Jan 22, 2012

The Kid With A Bike-2011 [பிரெஞ்ச்] ஒடிப்போன அப்பாவை தேடிப்போன மகன்


File:Le-gamin-au-velo.png

2012ல் மிகச்சிறப்பான படத்துடன் துவங்க வேண்டும் எனது வேட்டைக்கு சரியான தீனியாக இப்படம் கிடைத்து விட்டது.
என் ரத்தத்தில் ஹீமோகுளொபினோடு இப்படம் கலந்து விட்டது.
ஒரு கொண்டாட்ட மன நிலையில் இப்பதிவை எழுதுகிறேன்.
இப்படத்தை எழுதி இயக்கி....
கேன்ஸ் பிலிம் பெஸ்டிவெலில் முதன்முதலாக திரையிட்டு கிராண்ட் பிரிக்ஸ் என்ற உயரிய விருதையும் பெற்று விட்டார்கள் இரட்டை சகோதரர்களான பெல்ஜியம் நாட்டு சகோதரர்கள் Jean Pierre & Luc Dardenne11 வயது சிரில் என்ற சிறுவனது பார்வையிலேயே படம் நகர்கிறது.
அப்பா பையனை சிறுவர்கள் இல்லத்தில் ஒப்படைத்து விட்டு ஒடிப்போய் விடுகிறான்.
சிரில் தனது தந்தை பற்றிய துப்பு கிடைக்காதா?என ஏங்கி அலைகிறான்.
ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது.
ஆனால் தனது தந்தை விற்றுச்சென்ற சைக்கிள் கிடைக்கிறது.....
சமந்தா என்ற பியூட்டி பார்லர் பெண்மணி மூலமாக...
சிரிலுக்கு அது சைக்கிள் அல்ல...தந்தையின் அன்பின் வடிவம்.

வார கடைசி நாட்களில் சிரிலோடு வசிக்க விரும்புகிறாள் சமந்தா என்ற அன்புக்கரசி.
சமந்தா சிரில் தந்தையின் இருப்பிடம் அறிந்து அவனை அழைத்து செல்கிறாள்.
அவனது தந்தை அவனை ஏற்க மறுக்கிறான்.
தனது பொருளாதார சூழல் காரணமாகத்தான் அவனை சிறுவர் இல்லத்தில் விட்டு வந்ததாக கூறுகிறான்.
ஏமாற்றத்தோடு திரும்பும் சிரில் மீது அன்பை மழையென பொழிகிறாள் சமந்தா.
அதில் நனைய மறுக்கிறான் சிரில்.
அந்த வயதுக்கே உரிய சாகச பண்பின் ஆக்கிரமிப்பில்...
 கயவன் ஒருவன் நட்பில் கரைகிறான்.

கூடா நட்பின் கேடாய் ஒரு திருட்டில் முக்கிய பாத்திரமேற்கிறான்.
பேஸ்பால் மட்டையால் நியூஸ் ஏஜென்டையும் அவரது மகனையும் அடித்து வீழ்த்தி விட்டு திருடிய பணத்தை கயவனிடம் ஒப்பக்கிறான் சிரில்.
சிறிய பங்கை சிரிலுக்கு கொடுத்து விட்டு கம்பி நீட்டி விடுகிறான் கூடாநட்பன்.

திருடிய பணத்தை தந்தையிடம் கொடுக்கிறான்.
தந்தை திட்டி பணத்தை குப்பை போல் வீசி எறிகிறான்.
இந்த இடத்தில் பள்ளத்தாக்கில் இருந்த தந்தை கதாபாத்திரம்...
 இமயமலையாக விஸ்வரூபமெடுப்பதை படம் பார்த்தால்தான் உணர முடியும்.

திருடிய பணத்தை அநாதையாக விட்டு விட்டு மனம் திருந்தி சமந்தாவிடம் அன்புக்கரம் நீட்டுகிறான்.
அவள் போலிசிடம் ஒப்படைக்கிறாள்.
பாதிக்கப்பட்டவரிடம் நஷ்ட ஈடு தருவதாக காம்ப்ரமைஸ் பேசி வழக்கிலிருந்து விடுவிக்கிறாள்.
அவரிடம் மன்னிப்பு கேட்கிறான் சிரில்.
அவர் மன்னிக்கிறார்....அவரது மகன் மன்னிக்க தயாரில்லை.

இந்தக்காட்சியில் பிரெஞ்ச் லா சிஸ்டம் என்னை வியக்க வைத்தது.
நமது ஊரில் ‘சிறுவர் சீர்திருத்தப்பள்ளி’ என்ற பெயரில் விளங்கும்...
 குற்றவாளிகளை உற்ப்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தள்ளி....
 ஆட்டோ சங்கராக....வீரமணியாக உருமாற்றி விடுவார்கள்.சமந்தா தனக்கு மகன் கிடைத்த சந்தோஷத்தை நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாட திட்டம் போடுகிறாள்.
விருந்துக்கு தேவையான பொருளை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கி வரும் வழியில்... சிரில் தாக்கிய தந்தையும், மகனும் எதிரில் வருகிறார்கள்.
மகன் கொலை வெறியோடு சிரிலை துரத்துகிறான்.
தப்பிக்க மரத்தில் ஏறுகிறான் சிரில்.
அவனை கல்லால் குறி பார்த்து எறிந்து வீழ்த்துகிறான்.
கீழே விழுந்த சிரில் அசைவற்று கிடக்கிறான்.
சிரில் பிணமாகி விட்டதை உணர்ந்து தனது மகன் வீசி எறிந்த ரத்தக்கறை படிந்த கல்லை வீசி எறிந்து தடயத்தை மறைக்கிறார்.
கொலையை விபத்தாக சித்தரிக்கும் அத்தனை காரியத்தையும் செய்கிறார்.
ஆனால் சிரில் அடைந்தது மரணமல்ல...மயக்கம்.....
மயக்கத்திலிருந்து எழுந்து இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு போவான்...பாருங்கள்...
இந்த இடம்தான் இப்படத்தை உலக சினிமா உயரத்துக்கு தூக்கிய இடம்.
இந்த ஒரு காட்சி வைத்து ஆயிரம் அர்த்தங்கள்...தத்துவங்கள் நீங்கள் எழுதலாம்.

படத்தில் பின்னணி இசை மூன்று இடங்களில் பட்டுமே ஒலிக்கிறது.
அந்த இடங்களில் இசை எரிமலையாக வெடித்து கிளம்புவதை அனுபவித்து உணருங்கள்.

இப்படத்தை குடும்பத்தோடு பாருங்கள்.குழந்தைகளோடு பாருங்கள்.

இப்படத்தின் உரிமையை வாங்கி தமிழில் சப் டைட்டில் போட்டு ஒரிஜினல் டிவிடி விற்க ஆசைப்படுகிறேன்.
பிரான்சிலிருக்கும் நண்பர்கள் உதவுங்கள்.
சென்னை புத்தகக்கண்காட்சியில் விற்ற பணம்....  கரைவதற்க்குள் விரைந்து உதவுங்கள்.

மிஸ்டர் மிஷ்கின்....
இப்படத்தையும் காப்பியடித்து நந்தலாலா 2 எடுக்க முயற்சிக்க வேண்டாம்.
தமிழ்நாடெங்கிலும் இது வரை 2000 டிவிடி விற்கப்பட்டுவிட்டது.

9 comments:

 1. என்ன புது வருஷம் தொடங்கி நாட்கள் ஆகுதே இன்னும் ஒரு விமர்சனமும் காணோம்னு நினைத்தேன்.எல்லாத்துக்கும் சேர்த்து நல்ல தீனி போட்டிட்டீங்க..நன்றி.

  <<< மிஸ்டர் மிஷ்கின்....
  இப்படத்தையும் காப்பியடித்து நந்தலாலா 2 எடுக்க முயற்சிக்க வேண்டாம்.>>>

  சரியான அடி..பாருங்க எடுத்தாலும் எடுப்பாங்க.

  << என் ரத்தத்தில் ஹீமோகுளொபினோடு இப்படம் கலந்து விட்டது.>>>

  அப்படினா இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும்..அடுத்து பார்க்க போகிற 4 படங்களோட இந்த படத்தையும் சேர்த்துட்டேன்.நன்றி..

  ReplyDelete
 2. மிகவும் அருமையான படத்துடன் புத்தாண்டை ஆரம்பிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

  தொடர்ந்து நல்ல உலகப்படங்களா அறிமுகப்படுத்துங்க. இந்தப் படத்தை கட்டாயம் பார்க்கிறேன். நன்றி.

  ReplyDelete
 3. வாங்க ,,,வாங்க ,,,ரொம்ப நாள் ஆச்சே...அப்புறம் எங்க ரத்தத்தில் கலக்க படத்த அனுப்புங்களேன்.

  ReplyDelete
 4. பதிலை வாசிச்சுட்டு, ட்ரெயிலர் இப்பதான் பார்த்தேன்.. அசத்தல் படம்!

  ReplyDelete
 5. இணையத்தில் கிடைக்கிறதா இந்தப்படம்?நன்றி உங்களுக்கு !

  ReplyDelete
 6. http://platonicwave.blogspot.com/2012/01/bicycle-thieves.html

  pls read dis

  ReplyDelete
 7. All movies of Dardenne Brothers are world class. dont miss their film "The Son"

  ReplyDelete
 8. பார்க்கிறேன் பாஸ்! நன்றி!

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.