு அமைந்தது, நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. எனது நண்பர்தான் எனக்கு அ.முத்துலிங்கம் ஐயா அவர்களை
      அறிமுகம் செய்து வைத்தார்.
      அதன் பின் புத்தகக்கண்காட்சிகளில்
      அவரது நூல்களை தேடித்தேடி வாங்கினேன்.

      இந்தப்பதிவின் மூலமாக நீங்கள் அவரை வாசிக்கப் புறப்பட்டது...
      எனது குறிக்கோளின் வெற்றி.

      Delete
  3. சுருக்கமாக படிக்கவே சுவாரஸ்யமாக இருந்துவிட்டது..அந்த எழுத்தாளரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி அண்ணா..அவரது கட்டுரைகளை மேலும் வாசிக்கிறேன்.பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தம்பி குமரா...
      நீ அவரை தொடர்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

      Delete
  4. Kokila (1977) THIS MOVIE LINK Director:
    Balu Mahendra

    http://songsmoviez.com/Kokila_1977-watch-kannada-movie.html

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.