Showing posts with label ஹாலிவுட். Show all posts
Showing posts with label ஹாலிவுட். Show all posts

Nov 9, 2012

Detachment \ 2011 \ English \ U.S.A \ ...நல்லாசிரியனாய்...பண்பிலே தெய்வமாய்.



நண்பர்களே...
ஹேராம், டச் ஆப் ஸ்பைஸ் ஆய்வுத்தொடர்களுக்கிடையில்...
நாயகன் படத்துக்கு...
குறுகிய காலத்தொடர் எழுத நிர்ப்பந்தம் ஆகி விட்டது.
இரண்டு முக்கிய படங்களை அறிமுகப்படுத்தி விட்டு
தொடர்களை தொடர்கிறேன்.

பூமியில் பிறந்த அனைவரும்...ஆசிரியரும், குருவும் அமையப்பெற்றிருப்போம்.
ஆசிரியரே... குருவாக அமையப்பெறுவது வரம்.
எனது ஆசிரியர்கள் அனைவருமே குருவாக இருந்தார்கள்.
[ ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு ]
இப்படம் என் ஆசிரிய குருக்களை நினைவுக்குள் கொண்டு வந்தது.


பிரிட்டிஷ் இயக்குனர் டோனி கேய் [ TONY KAYE] படமெடுப்பதில் சிங்கம்.
சிங்கம் குட்டி போடுவது போல்...மூன்றே படங்கள்.
கொசுறாக ஒரு டாகுமெண்டரி.
அப்பப்ப, புவாவுக்கு... விளம்பரப்படம்...மியூசிக் ஆல்பம்... இத்யாதி.

இயக்குனர் டோனி...எழுத்தாளர்,நடிகர்,ஒளிப்பதிவாளர்,ஓவியர், திரைக்கதையாளர், இசையமைப்பாளர், கவிஞர் என எதற்கு நீட்டல் ?
சுருக்கமாக   ‘கமல்’.
இருந்தும் நண்பர் கருந்தேளால் கொட்டப்படாமலும்...
நண்பர் ஹாலிவுட் பாலாவால் கழுவி ஊற்றப்படாமலும்...
தப்பித்து வரும் பாக்கியவான்.


இயக்குனர் டோனி  ‘அட்ரியன் பிராடியுடன் ’ [ ADRIEN BRODY ] இணைந்து
2011ல் வெளியிட்ட படம்  ‘டிடாச்மெண்ட்’.
இப்படத்தின் தயாரிப்பாளர்... அட்ரியன் பிராடி என்பது விசேஷ அம்சம்.
அட்ரியன் பிராடி என்றதும் நினைவுக்கு வருவது...
‘இந்திரா காந்தி மூக்கு’ +  ‘பியானிஸ்ட்’.
அலட்டாம நடிச்சு, பேர் வாங்கும் பேர்வழி.

நோபல் பரிசு பெற்ற  சிந்தனையாளர் ஆல்பர்ட் கேம்யூவின் தத்துவம்
தொடக்க டைட்டிலிலேயே வருகிறது.
" AND NEVER HAVE I FELT SO DEEPLY AT ONE  AND THE SAME TIME 
SO DETACHED FROM MYSELF AND SO PRESENT IN THE WORLD "
-  ALBERT CAMUS - 
இச்சிந்தனையைத்தான் படமாக்கியுள்ளார் இயக்குனர் டோனி கேய்.

Albert  Camus = (1913-1960)
French Writer and  Philosopher = Representative of   'Atheistic  Existentialism'
Noble Prize Winner (1957) =  for his writings against capital punishment in the essay "Réflexions sur la Guillotine"  (Reflections on the Guillotine).

Central Theme of his ‘Philosophy’ = Meaning of Human Existence is ‘ABSURD’ = Senselessness =
Paradox of the Absurd = 'Sisyphean plight' = Mythological Image who, for his perfidy, is doomed  forever to roll uphill a heavy stone, which always rolls down again.

Camus Frame of Mind = A hopelessly  lonely man in the  'absurd' - inhumane-modern-capitalist world. 
 'Revolts’ and ‘Revolutions’ are illusory.

தத்துவப்படம் என தலை தெறிக்க வேண்டாம்.
90 % மகிழ வைக்கும்...10 % நெகிழ வைக்கும்.

அமெரிக்காவில் ‘போஸ்ட் மாடர்ன் மாணவர்கள்’ நிறைந்த ஒரு பள்ளிக்கு  'டெம்ப்ரவரி' வாத்தியாராக வருகிறார் மிஸ்டர் பார்த் [ ADRIEN BRODY ].
பேச்சுக்கு பேச்சு  'FUCK'ஐயும்,  ‘முணுக்’ கோபத்தையும் வைத்திருக்கும்
வன்முறை மாணவர்களை...
அன்பும்...கண்டிப்பும் கலந்து கையாளுகிறார்.
வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் தாத்தாவை விடுதியில் வைத்து பராமரிக்கிறார்.
சக ஆசிரியர்களிடம் நேசமாயிருக்கிறார்.
 ‘அன்பே சிவமாய்’ வாழும் மிஸ்டர் பெர்பெக்ட்.

மிஸ்டர் பார்த்தின், கடந்த கால சிக்கல்களையும்...
நிகழ் கால போராட்டங்களையும் விவரிக்கும் போக்கில்...
அட்டாச்மெண்ட், டிட்டாச்மெண்ட் பற்றியும்...
Paradox of the Absurd’ என்ற கருத்தாக்கத்தையும் குழைத்து பதவுரை எழுதுகிறது  படம்.

படத்தில் மிகவும் ரசித்த காட்சியை... ‘ஒரு சோறு பதமாக’ தருகிறேன்.

பணி முடிந்து திரும்பும் பார்த்தை வழி மறிக்கிறாள் பதின் வயது பாலியல் தொழிலாளி.
பார்த்  'அவளிடமிருந்து' விலகிச்செல்கிறார்.
“ பத்து டாலர் கிடைக்குமா...பசிக்கிறது” என்பாள்.

பசியால் வாடும் பதின் வயது பாலியல் தொழிலாளியை
தனது வீட்டில் உணவிருக்கிறது என அழைத்துச்செல்வார் பார்த்.
இக்காட்சியின் பின் புலமாக...
சிவப்பு வண்ணம் பூசப்பட்ட சுவர் இருக்கும்.
இரண்டு காரெகடர்களும் வெளியேறிய பின் அந்த சிவப்பு சுவற்றுக்கு சின்னதாக ஒரு  ‘பாஸ்ட் ஜூம்’ போட்டிருப்பார் இயக்குனர்.
முதலாளித்துவ சமூகம் பட்டினி போடும்...
 ‘மனித நேயம்’ சாப்பாடு போடும்... என்பதே இக்குறியீடு.


*********************************************************************************
இக்காட்சி  ‘செம்மலர்’ என்ற சிவப்பு இலக்கிய பத்திரிக்கையில் வந்த
ஒரு குட்டிக்கதையை நினைவு படுத்தியது.
நினைவிலிருக்கும் கருத்தை தழுவி...
இன்றைய சூழலோடு பொருத்தி ...
எனது நடையில் தர முயற்சிக்கிறேன்.

பவர் கட் இல்லாமலேயே இருட்டாயிருக்கும் சாலையில் அழகிய இளம் பெண்
போய்க்கொண்டு இருக்கிறாள்.
வெளிச்சத்தில் அவள் அமலா பாலைக்கூட தோற்கடிக்கலாம்.
இருட்டை சாக்காக்கி ...வாலிபன் ஒருவன் அவளை பாலோ செய்வதை காண முடிந்தது.
அவளை நெருங்க சந்தர்ப்பம் தேடும் நடையில் தொடர்கிறான்.
கண்ணும் கருத்தும் காமத்திலிருப்பதால் என்னை கவனிக்கவில்லை.
சந்தர்ப்பம் கிடைத்தால் அவளை வீழ்த்தி விடுவான் என்றெண்ணி...
 “டேய்... நில்லுடா” என ஓங்கிய குரலில் என் இருப்பை தெரியப்படுத்தினேன்.
இரண்டு பெண்ணைப்பெற்று பாதுகாத்து வளர்த்த சராசரி இந்திய தகப்பனின் அனுபவத்தில் விளைந்த சாதரண உத்திதான்.
நான் நினைத்தபடி அக்கோழை பயந்து அவளையும் தாண்டி ஓடி விட்டான்.
அவள் நின்று என்னை பார்த்தாள்.
அவள் நன்றி சொல்வாள் என எண்ணினேன்.
“ கஷ்டப்பட்டு அவனை தொடர வைத்தேன்.
அவனுக்கு விருந்தாகி...இன்றிரவாவது...சாப்பிட நினைத்தேன்.
கெடுத்து விட்டீர்களே...பெரியவரே ” என்றாள்.

நமது அரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம், சமூகம் எல்லாவற்றின் மீதும் வைத்த விமர்சனமாக இக்கதை அதிர்வு ஏற்படுத்தியது.
*********************************************************************************

இக்கதையும்...இப்படமும்...கேம்யூவும் எழுப்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
 ‘மனித நேயம்’ சாப்பாடு போடுவது எப்போது ?

படத்தின் இறுதிக்காட்சியில் பாஸிட்டிவ்வாக விடை சொல்லி இருக்கிறார்
இயக்குனர்.
மனிதநேயத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் கிளைமாக்ஸ் இது.
இப்படம் உங்களிடம் இருக்கும் மனித நேயப்பண்பிற்கு நீர் ஊற்றும்.

விருதுகள் பற்றிய தகவல்கள் விக்கிப்பீடீயாவிலிருந்து காப்பி பேஸ்ட்... 
On September 9, 2011, Detachment screened in competition at the 
37th Deauville American Film Festival in France
It won both the Revelations Prize and the International Critics' Award.
On September 18, Detachment was announced as the Closing Night Film at the 
Woodstock Film Festival, where Kaye was the recipient of the Honorary Maverick Award.
 On October 12, 2011, Detachment screened in competition at the Valenciennes International Festival of Action and Adventure Films in Japan, where it won the Grand Prize and the Audience Award.

Later, on October 26, the film screened in competition at the 
24th Tokyo International Film Festival.
It received the award for Best Artistic Contribution, sharing honors with the film Kora.
Detachment also screened in competition at the 35th São Paulo International Film Festival and won the Audience Award for Best Foreign Language Film, sharing honors with Chicken with Plums.
On November 16, Detachment screened at the 53rd Muestra Internacional de Cine in Mexico.
In January 2012, Detachment won Best Picture at the Ramdam Film Festival in Tournai, Belgium.

படத்தின் காணொளி காண்க...


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Sep 7, 2012

Hey Ram-2000 \ இரண்டு கைகளால் இமயத்தை மறைக்க முடியுமா? \ ஹேராம்=21

நண்பர்களே...
நாம் இப்போது அலசிக்கொண்டிருக்கும் காட்சி...
ஹேராமிலேயே மிக முக்கியமான காட்சியாக கருத வேண்டி உள்ளது.
சித்தாந்தத்தில் உந்தப்பட்ட அபயங்கரும்,எந்த சித்தாந்தத்தையும் பின்புலமாக கொள்ளாத சாகேத்ராமும் சந்திக்கும் இக்காட்சியை  ‘இருத்தலியல் சூழலில்’ படைப்பாளி கமல் வடிவமைத்துள்ளார்.

இருத்தலியல் [ Existentialism ] என்றால் என்ன?
விக்கிப்பீடீயாவை தேடி படித்துக்கொள்ளுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Existentialism

தமிழில் படிக்க....

இருத்தலியல் பற்றி தமிழ் விக்கிப்பீடீயா காண...

ஆங்கிலம் தெரிந்தவர்கள்....தமிழ் விக்கிப்பீடீயா பக்கம் போகாதீர்கள்.
உயிருக்கு உத்தரவாதமில்லை.

*********************************************************************************


இது போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு என் ஆசான் சுஜாதா அந்தாதியே பாடியிருக்கிறார்..

 “தத்துவங்களில் ஊறித் திளைத்தவர்கள், அந்தத் தத்துவங்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்க முயலும் போது, சில அபாயங்கள் நிகழும்.
 அவற்றில் ஒன்று, பெரும்பான்மையானோரைச் சென்றடையும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதற்காக, எளிமையான, பொருத்தமற்ற உதாரணங்கள் மூலம் விளக்கி, தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்வது. 
இரண்டு, தத்துவங்களைச் சுற்றி இருக்கும் ஆழமான அகழிகளில், இன்னும் அதிகம் கூரிய பற்கள் கொண்ட முதலைகளை விட்டு, அருகே அண்டவிடாமல் செய்வது, முடிந்தால் கடிக்கவும் விடுவது.”

***********************************************************************

இருத்தலியல் பற்றி... தமிழ் விக்கிப்பீடீயாவிலிருந்து, சிறு பகுதி ...

 தனி நபரே அவரது சொந்த வாழ்க்கைக்கு மற்றும் அவ்வாழ்க்கையை உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் வாழவும்,[7][8] பல இருத்தல் தடைகள் மற்றும் திசைதிருப்பல்கள் துன்பம், ஏக்கம், அபத்தம், தனிமைப்படல் மற்றும் அலுப்பு உள்ளிட்டவை இருப்பினும் பொருளளிக்க பொறுப்பானவர் என்பதை நிலைநிறுத்தினார்.[9]
[என்னய்யா...மொழி பெயர்ப்பு இது....படிச்சுட்டு இருக்கும் போதே ஆசனவாயில் புகை வருது.]

ஹேராமில்,இருத்தலியல் எவ்வாறு பொருந்துகிறது?
சாகேத்ராம் தன் காதல் மனைவியுடன் ஒரு சாதரணனை போல வாழ ஆசைப்பட்டான்.
ஊரே ரணகளமாக இருக்கையில் இவன் கிளுகிளுப்பாக இருந்தான்.
ஆனால்  ‘காமப்பசி கொண்ட ஒருவனால்’ அழைத்து வரப்பட்டவர்கள் வந்தார்கள்...கொன்றார்கள்.
கோபத்தில் கொலைகளை செய்து மிருகமாக மாறிய நிலையில்
பார்வையற்ற இஸ்லாமியச்சிறுமி...  ‘சரேபேஸ்வரராக’ காட்சி கொடுத்து சாகேத்ராமனை சாந்தப்படுத்துகிறாள்.
[ சரேபேஸ்வரர்-இரணியனைக்கொன்று உக்கிர மூர்த்தியாக மாறி விட்ட நரசிம்மரை சாந்தப்படுத்திய சிவனின்அவதாரம் ]
நாகரீக மனிதனாக திருந்திய வேளையில் ‘வேட்டையாடலாம்...விளையாடலாம்... ’என அழைக்கிறான் அபயங்கர்.
இவ்வளவுதாங்க... ‘இருத்தலியலில்’ ஹேராமுக்குள் நாம் இது வரை பார்த்த காட்சிகள்...
இன்னும் காட்சிகளை தொடர்ந்து காணவிருக்கிறோம்.

*********************************************************************************

ஆனா,ஹேராமுக்குள் எதுவுமே இல்லைன்னு கருந்தேள் தொடர்ந்து  ‘நாட்டியமாடிகிட்டே’ இருக்காரு.
நான் அவர்  ‘முட்டியை உடைக்க’ தொடர்ந்து  ‘தில்லானா’ வாசிச்சுகிட்டே இருப்பேன்.
சத்தியமா சொல்றேன்... ‘இருத்தலியலை’ சொல்லாம ஹேராமை ஓட்டிடலாம்னுதான் நெனச்சேன்.
 ‘கருந்தேள்தான்’ விடல.

*********************************************************************************

 ‘இருத்தலியல்’ ஹேராமுக்குள் இருப்பது  ‘மைக்ரோ லெவல்’ [ Micro Level ].
 ‘காஸாபிளாங்காவில் ’ இருப்பது  ‘மேக்ரோ லெவல்’ [ Macro Level ] .
இரண்டாம் உலகப்போரில்  ‘பிரான்ஸ்’ இருந்தது...  ‘இருத்தலியல் சூழல்’.

எத்தனையோ போர்களில்...எத்தனையோ நாடுகளை வென்ற  ‘வல்லரசான’ பிரான்ஸ்,  ‘ஜெர்மனியிடம் அல்லது ஹிட்லரிடம்’  கம்ப்யூட்டர்  ‘ஆன்’ ஆக எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட விரைவாக சரண்டர் ஆனதை... தத்துவஞானிகள்
ஆராய்ந்தார்கள்....ஆராய்கிறார்கள்....ஆராய்வார்கள்.
இச்சூழலை மையமாக வைத்து பின்னப்பட்டதே  ‘காஸாபிளாங்கா’
 [Casablanca \ 1942 \ English \ Directed by Michael Curtiz ].
காசாபிளாங்காவை...  ‘அறிமுகப்படுத்தி’ ஏற்கெனவே பதிவிட்டுள்ளேன்.

சரித்திரத்தை... திரைக்கதையாக்க...  ‘ரிச்சர்ட் அட்டன்பரோவின்’ காந்தி மற்றும்  ‘பெட்ரோலூசியின்’ லாஸ்ட் எம்பரர் ஆகிய இரண்டு படங்களுக்கு...  தலா இருபத்து ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது.
ஆனால் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே உழைத்து...ஹேராமை உருவாக்கி
தரத்தில்  ‘காந்தியை’ தாண்டினார்...
‘ லாஸ்ட் எம்பரரை ’ தொட்டார் கமல்...
இதை விரிவாக பின்னால் வரும் பதிவுகளில் சொல்லவிருக்கிறேன்.

பத்தாண்டுகள் கழித்து நான் இன்று ஹேராமை கொண்டாடி வருகிறேன்.
நூறாண்டுகள் கழித்து என்னை விட சிறப்பாக ஹேராமை கொண்டாட வேறொருவன் வருவான்.
அதற்கான தகுதி ஹேராமிற்கு இருக்கிறது.

அடுத்த ஹேராம் பதிவிற்கு...  நண்பர் ‘ஹாலிவுட் பாலா’ உதவியிருக்கிறார்.
ஏன்?எதற்கு? எப்படி?...அறிய காத்திருங்கள்.
  




Aug 5, 2012

மணிரத்னத்தை காப்பியடித்த... வெள்ளைக்காரன்


மணிரத்னம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தி பிடித்த வித்தகன்.
ஆர்ப்பரித்து அலறாமல்....அமைதியாக அவரது படைப்புகளை முன் வைக்கும் பாங்கை ...அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய உதாரணம்.

காப்பி...காப்பி...என்று நமது பதிவுலகில் தொடர்ந்து முழங்கி வருகிறார்கள் பலர்.
நானும் அவர்களை பின் தொடர முடிவு செய்து விட்டேன்.
காப்பியடிப்பவர்களை பிடிப்பதில்...தமிழ்நாடு போலிசுக்கு இணையாக செயல் பட்டு வருகிறார் எனது நண்பர்... ‘கருந்தேள்’ ராஜேஷ்.
அவருக்கு , ‘ஹாலிவுட்’... ‘கொழந்த’....மனசு.
நம்ம  பிள்ளையை... அடிச்சு வளர்த்தா போதும்னு நினைக்கிறாரு.
அவர் வழியில்... நானும் காப்பியடிக்கும் கனவான்களை காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.
ஆனால்  ‘என் வழி தனி வழி’.

நான் ஹாலிவுட்  ‘காப்பியர்களை’ காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.
ஏற்கெனவே சுஜாதா கதையை காப்பியடித்த  ‘அன் நோன்’
[Un Known]திரைப்படத்தை  ‘வெளுத்தெடுத்த’ அனுபவம் இருக்கிறது.


நம்ம மணிரத்னம்  ‘தில் சே’ - 1998 [ ஹிந்தி ] எடுத்து தமிழில்  'உயிரே'ன்னு டப் செய்து வெளியிட்டார்.
வட கிழக்கிந்திய மாநிலங்களில் இன்று வரை நிகழும்  ‘சிவில் யுத்தத்தை’
மெல்லிய இழையாக்கி..காதலை முதன்மையாக்கி எடுத்திருந்தார்.

ஷாருக்கான்  ‘சைய்யா...சைய்யா’ன்னு குதிச்சுகிட்டு...டிரெய்ன் மேல
ஆடுவாரு.
கூடவே மலாக்கான்னு ஒரு அக்கா இடுப்பை வெட்டுவாங்க...

ஊட்டி ரயில... பெயிண்ட் பண்ணி 15 நாள் சூட் பண்ணி எடுத்தாரு.
‘அகிலா’ன்னு ஒரு கிரேன் புதுசா வந்த நேரம்.
அந்த கிரேன் 150 அடி உயரம் மேலே போவும்.
‘அகிலாவுக்கு’...அந்த பாட்டுதான்  ‘டெமோ’.
இண்ணைக்கு வரைக்கும்  ‘ஒரு பய’ டிரெய்ன்ல பாட்டு ஷூட் பண்ண முடியாது.
அந்த பாட்டை ஒவர்டேக் பண்ணவே முடியாது.

அந்த பாட்டு உலகமெல்லாம் ஹிட்டடித்து ரஹ்மானுக்கு மிகப்பெரிய பிரேக். ஒரு வெள்ளைக்காரன் ரஹ்மான்கிட்ட  ‘ரைட்ஸ்’ வாங்கி... ‘இன்சைட் மேன்’ [Inside Man] என்ற ஹாலிவுட் படத்தில் அந்த பாட்டை பயன்படுத்தினான். 

இந்தப்படத்தின் கதையை Tigmansha Dhulisa , Maniratnam, Sujatha  மூணு பேரும் சேர்ந்து உருவாக்கியிருக்காங்க.
 மனிஷா கொய்ராலா... மலை வாழ் மகள்.
ஷாருக்கை காதலிச்சு..தீடிர்னு காணாம போயிருவா.
அந்த துக்கத்தை மறக்க, ‘பிரித்தி ஜிந்தான்னு’ ஒரு ஜாங்கிரியை கல்யாணம் பண்ற நேரம்...
திரும்ப மனிஷா  ‘எண்ட்ரி’.
ஷாருக்கை குழப்பி...நம்மையும் குழப்பி...
மனிஷா... ஒரு  ‘மனித வெடிகுண்டு’ன்னு முடிச்சிருப்பாங்க.


இந்தக்கதையை பட்டி பார்த்து  ' Luc Besson ' என்ற ஜாம்பவான்... காசு பாத்திட்டாரு.
அவன்  தயாரிப்பில்... ‘ஜான் டிரோவோல்டோவை’ நடிக்க வச்சு.. ‘ஃப்ரம் பாரிஸ் வித லவ்’-2010 \ ஆங்கிலம்    என்ற படத்தை எடுத்து ஹிட்டாக்கி கல்லா கட்டிட்டான்.

ஆனா...மணிரத்னம் கிளைமாக்ஸ் சூப்பீரியரா இருந்துச்சு.
இந்திய கலாச்சாரப்படி, காதலை விட்டுக்கொடுக்காத காதலனும்...கொள்கையை விட்டுக்கொடுக்காத காதலியும் இணைந்து உயிரை விடுவார்கள்.
ஹாலிவுட் படத்தில்...கொள்கைக்காக காதலியை மட்டும் சாகடிச்சு...காதலனை தப்பிக்க வச்சிருப்பாங்க.
இப்படி மசாலா கிளைமாக்ஸ் வச்சா... நல்லா கல்லா கட்டலாம்.

 ‘மலை வாழ் மகளை’  ‘முஸ்லீம்னு ’ ஒரு  ‘சேஞ்சு’ கொடுத்தான்...
‘சேஞ்சை’ அள்ளிட்டான்.
டெரரிஸ்ட்னா... முஸ்லீம்தான்னு ஹாலிவுட்காரன் தொடர்ந்து ரூல் எழுதிகிட்டு இருக்கான்.    
‘பிர்பால பதிவருன்னு’ நக்கலடிக்கும்  ‘நல்லவர்கள்’ இதப்பத்தி மூச்சே வுட மாட்டாங்க...
ஆனா  ‘கமல்ஹாசன்’ முஸ்லீம் இன விரோதின்னு சொல்லிட்டுதான் டெய்லி  ‘மூச்சா’ போவாங்க.


உதாரணத்துக்கு  ‘தசாவதாரம்’ன்னு ஒரு சாதா மசால் தோசை படம். அதுல..பத்து அவதாரத்துல ஒண்ணா... உயரமா  ‘பீம்பாய்’ கேரக்டர் ஒண்ணு படைச்சிருப்பார் கமல்.
உயரத்துக்கேத்த மாதிரியே மிக உயர்வா படைச்சிருப்பாரு.
அவ்வளவு வெள்ளந்தியா அந்த கேரக்டர் இருக்கும்.
அந்த காரெக்டர், உலகத்தில் உள்ள அனைவரையும் நல்லவங்களா பாக்கும். அந்த காரெக்டருக்கு கெட்டதே தெரியாது. எப்பேர்பட்ட உயர் படைப்பு !.


 ‘தசாவதாரம்’ நாயுடு காரெக்டர் ஒரு சீன்ல சொல்வாரு...
“எல்லோரும் முஸ்லீம்களா...
அப்ப எல்லோரும் டெர்ரரிஸ்ட்தான்....
அவ்வளவு பேரையும் அரஸ்ட் பண்ணுங்க ”

முஸ்லீம் இன மக்கள் எல்லோரையும் தீவிரவாதிகள்தான் எனப்பார்க்கும் பொது புத்தியை நக்கலடித்தவர் கமல்.
நானும், ‘காது... கேட்காது’ எனத்தெரிந்தே...  தொடர்ந்து சங்கு ஊதுகிறேன்.
கண் மூடிய பூனைகள்... இருட்டென்றே புலம்பட்டும்.
 அடுத்த பதிவில்... நம்ம ரஜினி படத்தை காப்பியடிச்ச காப்பியரை...
காட்டி கொடுப்பேன்.
காத்திருங்கள்.

உயிரே படப்பாடலை காணொளியில் காண்க...

Mar 8, 2012

Casablanca-1942[English]உலகின் No1 முக்கோணக்காதல் திரைப்படம்.


காஸாபிளாங்கா ஆர்டிக் முதல் அண்டார்டிக்கா வரை அனைவராலும் விரும்பிப்பார்க்கப்படும் ஒரே காதல் திரைக்காவியம்.
அமெரிக்காவில் இன்று திரையிட்டாலும் ஹவுஸ்புல் ஆக்கி அழகு பார்ப்பார்கள் காஸாபிளாங்கா காதலர்கள்.
பிளாக்&ஒயிட் பியூட்டியான இக்காவியத்தை தொழில் நுட்ப உதவியால்
வண்ணதிரைப்படமாக்கி வெளியிட்ட போது ரசிகர்கள் பொங்கி எழுந்து விட்டனர்.
எதிர்ப்பை கண்டு அஞ்சி அனைத்து பிரிண்டுகளையும் வாபஸ் பெற்றது வரலாறு.
இப்படத்தை இயக்கி சாதனை படைத்தவர் ‘த கிரேட்’ மைக்கேல் கர்டிஸ்.

முக்கோணக்காதல் கதையை படமாக்குபவர்களுக்கு காஸாபிளாங்காதான் இலக்கணம்.
தமிழில் வந்த ஸ்ரீதரின் நெஞ்சில் ஒரு ஆலயம்....
கே.விஸ்வநாத்தின் சலங்கை ஒலி முதலிய படங்கள்....
காஸாபிளாங்காவின் குட்டிகளே!

நான் பதிவெழுதும் சாக்கில் இப்படத்தை மீண்டும் ஒரு தடவை பார்த்தேன்.
சில காட்சிகளை மட்டும் திரும்ப திரும்ப ரிவைண்ட் செய்து எப்போதும் போல் பார்த்தேன்.
காரணம் இங்கிரிட் பெர்க்மன்.

இந்த பிரபஞ்சத்திலேயே இங்கிரி பெர்க்மன் போல பேரழகி....
அன்றும் இல்லை...
இன்றும் இல்லை.....
என்றும் இல்லை.......
பிரம்மன் தனது மொத்த சக்தியையும் பிரயோகித்து செய்த படைப்பு....
இங்கிரிட் பெர்க்மன்.
இப்போதெல்லாம் பிரம்மன் அழகான பெண்களை படைக்க...
இங்கிரிட் பெர்க்மனைத்தான் மாடலாக வைத்து படைக்கிறார்.
உ.ம் : நம்மூர் ஸ்ரீதேவி,ஐஸ்வர்யா ராய்.

இங்கிரிட் பெர்க்மனை ஒவ்வொரு ஷாட்டிலும் தேவதை மாதிரி ஜொலிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் எடிசன்.

அழும் போது கூட அழகாக ஜொலிப்பது என் கனவு தேவதைதான்.
என் துரதிர்ஷ்டம்...அவர் இறந்து போய் விட்டார்.
இல்லையென்றால் இன்றே புறப்பட்டுப்போய் திருமணம் செய்திருப்பேன்.
ம்ம்ம்ம்ஹூம்ம்ம்ம்.....[ஏக்க பெருமூச்சு சுடுகிறதா?]

சரி...கதைக்கு வருவோமா!
காஸாபிளாங்கா.... இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனிஆக்கிரமித்த பிரான்ஸ் காலனிப்பகுதி.
படத்தின் நாயகன் ஹம்ப்ரி பொகார்ட் காசாபிளாங்காவில் உல்லாச விடுதி நடத்தி வரும் நல்லவர்.
லஞ்சப்பேர்வழியான காவல்துறை உயர் அதிகாரியை கைக்குள் போட்டுக்கொண்டு பலரை... அமெரிக்காவுக்கு தப்பி செல்ல உதவி வருகிறார்.
அப்படி உதவி கேட்டு வருகிறார்கள் இங்கிரிட் பெர்க்மனும் அவரது கணவரும்.
உதவ மறுக்கிறார் பொகார்ட்.
ஏனென்றால் இங்கிரிட் அவரை பாரீசில் வைத்து ஏமாற்றி ஒடிப்போன காதலி.
இதற்க்குப்பிறகு வரும் அனைத்து காட்சிகளும் முக்கோணக்காதலின் இதிகாச பக்கங்கள்.

இனி இப்படத்தின் படப்பிடிப்பில் இடம் பெற்ற ஒரு சம்பவம்....
கண்வனையும்...காதலனையும் உயிருக்குயிராக நேசிக்கும் காட்சிகளே தொடர்ந்து படமாக்கப்பட்டதில் குழம்பிப்போய் இங்கிரிட் பெர்க்மன் இயக்குனரிடம் கேட்டார்...
 “இப்படத்தில் நான் யாரை உண்மையாக காதலிக்கிறேன்?”
இயக்குனர் சொன்னாராம்...
 “எனக்கும் தெரியல....இப்போதைக்கு இருவரையும் காதலித்து வை” .
ஆனால் படம் பார்க்கும் நமக்கு அந்த குழப்பம் வராது.
இங்கிரிட் பெர்க்மன் போகார்டுக்கு கொடுக்கும் ஸ்பெஷல் கிஸ் தெளிவாக்கி விடும்.

இப்படத்தில் வரும் டயலாக் “Play it Sam" உலக பிரசித்தம்.
பிரபல இயக்குனர் வுடி ஆலன் என்னைப்போலவே காஸாபிளாங்கா பைத்தியம்.
தனது படத்திற்க்கு "Play it Again Sam" என்றே பெயரிட்டார் என்றால் அவரது பைத்தியத்தின் அளவை தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படத்தை காதலியுடனோ...மனைவியுடனோ பார்த்து தொலைக்காதீர்கள்.
இங்கிரிட் பெர்க்மனை பார்த்து ஜொள் விடுவதை பார்த்து அவர்கள் சூடாகி விடுவார்கள்.
கூடவே அடுப்பில் ஜல்லிக்கரண்டியும் சூடாகி விடும்.
உடனே... என் காலில் உள்ள தழும்பிற்க்கு காரணம் கேட்காதீர்கள்.
நான் சொல்ல மாட்டேன்.

Oct 26, 2011

ஏழாம் அறிவை காப்பியடிக்கலாம் வாங்க....

 “ஏழாம் அறிவு படத்தை பார்த்து....
ஹாலிவுட்காரர்கள் வேண்டுமானால் காப்பியடித்துக்கொள்ளலாம் ”என ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி கொடுக்க ஹாலிவுட்டே பரபரப்பாகி சுறுசுறுப்பாகி விட்டார்கள்.

மெமண்டோ,இன்சப்ஷன் போன்ற வெற்றி படங்களை தந்த கிறிஸ்டோபர் நோலன் டீம்...

இன்சப்ஷன் ஹிட்டை தூக்கி சாப்பிட மாதிரி மெகா ஹிட் கான்சப்ட் பிடிச்சுட்டேன் என நோலன் கொக்கரிக்க
 “சார்...இந்த படத்துலயும் கனவு வருதா....
ஏன்னா...இன்சப்ஷன் நடிச்சதுல இருந்து எது கனவு?எது நிஜம்? புரியாம தவிக்கிறேன்.
இண்ணைக்கு காலையில கக்கா போகும் போது கூட அந்த கன்ப்யூசன் வந்திருச்சி...
கனவுல போறமா?நிஜத்துல போறமான்னு?
அப்புறம் சக்கரம் விட்டு கண்டு பிடிச்சேன்” என டிக்காப்ரியா பரிதாபமாக உரைக்கிறார்.

 “சார்...கவலையை உடுங்க...
எங்க ஊர் தக்காளி ஹன்சிகாதான் உங்க ஜோடி....
கேட் வின்ஸ்லேட்டையே உஷார் பண்ண பார்ட்டி நீங்க...
ஹன்சிகா உங்களுக்கு ஜூஜூபி மேட்டரு”என சந்தானம் கலாய்க்கிறார்.

டிக்காப்ரியா சந்தானத்தை பார்த்து மேலும் கலவரமாகிறார்.

“சார்...சமீப தமிழ் படங்கள் எல்லாத்தையும் பாத்தேன்.
 படத்துல கதை இருக்கோ இல்லியோ....
 இவர் இருக்காரு...
படம் பூரா ஹீரோ கூட வந்து எல்லாரையும் கலாய்ப்பாரு...
இண்ணைக்கு வெள்ளிக்கிழமைன்னு இவர் டயலாக் சொன்னாக்கூட அந்த ஊர் ஜனங்க விழுந்து விழுந்து சிரிப்பாங்க ”
என டிக்காப்ரியாவை தெளிவாக்குகிறார் நோலன்.

“சார்...நேற்று வரைக்கும் நீங்க ஹாலிவுட் ஸ்டார்.
இண்ணையிலயிருந்து நீங்க ‘மெர்க்குரிஸ்டார் டிக்கா காந்த்’
அப்புறமா உங்க ரசிகர்களை வச்சு நற்பணி மன்றம் திறந்து தையல் மிசினெல்லாம் கொடுக்கணும்.
அப்பதான் ஸ்ட்ரெயிட்டா ஒயிட் ஹவுஸ் போக முடியும்” என டிக்காப்ரியாவை மேலும் டெரராக்குகிறார் சந்தானம்.

“நான் எதுக்கு ஒயிட் ஹவுஸ் போகணும்?”என டிக்காப்ரியா மெர்சலாகி...மெமரி லாசாகி.... “அபிராமி....அபிராமி” என குணாவாகிறார்.

டைட்டானிக்,அவதார் வெற்றி படைப்புகளை தந்த ஜேம்ஸ் கேமரூன் டீம்...

டாம் க்ரூசை பார்த்து “ஒப்பனிங் சீன்ல 100 ஹெலிகாப்டர்ல வந்து இறங்குறீங்க”என ஷாக் கொடுக்கிறார் கேமரூன்.

 “நான் எப்படி ஒரே நேரத்துல 100 ஹெலிகாப்டர்ல வந்து எறங்க முடியும்?”என  டாம் க்ரூஸ் ஜெர்க்காக....
 “டாம்... ஒயிட்& ஒயிட்ல கறுப்பு கூலிங்கிளாஸ் போட்டு லாங் கோட்டு பறக்க  ஒரு ஹெலிகாப்டர்ல இறங்கி ஸ்டைலா லாங் வாக் வற்றீங்க....
பின்னாடி 99 ஹெலிகாப்டர்ல 99 பாடிகார்ட்ஸ் ஃபுல் பிளாக சூட்ல....
 கருப்பு கூலிங் கிளாஸ்ல....
வற்றாங்க...
ஃபுல் ஷாட் ஸ்லோ மோசன்தான்
ரீ ரிகார்டிங் யுவன் சங்கர் ராஜா போடறார்.இந்த மியுசிக்ல அவர் எக்ஸ்பர்ட்.
டொய்ங்...டொய்ங்னு....அலற வைப்பாரு.
அப்புறம், நான் தனி மரம் இல்ல....
ஒரு ஏக்கர் தென்னந்தோப்பு...
இரண்டு ஏக்கர் வாழை மரம்....
மூணு ஏக்கர் முந்திரின்னு பஞ்ச் டயலாக் பேஸ்ணும்”என கேமரூன்மூச்சு வாங்க டாம் மயக்கமாகிறார்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் பொங்குகிறார்.

“என் இனிய இங்கிலீஷ் மக்களே!
ஜூராசிக் பார்க்கில் டைனசரை காட்டி பயமுறுத்திய இந்த ஸ்பீல்பெர்க்
கவுபாய் மன்னன் கிளீண்ட் ஈஸ்ட்வுட் கை பிடித்து வருகிறேன்.
துப்பாக்கி பிடித்த கையில் தொரட்டி கொடுக்கப்போகிறேன்.
அந்தக்கரிசக் காட்டின் கந்தக வாசத்தை பாசத்தோடு பறிமாறப்போகிறேன்....கட்..கட்
 யாருப்பா.... கேமரா பீல்டுக்குள்ளே....

அய்யா...அய்யா....எஞ்சாமி.....நா...நல்லா வேசம் கட்டுவேய்யா....
எங்கூர்ல ஒரு பய கூப்பிட மாட்டேங்கான்.
அய்யா...வெள்ளச்சாமி....
நீயாவது ஒரு வேசம் கொடு அய்யா...

ஒரு நாளைக்கு மூணு வேளை சோறு போட்டு முப்பது ரூவா சம்பளம்..... ஒகேவா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குவிண்டின் டொரண்டிணோ ஆபிஸ் வாசலில்....
பரிதாபமாக டாம் ஹேங்சும்,பிராட்பிட்டும்.....
டாம் ஹேங்க்ஸ்: என்னை டைரக்டர் ஒரு வருசத்துக்கு குளிக்ககூடாது...
நோ சேவிங்,நோ கட்டிங்ன்னு சொல்லிட்டாரு....
இதாவது பரவாயில்ல ...
மொத்த படத்துக்கும் ஒரே ஒரு டயலாக்தான்...
அகம்பாவம் பிடிச்ச சாமி.

பிராட்பிட்: டேய்... அது அகம்பாவம் பிடிச்ச சாமியில்லடா....
அகம் பிரம்மாஸ்மி.

டாம் ஹேங்க்ஸ்: டேய்...டேய்... நீ அந்த டயலாக்கை சூப்பரா சொல்லுற!
பேசாம என் ரோலை நீஎடுத்துக்கோ....
உன் ரோலை நான் பண்ணுறேன்...ப்ளீஸ்டா...

பிராட்பிட்: என் ரோலா...[மாட்னடா மவனே]
செம்மண் தரையில தலையை தேச்சு முடியை செம்பட்டையாக்கணும்...
டெய்லி தார்ல பல்லை விளக்கி பல்லை கருப்பாக்கணும்....
ரெண்டு கண்ணையும் ஒண்ணரைக்கண்ணா காட்ட பிராக்டிஸ் பண்ணணும்...அப்புறம்...
டேய்...டேய்..எங்க ஒடுற....இருடி....தப்பிக்க மட்டும் முடியாது.

Oct 23, 2011

The Secret of Santa Vittoria-1969[ஆங்கிலம்]குடிமகனே...பெருங்குடிமகனே...


அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

கம் செப்டம்பர் போன்று இப்படமும் ஜாலி தீபாவளி.இப்படத்தின் டிவிடி சமீபத்தில்தான் கிடைத்தது.
உடனே பார்த்தற்க்கு காரணம் அண்டனி க்வீன்.

அவரது பரம ரசிகன் நான்.
ஒமர் முக்தாரில் தொடங்கிய காதல் இன்று வரை குறையவில்லை.
திரையில் அவர் தோன்றினால் எதிரில் இருக்கும் அனைவரும் பணால்.
ஹாலிவுட்டில் ஜாலியாக படமெடுப்பதில் சூரர் ஸ்டான்லி கிராமர்.

அவர் அண்டனியோடு இணைந்து நடத்திய ஜாலி அராஜகம்தான் இப்படம்.
படம் பார்த்து முடித்த பின் இப்படைப்பாளிகளுக்கு மனசார...
நான் சொன்ன வார்த்தை...
சியர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

சாண்டா விட்டோரியா மக்களுக்கு ஒரே தொழில் திராட்சை பயிரிடுவது...
பயிரிட்ட திராட்சையிலிருந்து ஒயின் தயாரிப்பது.
இரண்டாம் உலகப்போரில் முசோலினி வீழ்ச்சியில் படம்துவங்குகிறது.
பாஸிஸ்டுகள் வீழ்ந்த குழப்பத்தில் குடிகாரக்கோமாளி பாம்பிலோனா[அண்டனி க்வீன்] மேயராகி விடுகிறான்.


மேயரான கெத்தில் வீட்டுக்கு போனால் மனைவியின் வரவேற்ப்பு தனியாக இருக்கிறது.
பாம்பிலோனாவை அவனது மனைவி தினமும் கடவுளாக நினைத்து அர்ச்சிப்பவள்.
நாயே...
பேயே...
உதவாக்கரையே...
தண்டச்சோறே...
குடிகார மட்டையே....
என ஸ்பெஷல் கந்தசஷ்டி மூலம் தினமும் பூஜிப்பவள்....
மேயர் ஸ்பெஷலாக பூரிக்கட்டை சாமரம் வீசுகிறாள்.[இப்படத்தை என் மனைவிக்கு காட்டப்போவதில்லை]

எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற வடிவேலுவாக இக்காட்சியில் அண்டனியின் நடிப்பு சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ப்

காலையிலேயே பல் விளக்காம குடிச்சு ஏத்துன போதையை இறக்குர மாதிரி பேரிடி செய்தி வருகிறது.
ஜெர்மன் ராணுவம் இவர்கள் கிராமத்தை ஆக்கிரமிக்க வந்து கொண்டிருக்கிறார்கள்
என்பதே பேரிடி.
மொத்த கிராமத்தின் சொத்தாக இருப்பது ஒரு மில்லியனுக்கும் மேற்ப்பட்ட ஒயின் பாட்டில்கள்.
ஜெர்மன் ராணுவத்திற்க்கு தெரியாமல் எப்படி ஒளித்து வைக்கிறார்கள்?
ஒளித்ததை கண்டெடுத்தார்களா?
என்பதே படம்.
இப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை அப்படியே சுட்டு ஷோலே திரைப்படத்தில் வைத்துள்ளார்கள்.
தண்ணியடித்து விட்டு....
உயரமான வாட்டர்டேங்கில் நின்று தள்ளாடிக்கொண்டு....
“குதித்து விடுவேன்” என்று ஊர் மக்களை அண்டனி மிரட்டியதை ஷோலேயில்
தர்மேந்திரா ஜெராக்ஸ் செய்தார்.

சீரியசான ஒரு சம்பவத்தை நகைச்சுவை கலந்து தருவதற்க்கு தனி சாமர்த்தியம் வேண்டும்.
அதில் அன்றும்..இன்றும்...என்றும்... மாஸ்டர் சாப்ளின்தான்.
அதற்க்கு அடுத்த வரிசையில் முதலிடம் ஸ்டான்லி கிராமருக்கு கொடுக்கலாம்.

படம் பார்த்து முடிந்ததும் சாண்டா விட்டோரியா ஒயின் குடிக்கணும் போல நாக்கு நமநமக்குது.
கிடைக்குமா நண்பர்களே....

விருதுகள் விபரம்:
[தகவல் உபயம் விக்கிபீடியா]

The film was nominated for two Academy Awards for Film Editing (William A. Lyon and Earle Herdan) and Best Music Score (Ernest Gold). It was nominated for an Eddie award by the American Cinema Editors, USA for best edited feature film.[1]
The film won the Golden Globe Award for Best Motion Picture Comedy and was nominated for Best Director (Stanley Kramer), Best Actor Comedy (Anthony Quinn), Best Actress Comedy (Anna Magnani), Best Original Score (Ernest Gold) and Best Original Song ("Stay", Ernest Gold and Norman Gimbel)

Sep 1, 2011

மரணதண்டனையை கண்டிக்கும் Dancer In The Dark&12 Angry Men

மரண தண்டனையை நீக்கு.... என தமிழ் நாடே கொந்தளித்தது.
போலி காங்கிரஸ்காரன் மட்டும் மரண தண்டனையை நிறைவேற்று என கூப்பாடு போட்டான்.
இடைக்கால நிவாரணம் நீதிமன்றம் வழங்கியது.
நீதிமான்களுக்கு நன்றி.
மூவரும் விடுதலை ஆகும் நன் நாளே....
 சகோதரி செங்கொடியின் ஆன்மா சாந்தியடையும்.

மரண தண்டனையை பற்றி மிக முக்கியமான இரண்டு படங்கள் வந்துள்ளன.
ஒன்று.... டான்சர் இன் த டார்க்.
மற்றொன்று.... 12 ஆங்கிரி மேன்.

டான்சர் இன் த டார்க்கை இயக்கியவர் லார்ஸ் வான் டிரயர்.

இவரது படங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிக்கும் கருத்து கண்டிப்பாக இருக்கும்.

இந்தப்படத்தில் அமெரிக்காவில் குடியேறிய ஒரு தாய் தனது மகனின் கண் பார்வை சிகிச்சைக்காக பணம் சேர்த்து வருகிறாள்.
அந்தப்பணத்தை திருடுகிறான் ஹவுஸ் ஒணர்.
இவன் ஒரு போலிஸ்காரனும் கூட...
அந்தத்தாய் தடுத்து போராடும்போது விபத்தாக துப்பாக்கி வெடித்து மரணமகிறான்.
கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்க நீதிமன்றம் அந்ததாய்க்கு மரணதண்டனையை பரிசாக வழங்குகிறது.

அகதியாக வந்தவரை கொலை வழக்கில் சிக்க வைத்து மரண தண்டனை வழங்குவதில் இந்தியாவும் அமெரிக்காவும் அண்ணன் தம்பிகள்.

12 ஆங்கிரி மேனை இயக்கியவர் சிட்னி லூமேட்.

இந்தப்படத்தின் மூலம் அமெரிக்க நீதி மன்றத்தை காயடித்திருக்கிறார்.
மிகச்சரியாகச்சொன்னால் *த்தடித்து சுண்ணாம்பு தடவியிருக்கிறார்.
12 ஜூரர்கள் ஒரு சிறுவன் வழக்கில் தீர்ப்பு சொல்ல கூடுகிறார்கள்.
வந்ததும் வராததுமாய் அந்தச்சிறுவனை குற்றவாளி என தீர்ப்பெழுத தயாராகிறார்கள்.
ஒரே ஒருவர் மட்டும் எதிர்க்கிறார்.

உண்மையை தனது வாதத்திறமையால் திறம்பட எடுத்துரைத்து மற்றவர் அனைவரையும் தனது பக்கம்...அல்ல..அல்ல...நியாயத்தின் பக்கம் இழுத்து வெற்றி காண்பதே படம்.

இந்த இரண்டு படங்களையும் பார்த்தால்....
மரண தண்டனை வேண்டும் என அடம் பிடிக்கும் பன்னாடைகள் கூட திருந்திவிடும் .

செப்டம்பர் 2 முதல் 12ம் தேதி வரை மதுரை புத்தகக்கண்காட்சியில்....
 அரங்கு எண் 15 ல்....
 உலக சினிமா டிவிடி கலெக்‌ஷன் காண வாருங்கள்.
நேரில் சந்திப்போம்.  

Jul 25, 2011

GodFather- 3 [1990] கொண்டாட்டத்தின் முடிவு மரணம்.

காட்பாதர் மூன்று பாகத்தையும் வெற்றிகரமாக திரையிட்டு விட்டோம்.
நிகழ்ச்சியை ஹிந்து பத்திரிக்கை மிக விரிவாக விமர்சனமும்...செய்தியும் வெளியிட்டது.
அப்படியிருந்தும் கூட்டம் முப்பது பேரை தாண்டவில்லை.
கூட்டம் குறைவாக இருந்தாலும் நிறைவான கூட்டம்.
ஒவ்வொருவரும் காட்பாதரை பத்து தடவைக்கு மேல் படித்தவர்கள்...பார்த்தவர்கள்.

காட்பாதர் மூன்று பாகத்தையும் எடுத்த விதம் பற்றி கொப்பல்லோ,மரியோ புஸோ,அல்பசினோ.தயாரிப்பாளர்,எடிட்டர் என சகல ஜாம்பவான்களின் பேட்டி அடங்கிய ஆவணப்படமும் திரையிட்டோம்.
படத்தின் சுவையை இது மேலும் கூட்டியது.

 “காட்பாதரை மூன்று நாளாக திரையிடுகிறீர்கள்.....
தமிழகத்தின் காட்பாதர் கலைஞர் வேறு கோவையில் பொதுக்குழு கூட்டுகிறார்......
இதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா?” என நண்பர் கேட்டார்.
இது தற்ச்செயலாக நிகழ்ந்தது.அவ்வளவே...
ஆனால் காட்பாதர் மூன்று பாகத்தையும் திரையிட சரியான இடம்
திமுக பொதுக்குழுதான்.

 காட்பாதர் மூன்றாம் பாகத்தில் கொப்பல்லோ வாட்டிகனை வாட்டியிருக்கிறார்
பொதுவாக மூன்று பாகத்திலுமே மதத்தை காயடித்திருப்பார்.
இதில் நேரடியாக வாட்டிகன் ஊழலை முதன்மை படுத்தியிருக்கிறார்.
தீய சக்திகள்தான் வாட்டிகனையும் ஆளமுடியும் என்பதை தோலுரித்து காட்டியிருக்கிறார்.

கெட்டவன் நல்லவனாக வாழ விரும்புவதை நிழல் உலகம் என்றுமே விரும்பாது.
'திருந்துபவனை தீர்த்து விடு' இதுவே அவர்களது தாரக மந்திரம்.

நிழல் உலக நரியாக இப்பாகத்தில் எலிவாலா என்ற பழைய பெருச்சாளியை நடிக்க வைத்திருக்கிறார்.
இந்த கதாபாத்திரம் முதல் இரண்டு பாகத்தில் வராதது.
இக்கதாபாத்திரத்தின் தன்மையை எலிவாலாவை போட்டதிலேயே ஆடியன்சுக்கு விளக்கி விடுகிறார் கொப்பல்லோ.
ஏனென்றால் எலிவாலாவின் இமேஜ் அப்படி.
குட் பேட் அக்ளியில்..... அக்ளியாக தோன்றி தூள் கிளப்பியவறாயிற்றே!!!!!!!.

ஒரு மனிதன் செய்த தவறுகளுக்கு தன் வாழ்நாளிலேயே தண்டனை  பெறுவான் என்ற நீதி மூன்றாம் பாகத்தில்தான் சொல்லப்படுகிறது.
எனவே மூன்றாம் பாகம் மற்ற இரண்டைப்போல வெற்றி பெறவில்லை அநீதீதான் வெற்றி பெறும் என்பது இன்றைய பாக்ஸ் ஆபிஸ் சூத்திரம்.

படத்தின் இறுதிக்காட்சி வசனமே இல்லாத கவிதை.
இது எனக்கு ஏற்ப்படுத்திய அதிர்வுகள் எனக்கே எனக்கானவை .[இதை பதிவிட மாட்டேன் என்று கொப்பல்லோ மீது சத்தியம் செய்திருக்கிறேன்]
இக்காட்சி தனிப்பட்ட வரம்.....
மூன்று பாகத்தையும் பார்த்தவர்களுக்கு கொப்பல்லோ வழங்கும் ஸ்பெசல் கிப்ட்.

இப்படத்தில் மூன்று பேர் மிக அருமையாக நடித்து உள்ளனர்.
அவர்கள் யாரென்றால்....
ஒன்று அல்பசினோ....

இரண்டாவது அல்பசினோ....


மூன்றாவது அல்பசினோ.


கீழே உள்ள புகைப்படத்தில் வரும் காட்சி மணிரத்தினத்தின் ஒரு படத்தில் இடம் பெறுகிறது.அந்தப்படம் எது?

Jul 20, 2011

காட்பாதர் மூன்றையும் திரையிடுகிறோம்.





காட்பாதரை பதிவெழுதப்போய் காட்பாதர் வைரஸ் என்னை அட்டாக் செய்து ஒரு வழி பண்ணி விட்டது.
அந்த பித்து பிடித்த நிலையை தெளிய வைக்க காட்பாதர் மூன்று பாகத்தையும் திரையிட ஏற்பாடு செய்து விட்டேன்

.கோணங்கள் பிலிம் சொசைட்டி,கோயம்புத்தூர் சினிமா கிளப்,களம் பிலிம் சொசைட்டி மூன்றையும் இணைத்து ஒரு மாபெரும் விழாவாக கொண்டாட அடியெடுத்து உள்ளேன்.

பதிவுலக நண்பர்கள் இந்நிகழ்ச்சி பற்றி தங்கள் வலைப்பக்கத்தில் எழுதியும்... ,நிகழ்ச்சி போஸ்டரையும் விளம்பரப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.
மேலும் என் இதய ராஜ்ஜியத்தில் ஒரு ஏக்கர் எழுதி தருகிறேன்.

[கோவையில் ஒரு செண்ட் இடம் கூட கிடையாது .எல்லாம் கலைஞர் பேமிலி வளைத்து போட்டு விட்டது..அதான்..இதயத்தில் இடம்...ஹி..ஹி..ஹீ..]

Jul 13, 2011

காட்பாதரை பின்னுக்கு தள்ளிய படம்!


காட்பாதரின் மகத்தான வெற்றிக்கு பிறகு பாரமவுண்ட் நிறுவனம் இரண்டாம் பாகத்தை எடுத்து காசு பார்க்கதுடித்தது.
ஹாலிவுட்டில் இது குல வழக்கம்.
கொப்பல்லாவை அணுகிய போது மறுத்து விட்டார்.
காட் பாதரின் மொத்த எஸென்சையும் கண்டு பிடித்து முதல் பாகத்திலேயே வைத்து விட்டதால் இரண்டாம் பாகம் வேலை செய்ய சுவாரஸ்யம் இருக்காது என கருதினார்.
இதுதான் ஒரு படைப்பாளின் இயற்க்கையான குணம்.
கொப்பல்லோவின் ஸ்டேட்மெண்ட் இதோ...
 “கொக்கோ கோலாவின் பார்முலா தெரிந்த பிறகு அதன் பின் ஆராய்ச்சியில் சுவாரஸ்யம் இருக்காது”
பாரமவுண்ட் தொடர்ந்து வற்ப்புறுத்தவே மீண்டும் காட்பாதரை ஆய்வு செய்தார்.
இரண்டாம் பாகத்திற்க்கான சூத்திரத்தை கண்டு பிடித்து விட்டார்.
அதன் பின் பாரமவுண்டுக்கு மூன்று கண்டிசன் போட்டார்.
முதலாவது... படைப்பு சுதந்திரம்
இரண்டாவது...மிகப்பெரிய சம்பளம்.
மூன்றாவது...படத்தின் பெயர் காட்பாதர் 2
முதல் இரண்டுக்கும் தலையாட்டிய பாரமவுண்ட் மூண்றாவதுக்கு அலறியது....
நோ....
இறுதியில் ஜெயித்தது கொப்பல்லோ!


காட்பாதரை விட காட்பாதர் 2 அதன் உள்ளடக்கம்,கட்டமைப்பு,பிரம்மாண்டம்,வசூல் எல்லாவற்றிலும் சுப்பீரியராக அமைந்து விட்டது.
வழக்கமாக இது போல் எடுக்கப்படும் தொடர் பாகங்கள் தரத்தில் பின் தங்கி விடும்.
ஹாலிவுட் வரலாற்றிலேயே முதல் பாகத்தை விஞ்சியது காட்பாதர் 2 மட்டுமே!
 இன்றும் முறியடிக்கப்படாத இச்சாதனைக்கு நாயகன் கொப்பல்லோதான்

முதல் பாகத்தின் மைய இழை... மார்லன் பிரண்டோவிடம் இருந்து அல்பசினோவிடம் பவர் டிரான்ஸ்பர் ஆவது.
மூன்று மகன்கள் இருந்தாலும் மூன்றாவது மகன் தான் தனது வாரிசாக வரமுடியும் எனக்கணித்து காய் நகர்த்துவார் பிராண்டோ.
அல்பசினோ இந்த மாபியா விளையாட்டே வேண்டாம் என ஒதுங்கிப்போய் விதியின் வசத்தால் தந்தை இடதில் அமர்த்தப்படுகிறார்.

இரண்டாம் பாகத்தில் மார்லன் பிரண்டோ எப்படி காட்பாதராக உருவானார் என்பதையும் குடும்பத்தை கட்டிக்காத்து உறவுகள் சிதையாம ல் பிசினஸ் சாம்ராஜ்யத்தை எப்படி கட்டமைத்தார் என்பதை ஒரு கோணத்திலும்...
 பிரண்டோவிலிருந்து விலகி அல்பசினோ குடும்பத்தை சிதைத்து பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்த போராடுவதை மற்றொரு கோணத்திலும் காட்டி திரைக்கதையில் சாதனை படைத்தார்.

முதல் பாகத்திலேயே சகோதரியின் கணவரை போட்டு தள்ளியாச்சு...
இரண்டாம் பாகத்தில் அண்ணனை கொன்று விடுகிறார்.
காரணம்????????
அண்ணன் நானிருக்க தம்பி பதவிக்கு வருவதா????  என அண்ணன் தம்பியை கொல்ல முற்ச்சிக்க தம்பி தப்பித்து அண்ணனை போட்டு தள்ளுகிறான்.
 “மன்னிப்பு இத்தாலியில எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை”

தந்தைக்கு இல்லாத நெருக்கடி தனையனுக்கு...
நாலு பேர் ந்ல்லா இருக்க ஒருவரை போட்டு த்தள்ளியது பிராண்டோ காலம்.
ஒருவன் நல்லா இருக்க நாலு பேரை போட்டு தள்ளுவது அல்பசினோ காலம்.


இந்த இரண்டு பாகங்களையும் தொடர்ச்சியாக நீங்கள் பார்க்கும் போது கலைஞர் பேமிலி ஞாபகத்துக்கு வந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...

இப்படத்தில் வரும் கோர்ட் சீன் மிரட்டலாக இருக்கும்.
நீதிக்கும்,மாபியாவின் சாகசத்திற்க்கும் நடக்கும் மாய விளையாட்டை ரசிக்கலாம்.
தனக்கு எதிராக சாட்சி சொல்பவனுக்கு பேதி கொடுக்க அவனது அண்ணனை தன்னோடு கூட்டிக்கொண்டு வருவார் அல்பசினோ.
அந்த ஆள் பார்ப்பதற்க்கு மத யானை தோற்றம்...
கண்களில் சினம் கொண்ட சிங்கத்தின் சீற்றம்.
ஜட்ஜிலிருந்து மொத்த கோர்ட்டே நடுங்கி விடும்.
சாட்சியாவது...மண்ணாவது...அடி..அந்தர்பல்டி....
படத்தின் உச்சபட்ச நகைச்சுவை காட்சியாக பரிணமிக்கும்.

படத்தின் ஆரம்பக்காட்சி மிக முக்கியமானது.
இத்தாலியில் லோக்கல் மாபியாவால் தந்தை கொலை செய்யப்படுகிறார்.
பழி வாங்க குடும்பத்தில் ஒருவரையும் மிஞ்சவிடக்கூடாது என்பது மாபியா மரபு.
இந்தக்காட்சிகள் எனக்கு உணர்த்தும் உண்மைகள்...
படம் பார்க்கும் ஈழத்தமிழர்கள் அனைவரும் உணர முடியும்.
பிரபாகரன் இப்படத்தை பார்த்திருக்க மாட்டார்...
பார்த்திருந்தால் ராஜீவ் காந்தியை கொன்றிருக்க மாட்டார்.
இதற்க்கு மேல் என்னால் விரிவாக எழுத முடியாது.
அடுத்தப்பதிவெழுத... இருக்க வேண்டும்.

சினிமாவின் தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்கு...புரிந்தவர்களுக்கு ஒரு செய்தி...
சோவியத் ரஷ்யாவின் இண்டலக்சுவல் மாண்டேஜ் தியரியை திரைக்கதையில் புகுத்தி வெற்றி கண்டிருக்கிறார் கொப்பல்லோ என்று எனக்குப்படுகிறது.
சரிதானா!!!!!