Mar 14, 2012

காவல்கோட்டம்-வலிமை...பெருமை...[பாகம் ஒன்று]

ஜனவரியில் வாங்கிய காவல்கோட்டம் இப்போதுதான் படிக்க முடிந்தது.
சரித்திர நாவல் என்றாலே கல்கியும்...சாண்டில்யனும்தான் நமக்கு முன்னோடி தெய்வங்கள்.

சுஜாதா முதன்முறையாக ரத்தம் ஒரே நிறத்தில் புதிய பாதையை காட்டினார்.
சரித்திரமும் புதினமும் அற்ப்புதமாக கலந்து அவர் செய்த ரஸவாத வித்தையால் பிரிட்ஷ் காலத்து சென்னையை தரிசிக்க முடிந்தது.

பிரபஞ்சனது ‘வானம் வசப்படும்’... ஆனந்த ரங்கம் பிள்ளையின் டைரியை உள்வாங்கி... பிரெஞ்சு காலத்து புதுவையை படம் பிடித்து காட்டியது.

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் கிபி1370 க்கு இழுத்துச்செல்கிறது.
கிட்டத்தட்ட 700 ஆண்டு வரலாற்றில் நாம் பயணிக்க முடிகிறது.

காவல் கோட்டத்தின் சிறு பகுதிதான் அரவான்.
காவல் கோட்டத்தின் ஆன்மாவை அரவானில் தரிசிக்க முடியாது.
 பசுபதி காரெக்டர் கிணற்றில் விழுந்து மாட்டிக்கொள்கையில் ஆதி காரெக்டர் கிராபிக்ஸ் மாடுகளுடன் பவனி வந்து.... விஜய் பட ரேஞ்சில்....
 ஆக்‌ஷன் காட்சி தூள் பறக்க தப்பித்து போவார்கள்.

காவல் கோட்டத்தில் சு.வெங்கடேசன் சித்தரிந்ததை காட்டியிருந்தால் யதார்த்தம் வாழ்ந்திருக்கும்.
சின்னான் கோஷ்டியினர்.... பக்கத்து கிராமத்தில் போய்....
 வேகமாக ஒடக்கூடிய மாடுகளை தேர்வு செய்து... திருடி ஒட்டிக்கொண்டு வருவார்கள்.
மாட்டு வாலின் அமைப்பை வைத்து... மாடு ஓடும் திறத்தை கணிப்பதாக.... மாட்டு சாஸ்த்திரத்தை நுழைத்திருப்பார் வெங்கடேசன்.

களவு போன ஊரில்... காவலிருப்பவர்களிடம்...
மாட்டு வியாபாரிகள் என நம்ப வைத்து... இரவில் தங்கிச்செல்ல அனுமதி பெற்று தங்கி...கிணற்றுக்குள் கட்டிலை இறக்கி...காப்பாற்றி விடிவதற்க்குள் தப்பித்து செல்வதாக சித்தரித்திருப்பார்.

காவல் கோட்டத்தில் சின்னானுக்கு ஜோடி இன்னொருத்தன் மனைவி.
இவன் மேல் கொண்ட காதலால்...தாலி கட்டிய தாய் மாமனை அறுத்து ஒதுக்கி விட்டு...அதே தாய்மாமன் தலைமையில்... சின்னானது அரை ஞாண் கொடியை தாலியாக ஏற்று மனைவியாக வாழ்கிறாள்.
இவை படமாக்கப்பட்டிருந்தால் அரவான் டெம்ப்ளேட் காதல் காட்சிகள்...
பாடாவதி பாடல் காட்சிகள்... இம்சையில்லாமல் ஒரு புது அனுபவம்....
ஒரு பரவசம் கிட்டியிருக்கும்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் ஒ.ஏ.கே.தேவர் ஊமைத்துரையாக வந்து கர்ஜிப்பார்.
காவல் கோட்டம் இவர் பிறவி ஊமை என்கிறது.
நமது பாடப்புத்தகத்தில் கட்டபொம்மன் வர்லாற்றில்....ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பித்துச்சென்ற போது வெள்ளையரால் கொல்லப்பட்டார் என்று ஒரு வரிச்செய்தியாக...வரலாறு சொல்லப்படும்.
அவரது வீரதீரச்செயல்கள் பக்கம் பக்கமாக காவல்கோட்டம் சித்தரிக்கிறது.
அவற்றை இரண்டாம் பாகத்தில் சொல்கிறேன்.

7 comments:

 1. அந்த நாவலோட சைஸ பார்த்த உடனே பயந்துட்டேன். அருமையா இருக்கு-னு சொல்றீங்க.. கண்டிப்பா படிக்கணும்...

  ReplyDelete
 2. @கனகு
  //அந்த நாவலோட சைஸ பார்த்த உடனே பயந்துட்டேன். அருமையா இருக்கு-னு சொல்றீங்க.. கண்டிப்பா படிக்கணும்...//
  இதே பயம் எனக்கும் இருந்தது...கண்ணை மூடிட்டு குதிச்சிட்டேன்...அதனால்தான் முத்துக்கள் கிடைத்தது.

  ReplyDelete
 3. படிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் எழுந்து கொண்டே இருக்கிறது...

  ReplyDelete
 4. @சூர்யஜீவா
  முதல் நூறு பக்கங்கள் சற்று ஆமை வேகம்தான்..
  அதன் பின் முயல் வேகம்...குதிரை வேகமென அதிகரித்து...
  500 பக்கங்களில் வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தை தாண்டுகிறது நாவல்.
  தவற விடாதீர்கள்..நண்பரே!

  ReplyDelete
 5. புத்தகத்தோட சைஸ் தான் எனக்கும் பயத்த கெளப்புது..., இந்த கண்காட்சிக்கு வாங்குன புக்லாம் படிச்சதும் வாங்கணும்.., :)

  ReplyDelete
 6. ending sad or happy? when I was small I caried for 3 days after reading ponniyin selvan

  ReplyDelete
 7. S. Ramakrisnan, ainooru pakka apatham endru kooriyathaga, vikatanil padithan. Padikka vendum engira aarvam athigamagi vittathu.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.