இந்தப்படத்தை பார்க்கும் வரம் வழங்கிய கோணங்களுக்கு நன்றி
படமும்,தொடர்ச்சியாக காண்பித்த டாக்குமெண்ட்ரியும்..... நல்ல மாலைப்பதநீரில், மாம்பழத்துண்டு மிதக்க..... இரண்டு பட்டை குடித்து முடித்தால் ...ஏப்பத்தோடு ஒரு கிறக்கம் வரும் பாருங்கள்..அதே உணர்வை ஏற்ப்படுத்தியது.
1942 ல் இப்படி ஒரு படம் எடுக்க மிகுந்த ஆண்மை வேண்டும்..முசோலினியின் வாரிசுகள் இத்தாலிய சினிமாவில் சர்வாதிகாரம் புரிந்த காலம்..இப்போதைய தமிழ் சினிமா நிலவரம்..உரத்து சொல்கிறேன் “உலகசினிமாவின் சிங்கம்”.....விட்டோரியா டிசிகா
இதே காலகட்டத்தில் இன்னும் இரண்டு சிங்கங்கள் வந்தது இவருக்கு
1942 ல் இப்படி ஒரு படம் எடுக்க மிகுந்த ஆண்மை வேண்டும்..முசோலினியின் வாரிசுகள் இத்தாலிய சினிமாவில் சர்வாதிகாரம் புரிந்த காலம்..இப்போதைய தமிழ் சினிமா நிலவரம்..உரத்து சொல்கிறேன் “உலகசினிமாவின் சிங்கம்”.....விட்டோரியா டிசிகா
இதே காலகட்டத்தில் இன்னும் இரண்டு சிங்கங்கள் வந்தது இவருக்கு
இணையாக....
ஒருவர் விஸ்காண்டி.... படம் அப்சஸென் .....
மற்றொருவர் ரோஸலினி....படம் ஒப்பன் சிட்டி
இநத அலை உலகம் முழுக்க பரவி கமர்சியல் சினிமாக்களை கதிகலங்க வைத்துவிட்டது.இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உருவானவர்கள்....நிமாய்கோஸ்...ரித்விக் கதக்...சத்யஜித்ரே..ஆனால்
தமிழ் சினிமா பராசக்தி எடுத்து கொண்டிருந்த்து. அன்று பிடித்த தரித்திரம் இன்று வரை விடவில்லை.
சரி...இந்தப்படத்துக்கு வருகிறேன்
இன்று தினத்தந்தியில்...ஜூ.வியில் படித்து கொண்டிருப்பதுதான் கதைக்களம்..
கணவனையும்,மகனையும் விட்டுவிட்டு ஒடுகிறாள் ஒரு ஒடுகாலி..இந்த கேடு கெட்ட செயலில் சீரழிந்த தந்தையும்,மகனும் படும் துயரம்தான் படம்..
எந்த இடத்திலும் ஒவர் செண்டிமெண்ட் கலக்காமல்..காவியமாக்கி தந்ததால் அறுபத்தெட்டு ஆண்டுகள் கழித்தும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் டிசிகாவை......
நான் தரிசித்த இவரது காவியங்கள்...
பை சைக்கிள் தீவ்ஸ்
உம்பர்ட்டோடி
சூ சைன்
எஸ்டர்டே..டுடே..டுமாரோ
எ ப்ரீப் வெகேசன்
திரைக்கதை மாமேதை சீசர் ஸவாட்டினியுடன் டிசிகா படைத்தது எல்லாமே காலத்தால் அழிக்க முடியாதது.
இந்தப்படங்களின் டிவிடிக்களை ஹாலிவுட் டிவிடி ஸாப்பில் திருடியாவது பார்த்துவிடுங்கள்.இது பாவமில்லை.
வெண்ணிலா கபடிக்குழு சூசீந்திரன்... நான் மகான் அல்ல என்ற படம் கொடுத்ததுதான் பாவம்.தமிழ் சினிமாவுக்கு தொடரும் சாபமும் கூட..
சார்..இந்த மாதிரி புதிய படங்களை உங்கள் மூலம் அறிந்து கொள்வதில் ரொம்ப சந்தோஷம். ஆனா அந்த காலத்தில் நம்மூருலயே வங்காள நாடங்களை பார்த்து எடுத்த படங்களும் உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன், உங்களுக்கு அது பற்றி ஏதும் தெரியுமா? அப்பறம் இந்த தளங்களையும் பார்க்க வேண்டுகிறேன்.
ReplyDeletehttp://ajayanbala.blogspot.com/2009/08/blog-post.html
http://ajayanbala.blogspot.com/2010/03/blog-post_12.html
(அந்தப் படத்தின் torrent சைட்: http://www.torrentdownloads.net/torrent/1261747/i+bambini+ci+guardano+(the+children+are+watching+us)+eng+sub+(1944)+dvdrip+(sirius+share))
அப்பறம் இந்தத்தளத்தில் http://www.foriegnmoviesddl.com/
உலகின் அனைத்து சிறந்த டைரக்டர்களின் சிறந்த படங்களையும் டவுன்லோட் செய்துக்கலாம்
உங்க ப்ளாக் என்னைப் போல சினிமா ரசிகர்களுக்கு ஒரு தகவல் சுரங்கமா இருக்கு நண்பரே!மிக்க நன்றி.. :)
ReplyDeleteசார்..உங்க sidebar widgetsல் உள்ள லிங்க்குகள் சரியா தெரிய மாட்டேங்குதே..எதுனா பண்ண முடியுமா?
ReplyDelete//இந்தப்படங்களின் டிவிடிக்களை ஹாலிவுட் டிவிடி ஸாப்பில் திருடியாவது பார்த்துவிடுங்கள்.இது பாவமில்லை.//
ReplyDeleteவந்துக்கினே இருக்கேன்.. செப்டம்பரில் சந்திப்போம் ;-)
விட்டோரியோ டி ஸிகா படங்களைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். ஆனால் ஒன்று கூட இன்னும் பார்க்கவில்லை ;-(.. வரிசையாகப் பார்க்க வேண்டும்..
நீங்கள் நேற்றுக் கூப்பிட்டபோது கொஞ்சம் வேலை.. இன்று இரவு அழைக்கிறேன்..
//தமிழ் சினிமா பராசக்தி எடுத்து கொண்டிருந்த்து. அன்று பிடித்த தரித்திரம் இன்று வரை விடவில்லை.//
ReplyDeleteஇது முற்றிலும் உண்மை !
இவரது படங்கள் நன்றாக இருக்குமென கேள்விப்படிருக்கிறேன். பார்த்தில்லை. இனி பார்க்க வேண்டும்.
ReplyDeletehttp://torrents.thepiratebay.org/4112561/Vittorio_De_SICA_-_The_Children_Are_Watching_Us_(1944)_CRITERION.4112561.TPB.torrent
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..
ReplyDeleteசார்,
ReplyDeleteA brief Vacation இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இவரைப் பற்றித் தெரியாமலேயே, Bicycles Thieves-ம் Umberto D-ம் பார்த்திருக்கிறேன். சீக்கிரம் மற்றவற்றையும் பார்க்கவேண்டும் போலிருக்கிறது.
A brief Vacation கலரில் இருக்கிறது, ஏனோ இவரது பாணிக்கு கருப்பு வெள்ளைதான் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.
தலைவரே மிக அருமையான அறிமுகம்.
ReplyDeleteஅவசியம் திருடியாவது பார்க்கிறேன்[இணையத்தில்]
கோவை வந்தால் உங்களை நிச்சயம் சந்திப்பேன்,டிவிடி வாங்குவேனோ இல்லையோ நிறைய சினிமா பற்றி கேட்டு தெரிந்துகொள்வேன்:))
அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ReplyDeleteஉலகசினிமாக்களை தரவிறக்கி பார்ப்பதை நான் குறைசொல்லவில்லை,நானே அப்படிதான் பார்க்கிறேன்,ஒரு பொருள் வாங்கும் தொலைவில் இருக்கையில் வாங்கி பார்ப்போம் என்று தான் சொல்கிறேன்.திரு,பாஸ்கரன் அவர்கள் நியாயமான விலையில் உலகசினிமாக்களை கடை வைத்து ,அவரிடம் தரவிறக்கும் சுட்டியை பின்னூட்டத்தில் இடுவதை தவிருங்களேன்.இது வேண்டுகோள் தான்.
====
எனக்கு இங்கே உலகசினிமா டிவிடிகள் கிடைத்தால் தரவிறக்குவதை விட்டுவிடுவேன்,ஊரிலிருந்து நிறைய டிவிடிகள் கொண்டுவந்தாலோ?!!! நம்மை துபாய் ஏர்போட்டிலேயே சுத்து போட்டு,போதைமருந்து கொண்டுவந்தது போல விசாரிப்பார்கள்.ஒவ்வோன்றையும் போட்டுபார்த்து போர்னோக்ராபியான் என்றுவேறு சந்தேகிப்பார்கள்.
நண்பர் குழந்தை ...நீங்கள் கேட்ட தகவல் அறந்தை நாராயணன் எழுதிய 'தமிழ் சினிமாவின் கதை' நூலில் இருக்கிறது.
ReplyDeleteநண்பர் இலுமிக்கு...நான் எழுத மறந்த தகவல்..டிசிகா 150 படத்துக்கு மேல் நடித்த இத்தாலியின் சூப்பர்ஸ்டார்..தான் இயக்கிய படங்களில் நடிப்பதே இல்லை..சம்பாதித்த பணத்தில் நல்ல படங்களை தயாரித்து இயக்கி நட்டம் மட்டுமே அடைந்தார்.சாகும் வரை இந்த அரிய பணி தொடர்ந்தார்..
ReplyDeleteவாருங்கள் கருந்தேள்..விக்ரம் டிவிடி பார்த்து ,கிடைத்த சந்தோசத்தில் சிரித்தீர்களே ஒரு சிரிப்பு...கண்டேன் சீதை என்ற பாணியில்.மீண்டும் நேரில் கேட்க ஆசை.
ReplyDeleteஎஸ்கே..டிசிகாவை ஒன்றுவிடாமல் பாருங்கள்
ReplyDeleteநண்பரே மோகன்..டிசிகா பிளாக்&ஒயிட்டில் மன்னன்..கலரில் மாமன்னன்..EX:Yesterday..Today..Tommorro,The GARDEN OF THE FINZI-CONTINIS..இன்னும் நெறைய
ReplyDeleteநண்பர் கீதப்பிரியனுக்கு..உங்கள் தகவலுக்கு நன்றி..என் வாடிக்கையாளர்கள் யுகே,யு எஸ் ஸே.ஆஸ்ட்ரேலியா வாங்கி சென்றுள்ளார்கள்.துபாய் வருபவர்களை நிச்சயம் எச்சரிப்பேன்
ReplyDeleteவணக்கம் நண்பரே,
ReplyDeleteநேற்று முன்தினம் padam பார்த்து விட்டு இரவு வீட்டிற்கு செல்லும் போது பல வகையான கேள்விகள் மனதில் எழுந்தது...... அவற்றில் பல கேள்விகளுக்கு பதில் எப்போது கிடைக்கும் என்று தெரியாது..... உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் என்று இருந்தேன் ஆனால் அன்று நேரம் இல்லை....
இந்த படம் முற்றிலும் (அல்லது முதல்) neo ரியலிஸ்ட் பிலிம் என்று சொல்லப்படுவது சரிதான ? இந்த படத்தில் நெஒ ரியலிசத்தின் சாயல் தெரிகிறது .... Cesare Zavattini + Vittorio De Sica கூட்டணி வரும் காலத்தில் நெஒ ரியலிசம் என்ற அமைப்பை வேருண்ட்ரச் செய்வார்கள் , DE சிக்கா இனி வரும் காலங்களில் நெஒ ரியலிசப் படங்களை எடுப்பார் என்றே இப்படம் சொல்கிறதாக நான் நினைகிறேன் ...ஆகவே சில்றன் ஆர் வாட்சிங் உச படத்தில் நெஒ ரியலிசம் என்பது உருவாகப்போகிறது என்ற சாயல் மட்டும் தெரிகிறது ஆகையால் இதை நாம் முழுக்க முழுக்க ஒரு (அல்லது mudhal) நெஒ ரியலிஸ்ட் பிலிம் என்று அழைப்பது செரியா ? என்ற கேள்வி என்னுள் எழுகிறது ......
சினிமா அறிஞர்கள் பெரும்பாலும் மார்க்ஸீய காதலர்கள்.நான்,கோணங்கள் ஆனந்த்,இயக்குனர் ஆனந்தன்[இவர் பக்கா மார்க்சிஸ்ட்]சினிமாவுக்கு மட்டுமே காதலர்கள்.டிசிகாவுக்கு முதலிடம் வழங்காமல் ரோசலினியின் ஓப்பன் சிட்டிக்கு வழங்கினார்கள் சி.அ.நாங்கள் இயக்குனரை கட்சி சாயம் பூசி பார்க்கமாட்டோம்.சினிமாவை சினிமாவாக பார்க்கவேண்டும்.அப்படிப்பார்த்துதான் இந்த முதல் அந்தஸ்து வழங்கி உள்ளோம்.
ReplyDeleteஇந்தப்படம் நூறூ சதவீதம் தகுதியானது.இக்கருத்தில் நீங்கள் மாறுபடுவதில் தவறில்லை அருண்..
சாரி அருண்..சினிமா அறிஞர்கள் நியோரியலிஸ்ட் முதல் படமாக குறிப்பிடுவது விஸ்காண்டியின் அப்சஸென்.ஒப்பன்சிட்டி இரண்டாவதுதான்
ReplyDelete//இந்தப்படங்களின் டிவிடிக்களை ஹாலிவுட் டிவிடி ஸாப்பில் திருடியாவது பார்த்துவிடுங்கள்.இது பாவமில்லை.//
ReplyDeleteஎதற்கும் நைட்ல நல்லா பூட்டிட்டு போங்க சார்...வந்துட்டே இருக்கோம்ல...