Showing posts with label பிரான்ஸ். Show all posts
Showing posts with label பிரான்ஸ். Show all posts

Feb 8, 2012

The Artist-2011[france]மவுனப்புரட்சி


பிரான்ஸ்காரர்கள் எல்லா நல்ல படத்தையும் தாங்களே எடுப்பது என்று குத்தகை எடுத்து விட்டார்கள் போலிருக்கிறது!!!!!!.
அந்த வகையில் சமீபத்திய வரவு ஆர்டிஸ்ட்.
மவுனப்பட காலங்களில் சூப்பர் ஸ்டாராக இருந்த ஒருவரது வாழ்க்கையை 2011ல் கருப்பு வெள்ளையில்...அதுவும் மவுனப்படமாக எடுக்கும் துணிச்சல்...அடடா....
முதலில் தயாரிப்பாளர் Thomas Langmannக்கு என் முதல் மரியாதை.
இரண்டாவது இப்படத்தின் இயக்குனர் Michel Hazanavicius ...உள்ளிட்ட ஒட்டு மொத்த குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...பாராட்டுகள்.

சினிமாவில் மவுனப்படங்கள்தான் கலையின் உச்சம் என கொண்டாடுவார்கள் தீவிர சினிமா ஆர்வலர்கள்.
அதை நூற்றுக்கு நூறு சரி என உணர்ந்தேன்.
பாட்டில் ஷிப் பொட்டம்கின்,இண்டாலரன்ஸ் போன்ற மவுனப்படங்களை இது வரை பார்க்காதது மன்னிக்க முடியாத குற்றம்.
இதற்க்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை ?என்பது தெரியவில்லை.
பேசும் படங்களும்...வர்ணப்படங்களும் சினிமாவின் ஆன்மாவை சிதைத்து விட்டதாக தீவிர சினிமா ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவார்கள்.
இந்த குற்றச்சாட்டை உண்மை என ஒவ்வொரு ரசிகரும் ஆர்ட்டிஸ்ட் படம் பார்க்கும்போது உணர முடியும்.

இதுதாண்டா பின்னணி இசை என பின்னி எடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் Ludovic Bource.
பின்னணி இசை ...மோட்டிவேட்டிங் மியுசிக் என்ற தளத்தில் காட்சிக்கு காட்சி பரிணமித்து கொண்டே போகிறது.
உலகின் தலை சிற்ந்த பின்னணி இசையில் முதல் பத்து இடங்களில் தைரியமாக சேர்த்து விடலாம்.அப்பீலே வராது.



இப்படத்தின் நாயக,நாயகியரின் நடிப்புக்கு இணையாக....
நடிகர் திலகத்தையும்,நடிகையர் திலகத்தையும்தான் ஈடு இணையாக சொல்ல முடியும்.
21 இஞ்ச் டிவியில் பார்த்ததிலேயே இருவர் நடிப்பிலும் மயங்கி விட்டேன்... வெள்ளித்திரையில் பார்த்தால்.... அவ்வளவுதான்..... ரசிகர் மன்றமே தொடங்கி விடுவேன்.

இப்படம் பல் வேறு பிரிவுகளில்....
ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும்....வெற்றி கிடைக்காது.
ஏனென்றால் இப்படம் மோதுவது Tree Of Life படத்தோடு.
Tree Of Life படத்திற்க்கு பக்க பலமாக உலகின் மிகப்பெரிய மதம் இருக்கிறது.
மதத்தின் முன்னால் எப்பேர்பட்ட கலையும் தோற்றுப்போகும்.
இதில் ஒளிந்திருக்கும் அரசியலை ஆஸ்கார் விருது பட்டியல் வெளியான பிறகு நீங்களே உணர்வீர்கள்.

80%நகைச்சுவையும்,20% சோகமும்,0%ஆபாசமும் கலந்து செய்த கவிதையாக இப்படம் இருப்பதால் குடும்பத்தோடு காண வேண்டிய U U U திரைப்படம்.

ஒரு காலத்தில் சூப்பர்ஸ்டாராக இருந்து....
 தனது ஆஸ்தி,அந்தஸ்து,புகழ் அனைத்தும் கரைந்து....
 வெற்று மனிதனாக மரித்த தியாராஜ பாகவதர் வாழ்க்கையை...
 கருப்பு வெள்ளையில்...மவுனப்படமாகவே எடுக்கப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! என்ற ஆசை பிறந்தது.
எனது ஆசை பேராசையா?
நிராசையா?

Jan 22, 2012

The Kid With A Bike-2011 [பிரெஞ்ச்] ஒடிப்போன அப்பாவை தேடிப்போன மகன்


File:Le-gamin-au-velo.png

2012ல் மிகச்சிறப்பான படத்துடன் துவங்க வேண்டும் எனது வேட்டைக்கு சரியான தீனியாக இப்படம் கிடைத்து விட்டது.
என் ரத்தத்தில் ஹீமோகுளொபினோடு இப்படம் கலந்து விட்டது.
ஒரு கொண்டாட்ட மன நிலையில் இப்பதிவை எழுதுகிறேன்.
இப்படத்தை எழுதி இயக்கி....
கேன்ஸ் பிலிம் பெஸ்டிவெலில் முதன்முதலாக திரையிட்டு கிராண்ட் பிரிக்ஸ் என்ற உயரிய விருதையும் பெற்று விட்டார்கள் இரட்டை சகோதரர்களான பெல்ஜியம் நாட்டு சகோதரர்கள் Jean Pierre & Luc Dardenne



11 வயது சிரில் என்ற சிறுவனது பார்வையிலேயே படம் நகர்கிறது.
அப்பா பையனை சிறுவர்கள் இல்லத்தில் ஒப்படைத்து விட்டு ஒடிப்போய் விடுகிறான்.
சிரில் தனது தந்தை பற்றிய துப்பு கிடைக்காதா?என ஏங்கி அலைகிறான்.
ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது.
ஆனால் தனது தந்தை விற்றுச்சென்ற சைக்கிள் கிடைக்கிறது.....
சமந்தா என்ற பியூட்டி பார்லர் பெண்மணி மூலமாக...
சிரிலுக்கு அது சைக்கிள் அல்ல...தந்தையின் அன்பின் வடிவம்.

வார கடைசி நாட்களில் சிரிலோடு வசிக்க விரும்புகிறாள் சமந்தா என்ற அன்புக்கரசி.
சமந்தா சிரில் தந்தையின் இருப்பிடம் அறிந்து அவனை அழைத்து செல்கிறாள்.
அவனது தந்தை அவனை ஏற்க மறுக்கிறான்.
தனது பொருளாதார சூழல் காரணமாகத்தான் அவனை சிறுவர் இல்லத்தில் விட்டு வந்ததாக கூறுகிறான்.
ஏமாற்றத்தோடு திரும்பும் சிரில் மீது அன்பை மழையென பொழிகிறாள் சமந்தா.
அதில் நனைய மறுக்கிறான் சிரில்.
அந்த வயதுக்கே உரிய சாகச பண்பின் ஆக்கிரமிப்பில்...
 கயவன் ஒருவன் நட்பில் கரைகிறான்.

கூடா நட்பின் கேடாய் ஒரு திருட்டில் முக்கிய பாத்திரமேற்கிறான்.
பேஸ்பால் மட்டையால் நியூஸ் ஏஜென்டையும் அவரது மகனையும் அடித்து வீழ்த்தி விட்டு திருடிய பணத்தை கயவனிடம் ஒப்பக்கிறான் சிரில்.
சிறிய பங்கை சிரிலுக்கு கொடுத்து விட்டு கம்பி நீட்டி விடுகிறான் கூடாநட்பன்.

திருடிய பணத்தை தந்தையிடம் கொடுக்கிறான்.
தந்தை திட்டி பணத்தை குப்பை போல் வீசி எறிகிறான்.
இந்த இடத்தில் பள்ளத்தாக்கில் இருந்த தந்தை கதாபாத்திரம்...
 இமயமலையாக விஸ்வரூபமெடுப்பதை படம் பார்த்தால்தான் உணர முடியும்.

திருடிய பணத்தை அநாதையாக விட்டு விட்டு மனம் திருந்தி சமந்தாவிடம் அன்புக்கரம் நீட்டுகிறான்.
அவள் போலிசிடம் ஒப்படைக்கிறாள்.
பாதிக்கப்பட்டவரிடம் நஷ்ட ஈடு தருவதாக காம்ப்ரமைஸ் பேசி வழக்கிலிருந்து விடுவிக்கிறாள்.
அவரிடம் மன்னிப்பு கேட்கிறான் சிரில்.
அவர் மன்னிக்கிறார்....அவரது மகன் மன்னிக்க தயாரில்லை.

இந்தக்காட்சியில் பிரெஞ்ச் லா சிஸ்டம் என்னை வியக்க வைத்தது.
நமது ஊரில் ‘சிறுவர் சீர்திருத்தப்பள்ளி’ என்ற பெயரில் விளங்கும்...
 குற்றவாளிகளை உற்ப்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தள்ளி....
 ஆட்டோ சங்கராக....வீரமணியாக உருமாற்றி விடுவார்கள்.



சமந்தா தனக்கு மகன் கிடைத்த சந்தோஷத்தை நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாட திட்டம் போடுகிறாள்.
விருந்துக்கு தேவையான பொருளை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கி வரும் வழியில்... சிரில் தாக்கிய தந்தையும், மகனும் எதிரில் வருகிறார்கள்.
மகன் கொலை வெறியோடு சிரிலை துரத்துகிறான்.
தப்பிக்க மரத்தில் ஏறுகிறான் சிரில்.
அவனை கல்லால் குறி பார்த்து எறிந்து வீழ்த்துகிறான்.
கீழே விழுந்த சிரில் அசைவற்று கிடக்கிறான்.
சிரில் பிணமாகி விட்டதை உணர்ந்து தனது மகன் வீசி எறிந்த ரத்தக்கறை படிந்த கல்லை வீசி எறிந்து தடயத்தை மறைக்கிறார்.
கொலையை விபத்தாக சித்தரிக்கும் அத்தனை காரியத்தையும் செய்கிறார்.
ஆனால் சிரில் அடைந்தது மரணமல்ல...மயக்கம்.....
மயக்கத்திலிருந்து எழுந்து இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு போவான்...பாருங்கள்...
இந்த இடம்தான் இப்படத்தை உலக சினிமா உயரத்துக்கு தூக்கிய இடம்.
இந்த ஒரு காட்சி வைத்து ஆயிரம் அர்த்தங்கள்...தத்துவங்கள் நீங்கள் எழுதலாம்.

படத்தில் பின்னணி இசை மூன்று இடங்களில் பட்டுமே ஒலிக்கிறது.
அந்த இடங்களில் இசை எரிமலையாக வெடித்து கிளம்புவதை அனுபவித்து உணருங்கள்.

இப்படத்தை குடும்பத்தோடு பாருங்கள்.குழந்தைகளோடு பாருங்கள்.

இப்படத்தின் உரிமையை வாங்கி தமிழில் சப் டைட்டில் போட்டு ஒரிஜினல் டிவிடி விற்க ஆசைப்படுகிறேன்.
பிரான்சிலிருக்கும் நண்பர்கள் உதவுங்கள்.
சென்னை புத்தகக்கண்காட்சியில் விற்ற பணம்....  கரைவதற்க்குள் விரைந்து உதவுங்கள்.

மிஸ்டர் மிஷ்கின்....
இப்படத்தையும் காப்பியடித்து நந்தலாலா 2 எடுக்க முயற்சிக்க வேண்டாம்.
தமிழ்நாடெங்கிலும் இது வரை 2000 டிவிடி விற்கப்பட்டுவிட்டது.

Nov 10, 2011

FAT GIRL-[A Ma Soeur ! -french] 2001 உலகசினிமா தரத்தில்.... உடலுறவு காட்சிகள்.

                        எச்சரிக்கை
21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் பார்க்க வேண்டிய XX படம்....
21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் படிக்க வேண்டிய XXX பதிவு...

சற்றே பிசகினாலும் மூன்றாம் தர படமாக உருவாகக்கூடிய கதைக்களத்தை மனோதத்துவ ரீதியில் காட்சியமைத்ததில் படத்தை உலகசினிமா தரத்துக்கு உயர்த்தியுள்ளார் ‘பிரான்ஸ் தீபாமேத்தா’ Catherine Breillat.

12 வயது குழந்தை அனயீஸ்.
உருவத்தில் நம்ம ஹன்சிகா சைஸ்.
இவள் மட்டும் எனது கல்லூரி நாட்களில் எதிரில் வந்திருந்தால்... வழக்கமான எனது கேள்வியை கேட்டு கிண்டலடித்திருப்பேன்.

 “நான் பி.ஏ எக்கானமிக்ஸ் படிக்கிறேன்.
பரிட்சையில விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன? ....
என்ற கேள்வி வந்தால்....
உங்க பெயரை எழுதினால் அதிக மார்க் கிடைக்கும்.
உங்க பெயர் என்ன? ”
என கேட்டு நண்பர்களை சிரிக்க வைத்திருக்கிறேன்.
எனது சாகசங்கள் அந்தப்பெண்களை எப்படிக்காயப்படுத்தி இருக்கும் என்பதை இப்படம் எனக்கு உணர்த்தியது.
அவர்கள் இட்ட சாபங்கள்தான்....
அன்று நாகேஷ் போல் இருந்தவன்....
இன்று இன்றைய பிரபு போல் இருக்கிறேன்.


அனயீசின் அக்கா எலினா டீனேஜ் குயின்.
அசின் மாதிரி அழகு தேவதை.
இந்த ஒல்லிப்பிசாசு தனது அழகாலும்...பேச்சாலும்....செயலாலும் அனயீசுக்கு இழைக்கும் கொடுமைகள்...வன்முறைகள் படம் முழுக்க தொடர்ந்து வருகின்றன.

பாய்பிரண்டுகளே இல்லாத தனது உலகத்தில் தனக்கென கற்பனை கதாநாயகர்களை உருவாக்கி கொஞ்சி விளையாடுகிறாள் அனயீஸ்.
காமத்தை கிளர்ந்தெழச்செயவதில்...
 நீச்சல் குளத்துக்கு....
 அலாதி சுகம் எப்போதுமே உண்டு.

அனயீஸ் நீச்சல் குளத்தில்,
இறங்க ....வெளியேற...
 உதவும் எவர்சில்வர் குழாயை கொஞ்சுகிறாள்.

 “எப்பவுமே அவசரப்படுற...
இதுதான்...உங்கிட்ட எனக்கு பிடிக்காத ஓண்ணு....
பொறுமையா...
நிதானமா....”
என தனது பூவிதழ்களால் முத்தமிடுகிறாள்.

ஆசை தீர முத்தமிட்டதும் அப்படியே நீச்சலடித்து மற்றொரு பக்கம் காத்திருக்கும் காதலனை தேடி போகிறாள்.
“ உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் செல்லம்...
என்னோட ஸ்வீட் பாய்”
என அழுத்தி ஒரு கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அடிக்க அவளது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மரக்கட்டையாக இருக்கும் அவளது காதலன்......யார்?
டைவிங் போர்டை தாங்கி நிற்கும் மரக்கம்பம்!!!!!


படத்தில் அப்பட்டமான உடலுறவுக்காட்சிகள் XXX தரத்தில் இருக்க...
என்னைக்கவர்ந்தது இந்த உடலுறவுக்காட்சிதான்.
காமத்தை அடக்க முடியாமல்....
அலைகள் விளையாடும் கடற்கரையில்...
 இரு கால்களையும் விரித்து பரப்பி உட்கார்ந்திருக்கிறாள் அனயீஸ்.
 கடலை ஆண்மகனாகவும்...
அலைகளை ஆண்குறியாகவும்...
உருவகப்படுத்தி இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து செய்த கலவிக்கவிதை எந்த உலக சினிமாவிலும் நான் பார்த்திராத ஒவியம்.

படத்தின் கிளைமாக்ஸ் ஏற்ப்படுத்திய அதிர்வு இன்னும் அடங்கவில்லை.
சாலை ஒரக்காட்டுக்குள்...
ஒரு காமக்கொடூரன் அனயீசை கற்ப்பழித்து சிதைத்து விடுகிறான்.
கண்டெடுத்த போலிஸ்...
உயரதிகாரியிடம் கூறுகிறான்...
"She was in the woods...
She says he didn't rape her"
வார்த்தைகள் வர்ணிக்க முடியாத உணர்ச்சி பிழம்புகள்....
முகத்தில் கொப்பளிக்க...
"Don't believe me...
If you don't want to"
என வார்த்தைகளை அமிலத்தில் கரைத்து ஊற்றும்.....
 அனயீசின் குளோசப் முகத்தை....
 ப்ரீஸ்ஸாக்கி...
புதிய மோனாலிசா ஒவியம் படைத்திருக்கிறார் இயக்குனர்.
அவருக்கு திருக்குறளின் காமத்துப்பாலை பரிசளிப்போம்.

இப்படத்தின் டிவிடி கோடம்பாக்கம் கரங்களில் சிக்காமல் போகட்டும் என சாபமிடுகிறேன்.
படம் பெற்ற விருதுகள்:
In 2001 the film won the Manfred Salzgeber Award at the Berlin International Film Festival and the France Culture Award at the Cannes festival.
நன்றி விக்கிப்பீடீயா...

Mar 19, 2011

Mouchette-1967 கன்னித்தாய்

முஸே திரையில் வடிக்கப்பட்ட சிற்பம்.சிற்பி ராபர்ட் பிரஸ்ஸான்.திரை உலகின் சிறந்த பத்து மேதைகளுள் ஒருவராக கொண்டாடப்படுபவர்.ரஷ்யமேதை தார்க்காவ்ஸ்கி தனக்கு மிகவும் பிடித்த பத்து படங்களில் ஒன்றாக இப்படத்தை சிறப்பிக்கிறார்.இப்படத்தின் டிரெய்லரை உருவாக்கியவர் கோடார்டு என்ற திரைமேதை.

கோணங்கள் பிலிம் சொசைட்டியில் இப்படத்தை திரையிட்டபோது திகைத்துவிட்டேன்.ஒரு அட்சரம் புரியவில்லை.இப்படத்தை புரியாத தற்குறியாக இருக்கிறோமே என்று வெட்கப்பட்டேன்.ஆனாலும் இப்படம் என் உள்ளத்தை உலுக்கியது.
படம் பார்க்கும் ரசிகனிடம் ஆயிரம் கேள்விகள் எழுப்பியுள்ளார் பிரஸ்ஸான்.அது மட்டும் புரிந்தது.கேள்விகளுக்கு விடை தெரிய படத்தை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும்.படத்தை இரண்டாம் முறை டிவிடியில் பார்த்தேன்.லேசா படம் புரிந்த மாதிரி இருந்தது.டிவிடியில் பிரஸ்ஸான் பேட்டி இரண்டு இருந்தது. “என்னடா புரிந்து விட்டது உனக்கு...போடா ஞானசூன்யம்....”என்று காறி துப்பிவிட்டார் பேட்டியில்.


திரைக்கதை அமைப்பதில் சூரன் பிரஸ்ஸான்.சிறுவயதில் நாம் படித்த கதை இது.முருகன் ஆடு மேய்க்கும் சிறுவன் வேடத்தில் நாவல் மரத்தில் இருக்க....பசியுடன் வந்த அவ்வை பாட்டி நாவல் பழத்தை பறித்து போடும்படி கேட்கிறாள்.முருகன், “சுட்டபழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?”என கேட்கிறான்.
பிரஸ்ஸான் இக்கதையை படமாக்கினால்.....
இதற்க்கப்புறம் படமாக்கமாட்டார்.ரசிகர்களாகிய நம்மை மீதி திரைக்கதையை எழுத வைப்பார்.முருகன் பழம் பறித்து போட்டதையும் மண்ணில் விழுந்த பழத்தை அவ்வை ஊதித்தின்பதையும் முருகன் “பழம் சுடுகிறதா?”எனக்கேட்டு அவ்வையின் கர்வத்தை அடக்கியதை நம்மை உணர்ந்து புரிந்து கொள்ள வைப்பது பிரஸ்ஸான் ஸ்டைல்.
முஸே என்ற பதின்வயதுப்பெண்ணை கொலை செய்கிறது சமூகம்.இதுதான் இப்படத்தின் ஒரு வரிக்கதை.
முஸேயின் முகத்தில் எப்போதும் நிரந்தர சோகம் இருக்கும்.சமூகம் ஏற்ப்படுத்திய இறுக்கம் இருக்கும்.ஆனாலும்..... அவ்வப்போது அவளது குழந்தைத்தன்மை எட்டிப்பார்க்கும்போது மட்டும் கோடி சூரியனாய் பிரகாசிக்கும்.
உதாரணத்திற்க்கு ஒரே ஒரு காட்சி.....
நாமெல்லாம் ஒதுங்கி கடந்து போகும் சாலை நடுவில் இருக்கும் மழை தேங்கிய நிலத்தில் ஜங்கென்று குதிப்பாள்.தெறிக்கும் சேற்றை சந்தனமாய் நினைத்து மகிழ்வாள்.

பள்ளியில் டீச்சர் காயப்படுதுகிறாள். “ஏய் முஸே” எனக்கூப்பிட்டு அவள் திரும்பி பார்க்கும்போது தங்கள் ஆண் குறியை காட்டி கேவலப்படுத்துகிறார்கள் சமவயது சிறுவன்கள்.பாரில் பார்ட் டைமாக வேலை செய்து சம்பாதித்த காசை பிடிங்கி குடித்து கும்மாளம் போடுகிறார்கள் தகப்பனும் சகோதரனும்.அடைக்கலம் தந்து காத்தவனே கற்பழிக்கிறான்.

அவளது ஒரே ஆதரவு மரணத்திற்க்காக காத்திருக்கும் நோயுற்ற தாயும் அவளது பச்சிளம் பாலகனும்.


தாய் மரணமடைய.... முக்காலமும் இல்லாமல் தவிக்கிறாள்.ஒரு குளத்தில் உருண்டு உருண்டு போய் விழுந்து உயிரை மாய்க்கிறாள் முஸே.

ஒடிப்போய் பொத்தென்று விழுந்து தற்க்கொலை செய்திருக்கலாம்...உருண்டு உருண்டு போய் உயிரை விட்டது ஏன்?

படம் பார்த்து விளக்குங்களேன் ப்ளீஸ்....

Sep 29, 2010

The chorus-டீச்சருக்கு மரியாதை


கோரஸ் ஜாலியான 10000வாலா.....

நான் மிகவும் ரசித்த ப்ரெஞ்ச் படம்..இயக்கம் Christophe Barrtier.

இந்தப்படம் ஒரே ஸ்ட்ரோக்கில் உங்களை வீழ்த்தி விடும்.....ஆட்டோகிராப் மாதிரி....

நீங்கள் படித்த பள்ளிக்கு கூட்டிச்செல்லும்..உங்கள் ஆசிரியரை ஞாபகப்படுத்தும்..

இப்படத்தின் வசியத்தன்மைக்கு...வெற்றிக்கு இதுதான் காரணம்...

நான் கல்விஅமைச்சரானால் இப்படத்தை எல்லா டீச்சர்களையும் பார்க்க ஆணையிடுவேன்..

குட் டீச்சர்..பேட் டீச்சர் இரண்டுக்குமே உதாரணம் இப்படத்தில் இருக்கிறது.

கிட்டதட்ட சிறுவர் ஜெயில் மாதிரி ஒரு ஸ்கூல்.அதற்க்கு நல்லாசிரியராக வருகிறார் நம்ம கதாநாயகன்.இம்மென்றால் அடி...ஏனென்றால் உதை கொடுக்கும் தலைமை ஆசிரியர்தான் வில்லன்...அத்தனை அராத்து மாணவர்களையும் இசையால் வசமாக்குகிறார் நம் நாயகன்..தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி மட்டும் பரிசாகப்பெறும் நாயகன் ஒரு மாணவனுக்கு வெற்றி விருந்தளிக்கிறார்...

இப்படம் என் ஆசிரியரை ஞாபகப்படுத்தி உணர்ச்சிப்பெருக்கில் தத்தளிக்க வைத்தது.என் வகுப்பில் என்னோடு ஆறு பேர் ஆங்கிலத்தில் புலமை படைத்தவர்கள்..35 மார்க் எடுத்தால்தான் பாஸென்ற கொடுமையான சட்டம் நிலவி வந்த அந்தக்கால SSLC நான்..15 நாள் எங்களை அவரது வீட்டில் சிறை வைத்து சாப்பாடும் போட்டு பாடம் எடுத்து பாஸாக்கினார் கடமை கண்ணியம் மிக்க எனது ஆசான் திரு.ராஜ்குமார்.

வருடாவருடம் மீசை,கிருதா கெட்டப் சேஞ்ச் செய்வார் கமல் மாதிரி..

அப்பாடா...கமலை கொண்டு வந்துவிட்டேன்..கமலைப்பற்றி பேசுவது... நினைப்பது... சுகம்..

சென்னையில் நானும் விக்ரம் தர்மாவும் பக்கத்துவீடு..மருதநாயகம் பற்றி பேசும் போது சொன்னார் இந்தச்செய்தி.....மலை உச்சியில் இருந்து குதித்து தண்ணீருக்குள் மறைந்து போவதாகக்காட்சி..லொக்கேசன் ஒகனேக்கல்..வெள்ளம் பெருக்கெடுத்துக்கொட்டும் அருவி...ஒயர் கட்டி டம்மி வைத்து ஒத்திகை பார்த்தால்..... ஒரே ஒரு இடத்தில்.....மட்டும்...... சரியாக குதித்தால்..... மேலே இருந்து விழுகின்ற வேகத்தை..... உள் வாங்குகின்ற ஆழம் இருந்தது .மற்ற இடத்தில் விழுந்தால் தண்ணீருக்குள் ஒளிந்திருக்கும் பாறையில் மோதி மரணம் நிச்சயம்.டூப்பும் ரெடி..12 காமிராவும் ரெடி..டேக்கிற்க்கு ரெடியாகும் போது.... கமல், நான் ரெடி ...டூப் வேண்டாம்..... என்றார்..மொத்த யூனிட்டும் நடுங்கிவிட்டது...யார் சொல்லியும் கேட்காமல் குதித்தேவிட்டார்..அது மட்டுமல்ல...விழும் வேகத்தில் சற்று ஸ்விங் செய்து ஒரு பாறையில் காலை ஊன்றி மிதித்து....கரணம் போட்டு... சரியாக பள்ளத்தில் குதித்தார்..இன்றும் நம்மிடையே இருக்கிறார்..ஜாக்கிச்சான் கூட இந்த ஸ்டண்ட் செய்தது இல்லை..அனைத்து ஹாலிவுட் படத்துக்கும் இந்த ஒரு காட்சியில் சவால் விட்டிருந்தார்..எடிட் செய்து பார்த்தால் அத்தனை அழகு அந்தக்காட்சி.இந்தப்படம் வெளிவரவில்லையே என்று கலங்கினார் விக்ரம் தர்மா..

1991ம்வருடம்..... ஒரு ஹிந்திப்பட சூட்டிங்...விஜிபி கோல்டன் பீச்சில்..நான் எட்டி பார்த்தேன்.ஒரு ஜீப் பானட்டில் இருந்து குதிக்கும் காட்சி..குதித்தவர் டூப்..நடித்தவர் ரஜினிகாந்த்.

Sep 22, 2010

The divingbell and the butterfly-தன்னம்பிக்கையின் உச்சம்


பட்டர்ப்ளை என்ற பெயர் வந்தாலே பிரெஞ்ச் இயக்குனர்கள் கலக்கி விடுவார்கள் போல.....இப்படி ஒரு படத்தை எடுத்த இயக்குனர் Julian Schnabel க்கு முதலில் ஒரு பிரஞ்ச் கிஸ்.

விடாமுயற்ச்சியுடன்...தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனின் உண்மைக்கதை.

42 வயதான Baubyக்கு தீடீரென்று ஸ்ட்ரோக் வந்து எல்லாமே செயல் இழந்து விடுகிறது....ஒன்றை தவிர....இடது கண் இமை மட்டும் துடிக்கிறது.இந்த நிலையில் தன்னுடைய சுயசரிதை எழுதி அதுதான் இந்தப்படம்..எப்படி எழுதினார்?????ஒரு நிமிசம் டைம் தருகிறேன்.கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் கலைஞரிடம் சொல்லி கலைமாமணி வாங்கி தருகிறேன்..மனிதமுயற்ச்சியின் உச்சத்தை தொட்டிருக்கிறார் இக்கதாநாயகன்..

மருத்துவ உதவியாளர் ஒவ்வொரு எழுத்தாகசொல்லிக்கொண்டு வரும்போது தேவையான எழுத்தில் இடது கண்ணை பிளிங்க் செய்வார்...இப்படி எழுத்துக்களை கோர்த்து வார்த்தைகளை உருவாக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த முயற்ச்சி விவரிப்பதற்க்கே எனக்கு தலை சுற்றுகிறது.

அடிப்படையில் இந்த இயக்குனர் ஒரு ஒவியர்..எனவே படத்தையும் ஒவியமாக வரைந்து தள்ளிவிட்டார்..இக்கதாநாயகனின் நிலை வைத்து நம்மை பிழிய பிழிய அழ வைத்து இருக்கலாம்..மாறாக கதாநாயகனுக்கு வரும் காதல்,காமம்,கோபம்,பாசம்,வெறுப்பு என்று அனைத்தையும் நம் மீதேபடரவிட்டது இயக்குனரின் வெற்றி..

படத்தின் ஆரம்பக்காட்ச்சிகளில் காமிராதான் கதாநாயகன்..இக்காட்ச்சிகளின் நேர்த்திக்கு ஒளிப்பவாளருக்கு அனுஸ்க்காவை வைத்து ஒரு உம்மா...

இந்தப்படத்தை தேர்வுசெய்து எழுத காரணம் இருக்கிறது.மதுரையில் இருந்து வந்து படுத்து விட்டேன்.பத்து நாள் பேதி.. எல்லாபார்ட்சும் தகறாறு பண்ணுகிறது.மனைவி டிவி,இண்டர்னெட்,ரீடிங் எல்லாவற்றுக்கும் தடை போட்டுவிட்டாள்..காஸ்ட் அவே பட டாம்ஹேங்க்ஸ் போல ஆகிவிட்டேன்..இன்னும் உபாதைகள் தீரவில்லை.கொஞ்சம் தெம்பு வந்ததும் முதல் முயற்ச்சியாக இப்படத்தை எழுதிவிட்டேன்...சற்று சிரமப்பட்டு...

ஆனால் எந்திரனுக்கு வரும் அதீத விளம்பரங்கள்,செய்திகள்,பில்டப்புகள் தரும் மரண அவஸ்தைக்கு மற்றதெல்லாம் ஜுஜுபி......
இந்தப்பதிவை என் இனிய மருத்துவர் டாக்டர் மனோகரனுக்கு காணிக்கையாக்குகிறேன்

Jul 14, 2010

LE PAPPION - France \ பட்டாம் பூச்சியும்...முரட்டுக்குழந்தையும்.



பட்டாம்பூச்சி ஒரு ப்ரெஞ்ச் கவிதை....
இயக்கம் பிலிப் முயில்.

கதாநாயகி எல்சா இந்த உலகத்தை கேள்விகளால் அறிய துடிக்கும் சின்னஞ்சிறு சிறுமி.
பதின்வயதில்...ஒரு கன்னித்தாய்... பெற்றெடுத்த மகள்.

 ‘மிடில் கிளாஸ்’ தாயும், எல்சாவும்...
அப்பார்ட்மெண்ட்ஒன்றில் குடியேற வருகிறார்கள்.

அபார்ட்மெண்ட் மாடியில்... ‘தனிமை விரும்பி’ முதியவர்.
பட்டாம்பூச்சிகளை வளர்த்து... கொன்று....
கலைப்பொருளாக்கி... விற்று வளமாக இருக்கிறார்.

அவரிடம்...எல்சா  ‘வேண்டாத விருந்தாளியாய்’ ஒட்டிக்கொள்கிறாள் பட்டாம்பூச்சி வேட்டைக்கு போகும்போது...
எல்சா...அந்த முரட்டு குழந்தையை...  முழு மனிதனாக...
பரிணாம வளர்ச்சியடைய வைக்கிறாள்.

எல்சாவின் கேள்விகள் நம்மை வசீகரிக்கின்றன.
ஒவ்வொன்றும் கிருஷணா ஸ்வீட் ரகம்தான்.
பட்டாம்பூச்சி வேட்டைக்காக இவர்களோடு நாமும் பயணிக்கிறோம்.
பயணத்தின் முடிவில் கற்றுக்கொள்கிறோம்.

தமிழில் இது போன்ற படங்கள் வராதா என்ற ஏக்கத்துடன் முடிக்கிறேன்