Apr 14, 2012

ரஜினி-மனிதருள் மாணிக்கம்


ரஜினிகாந்த் என்ற மந்திரச்சொல் தமிழ் சினிமாவில் நெறைய பேரை வாழ வைத்திருக்கிறது.
அவரது எளிமை ....என்றும் எனக்கு ஆசரியத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது.

சிவாஜி அவர்கள் இறந்த அன்று பெசண்ட் நகர் சுடுகாட்டுக்கு விடியற்காலையிலேயே சென்று விட்டேன்.
அப்போதே போலிஸ் கெடுபிடி இருந்தது
.நான் அப்போது ஹோண்டா சிட்டி கார் வைத்திருந்தேன்.
அதனால் எனது காரை சுடுகாடு வாசல் வரை கேள்வியே கேட்காமல் அனுமதித்தனர்.
எனது கார் பக்கத்தில் ஒரு அம்பாஸிடர் கார் வந்து நின்றது.
அந்தக்கார் டிரைவரை... போலிஸ்காரர்....  “இங்கு நிறுத்தக்கூடாது” என விரட்டினார்.
அந்த டிரைவர்...  “சார்.... இது ரஜினி சார் கார்...சிவாஜி சார் தகனம் முடிந்ததும்...அவரை அழைத்து செல்ல வந்துள்ளேன்...”என பவ்யமாக தெரிவித்தார்.
போலிஸ்காரர் விடாமல் ... “யார் கிட்ட காது குத்தற...எடுய்யா...வண்டியை” என மிரட்டினார்.
நான் தலையிட்டு... “ இந்த வண்டி ரஜினி சார் வண்டிதான்.
அதுவும் இப்போதுதான் சமீபத்தில் வாங்கினார்”.எனதெரிவித்தேன்.
ஆச்சரியத்தில் போலிஸ்காரர் வாயை பிளந்தார்.

ரஜினிஅம்பாஸிடர் வாங்கிய அதே நேரம் இசை அமைப்பாளர் தேவா மிட்சுபிச்ஷி லேன்சர் கார் வாங்கினார்.
இது பற்றி நெருங்கிய வட்டாரத்தில் தேவா அடித்த கமெண்ட்... “அம்பாஸிடரெல்லாம்... இந்தக்காலத்தில் தெய்வங்கள்தான் வாங்கும்.....
ரஜினி சார் தெய்வம்...
நான் சாதரண மனிதன் .அதனால்தான் லேன்சர் வாங்கினேன்”

ரஜினியை முதன் முதலில் கதாநாயகனாக போட்டு படம் தயாரித்தவர் கலைஞானம்.
படம் பைரவி.

இந்தப்படம் போஸ்டரில்தான்....
 அப்படத்தின் விநியோகஸ்தர் கலைப்புலி தாணு... 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை வழங்கினார்.
அதற்க்கு கொஞ்ச நாள் முன்புதான் சென்னை கேசினோவில் ‘ஸ்னேக்’என்ற ஆங்கிலப்படம் வெளியாகி இருந்தது.
இப்பட போஸ்டர் 'SSSSSSSSSSNAKE' என்றிருந்தது.
அதை காப்பிஅடித்து தாணு "SSSSSSSSSSUPER STAR' ரஜினி காந்த் நடிக்கும்... பைரவி.... என மிகப்பிரம்மாண்டமான போஸ்டர் அடித்து தூள் கிளப்பினார்.
படமும் சென்னை பிளாசாவில் நூறு நாட்கள் ஒடியது.
கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே சூப்பர்ஸ்டார் பட்டம் ஒட்டி விட்டது.

கலைஞானம் ஒரு பைசா முதலீடு இல்லாமல் இப்படத்தை தயாரித்தார்.
படம் சூட்டிங் துவங்கும் முன்னரே... விநியோகஸ்தர்களிடம் விற்று...
 அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்திலேயே மொத்தப்படத்தையும் எடுத்து விட்டார்.
தேவர் பிலிம்சில் கதை இலாகாவில் வேலை பார்த்த கலைஞானத்தை தயாரிப்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தியது
ரஜினி.
அதனால் தன்னை முதலில் கதாநாயகன் ஆக்கியவர் என்ற காரணத்திற்க்காக
கலைஞானத்துக்கு ரஜினி செய்த உதவி எண்ணிலடங்கா.
கலைஞானம் என்னிடம் சொன்னது.... “சினிமாவில் நேரில் போய் கேட்டால் கூட உதவி கிடைக்காது.
ஆனால் ரஜினி அவரே தேடி வந்து உதவி செய்வார்”.
அவரது ஸ்டைலிலே மிக உயர்வானது இதுதான்.

தேவர்தான் முதன் முதலில் ரஜினிக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தவர்.
மொத்தப்பணத்தையும் அட்வான்சாக கொடுப்பது தேவர் ஸ்டைல்.
ஒரு லட்ச ரூபாயை தட்டில் வைத்து பூ...பழங்களோடு வைத்து ஆசிர்வதித்து கொடுத்தார்.
ரஜினி லட்ச ரூபாயை முழுசாக கண்ணால பார்த்ததும் அப்போதுதான்.
அந்தப்படம்தான் தாய் மீதுசத்தியம்.
[இப்படத்தின் ஒரிஜினல் ஆங்கிலப்படத்தை இப்போதுதான் பார்த்தேன்]

தேவர் மறைந்தபிறகு அவரது வாரிசுகள் சோபிக்கவில்லை.
மொத்த சொத்தையும் அழித்து விட்டார்கள்.
கடன்காரன்களுக்கு பயந்து தேவர் மகன் சாதாரண லாட்ஜில் ஒளிந்து கிடந்தார்.
ரஜினி விஷயம் கேள்விப்பட்டு அந்த டஞ்சன் லாட்ஜுக்கு நேரிலேயே தேடிக்கொண்டு வந்து விட்டார்.
கையோடு ஒரு ஹிந்திப்பட கேசட்டும் கொண்டு போயிருந்தார்.
 “இந்த ஹிந்திப்படத்தை ரைட்ஸ் வாங்கி பண்ணுங்க .
நானே ஹீரோவா நடிக்கிறேன்.
தம்பி பிரபுவை... ஒரு காரெக்டருக்கு நானே கால்ஷீட் வாங்கித்தாரேன்.
 லாபத்தை வச்சு கடனை அடைச்சுட்டு நிம்மதியா இருங்க” என்று அபய கரம் காட்டினார்.

நேர்மை என்றால் தேவர்....ஆனால்அவரது மகன்... அந்தப்படத்தை...
 ஒரே ஏரியாவுக்கு ஐந்து பேரிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டான்.
பிராடுத்தனம் வெளியாகியதும் ஒரே பஞ்சாயத்து....
அப்போதும் ரஜினியே காப்பாற்றினார்.
முதன்முதல் அட்வான்ஸ் கொடுத்தவங்களுக்கு... இந்தப்படம்.
அடுத்ததா... அட்வான்ஸ் கொடுத்தவங்களுக்கு... அடுத்தப்படம்...
 என சாமாதானம் பண்ணி படம் வெளியாக உதவினார்.
 அந்தப்படம்தான்... தர்மத்தின் தலைவன்.
படத்தின் பெயருக்கேற்றார் போல் ரஜினி... சாட்சாத்...
 தர்மத்தின் தலைவன்தான்.

சிவாஜி சாரின் வீடு.... அன்னை இல்லம்... அவரது வாரிசுகளிடம் தங்கியிருப்பதற்க்கு காரணமும் ரஜினியே!
விபரம் அடுத்தப்பதிவில்...

இப்பதிவை எழுதிய நான்... அன்றும்...இன்றும்...என்றும்....பக்கா கமல் ரசிகன்.
செய்திகள் அனைத்தும் அக்மார்க் உண்மைகள்.

12 comments:

 1. Replies
  1. வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி...
   மெட்ராஸ் பவன் உரிமையாளரே!
   பசிக்கும்போதெல்லாம் உங்க ஹோட்டலுக்குத்தான் வருவேன்.

   Delete
 2. தலைவர் என்றைக்கும் தலைவர் தாங்க. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு உச்சம் போனாலும் ரஜினி ஆட மாட்டார்.
   ஏணிகளை உதைக்க மாட்டார்.
   ஊர் ஊராய்...போய்... தன்னை திட்டிய...
   ஆச்சி மனோரமாவுக்கு... மறு வாழ்வு கொடுத்த மாமனிதன்.
   அந்த புண்ணியம்தான் அவரை நோயிலிருந்து மீட்டது.

   Delete
 3. சூப்பர் பாஸ், கலகிடிங்க..........

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி...நண்பா...

   Delete
 4. சூப்பர் தொடர் போல சார்! அடுத்த பதிவு உண்மைகள் அறிய வெயிட்டிங்!
  * அந்த தாய் மீதுசத்தியம் ஒரிஜினல் படம் பெயரு என்னன்னு சொல்ல முடியுமா?

  ReplyDelete
 5. அண்ணா, பாட்ஷா படம் எனக்கு நினைவு தெரிந்து பார்த்த போது அடிமையானவந்தான் நான்..இவ்வளவு பெரிய மனிதனான பிறகும் அவரது எளிமை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.இன்றுவரை கண்டு வியக்கிறேன்..அவரை பற்றிய ஒரு சிறந்த பதிவு.பல புதுசான தகவல்கள்//மிக்க நன்றி.

  @@ இப்பதிவை எழுதிய நான்... அன்றும்...இன்றும்...என்றும்....பக்கா கமல் ரசிகன்.
  செய்திகள் அனைத்தும் அக்மார்க் உண்மைகள். @
  இது நல்லாருக்கே..

  ReplyDelete
  Replies
  1. நான் மனிதன் படத்துக்கு ரசிகன் அல்ல...
   மனித நேயத்துக்கு என்றும் ரசிகன்.

   அடுத்து கமலை பற்றியும் எழுதப்போகிறேன்.

   Delete
 6. மிகவும் சுவாரஸ்யமான கட்டுரை! ஒரு ரஜினி ரசிகனாக மிகவும் பெருமைப்படுகிறேன். அதே நேரத்தில் இதை எழுதியட்து ஒரு கமல் ரசிகர் என்பதை நினைத்து உங்கள் பெருந்தன்மைக்கு நன்றிகள் கூறுகிறேன்..

  ReplyDelete
 7. தெரியாத விஷயங்கள் பலவற்றை பதிவிட்டதற்கு நன்றி அண்ணா :)

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.