Mar 8, 2012

Casablanca-1942[English]உலகின் No1 முக்கோணக்காதல் திரைப்படம்.


காஸாபிளாங்கா ஆர்டிக் முதல் அண்டார்டிக்கா வரை அனைவராலும் விரும்பிப்பார்க்கப்படும் ஒரே காதல் திரைக்காவியம்.
அமெரிக்காவில் இன்று திரையிட்டாலும் ஹவுஸ்புல் ஆக்கி அழகு பார்ப்பார்கள் காஸாபிளாங்கா காதலர்கள்.
பிளாக்&ஒயிட் பியூட்டியான இக்காவியத்தை தொழில் நுட்ப உதவியால்
வண்ணதிரைப்படமாக்கி வெளியிட்ட போது ரசிகர்கள் பொங்கி எழுந்து விட்டனர்.
எதிர்ப்பை கண்டு அஞ்சி அனைத்து பிரிண்டுகளையும் வாபஸ் பெற்றது வரலாறு.
இப்படத்தை இயக்கி சாதனை படைத்தவர் ‘த கிரேட்’ மைக்கேல் கர்டிஸ்.

முக்கோணக்காதல் கதையை படமாக்குபவர்களுக்கு காஸாபிளாங்காதான் இலக்கணம்.
தமிழில் வந்த ஸ்ரீதரின் நெஞ்சில் ஒரு ஆலயம்....
கே.விஸ்வநாத்தின் சலங்கை ஒலி முதலிய படங்கள்....
காஸாபிளாங்காவின் குட்டிகளே!

நான் பதிவெழுதும் சாக்கில் இப்படத்தை மீண்டும் ஒரு தடவை பார்த்தேன்.
சில காட்சிகளை மட்டும் திரும்ப திரும்ப ரிவைண்ட் செய்து எப்போதும் போல் பார்த்தேன்.
காரணம் இங்கிரிட் பெர்க்மன்.

இந்த பிரபஞ்சத்திலேயே இங்கிரி பெர்க்மன் போல பேரழகி....
அன்றும் இல்லை...
இன்றும் இல்லை.....
என்றும் இல்லை.......
பிரம்மன் தனது மொத்த சக்தியையும் பிரயோகித்து செய்த படைப்பு....
இங்கிரிட் பெர்க்மன்.
இப்போதெல்லாம் பிரம்மன் அழகான பெண்களை படைக்க...
இங்கிரிட் பெர்க்மனைத்தான் மாடலாக வைத்து படைக்கிறார்.
உ.ம் : நம்மூர் ஸ்ரீதேவி,ஐஸ்வர்யா ராய்.

இங்கிரிட் பெர்க்மனை ஒவ்வொரு ஷாட்டிலும் தேவதை மாதிரி ஜொலிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் எடிசன்.

அழும் போது கூட அழகாக ஜொலிப்பது என் கனவு தேவதைதான்.
என் துரதிர்ஷ்டம்...அவர் இறந்து போய் விட்டார்.
இல்லையென்றால் இன்றே புறப்பட்டுப்போய் திருமணம் செய்திருப்பேன்.
ம்ம்ம்ம்ஹூம்ம்ம்ம்.....[ஏக்க பெருமூச்சு சுடுகிறதா?]

சரி...கதைக்கு வருவோமா!
காஸாபிளாங்கா.... இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனிஆக்கிரமித்த பிரான்ஸ் காலனிப்பகுதி.
படத்தின் நாயகன் ஹம்ப்ரி பொகார்ட் காசாபிளாங்காவில் உல்லாச விடுதி நடத்தி வரும் நல்லவர்.
லஞ்சப்பேர்வழியான காவல்துறை உயர் அதிகாரியை கைக்குள் போட்டுக்கொண்டு பலரை... அமெரிக்காவுக்கு தப்பி செல்ல உதவி வருகிறார்.
அப்படி உதவி கேட்டு வருகிறார்கள் இங்கிரிட் பெர்க்மனும் அவரது கணவரும்.
உதவ மறுக்கிறார் பொகார்ட்.
ஏனென்றால் இங்கிரிட் அவரை பாரீசில் வைத்து ஏமாற்றி ஒடிப்போன காதலி.
இதற்க்குப்பிறகு வரும் அனைத்து காட்சிகளும் முக்கோணக்காதலின் இதிகாச பக்கங்கள்.

இனி இப்படத்தின் படப்பிடிப்பில் இடம் பெற்ற ஒரு சம்பவம்....
கண்வனையும்...காதலனையும் உயிருக்குயிராக நேசிக்கும் காட்சிகளே தொடர்ந்து படமாக்கப்பட்டதில் குழம்பிப்போய் இங்கிரிட் பெர்க்மன் இயக்குனரிடம் கேட்டார்...
 “இப்படத்தில் நான் யாரை உண்மையாக காதலிக்கிறேன்?”
இயக்குனர் சொன்னாராம்...
 “எனக்கும் தெரியல....இப்போதைக்கு இருவரையும் காதலித்து வை” .
ஆனால் படம் பார்க்கும் நமக்கு அந்த குழப்பம் வராது.
இங்கிரிட் பெர்க்மன் போகார்டுக்கு கொடுக்கும் ஸ்பெஷல் கிஸ் தெளிவாக்கி விடும்.

இப்படத்தில் வரும் டயலாக் “Play it Sam" உலக பிரசித்தம்.
பிரபல இயக்குனர் வுடி ஆலன் என்னைப்போலவே காஸாபிளாங்கா பைத்தியம்.
தனது படத்திற்க்கு "Play it Again Sam" என்றே பெயரிட்டார் என்றால் அவரது பைத்தியத்தின் அளவை தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படத்தை காதலியுடனோ...மனைவியுடனோ பார்த்து தொலைக்காதீர்கள்.
இங்கிரிட் பெர்க்மனை பார்த்து ஜொள் விடுவதை பார்த்து அவர்கள் சூடாகி விடுவார்கள்.
கூடவே அடுப்பில் ஜல்லிக்கரண்டியும் சூடாகி விடும்.
உடனே... என் காலில் உள்ள தழும்பிற்க்கு காரணம் கேட்காதீர்கள்.
நான் சொல்ல மாட்டேன்.

13 comments:

  1. நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ப்ளாக் அன்ட் வைட், பழைய படம் ... க்வாலிட்டி கம்மியாக இருக்கும் என்பதால் பார்க்கவில்லை. அண்மையில் தான் ஒரு மூட் வந்து Psychoவையே பார்த்தேன். என் தப்பு அப்பத் தான் புரிந்தது.

    விமர்சனம் கலக்கல் நண்பரே. சீக்கிரமே பார்க்கிறேன்.

    // “இப்படத்தில் நான் யாரை உண்மையாக காதலிக்கிறேன்?”
    இயக்குனர் சொன்னாராம்...
    “எனக்கும் தெரியல....இப்போதைக்கு இருவரையும் காதலித்து வை” . //

    சூப்பர் ...

    ReplyDelete
  2. இது காஸபிளாங்கா பதிவா? இங்கிரிட் பேர்க்மன் பதிவா?

    ReplyDelete
  3. @ஹாலிவுட் ரசிகன்

    //ப்ளாக் அன்ட் வைட், பழைய படம் ... க்வாலிட்டி கம்மியாக இருக்கும் என்பதால் பார்க்கவில்லை.//

    நண்பரே! நிறைய பேர் இது போன்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
    ஆனால் காஸாபிளாங்கா,சிட்டிசன் கேன் பார்த்தால் திருந்தி விடுவார்கள்.
    அதன் பிறகு பிளாக்&ஒயிட் படம் பார்க்கும் ஜூரம் தொற்றி விடும்.

    ReplyDelete
  4. @JZ
    //இது காஸபிளாங்கா பதிவா? இங்கிரிட் பேர்க்மன் பதிவா?//

    இதை..இதை..இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்.
    இருந்தாலும் எனது இங்கிரிட் பெர்க்மன் மீதான காதலை கட்டுப்படுத்தி இவ்வளவுதான் எழுத முடிந்தது.

    ReplyDelete
  5. வணக்கம் அண்ணா, நலமா ?
    இப்போதெல்லாம் அடிக்கடி தங்களது எழுத்துக்களை வாசிக்க முடிகிறது.மகிழ்கிறேன்..
    இப்பதான் இரண்டு நாட்களுக்கு முன்பு டவுன்லோடு லிங்கை எடுத்து வைத்தேன்..அதற்குள் என்ன சிறப்பான திரைப்பார்வை.

    /// இங்கிரிட் பெர்க்மன்.
    இப்போதெல்லாம் பிரம்மன் அழகான பெண்களை படைக்க...
    இங்கிரிட் பெர்க்மனைத்தான் மாடலாக வைத்து படைக்கிறார்.///

    சகோ, சில நாட்களுக்கு முன்பு பெர்க்மன் எடுத்த Autumn Sonata (1978) படத்தை பார்த்தேன்.இவரும் லிவ் உல்மனும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்..அழகான நடிகை..நானும் ஒரு சில முறைகள் உணர்ந்த ஒன்று..பழைய படங்களை பார்த்தால்தான் இவரது அழகையும் நடிப்பையும் உணர முடியும்.

    உங்களுக்கு மீண்டும் நன்றி, Play it Again Sam படத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு.

    // அதன் பிறகு பிளாக்&ஒயிட் படம் பார்க்கும் ஜூரம் தொற்றி விடும்//
    எனக்கும் இந்த அனுபவம் உண்டு அண்ணா.ஆனால், இது ஹிட்ச்காக் படங்கள் பார்த்து வந்தவை.

    திரைப்படம் குறித்தான தங்களது வெறி, ரசித்த விதத்தை எழுத்துக்களே நிரூபிக்கின்றன.அவ்வளவு எளிய தமிழில் எல்லாரையும் கவர்ந்திடும்படியான விமர்சனம்.ரொம்ப நன்றி.

    ReplyDelete
  6. செம படம்..,படத்தோட வசனங்கள மறக்க முடியுமா We will always have Paris .. என்னா டயலாக்..

    //க்வாலிட்டி கம்மியாக இருக்கும் என்பதால் பார்க்கவில்லை.//

    Casablanca 720p ஸ்கிரிஸ் ரெஸலுஸனில் அருமையான பிரிண்ட் டோரண்டில் கிடைக்கிறது...

    ReplyDelete
  7. @குமரன்
    தம்பி...வருகைக்கும்...பாராட்டுக்கும்....நன்றி.

    //இப்போதெல்லாம் அடிக்கடி தங்களது எழுத்துக்களை வாசிக்க முடிகிறது//
    இனி ஆகஸ்ட் மாதம்தான் புத்தகக்கண்காட்சி.அது வரை அடிக்கடி எழுதுவேன்.

    ReplyDelete
  8. @குமரன்

    //சில நாட்களுக்கு முன்பு பெர்க்மன் எடுத்த Autumn Sonata (1978) படத்தை பார்த்தேன்.//

    தம்பி...பெர்க்மன் படங்கள் பார்க்க ஆரம்பித்து விட்டாயா!உன் சினிமா ரசனை உயர்ந்து வருகிறது.
    இன்னும் கொஞ்ச காலத்தில் என்னையெல்லாம் தூக்கி சாப்பிட வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  9. @ஆனந்த்
    //செம படம்..,படத்தோட வசனங்கள மறக்க முடியுமா We will always have Paris .. என்னா டயலாக்.. //

    வணக்கம் நண்பரே!
    உலகின் தலை சிறந்த டயலாக்குகள் பட்டியலில் காஸாபிளாங்காவின் ஐந்து டயலாக்குகள் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.

    ReplyDelete
  10. கிளாசிகல் விமர்சனம்
    கிளாசிகல் படத்துக்கு.
    //தமிழில் வந்த ஸ்ரீதரின் நெஞ்சில் ஒரு ஆலயம்....
    கே.விஸ்வநாத்தின் சலங்கை ஒலி முதலிய படங்கள்....
    காஸாபிளாங்காவின் குட்டிகளே!//
    உண்மைதான் ரொம்ப சின்ன குட்டிகள் :)

    ReplyDelete
  11. @ராஜ்
    நண்பரே!
    நன்றி...
    வருகைக்கும்....பாராட்டுக்கும்

    ReplyDelete
  12. இந்தப் படத்தின் பிரபல வசனமான "உலகில் எவ்வளவோ நகரங்கள் இருக்கின்றன...அங்கு எல்லாம் அவள் செல்லாமல் இதே நகரத்தில் நான் இருந்த அதே பாரில் அவள் மீண்டும் வந்துவிட்டாளே" என்ற வசனம் மறக்க முடியாதது :-) . . இந்தப் படம் என் நண்பன் பாலுவுக்குப் பிடிக்கும் (என்று நினைக்கிறேன்).

    //Of all the gin joints in all the towns in all the world, she walks into mine//

    ReplyDelete
  13. @கருந்தேள் கண்ணாயிரம்
    வாங்க நண்பரே!
    காஸாபிளாங்கா ஜோதியில் ஐக்கியமானதற்க்கு நன்றி.

    //இந்தப் படம் என் நண்பன் பாலுவுக்குப் பிடிக்கும் (என்று நினைக்கிறேன்).//

    உங்கள் நண்பர் பாலுவுக்கு கட்டாயம் பிடித்திருக்கும்.

    கோணங்கள் பிலிம் சொசைட்டி காஸாபிளாங்கா திரையிட்ட போது வரலாறு காணாத கூட்டம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.