Mar 18, 2012

கர்ணன்-காலத்தால் அழிக்க முடிந்த காவியம்


கர்ணன் வெளியான காலத்தில் வசூலில் நஷ்டத்தை ஏற்ப்படுத்திய படம்.
இருந்தாலும் 70,80,90 வரை எப்போது தியேட்டரில் போட்டாலும் லாபத்தை வாரிக்குவித்த படம்.
தனியார் தொலைக்காட்சி ஆதிக்கம் வந்த பிறகு இது போன்ற பழைய படங்கள் திரையிடுவது வழக்கொழிந்து போனது.
தீடிரென்று கர்ணன் படத்தை புதுப்படங்களுக்குறிய ஆரவாரத்துடன் ரீலிஸ் செய்யப்பட்டதும் என்னுள் இருந்த சிவாஜி ரசிகன் சிங்கமென கர்ஜித்து கிளம்பி விட்டான்.
ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து வைத்துக்கொண்டு மல்டிப்ளக்ஸ் தியேட்டரில் பார்க்க குடும்பத்தோடு புறப்பட்டு விட்டேன்.

புதிய படங்கள் ஹவுஸ்புல்லுக்கு திணறியபோது சர்வசாதரணமாக ஹவுஸ்புல்லாகி வசூல் மன்னனாக திகழ்ந்தான் கர்ணன்.
90 சதவீதம் மேட்டுக்குடி மக்களே நிறைந்த கூட்டத்தில் லுங்கி அணிந்து...  கம்பீரமாக வந்து கவனத்தை கவர்ந்தார் ஒரு சிவாஜி ரசிகர்.

டிஜிடலில் கர்ணனை பார்க்கப்போன எனக்கு டைட்டிலிலேயே ஏமாற்றம் தொடங்கி விட்டது.
கலரெல்லாம வெளிறிப்போய் மிகவும் பலகீனமாக காட்சியளித்தது படம்.
பழுதாகிப்போன நெகட்டிவை டிஜிட்டலுக்கு மாற்றும் போது பிரேம் பிரேமாக வேலை பார்த்து படத்தை தகதகவென மின்னச்செய்திருக்க முடியும்.
ஒன்றுமே செய்யாமல் அப்படியே படத்தை வெளியிட்டு காசு பார்த்து விட்டார்கள் வியாபாரிகள்.

கர்ணன் படத்தின் திரைக்கதை அமைப்பு பிரமிப்பு ஏற்ப்படுத்தியது.
சிவாஜியின் நடிப்பு இன்றும் என்னை வசீகரித்தது....
தனது மாமனாரால் அவமானப்படும்போது கையறு நிலையில் கர்ஜிப்பார் பாருங்கள்....இப்படி நடிக்க உலகில் எவனுமேயில்லை.
படத்தின் இறுதிக்காட்சிகளை ஆக்ரமித்தது என்.டி.ஆர்தான்...
அத்தை..அத்தை என குந்தி தேவியை அவர் அழைக்கும் அழகே தனிதான்.

மெல்லிசை மன்னர்கள் இசையில்... கண்ணதாசனது கற்பனையை....
 டிடிஎஸ் ஒலியில் கேட்க பரம சுகமாக இருக்கிறது.

சிவாஜியின் தேவர்மகன்,முதல் மரியாதை,வீர பாண்டிய கட்டபொம்மன் போன்ற முக்கியமான படங்களை தெளிவாக டிஜிட்டலில் உருமாற்றம் செய்யப்படவேண்டும்.
நூறாண்டுகள் கழித்தும் ரசிகர்களால் அவை கொண்டாடப்படும்.

10 comments:

 1. நீங்கள் போட்டிருக்கும் படங்கள் மூன்றும் மின்னுகிறதே..

  //சிவாஜியின் தேவர்மகன்,முதல் மரியாதை,வீர பாண்டிய கட்டபொம்மன் போன்ற முக்கியமான படங்களை தெளிவாக டிஜிட்டலில் உருமாற்றம் செய்யப்படவேண்டும்.//
  ரொம்ப கரெக்டு சார். பெருமையோடு கொண்டாட எங்களுக்கும் நல்ல படங்கள் நல்ல கலரில் வேணும்!

  ReplyDelete
 2. @JZ
  //நீங்கள் போட்டிருக்கும் படங்கள் மூன்றும் மின்னுகிறதே..//
  போட்டாஷாப் மேஜிக்கில் அப்படங்கள் ஜொலிக்கின்றன...
  திரைப்படத்தையும் இது போன்று ஜொலிக்க வைத்திருக்க முடியும்.
  அதற்க்குறிய காலத்தையும்...பணத்தையும் செலவிட்டிருந்தால் ரீலிஸ் செய்யப்பட்ட காலத்தை விட கர்ணன் அதி ரூப சுந்தரனாய் ஜொலித்திருப்பார்.

  ReplyDelete
 3. // டிஜிடலில் கர்ணனை பார்க்கப்போன எனக்கு டைட்டிலிலேயே ஏமாற்றம் தொடங்கி விட்டது.
  கலரெல்லாம வெளிறிப்போய் மிகவும் பலகீனமாக காட்சியளித்தது படம். //

  என்ன சார் சொல்றீங்க... அதிர்ச்சியா இருக்கு... நான் இன்னைக்கு இவ்னிங் ஷோ போகப் போறேனே...

  ReplyDelete
 4. @பிலாசபி பிரபாகரன்
  முதன்முதலில் தியேட்டரில் கர்ணன் பார்ப்பவர்களுக்கு வேறுபாடு தெரியாது.
  நான் புத்தம் புதிய காப்பி ஜொலிக்கும் வர்ணத்தில் கர்ணனை தரிசித்தவன்.
  அதனால் இப்போதைய டிஜிடல் கர்ணன் சற்று ஏமாற்றம் அளித்தது.
  சற்று நேரம்தான்...
  சிவாஜி திரையை ஆக்கிரமித்த போது கர்ணனுக்குள் கரைந்து போனேன்.

  ReplyDelete
 5. இன்னிக்குதான், திடீர்னு 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாட்டு மனதில் ஒலித்தது.

  அருமையான பாடல்கள். படம்.

  ReplyDelete
 6. @வெற்றிமகள்
  //அருமையான பாடல்கள். படம்.//
  அத்தனை பாடல்களும் அருமையாக அமைவது அபூர்வம்.
  கர்ணன் படப்பாடல்கள் அனைத்தும் காலத்தை வென்று நிற்பவை.

  ReplyDelete
 7. when this picture was released it was said that it was produced at a cost of 40 lakhs in 1964.Producer BR Bandhulu faced a major loss of this film.So sivaji ganeshan acted free for the next movie Muradan Muthu.But when this film is released now it making a big collection.Strange.

  ReplyDelete
 8. இந்த படத்தை இன்னும் தியேட்டரில் பார்க்கவில்லை அண்ணா... சீக்கிரம் பாக்கணும்.. :)

  ட்ரையலரிலேயே சில இடங்களில் கொஞ்சம் கலர் குறைவாகவே இருந்தது...

  ReplyDelete
 9. டிஜிட்டளுக்காக இல்லாவிட்டாலும் சிம்மக்குரலோனின் கர்ஜனைக்காகவே இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் ! உலக சினிமா நடிகனை பற்றிய உலக சினிமா ரசிகனின் விமர்சனம் அருமை !

  ReplyDelete
 10. யோவ் நல்லா எழுத வர எல்லாருமே ஏன்பா கம்மியா எழுதறிங்க.. அடுத்த பதிவு 200 வரிகளுக்கு கம்மியா இருந்துச்சி, வில்லு டிவிடி ய வீட்டுக்கு பார்சல் பண்ணிருவேன் ஜாக்கிரத..

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.