Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Nov 12, 2013

கமல் பிறந்த நாளில் ஜெமோ! தமிழர்களே...குதத்தை இன்னும் குனிந்து காட்டுங்கள்!!

/// 7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். 
அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.

வாசலில் அவரே நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார். 
கட்டித்தழுவி வரவேற்றார். 
நான் நினைத்த அளவுக்குப் பெரிய கூட்டம் இல்லை என்றாலும் எங்குபார்த்தாலும் பிரபலங்கள் என்பது ஒரு திகைப்பை உருவாக்கியது.

தமிழ்த்திரையுலகில் எனக்கு முதலில் அறிமுகமான நண்பர் கமல்.
2000 வாக்கில் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு ஒருநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘நான் கமலஹாசன் பேசறேன்’ என்று அறிமுகம்செய்துகொண்டார் ‘உங்க தீவிர வாசகன்…’
எனக்கு அப்போது யாரோ மிமிக்ரிசெய்கிறார்கள் என்ற எண்ணம்தான் இருந்தது. 
என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. 
அவரே அந்நாவலில் வாசித்த பல நுட்பமான இடங்களை விவரித்துப்பேசினார்
அதன்பின் இத்தனை நாட்களில் என்னுடைய அத்தனை படைப்புகளுக்கும் உடனடி வாசகராக அவரே இருந்திருக்கிறார். கொற்றவை அவரை பெரிதும் கவர்ந்தது. 
தொடர்ச்சியாகப் பலமுறை கூப்பிட்டு அதைப்பற்றி பேசினார். அதன்பின் இன்றையகாந்தி. 
கடைசியாக அறம். 
அவரைக் கவராத படைப்பைப்பற்றி அவர் பெரும்பாலும் வாயைத்திறப்பதில்லை
அவர் நட்சத்திரம் என்பதனாலேயே நான் அவரைப்பற்றி இன்றுவரை ஒரு வரிகூட எழுதியதில்லை. 
அவரை நேரில் சந்திப்பதையே கூடுமானவரை தள்ளிப்போட்டு வந்தேன். 
நேரில் சந்தித்த தருணங்கள் எல்லாமே உற்சாகமானவை. அவர் பேச்சினூடாகவே எனக்குப் பல எழுத்தாளர் பெயர்கள் – உதாரணமாக கர்ட் வேன்கட் -அறிமுகமாயின என்று சொன்னால் அவரைத்தெரிந்தவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்.

கமல் நடுவே என்னிடம் வந்து நின்று தீவிரமாக உரையாட ஆரம்பித்தார். 
ஏற்கனவே பேசி நிறுத்திய புள்ளியில் இருந்து பேச ஆரம்பிப்பது அவரது வழக்கம். 
இலக்கியமும் வரலாறும் சந்திக்கும் இடங்கள் அவருக்கு பிடித்தமானவை. 
இலக்கியத்திற்கு ஒரு வரலாற்றுக்காரணத்தைச் சொல்வதில் எப்போதுமெ ஒரு நுட்பமான பார்வை அவருக்குண்டு
வெள்ளையானை கிடைத்தது என்றார். 
நான் கொண்டு வர மறந்து விட்டிருந்தேன். 
‘அதெல்லாம் மை காயறதுக்குள்ள இங்க வந்திரும்’ என்றார். 
ஐஸ்ஹவுஸின் போராட்டம் பற்றி ஏற்கனவே அவர் வாசித்து அறிந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.
‘எங்க ஏரியால்ல?’
நெடுநேரம் என்னிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. 
அதிமுக்கியமனிதர்கள் பின்பக்கம் அவருக்காகக் காத்திருந்தனர். 
அவரது உற்சாகத்தில் விரிசலை உண்டுபண்ணவும் முடியவில்லை. 
ஒரு தம்பதிகளைச் சந்திக்க அவர் திரும்பியபோது நான் மெல்ல நகர்ந்துவிட்டேன்.

இரா.முருகன் வந்தார்.
‘எழுத்துருச் சண்டை போடுங்க போங்க’ என்று கமல் தன்னை அனுப்பியதாகச் சொன்னார். ///


ஜெமோவின் வாக்குமூலம்.

வருடா வருடம் பிறந்த நாள் வருகிறது.
இந்த ஆண்டு ஜெமோவை அழைத்து வெண் சாமரம் வீசத்தேவை என்ன?

தமிழர்களே...குதத்தை இன்னும் குனிந்து காட்டுங்கள்.

Nov 10, 2013

கமல்ஹாசனை நேசிப்பேன்.

நண்பர்களே...
கமல்ஹாசன் நடத்திய பட்டிமன்றத்தை நேற்றுதான் காணொளியில் பார்த்தேன்.
அவருக்கே உரித்தான பாணியில் அந்த ஊடககத்தை தன் வசப்படுத்தி  இருந்தார்.
இரண்டு அணியுமே போற்றிப்பனுவல்தான் பாடியது.
நடுநாயகமாக குற்றவாளிக்கூண்டில் இருந்து கொண்டு அத்தனையையும் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்...பாருங்கள்.
அங்கேதான் அவர் உண்மையான  ‘உலக சினிமாவின் உன்மத்தனாக’ உயர்ந்தார்.


 “சத்யஜித்ரேயின் சில ஷாட்களைத்தான் திருடி பயன் படுத்தி இருக்கிறோம்.
அவரைப்போல முழுமையான உலக சினிமாவை எடுக்க யாருமே முயற்சிக்கவில்லை.
முட்கள் நிறைந்த பாதையில் நடந்து பாதையை பதப்படுத்தி இருக்கிறோம்...அவ்வளவுதான்.
இதை நான் மட்டுமல்ல...என் முன்னோடிகள் எல்லோருமே செய்து இருக்கிறோம்.
அந்தப்பாதையில் பயணிக்க நீங்கள்தான் வரவேண்டும்”...
இதுதான் அவரது பேச்சின் முக்கிய கருத்தாக்கம்.


இப்படி பேச கமல் ஒருவரால்தான் முடியும்.
இந்த ஆண்மை மிக்க கமலை நான் நேசிப்பேன்.
போற்றுவேன்...நன்றியோடு வாழ்த்துவேன்.
வாழ்க வளமுடன்.

Nov 7, 2013

கமலஹாசனை வாழ்த்தப்போவதில்லை.

இன்று கமலஹாசனுக்கு பிறந்த நாள்.
வாழ்த்து சொல்லப்போவதில்லை.
தமிழை அழிக்க நினைத்த தரங்கெட்டவனை தாக்கி ஒரு அறிக்கை கூட வரவில்லை.
அறம் புத்தகத்தை விஜய் டிவியில் வழங்கி இந்த தரங்கெட்ட தறுதலைக்கு ஒரு வெளிச்சம் காட்டியது நீங்கள்.

இவனை எதிர்க்க உங்கள் தமிழ் தயாராகவில்லையென்றால் உங்களை எதிர்க்கவும் தயங்க மாட்டேன்.
இது சத்தியம்.

Jul 11, 2013

கமலஹாசன் என்னை கோடிஸ்வரனாக்கியிருக்கிறார்.


நண்பர்களே...
நான் கமலின் திரை வாழ்க்கை வரலாறை,
தொலைக்காட்சி தொடராக தயாரித்தேன்.
ஆரம்பத்தில் லாபத்தோடு போய்க்கொண்டிருந்த தொடர்,
தேய்பிறையாகி நஷ்டமாகிக்கொண்டு வந்தது.
லாபம் வந்த காலத்தில்,
கமல் என்னை வெகுவாக ஆதரித்து கை தூக்கி விட்டார்.
தொடர் நஷ்டமாக போய்க்கொண்டிருந்த காலத்தில்,
ஏதோ சில காரணங்களால் என்னை புறக்கணித்தார்.
அந்த கோபத்தில் அந்தத்தொடரை நான் நிறுத்தி விட்டேன்.
1995ல் அவரிடம் கோபித்துக்கொண்டு வெளியேறியவன்,
இன்று வரை அவரை நான் சந்திக்கவேயில்லை.

 இளையராஜா, கே.பாலச்சந்தர், சுஜாதா, நாகேஷ் என நான் நேசித்த அத்தனை பேராலும் நான் நேரடியாக காயப்பட்டு இருக்கிறேன்.
ஆனால் அவர்கள் மேல் நான் கொண்ட காதல் என்றுமே அழியாது.
எனது பதிவுகளே இதற்கு சாட்சி.

சரி...விஷயத்துக்கு வருகிறேன்.
தொடரை நிறுத்தி விட்டு கணக்கு பார்த்ததில் கொஞ்சம் லாபம் மிஞ்சியது.
அந்தப்பணத்தில் கோவையில் ஒரு மூலையில் 16 செண்ட் இடம் வாங்கிப்போட்டேன்.
நான் வாங்கும்போது கிராமப்பஞ்சாயத்தாக இருந்த இடம்,
இப்போது கோவை மாநகராட்சியாகி விட்டது.

இப்போது அந்த இடத்தில் மூணே முக்கால் செண்ட் மட்டும் விற்றேன்.
அந்த மதிப்பின்படி, எனது இடம் கோடி ரூபாய் மதிப்பாகி உள்ளதை உணர்ந்தேன்.
எனவே கமலால் நான் இப்போது கோடிஸ்வரனாகி விட்டேன்.
[ கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ள  ‘நிஜ கோடிஸ்வரர்கள்’,
என்னை மன்னிக்கவும்.
நீண்ட நாள் ஆசையின் காரனமாக,
என்னை நானே கோடிஸ்வரன் என அழைத்துக்கொண்டேன்.]


மேற்படி இடம் கோவை சரவணம்பட்டி அருகில் உள்ளது.
 ‘பி.பி.ஜி. இன்ஜினியரிங் கல்லூரி’க்கு எதிரில் அமைந்துள்ள மருதம் நகரில்
இருக்கிறது.
தொட்டடுத்து இருப்பது  ‘அல்கெமி பப்ளிக் ஸ்கூல்’...


என் இடத்தை சுற்றி வாங்கியவர்கள் வீடு கட்டி விட்டார்கள்.
இன்னும் ஐந்து வருடத்தில் இந்த இடம் மதிப்பில் இன்னும் பல மடங்காகும்.
காரணம் தற்போது கோவை மாநகராட்சி,
மிகப்பெரிய  ‘மேல்நிலை குடிநீர் தொட்டி’ கட்டி வருகிறது.
அடுத்த வருடம் முதல்வரே அதை திறப்பதாக திட்டமிட்டுள்ளார்கள்.
அதற்காக சாலை கட்டமைப்பு வசதிகள் செய்யவும் ஏற்பாடாகி வருகிறது.
மருதம் நகரையொட்டி உள்ள,
 ‘கோவை சக்தி ரோடு -அவினாசி ரோடு இணைப்புச்சாலை’...
நூறு அடி சாலையாக வெகு விரைவில் மாறும்.

என் இடத்தில் இன்னும் ஒரு சைட் மட்டும் விற்க எண்ணி உள்ளேன்.
இருபத்தைந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள்,           என்னை  90039 17667 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

எனக்கு தகுந்த தயாரிப்பாளர் அமையா விட்டால்,
எனது இடத்தை விற்று,
எளிதாக ஒரு உலகசினிமா எடுக்க முடியும்.
இந்த நம்பிக்கைதான் இப்போது எனக்கு யானை பலத்தை தந்திருக்கிறது.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 11, 2013

கமலின் கான்செப்ட்...இரண்டு மனைவிகள்.


HEY RAM \ 2000 \ INDIA \ DIRECTED BY : KAMAL HASSAN \ ஹேராம் = 036

“ கமல் திரைக்கதை எழுதிய படங்களில் திரும்பத்திரும்ப வெளிப்படும் ஒரு விஷயம், அப்பா என்கிற படிமம்.
குறிப்பாக, அப்பாவிடமிருந்து விலகிப்போக விரும்பும் ஒருவன் எப்படி அப்பாவின் ஆளுமையிலிருந்து விலக முடியாதவனாக இருக்கிறான் என்பதே
அவரது ஆதார பிரச்சனை.
குடும்பத்திலிருந்து வெளியேற விரும்புவம் ஒருவனே அவரது கதாநாயகன்.
அவன் வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண்ணோடு பழகுகிறான்.
அவளைக்காதலிக்கிறான்.
திருமணம் செய்து கொள்ளும் முன்பே அவளோடு நெருக்கமாக பழகி சேர்ந்திருக்கிறான்.
பிறகு சூழலின் காரணமாக அவளை கைவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறான்.

இது தேவர் மகனில் மட்டுமில்லாது, ஹேராமிலும் இடம் பெறுகிறது.
ஒரு வகையில் இந்த ஒப்புமை ஆச்சரியப்படக்கூடியது.
தேவர் மகன், ஹேராம்...
இரண்டிலுமே இரண்டு நாயகிகள் இடம் பெறுகின்றனர்.
ஒன்று, அவன் காதலி.
மற்றொன்று, அவன் மனைவி.
காதலி... அவன் விரும்பித்தேடிக்கொண்டது.
மனைவி...அவன் முழு விருப்பமின்றி மணந்து கொள்ளப்பட்டவள்.
தேவர் மகனில்...செங்கமலமும் [ ரேவதி ],
ஹேராமில்...மைதிலியும் [ வசுந்தரா தாஸ் ],
தனது கணவனோடு உள்ள உறவைப்புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
கடந்த காலத்தில் அவனுக்கு ஒரு காதலி இருந்தாள் என்பதை அறிந்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.” - எஸ்.ராமகிருஷ்ணன்.
நூல் : கமல் நம் காலத்து நாயகன் \ முதல் பதிப்பு \ 2011.
தொகுப்பு : மணா.
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.
[ நூலில் எஸ்.ரா ஹேராம் பற்றிய கட்டுரைக்கு, 
எழுதப்பட்ட காலமும், 
கட்டுரை இடம் பெற்ற ஊடகமும் குறிப்பிடப்படவில்லை ] 

நண்பர்களே...
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஒப்பீட்டு ஆய்வை இப்பதிவின் முன்னுரையாக இடம் பெறச்செய்தது மிகப்பொருத்தமான ஒன்றே.

இனி ஹேராம் திரைக்கதைக்குள் செல்வோம்.
_________________________________________________________________________________

தன் மகளை முதலிரவு அறைக்குள் அனுப்ப வந்த...

அம்புஜம் : நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா...பயப்படாத...

அறையினுள் ராம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து,
காந்தியடிகளின் ‘சத்திய சோதனை’ ஆங்கிலப்புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறான்.

மைதிலி : [ என்ன பேசுவது என்றே புரியாமல் ] பால் அங்கே இருக்கு.

ராம் : இல்ல...நான் பாலே சாப்பிடறதில்ல.

மைதிலி : ஏன் ? டாக்டர்... ப்டாதுண்ட்டாரா ?

[ ராம் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை பார்த்து ]

மைதிலி : இண்ட்ரஸ்டிங் இல்ல ?

ராம் புருவம் உயர்த்தி அவளைப்பார்க்கிறான்.

மைதிலி : [ புத்தகத்தை காட்டி ] காந்திஜீஸ் பயாகிரபி. 
என் புக்தான்.

ராம் : ஓ !...ஸாரி.

புத்தகத்தை கீழே வைக்கிறான்.

மைதிலி : நோ...நோ...படிங்கோ.
‘டிட் யூ லைக் த புக்’

ராம் : நோ...ஐ யூஷுவலி டோண்ட் லைக் செமி பிக்‌ஷன்.
வேற ஒண்ணும் படிக்கிறதுக்கு கிடைக்கல...அதான்.

மைதிலி : நான் பொடவையை மாத்திண்டு வந்துட்றேன்.
பட்டுப்பொடவய கட்டிண்டு தூங்க வேண்டானுட்டா...அம்மா. 

பீரோவிலிருந்து வேறு புடவையை எடுத்துக்கொண்டு மைதிலி குளியலறைக்குள் போகிறாள்.
குளியலறைக்குள் புகுந்த மைதிலி, கதவை தாழ்ப்பாள் இட்டு விட்டு,
புடவையை களையத்துவங்குகிறாள்.
ஒரு பல்லி அவள் தோள் மீது விழுகிறது.
மைதிலி அலறி விடுகிறாள்.

மைதிலி : ஆ...ஆ...ஆ....

பல்லி கீழே விழுந்து ஓடுகிறது.
காலில் ஏறி விடுமோ என பயத்தில் கத்திக்கொண்டே குதிக்கிறாள் மைதிலி.
குளியலறைக்கு வெளியிலிருக்கும் ராம் குழப்பமைடைகிறான்.
மைதிலியின் அலறல், ராமை கல்கத்தா சூழலுக்குள் நினைவினில் உந்தித்தள்ளி விடுகிறது.

ராமின் கண்கள் திறந்திருந்தும், எதையும் பார்க்காத கண்களுடன்...
தூக்கத்தில் நடப்பவன் போல் பாத்ரூம் கதவை அடைந்து தட்டுகிறான்.

ராம் : அபர்னா...அபர்னா...

 ‘நிஜத்திற்கும்’... ‘நினைவிற்கும்’...பிரித்து பார்க்க முடியவில்லை ராமால்.  மைதிலி கதவை திறக்கிறாள்.
ராம், குரல் கொடுப்பதை நிறுத்தி விடுகிறான்.
ஜாக்கெட் தெரியும் கோலத்தில் இருக்கும் மைதிலி அவசரமாக புடைவையை
போர்த்தி மறைக்கிறாள்.

மைதிலி : அபர்னா யாரு ?

ராம் பதில் சொல்லாமல் குளியலறைக்குள் சென்று, மூடித்தாழிட்டுக்கொண்டு
நினைவில் சூழ்ந்துள்ள ‘கல்கத்தா துயரங்களுக்கு தலை முழுக’
குளிக்க ஆரம்பிக்கிறான்.
மைதிலி வெளியே குழப்பத்தோடு காத்திருக்கிறாள்.

நனைந்த உடலுடன், ராம் நிர்வாணமாக ஒரு மூலையில் போய் ஒடுங்குகிறான்.
மெய் மறந்த நிலையில் ராம் இருக்கிறான்.

[ வெளியிலிருந்த ] மைதிலி : ஏன்னா...உங்களுக்கு ஒண்ணுமில்லியே.
ஆர் யூ ஆல் ரைட்?

நிஜ மைதிலியின் குரலுடன் கலந்து,
நனவோடை கல்கத்தா அபர்னா - கற்பழிப்பாளர்களின் குரலும் கலந்து கேட்கும் பிரமை ராமுக்கு ஏற்படுகிறது.

அல்தாப் : [ குரல் மட்டும் ] மேம் சாப்...தார்வாசா கோலோ மூம்சாப்...
மெய்ன் அல்தாப் மேம்சாப்...ஆப்கா புரானா டெய்லர் மேம்சாப்...
நையா நாப் லேனே ஆயாஹூன்.

அபர்னா : [ குரல் மட்டும் ] ராம்...ஆர் யூ ஆல் ரைட் ராம் ?

ராம் தன் செவிகளை அடைத்துக்கொள்கிறான்.
கல்கத்தாவில் இறந்தவர்கள் உருவங்கள் பாத்ரூம் தரையில் தோன்றி மறைகின்றன.

அபர்னா, கழுத்தறுக்கப்பட்டு கிடக்கிறாள்.
இரத்தம் குளமாக தேங்கி கிடக்கிறது.
ராமால் கொல்லப்பட்ட அனைவரும் அங்கே இருக்கிறார்கள்...
அவனது முதலிரவுக்கு வருகை தந்தவர்கள் போல...

பல்லி ரத்தம் குடிக்கிறது...
ராம் துடிக்கிறான்.
ரத்தச்சகதியின் மீது பல்லி ஊர்ந்தும்...நடந்தும் செல்கிறது.

_________________________________________________________________________________

திரைக்கதையை முழுக்க விவரித்ததன் மூலமாக,
நீங்கள் இக்காட்சியை மறுபடி மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்திருப்பீர்கள்.

\\\ அம்புஜம் : நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா...பயப்படாத...\\\

இந்தியத்தாய்க்கும் - மகளுக்கும் இருக்கும் உறவு நெருக்கம்...
பாலியலுக்கு பக்குவப்படுத்துதல்...
இரண்டையுமே, இந்த  ‘ஒரு வரி வசனத்தில்’ வெளிப்படுத்தி... 
நம் குடும்ப அமைப்பு, கலாச்சாரம், பண்பாடு முதலிய பெருமைகளை உலகறியச்செய்துள்ளார் படைப்பாளி கமல்.
மேல் நாட்டு ‘டேட்டிங்’ கலாச்சாரத்தை இங்கே பரப்ப நினைக்கும் பன்னாடைகளுக்கு இக்காட்சி பாடம் புகட்டும்.


\\\  மைதிலி : [ புத்தகத்தை காட்டி ] காந்திஜீஸ் பயாகிரபி. 
என் புக்தான். \\\

இந்த வசனத்தை உச்சரிக்கும் போது மைதிலியின் குரலில் பெருமிதம் பொங்கி வழிவதைக்காணலாம்.

\\\ ராம் : நோ...ஐ யூஷுவலி டோண்ட் லைக் செமி பிக்‌ஷன்.
வேற ஒண்ணும் படிக்கிறதுக்கு கிடைக்கல...அதான்.\\\

ராமின் குரலில் அலட்சியம் மேலோங்கி இருக்கும்.

‘காந்திஜீ பயாகிரபியை’... ‘செமி பிக்‌ஷன்’... என ராம் நக்கலடிப்பதை விரும்பாமல் மைதிலி அந்த இடத்திலிருந்து நகருவாள்.
இந்தக்குணம்... இந்தியப்பெண்களுக்கே உரித்தான பராம்பரிய குணம்!
காந்தியையும் விட்டுக்கொடுக்க முடியாமல்,
புருஷனையும் திட்ட முடியாத...
மைதிலியின் ஷண நேரத்தவிப்பை மிக அற்புதமாக தனது முகத்தில் பிரதிபலித்து காட்டியிருப்பார் வசுந்தரா தாஸ்.

பாத்ரூமிற்குள் மைதிலி,
பல்லிக்கு பயந்து அலறுகிறாள்.
ராமிற்கு, மைதிலியின் அலறல்,
நனவோடையினால் [ Stream Of Consciousness ]...
அபர்னாவின் கதறலாக கேட்கிறது.

பார்வையாளராகிய நமக்கு இருவரது அலறலும் கேட்கிறது.
திரையில் விஷுவலாக காட்டப்படும் மைதிலியின் அலறலுக்கு பின்னணி இசை அமைக்காமல்,
ராமின் நனவோடையில் ஒலிக்கும் அபர்னாவின் கதறலுக்கு ...
பின்னணி இசை கொடுத்து...
ரசிகர்களை நனவோடையில் ஆழ்த்தி ‘கல்கத்தாவுக்கு’ அழைத்து செல்கிறார் இளையராஜா.
இரண்டு ஜீனியஸ்கள் ஒன்றாக சங்கமித்ததால் நமக்கு கிடைத்த பொக்கிஷம் இந்தக்காட்சி.


அவலத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் ராஜாவின் இசை,
மைதிலி கதவைத்திறந்ததும்...நொடி நேரத்தில் மெல்லிசையாக மாறி சாந்தமாக ஒலிக்கும்.
மீண்டும் ராம் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டு கதவடைத்ததும்,
ராஜாவின் ‘துன்பியல் இசை’ ...
காட்சியில் இடம் பெறும் சப்தங்களுக்கு...
இடையூறு செய்யாமல் ரசிகனுக்கு அவலச்சுவையை கூட்டுவதில்
தன் பங்கை செவ்வனே செய்கிறது.

அடித்துச்சொல்கிறேன்..
உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களான ஜான் வில்லியம்ஸ்,
ஜெர்ரி கோல்ட் ஸ்மித், எனியோ மரிக்கோன் போன்றவர்களை தாண்டி இருக்கிறார் ராஜா.
இப்படி ஒரு காட்சியை லட்டு மாதிரி கமல் அமைச்சு கொடுக்க,
கொடி பிடிச்சு ஆடியிருக்கார் நம்ம ஆளு.

ஆஸ்கார் வாங்கிய இசை அமைப்பாளர்கள்,
தயவு செய்து இந்த தரத்தை எட்ட முயற்சிக்கவும்.



அபர்னா நினைப்பு, கல்கத்தா துயரம் இவைகள் ஏற்படுத்திய  உள்ளக்கொதிப்பை தணிக்க ராம்  ‘தலை முழுகுகிறான்’.
இறுதியாக  ‘கரண்ட் ஷாக்கில்’ உடம்பு உதறுவது போல் உடல் மொழியை ஏற்படுத்தி நம்மை ஆகர்ஷிக்கிறார் கமல்.
இக்காட்சியில்  நடிகர் கமலை பாராட்டுவதா !
வடிவமைத்த இயக்குனர் கமலை பாராட்டுவதா !!
ஒரே வார்த்தை...கொன்னுட்டீங்க கமல்.

‘நனவோடைக்காட்சிகளை’ படமாக்குவதில் உலகிலேயே
ஈடு இணையற்ற மாஸ்டர் ‘ இயக்குனர் மாமேதை இங்மர் பெர்க்மன்’ மட்டுமே.
ராமின் குளியலறைக்காட்சியின் மூலமாக  ‘பெர்க்மனுக்கு’ இணையாக உயர்ந்து விட்டார் கமல்.


மைதிலியின் மீது விழுந்த பல்லியும்...
இரத்த சகதிக்குள் துடிக்கும் பல்லியும்...
ஒன்றல்ல.
ஏனென்றால் ராம் பார்க்கும் போது வெற்றுத்தரையாக இருப்பது...
மெல்ல மெல்ல இரத்தக்குளமாக உருவெடுக்கும்.
அதில் ஊர்ந்து போய் இரத்தத்தை குடிக்கிறது ‘பல்லி’.
இக்காட்சி சரியான ‘பெர்க்மன்தனம்’.

பல்லி = நனவோடை.
இரத்தம் = கல்கத்தா துயரம்.

இது போன்ற காட்சியை பாமர ரசிகன் புரிந்து கொள்வான் என நம்பி 2000ல் படமெடுத்த கமலுக்கு...
ராயல் சல்யூட்.

‘பெர்க்மனை’  உண்மையாக புரிந்து கொண்ட ரசிகன்,
இக்காட்சியை அமைத்த கமலைக்கொண்டாடுவான்.

‘நனவோடை’ பற்றி ஹேராமின் முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியுள்ளேன்.

ஹேராம் = 031 பதிவிற்குச்செல்ல...

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


Jun 10, 2013

பதிவுலக பண்ணையார்கள் பற்றி எரியட்டும்.


நண்பர்களே...
பேட்டரி, ஊமத்தை, அரளி விதையை போட்டுக்காய்ச்சிய கள்ளச்சாராயத்தை வாசகனிடம் விற்று விட்டு ‘ரெமி மார்ட்டினுக்கு’ வழியில்லையே எனப்புலம்பும் ‘லகுட பாண்டி’ இருக்கும் நாட்டில்தான்...
தாய்ப்பாலை பருக வைக்கும் எழுத்தாளனாக,
வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
இந்த ‘கள்ளச்சாராயம்’...  ‘தாய்ப்பாலை’ தொடர்ந்து தாக்கி வரும் மர்மத்தையும் நாடறியும்.
எஸ்.ரா அவர்கள் ஹேராமுக்கு பாராட்டு பத்திரம் வாசித்ததை,
வாசிக்கும்  ‘ஒரு சில பதிவுலக பண்ணையார்கள்’ பற்றி எரிவதை பற்றி கவலையில்லை.
என் கடன்  ‘உலக சினிமாவுக்கு’ பணி செய்து கிடப்பதே.

Heyram \ 2000 \ India \ Directed by Kamal Hassan \ Part = 035


“  ஹாலிவுட்டின் 3 அங்கங்கள் கொண்ட திரைக்கதை அமைப்பு 
தமிழுக்கு பொருந்தாது.
அதற்குக்காரணம், தமிழில் கதை சொல்லும் முறைகள் ஏராளம். 
இங்குள்ள ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், நாட்டார் கதைகள் போன்றவை நூற்றுக்கணக்கான கதை சொல்லும் முறைகளை கொண்டிருக்கின்றன.
ஆகவே,தமிழ் திரைக்கதை... 
‘சிட்ஃபீல்டு’ சொல்லும் 3 அங்கங்கங்களை கொண்ட திரைக்கதை அமைப்பிற்கு 
ஒத்து வராது.
இதற்கு உதாரணமாக கமலின் திரைக்கதைகளையே சொல்லலாம்.
அவரது கதைகள் சம்பிரதாயமான ஹாலிவுட் திரைக்கதை வடிவத்திற்குள் பொருந்தாதவை.

ஹேராம் இந்திய சுதந்திரத்தின் மறுபக்கத்தை சுட்டிக்காட்டிய முதல் படம்.
காந்தி எப்போதுமே ஒரு புனித பிம்பமாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.
அதை விலக்கி காந்தியை முன் வைத்து நடந்த அரசியல் சம்பவங்களையும்,
அதன் விளைவுகள் இன்றுவரை இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை விவரிக்கிறது ஹேராம்.
இதை ஒரு கமர்சியல் சினிமாவிற்கான கதையாக தேர்வு செய்வது என்பதிலே...
கமலின் துணிச்சலும் ஆர்வமும் வெளிப்பட்டுள்ளது.

ஹேராமின் திரைக்கதை விரிந்த தளத்தில் இயங்கக்கூடியது.
பொதுவில் திரைக்கதையின் முக்கியப்பிரச்சனையாக கதை நடைபெறும் கால மற்றும் வெளியைச்சொல்வார்கள்.
ஹேராம் ஒரு நாவல் போல சரித்திரத்தின் நீண்ட பக்கங்களில் முன்பின்னாக நகர்ந்து செல்கிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதும்,
அதன் எதிர்விளைவுகளாக உருவான வன்முறையும்,
இந்திய சமூகத்தில் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் பாதிப்புகளின் மீதான ஒரு கலைஞனின் பார்வையே ஹேராம்.

சினிமாவில் சரித்திரத்தை மறு உருவாக்கம் செய்யும்போது சந்திக்கும் முதல் சவால் உரையாடல்.
எது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார்கள்;
எப்படியான மொழியில் வெளிப்படுத்தினார்கள் என்பது.
ஹேராமில் ஐம்பது வருடங்களுக்கு முன்புள்ள பிரயோகங்கள்,சொற்கள்,
உரையாடல்களில் கவனமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அது போல பல்வேறு கதாபாத்திரங்கள் அவரவர் மொழியில் பேசிக்கொள்கிறார்கள்.
இத்தனை வேறுபட்ட மொழிப்பிரயோகங்கள் கொண்டிருந்த போதிலும்,
ஆதாரக்கதை சொல்லல்...காவியத்தன்மை மிக்கதாகவே தொடர்ந்திருக்கிறது.

தமிழ் சினிமாவை தொடர்ந்து அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு முன்னோடி கலைஞன் என்ற அளவில் கமலின் படைப்புகள் ஒவ்வொன்றும் விரிவாக விவாதிக்கப்படவேண்டியவை.
கமல் தமிழுக்கு கிடைத்த 
ஒரு ‘ழான் கிளாட் கேரியர்’. 
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

நூல் : கமல் நம் காலத்து நாயகன்.

தொகுத்தவர் : மணா.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.

[ எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள் எழுதிய காலமும், வெளியிட்ட ஊடகம் பற்றிய தகவல் நூலில் இல்லை.] 



ழான் கிளாட் கேரியர் பற்றி தெரிந்து கொள்ள விக்கிப்பீடீயாவுக்கு செல்க...
நண்பர்களே...
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கல் வெட்டை’ கண்டு களித்திருப்பீர்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
    

May 28, 2013

ஹேராமில், சென்சார் நீக்கிய காந்தி பற்றிய வசனங்கள்.


Hey Ram \ 2000 \ INDIA \ ஹேராம் = 034 
‘கமல்ஹாசன் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவோடு பேசிக்கொண்டிருக்கிறார்...
சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்...
சூதாடிக்கொண்டு இருக்கிறார்...
இடர்கள் மிகுந்த அதன் ஒவ்வொரு குகையாகத்தட்டி திறந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தமிழில் சினிமா மொழியை உருவாக்குவதற்காக,
அதன் கலா பூர்வமான வேர்களை உயிர்பிப்பதற்காக அவர் தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார்.

இன்று தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மாதிரிகளாக கருதப்படும் அனைத்தும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கமல்ஹாசன் பரிசோதித்து பார்த்ததின் நீட்சியே’ - மனுஷ்ய புத்திரன். 

நண்பர்களே...
ஹேராமில்,  ராம் - மைதிலி திருமணக்காட்சிகள்,
அய்யங்கார் திருமணச்சடங்குகளை மிகச்சிறப்பாக பதிவு செய்ததை,
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மிகவும் சிலாகித்து பாராட்டி எழுதி இருக்கிறார்.
அம்புஜம் கதாபாத்திரத்தில் ஹேமமாலினி அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
கண்ணாலேயே கணவனுக்கு கட்டளை பிறப்பிப்பதும்,
கட்டளைகளை சரியாக உள்வாங்கி உப்பிலி அய்யங்கார் ‘ஆடுவதும்’ ...
கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

‘வைஷ்ணவோ ஜனதோ...
தேனே கஹியேஜெ...
பீடு பராயி ஜானேரே’
என, பெண் பார்க்கும் படலத்தில்...
மைதிலி, காந்திக்கு பிரியமான பாடலைப்பாட,
மைதிலியின் பெற்றோர் பெருமிதத்தில் பூரிப்பார்கள்.
மைதிலியின் குடும்பமே காந்தியின் பக்தர்கள் என்பதை இக்காட்சியிலேயே
எஸ்டாபிளிஷ் செய்திருக்கிறார் இயக்குனர் கமல்.

ராம் - மைதிலி கண்கள் கலந்து திருமணம் நடக்கிறது.


சாப்பாட்டுப்பந்தி நடக்கும் போது,
மொட்டை மாடியில் நண்பர்களோடு உரையாடுகிறான் ராம்.
ராமின் முகத்தில் கல்யாணக்களையே இருக்காது.

வேதா : என்ன...கல்யாண மாப்ள யோசிச்சிண்டிருக்கே ?

ராம் : இங்க சாவகாசமாக என் கல்யாணம் நடந்திண்டிருக்கு.
டெல்லியில ஒரு பெரிய விவாகரத்தே நடந்துண்டிருக்கு.
‘வேர்ல்டு பிக்கஸ்ட் பொலிட்டிக்கல் டிவ்வோர்ஸ்’

யக்ஞம் : சரி...தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சு.
இந்த பாக்கிஸ்தான் பிரிஞ்சது நல்லதுங்கறேன் நானு.
அந்த ரேட் கிளிஃப் செறங்கை நறுக்கி எறியற மாதிரி 
சர்ஜரியே பண்ணிட்டான்.

வேதா : யாருடா அந்த ரேட் கிளிஃப் ?

யக்ஞம் : என் சித்தப்பா.

வேதா : ஓஹோ...

யக்ஞம் : என்னடா ஒத்துக்கறான்.

வேதா : சரி...ஒத்துக்கல. யாருடா அது ?

ராம் : இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் பிரிக்கிற கோடு எதுன்னு
நிர்ணயம் பண்ணின மகானுபாவன்.

இக்காட்சியில் உள்ள வசனத்தின் மூலம் ராம்-மைதிலி திருமணக்காலத்தை கணக்கிடலாம்.
மேலும் பிரிவினையை ஆதரிக்கும் பாத்திரமாக ‘யக்ஞம்’ காரெக்டரையும்,
பிரிவினையில் உடன்பாடில்லாத பாத்திரமாக‘ராம்’ காரெக்டரையும் படைத்துள்ளார் படைப்பாளி கமல்.
பிரிவினையில் முரண்பட்ட கருத்துக்கள் இந்துக்களிடம் நிலவியதை இக்காட்சி சித்தரிக்கிறது.
முஸ்லீம்களிடமும் முரண்பட்ட கருத்துக்கள் இருந்த்தை  ‘அம்ஜத்’ காரெக்டர் மூலம் சித்தரிக்கப்பட்டிருப்பதை பின்னால் பார்க்க இருக்கிறோம்.

 இந்திய - பாக்கிஸ்தான் எல்லைக்கோட்டை வகுத்த ரேட் கிளிஃப் பற்றி மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவை அணுகவும்.

ரேட் கிளிஃப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு....


வசந்தா மாமி மயக்கமாகிறார்.
யக்ஞம் டாக்டர் என்பதால் பரிசோதிக்கிறான்.
இக்காட்சியில்  ‘ஸ்கிரிப்ட்டில்’ உள்ள சில வசனங்கள்,
சென்சாரால் நீக்கப்பட்டு உள்ளது.
அந்த வசனங்களை  ‘அடித்து’ அடையாளப்படுத்தி உள்ளேன்.

யக்ஞம் : மாமி, 24 மணி நேரம் இருக்குமா...
நீங்க கடைசியா சாப்டு ?...
ம்...பட்னி...
உங்களுக்கு எதுக்கு இந்த வயசில காந்தி விளையாட்டெல்லாம் ? வேலையெல்லாம் ?

அம்புஜம் : காந்தி வெளயாட்டா ?

யக்ஞம் : அவர்தான் உபவாசம், பாஸ்ட்ன்னு கடைசி நிமிஷம் வரைக்கும்,
எல்லோரையும் இழுத்தடிச்சுட்டு காரியம் ஆனதும் ,
ஒடம்பு கெடாம டக்குன்னு நிறுத்திடுவார்.

அம்புஜம் : என்ன சொல்றார் ? 
மஹாத்மாவை கேலி பேசற மாதிரி இருக்கே ?

பாஷ்யம் : இவா வம்சமே அப்படித்தான்.
லோகம் பூரா ஒண்ண ஒத்துண்டாலும்...இவா ஒத்துக்க மாட்டா.
என் ஒறவுக்காரன்.
ம்...காந்தி என்ன...பகவானையே கேலி பேசுவான்.

யக்ஞம் : ம்...உறவுக்காரரே... ‘ஐ யாம் ஜஸ்ட் பீயிங் பிராக்டிகல்.
மாமி...நான் மகாத்மாவை கேலி பேசல.
‘ஆஸ் எ டாக்டர்’...இந்த மாதிரி ஒடம்ப கவனிச்சுக்காம பட்னி கெடக்கறது தப்புன்னு சொல்றேன். அவ்வளவுதான்.

அம்புஜம் : நானும் நீங்களும் பட்னி கெடந்தா, 
மாமி மாதிரி மயக்கம்தான் வரும்.
மஹாத்மா பட்னி கெடந்தா சுதந்திரம் வரும்.
நீங்க சாப்பிட்டேளா ?

யக்ஞம் : [ நக்கலான விமர்சனம் புரிந்தவனாய்...அசடு வழிய ]
வயிறு திம்முன்னு நெறஞ்சுடுத்து.

அம்புஜம் : அது ‘கேஸ்’ஆ இருக்கும்...போய் சாப்ட்றுங்கோ.

வசந்தா மாமி கலகலன்னு சிரிக்க இக்காட்சி நிறைவு பெறுகிறது.

இக்காட்சியில் காந்தியின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களை
கமலின் கருத்தாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
காந்தியின் உண்ணாவிரதப்போரட்டம்,
அந்தக்காலத்திலேயே விமர்சிக்கப்பட்டதை...
யக்ஞம் கதாபாத்திரம் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டு உள்ளது.
காந்தியை எந்த விமர்சனமும் இல்லாமல் பக்தர்கள் போல்,
அவரது கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதை அம்புஜம் கதாபாத்திரம் மூலம் எடுத்துக்காட்டி உள்ளார் கமல்.

இக்காட்சியில் போட்டி போட்டு யக்ஞமாக நடித்த ஒய்.ஜி. மகேந்திரனும்,
அம்புஜமாக நடித்த ஹேமமாலினியும்,
பாராட்டுக்குறியவர்கள்.

வைஷ்ணவோ ஜனதோ & வாரணம் ஆயிரம் பாடலையும்... திருமணக்காட்சிகளையும் காணொளியில் காண்க...


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

May 25, 2013

மீண்டும் ஹேராம் !


HEYRAM \ 2000 \ INDIA \ ஹேராம் = 033
நண்பர்களே...
ஹேராம் தொடரை தொடர்ந்து எழுதாமல்,
‘டிமிக்கி’ கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இனி ஹேராம் தொடர், நிற்காமல் தொடரும் என உறுதியளிக்கிறேன்.
ஹேராம் தொடர் கற்றுக்கொடுத்த மிக முக்கியமான பாடம் இதுதான்...
“ புதிய கருத்துக்கள் வளர வேண்டும் என்பதற்காக, 
எத்தனை கருத்துக்கள் வெட்டி வீசப்பட வேண்டும் !
இலக்கை சரியாக அடைவதற்கு, 
எத்தனை முறை குறி வைத்து அடிக்க வேண்டும் !! ”

‘ நடிகனின் பிரதான நோக்கம் ஒரு மனித ஆன்மாவின் வாழ்வை,
மறு உருவாக்கம் செய்வது மட்டுமல்ல ; 
மாறாக, அதை ஒரு அழகான கலை நுட்பமான வடிவமைப்பில் வெளிப்படுத்துவதும் ஆகும்’ - கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி.

 ‘ஸ்தனிஸ்லாவ்ஸ்கி’ வகுத்த நடிப்பு இலக்கணத்தை,
ஹேராமில் அனைத்து நடிகர்களும் பின்பற்றியிருப்பதை நாம் காணலாம்.
மிகச்சிறந்த உதாரணம்...சாகேத்ராம் மைதிலியை பெண் பார்க்கும் படலம்.

வேதா என்ற ஒல்லியான இளைஞன், அழைப்பில்லாமல் தெருவிலிருந்து உப்பிலி ஐயங்கார் வீட்டுக்குள் நுழைந்து ராமை தேடுகிறான்.

வேதா : ராமா...ராமா...டேய் ராமா...
வேதாடா...
என்னடா இது, தாடியும் மீசையுமா ?
அசல் பாஷ்யம் மாமா மாதிரியே மாறிட்ட.
அவர் மாதிரியே பிரம்மச்சாரியா போகாம, 
ரெண்டாம் கல்யாணத்துக்கு ஒத்துண்டயே, 
அது வரைக்கும் சந்தோஷம்.

பாஷ்யமும், வசந்தா மாமியும் வெறுப்போடு அவனை முறைக்கிறார்கள்.
வேதா வசந்தா மாமியும் வந்திருப்பதை உணர்ந்தவனாய்...

வேதா : அடடே...வசந்தா மாமி !
சவுக்கியமா இருக்கேளா ?
மாமா வரலயா ? 

வசந்தா மாமி : வரல...

வேதா : ஏன் ?

வசந்தா மாமி : வரல...

வேதா : அதான் ஏன் வரலன்னு கேக்றன்.

வசந்தா மாமி : உடம்பு சரியில்ல.

வேதா : அய்யய்யோ...உடம்பு சரியில்லயா ? நன்னாத்தானே இருந்தார்.

வசந்தா மாமி : போடா பிரம்மஹத்தி.
ஏழு வருசமா கைகால் வெளங்காம படுத்துண்றுக்கார்.

வேதா : ஓ... இருக்கட்டும்...இருக்கட்டும்.

வசந்தா மாமி : இப்ப வந்துட்டான் பெரிசா கேக்கறதுக்கு...
போடா அந்தண்ட...

பாஷ்யம் : அக்கா...

வசந்தா மாமி : இர்ரா...
[ உப்பிலி அய்யங்காரிடம் ]
இவன் என்ன உங்களுக்கு ஒறவா ?

உப்பிலி அய்யங்கார் : அய்யய்யோ; அக்ரஹாரத்துல இருக்கான்.
அவ்வளவுதான். 

இந்தக்காட்சியில் தோன்றும்,
வேதா என்ற காரெக்டரை நீங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருப்பீர்கள்.
இவர்களால் உபகாரம் இருக்காது; உபத்திரவம் இருக்கும்.

வசந்தா மாமி, ‘இவன் உங்களுக்கு ஒறவா ?’ என கேட்ட தொனியில் திருமணத்தையே நிறுத்தி விடும் தொனி இருக்கும்.
அதைப்புரிந்து, உப்பிலி ஐயங்கார்...
திருமண ஏற்பாடு நின்று விடப்போகிறதே என்ற பதட்டத்தோடு...
‘அய்யய்யோ ; அக்ரஹாரத்துல இருக்கான். அவ்வளவுதான்’ என்று மறுதலிப்பார்.
உப்பிலி அய்யங்காரின் பேச்சின் தொனியில் ‘வேதா ஒரு டம்மி பீசு’ என்பது பொதிந்திருக்கும்.

வேதா காரெக்டரில்...வையாபுரியும்,
வசந்தா மாமி காரெக்டரில்...நாகமணி மகாதேவனும்,
உப்பிலி அய்யங்காராக...கிரிஷ் கர்னாடும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக நாகமணி மகாதேவன்...சான்சே இல்லை.

மைதிலி பாஷ்யம், வசந்தா மாமியை சேவித்து விட்டு,
ராமையும் சேவிப்பாள்.
ராம் அவளை ஆசிர்வதிக்க எத்தனிக்கும்போது,
கையில் அபர்னா அணிவித்த மெட்டியை பார்ப்பான்.
குற்ற உணர்வில் ராம் தவிப்பதை எடுத்துக்காட்ட, 
அற்புதமாக ‘ஷாட் கம்போஸ்’ செய்திருப்பார் இயக்குனர் கமல்.



அந்த  ‘அரை செகண்ட்’ ஷாட்டிற்கு, 
இளையராஜா ‘நீ பார்த்த பார்வை’ பாடலில் உள்ள பியானோ இசையை, பின்னணி இசையாக்கி... இசையால்,  
‘ராம்-அபர்னா’ காதல் காட்சிக்கு ‘கனோட்டேஷன்’ செய்திருப்பார்.

ஹேராம் = அபர்னா - ராம் காதல் காட்சி பற்றிய பதிவிற்கு இங்கே செல்லவும்.




இதெல்லாம்... 
‘தலை கீழாய் தொங்கும் ஜந்துவுக்கு’ புரியுமா ?  

ஹேராமின் முந்தைய பதிவுகளுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் செல்லவும்...

ஹேராம் = 032

ஹேராம் = 031

ஹேராம் = 030
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.  

May 22, 2013

அவள் அப்படித்தான் = கூட்டு முயற்சி.


நண்பர்களே...
1978ம் வருட தீபாவளி அன்று,
கமல் நடித்த மூன்று படங்கள் வெளியாகியது.
1 சிகப்பு ரோஜாக்கள் - இயக்கம் : பாரதிராஜா
2 மனிதரில் இத்தனை நிறங்களா - இயக்கம் : ஆர்.சி. சக்தி
3 அவள் அப்படித்தான் - இயக்கம் : ருத்ரையா
ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியானாலும்,
காலத்தை வென்றது ‘அவள் அப்படித்தான்’ மட்டுமே!

கதைக்கான மூலக்கருவை ருத்ரையா உருவாக்க,
திரைக்கதையாக்கத்தில் இயக்குனர் கே.ராஜேஷ்வர் பணியாற்ற,
வசனத்தை அனந்து அவர்களும், எழுத்தாளர் வண்ண நிலவனும் சேர்ந்து
எழுதி இருக்கிறார்கள்.
மேலும், இப்படத்தில் அர்ப்பணிப்போடு உழைத்த...
பல நல்ல கலைஞர்களை இப்பதிவில் அடையாளம் காணலாம்.

‘அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கிய ருத்ரையா,
இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
அப்போதே கமலிடம் நட்பாக இருந்த காரணத்தால்,
அவரிடம் எளிதாக கால்ஷீட் வாங்கி விட்டார்.
கமல்தான் அன்று தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரம்.
தனது  ‘பிஸி ஷெட்யூலில்’...கிடைத்த  நேரத்தை,
‘அவள் அப்படித்தானுக்கு’ ஒதுக்கி கொடுத்து...
படத்தை முடிக்க உதவி இருக்கிறார்.


படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஸ்ரீப்ரியாவிடம் கமலே பேசி,
அனுமதி வாங்கி கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீப்ரியாதான் அன்று முன்னணி நட்சத்திரம்.
அவர் நடித்த ஆட்டுக்கார அலமேலு வெள்ளிவிழா கொண்டாடிய நேரம்.
அவர் அப்போது ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார்.
‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு வெறும் முப்பதாயிரம் ரூபாய் மட்டும் சம்பளமாக  பெற்றிருக்கிறார்.

சூட்டிங் முதல் நாள் அன்று,
அன்றைய கால வழக்கப்படி தனது வீட்டிலிருந்து சேர் கொண்டு வந்திருக்கிறார் ஸ்ரீப்ரியா.
ஆனால் கமல்,ரஜினி உட்பட யாருக்குமே சேர் கிடையாது.
சூழலைப்புரிந்து கொண்டு அடுத்த நாள் முதல் சேர் கொண்டு வராமல் எல்லோரையும் போல் தரையில் அமர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

சாதாரண மெஸ்ஸில் இருந்து கொண்டு வரப்பட்ட,
சுமாரான சாப்பாடையே அனைவரும் சாப்பிட்டு இருக்கிறார்கள்.

கமலும்,ஸ்ரீப்ரியாவும் சூட்டிங், டப்பிங் அனைத்திலும் ரீடேக் போகாமல்,
ஒரே டேக்கில் முடித்துக்கொடுத்து பங்காற்றி இருக்கிறார்கள்.


ரஜினியும் அப்போது வளர்ந்து வரும் கலைஞராக இருந்தாலும் அவரும் பிஸியான நடிகர்தான்.
இயக்குனர் கே. பாலச்சந்தரின் வலது கரமும்,
கமலின் ஆசானுமான அனந்து அவர்கள்,
ரஜினியிடம் பேசி கால்ஷீட் வாங்கி கொடுத்திருக்கிறார்.

அந்தக்காலத்தில் இசையமைப்பாளர்தான்,
தயாரிப்பு அலுவலகத்துக்கு வரவேண்டும்.
இசையமைப்பாளர் இளையாராஜா அலுவலகத்துக்கு வருகிறார் என்பதற்காக அவசரம் அவசரமாக பேன் வாங்கி மாட்டி இருக்கிறார்கள்.
அது வரை படத்தயாரிப்பு அலுவலகத்தில் பேன் கூட கிடையாது.
ஆனால் அவர் வரும் நேரம் கரண்ட் இல்லை.
அந்த புழுக்கத்திலேதான்,
இன்றும் குளிர்ச்சியையும் இனிமையையும் தரும் டியூனை உருவாக்கி இருக்கிறார்.
இசைக்கருவிகளில்... பியானோதான் இளையாராஜாவுக்கு ‘பெட்’.
அவர் பியானோ இசையில் போட்ட ‘மாஸ்டர் பீஸ்களில் ஒன்று’ ...
‘உறவுகள் தொடர் கதை’ என்ற பாடலும் ஆகும்.
[ மற்றொன்று ‘ஹேராம்’ படப்பாடலான ‘நீ பார்த்த பார்வை’]
இப்பாடலில், இளையராஜாவின் இசையில் ‘மோனாலிஸா’ தன்மையை உணரலாம்.
கதையின் மையக்கருத்து,
ஆண்களால் பெண்ணுக்கு இழைக்கப்படும் துரோகங்கள்.
அந்த கருத்தாக்கம் , இப்பாடலில் மெல்லிய இழையாக நெய்யப்பட்டிருக்கும்.

கமல்- ரஜினி - ஸ்ரீப்ரியா - இளையாஜா கூட்டணியில் வந்த
‘இளமை ஊஞ்சலாடுகிறது'.... மெகா ஹிட் திரைப்படம்.
எனவே இப்படம் எளிதில் வியாபாரம் ஆகி விட்டது.
படம் வெளியான போது,
‘இளமை ஊஞ்சலாடுகிறது’ போன்ற படத்தை எதிர் பார்த்து சென்ற
பாமர ரசிகர்கள் தியேட்டரில் கத்தி கலாட்டா செய்திருக்கிறார்கள்.

படம் வெளியான நேரம்,
திரைப்பட மேதை மிருணாள் சென் சென்னைக்கு வந்திருக்கிறார்.
தற்செயலாக தியேட்டரில்  ‘அவள் அப்படித்தான்’ படம் பார்த்திருக்கிறார்.
ஒரு கலைத்திரைப்படம் இப்படி புறக்கணிக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு
மனம் வெதும்பி பத்திரிக்கையாளர்களை வரவழைத்து,
தனது மனக்குமுறலை வெடித்திருக்கிறார்.
‘நல்லதோர் வீணையை புழுதியில் கிடத்தியதை’ சாடி அவர் கொடுத்த பேட்டி பத்திரிக்கைகளில் வெளியானது.
பத்திரிக்கைகள் தொடர்ந்து கமல்,ரஜினி,ஸ்ரீப்ரியா,ருத்ரையாவிடம் பேட்டி வாங்கி வெளியிட்டு கலை ரசிகர்களிடம் படத்தை கொண்டு சேர்த்தன.
படம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நூறு நாட்கள் ஓடியது.

ஒளிப்பதிவு மேதை  ‘மார்க்கஸ் பார்ட்லே’ ,
அந்த வருடத்திற்கான சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை
‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தை தேர்வு செய்து அறிவித்து விட்டார்.
காரணம் வண்ணப்படங்களுக்கு  மட்டும்தான்,
அப்போது விருது வழங்கி வந்தார்கள்.
எனவே  ‘அவள் அப்படித்தான்’ ,
மார்க்கஸ் பார்ட்லே பார்வைக்கே வரவில்லை.
ஆனால் ‘சிறந்த படத்திற்கான’ தேர்வுப்பட்டியலில் இருந்த படங்களை திரையிட்ட போது,
‘அவள் அப்படித்தானை’ பார்த்து இருக்கிறார் மார்க்கஸ் பார்ட்லே.
படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருப்பதை கண்டு,
இப்படத்திற்கும் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது வழங்கப்பட வேண்டும்
என அடம் பிடித்திருக்கிறார்.
எனவே முதன் முறையாக ‘கருப்பு - வெள்ளை’ படத்திற்காக
தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டது.
அதன்படி,  ‘அவள் அப்படித்தான்’ ஒளிப்பதிவாளர் நல்லுசாமிக்கு
விருது வழங்கப்பட்டது.
சிறந்த படமாக ‘அவள் அப்படித்தான்’ படத்தை,
தேர்வு செய்து விருது வழங்கினார்கள்.

அவள் அப்படித்தான் = நல்ல கலைஞர்களின் கூட்டு முயற்சி.

இப்பதிவில் இடம் பெற்ற தகவல்கள்,
ஒளிப்பதிவாளர் திரு.நல்லுசாமி பேட்டியாக,
அந்திமழை இதழில் வெளி வந்தவை.
அனைத்திற்கும் நன்றி.
மேலும் விரிவான தகவல் பெற கீழ்க்கண்ட இணைப்பிற்கு செல்லவும்.

http://andhimazhai.com/news/view/nallusamy-12-4-2013.html

இளையராஜாவின் பாடலை நல்லுசாமியும் ருத்ரையாவும் சேர்ந்து காவியமாக்கியதை காணொளியில் காண்க.


                                                                                                                                                                                                         



CNN - IBN டெலிவிஷன் நிறுவனம் இப்படத்தை இந்தியாவின் தலை சிறந்த  நூறு படங்களில் ஒன்றாக தேர்வு செய்து பெருமை சேர்த்துள்ளது.
இப்படம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பிடியாவை அணுகவும்.

http://en.wikipedia.org/wiki/Aval_Appadithan

இன்று முன்னணியில் இருக்கும் கலைஞர்கள் ஏன் இது போன்ற கலை படைப்புகள் வர உதவுவது இல்லை ?
காசு...பணம்...துட்டு...money...money... என்பதில் மட்டும் குறியா ??
சிந்திப்போம்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Feb 28, 2013

சுஜாதாவும் கமலும்.



நண்பர்களே...
என் ஆசான் சுஜாதா நினைவு நாளை [பிப்ரவரி 27 ] முன்னிட்டு...
இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.



எண்பதுகளில் [ 1980s ] திரைக்கதிர் என்றொரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது.
அப்பத்திரிக்கைக்காக பெங்களூரிலிருந்து வந்த சுஜாதாவும்...
 ‘வறுமையின் நிறம் சிவப்பு’ பட சூட்டிங் முடித்து வந்த கமலும் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள்.
அன்று அவர்கள் நடத்திய விவாதம் இன்றும் பொருந்தி வருகிறது.
அதிலிருந்து சில தேன் துளிகள்...


சுஜாதா : நான்  'இஸட்'ன்னு  ஒரு பிரெஞ்ச் பிலிம் சமீபத்தில் பார்த்தேன்.
[ Z \ 1969 \ French \ Directed by : Costa - Gavras ]
அரசியலை மையமா வைச்சிகிட்டு ரொம்ப பிரமாதமா எடுத்திருக்காங்க.
தமிழ்ல ஏன் அரசியலை சம்பந்தப்படுத்தி படம் பண்ண மாட்டேங்கறீங்க ?

கமல் : உங்களுடைய ‘24 ரூபாய் தீவை’ ‘யாரோ பார்க்கிறார்கள்’ என்கிற பெயரில் படமா எடுக்க நினைச்சோம்.
முடியல.
பண்ண முடியாத சூழ்நிலை இருக்கு.
யெஸ்....இட் வாஸ் டினைட் [ Yes..It was denied ].
தீடிர்னு அந்தப்படத்தை தடை பண்ணிட்டாங்கன்னா... 
டிஸ்டிரிபியூட்டர் மாட்டிக்குவாங்க.
வட்டிக்கு வாங்கி படமெடுக்குற புரொடியூசர் காலி.
அரசியலை மையமா வைச்சு இங்கே படமெடுக்குறது கஷ்டம்.

சுஜாதா : ரொம்ப பேர் அடிபட்டாலும், சினிமா எடுக்க வந்துகிட்டே இருக்காங்க !
அதுக்கு முக்கிய காரணம் சினிமாவைப்பற்றி இருக்கிற தப்பான அபிப்ராயமும்,
அவங்களுக்குள்ளே இருக்குற சபலமும்தான்.

கமல் : சினிமா படமெடுக்க ஆபிஸ் பிடிச்ச உடனே...
ஒரு படுக்கையை மூலையில ரெடி பண்ணி போட்டுக்கிட்டவங்க நிறைய பேர் இருக்காங்க.
ஆனா அவங்க யாரும் படம் எடுக்கல.

சுஜாதா : உங்களுடைய  ‘ராஜ பார்வை’ எப்படிப்பட்ட படம் ?

கமல் : ‘குரு’ மாதிரி முழுக்க முழுக்க மசாலா படமல்ல.
படத்தின் கதை பரிட்சார்த்தமானது அல்ல.
ஆனால் டெக்னிக்கலாக உயர்ந்த படமாக தயாரிக்க முயற்சி செய்கிறோம்.
குறியீடுகளை முழுசா இப்படத்தில் ஒதுக்கி வைச்சிருக்கோம்.
தப்பித்தவறி வந்தா அது எங்களுடைய பூர்வீக பழக்கமாக இருக்கலாம்.
ஒரு தெளிவான காதல் கதை.
சந்தோஷமான முடிவு.
நாங்க கூட நினைச்சோம்.
இந்த ஹீரோவை கொன்னு பாத்தா என்னன்னு ?
சந்தோஷமான முடிவுன்னு தீர்மானிச்ச பிறகு கொல்ல முடியலையேன்னு ரொம்ப துக்கமா இருந்தது - அழுகையா வந்தது. 

ரொம்பப்பிரமாதமான படமாங்கிறது... படம் வெளி வந்தப்புறம்தான் சொல்லணும்.
ஆனா இப்படி ஒரு படம் தயாரிச்சதுக்காக நிச்சயமாக என்னை வருத்தப்பட வைக்காத படம்.

சுஜாதா : நீங்க எழுதறதையெல்லாம் நான் விடாம படிக்கிறேன்.
உங்க நடை நல்லாயிருக்கு.
எழுதறதை விட்டுடாதீங்க.
எழுத்தாளர்கிட்ட இருக்கிற முதிர்ச்சி உங்ககிட்ட இருக்கு.
இன்னும் சரியா சொல்லணும்னா ‘கனவுத்தொழிற்சாலை’ எழுதறதுக்கு நீங்கதான் சரியான ஆள்.

கமல் : நீங்க எழுதுனதுக்கே அது யாரைப்பற்றி...
இது யாரைப்பற்றின்னு எல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தாங்க.
நான் எழுதினா அதை விட வம்பே வேண்டாம்.
தவிற நான் ஒரு ‘பிம்ப்’ பற்றி எழுதினேன்னு வைச்சுக்கங்க.
உடனே கேள்வி வரும்.
 “ ஹேவ் யூ எவர் பீன் எ பிம்ப்” [ Have You ever been a Pimp ] அப்படின்னு.

ஆனா சுஜாதாகிட்ட அப்படியெல்லாம் கேட்க மாட்டாங்க.
சமீபத்துல ‘ஹோமோ செக்சுவல்’ பத்தி எழுதினேன்
உடனே பல பேர் என்னை கேட்டுட்டாங்க.
நீங்க ஒரு ஹோமோ செக்சுவலான்னு.

நீங்க ஒரு முறை ‘மழைத்தல்’னு எழுதியிருந்தீங்க இல்ல!

 “பெய்யென பெய்யும் மழை.
மழைக்குமெனில் சொல் உன் தாயிடம்...
நாடு நனையட்டும்” னு நான் எழுதியிருந்தேன்.
மழைக்கும்னு சொல்றது ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னுட்டாங்க.
  
சுஜாதா : சொல்லலாம் தவறில்லை.

கமல் : சுப்ரமணிய ராஜூவோ...மாலனோ...யார்னு ஞாபகம் இல்ல.
“ கீழ் பெர்த்தில் ஒரு நல்ல நாட்டுக்கட்டை.
மனதிற்குள் படுக்க வைத்தேன்”
அப்படின்னு எழுதியிருந்தாங்க.

சுஜாதா : புதுக்கவிதையில கல்யாண்ஜி எல்லாம்...பிரமாதம்.
ஒரு வேலைக்காரி சுமாரா இருக்கிறவ...
பெருக்கிட்டிருக்கா...
தரை சுத்தமாயிடுச்சு...
மனசு குப்பையாயிடுச்சு....அப்படீங்கறார்.
நாலு பக்க கதை...அந்த இரண்டு வரிகளில் வந்துடறதே !.

கமல் : இன்னொன்று நான் படிச்சேன். 
‘கருப்பு உதடுகளின் வெளிச்ச உளறல்கள்’ அப்படின்னு...
என்ன கற்பனை பாருங்க !

சுஜாதா : இன்னொரு புதுக்கவிதை நான் படிச்சேன்... 
‘கண்ணீர்’ என்ற தலைப்பில். 
“ இதயத்தில்தானே இடி....
இங்கே ஏன் மழை?” ன்னு எழுதியிருந்தாங்க!

இன்னொருவர் இப்படி...
“ திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம்.
என் கல்யாணம் மட்டும் ஏன் நொச்சிக்குப்பத்தில் நிச்சயிக்கப்படுகிறது ?”  

கமல் : சினிமா கவிஞர்கள் பலர் பிரமாதமாக பாட்டு எழுதி இருக்காங்க.
நான் சினிமா பாட்டு புத்தகத்திலிருந்தும்...
கலைஞர் கருணாநிதி வசனம் படிச்சும்தான் தமிழ் நல்லா பேசக்கத்துகிட்டேன்.

சுஜாதா : உங்க மாதிரி ஆளோடு எவ்வளவு நேரம் பேசறதுன்னாலும் நான் தயார்.
இன்னொரு முறை மீட் பண்ணி நாம்ப பேசுவோம்.

சுஜாதா  என்ற ஜாம்பவான் இன்று நம்மிடையே இல்லை.
அவரது தமிழ் என்றும் இளமையுடன் நம்மோடு ஓடி வரும்.

சின்ன சின்ன ஆசை....Costa - Gavras - ' Z ' பற்றி பதிவு எழுத ஆசை.
அதற்கு முன் -
Costa-Gavras -  ‘மானிடத்திற்கு’ எழுதிய புதுக்கவிதை  ' AMEN ' பற்றி எழுதுவதே...சிறகடிக்கும் ஆசை.
AMEN \ 2002 \ English \ Directed by Costa-Gavras



 
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Feb 20, 2013

VISWAROOPAM \ 2013 \ விஸ்வரூபம் முதலிடம் !.


நண்பர்களே...
‘விஸ்வரூபத்தை சீன் பை சீன் எழுது’ என அன்புக்கட்டளைகள்
வந்த வண்ணம் உள்ளது.
இரண்டாம் பாகம் வந்ததும் எழுதுகிறேன்.
அது வரை பொறுத்திருக்க...
கல்லெறிபவர்களும் காத்திருக்க.

நண்பர்களே...
விஸ்வரூபத்தை பலமுறை பார்த்துதான்...
என்னால் அர்த்தம் கட்டமைக்க முடிந்தது.
விஸ்வரூபத்தை, ஒரு முறை பார்த்து புரிந்து கொள்ள முடியாது.
ஒரு முறை பார்த்தவுடன் புரிவதற்கு இப்படம்  படைக்கப்படவில்லை.
இரண்டாம் முறை பார்கும் போது புரிவதெற்கென்றே சில காட்சிகள் படைக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபத்தை, நிருபமா கதாபாத்திரத்தின் வழியாக கொஞ்சம்
எட்டிப்பார்ப்போம்.
நிருபமா + சைக்யாட்ரிஸ்ட் வழியாகத்தான் விஸ்வரூபத்தின் முன் கதை விளக்கப்படுகிறது.
இக்காட்சியில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரம் வார்த்தைகளாக வெடிக்கிறது.
படம் நெடுக  ‘வசனகர்த்தா கமல்’ தீனி போட்டாலும்,
இந்த பகுதி ஸ்பெஷல் ட்ரீட்.


நிருபமா : ஐ பிலிவ் இன் அமெரிக்கா.
என் விமோசனமே இங்கேதான் தோணித்து.
ஏழு வயசாயிருக்கும் போதே எங்கப்பா கேன்சர்ல போயிட்டார்.
ஸோ...நானும் எங்கம்மாவும் சித்தப்பா ஆத்துல ஒண்ட வேண்டியதா போச்சு.
எங்கம்மா செத்த அண்ணைக்கு... என் மனசுல ஒரு வைராக்கியம் .
எப்படியாவது இந்த மிடில் கிளாஸ் ஊழில இருந்து தப்பிக்கணும்.
அமெரிக்கா போகணும்.
பி.எச்.டி பண்ணணும்.
ஆச்சா...

ஒரு மிடில் கிளாஸ் பிராம்மணப்பெண்ணின் நரகத்தையும்...
அதிலிருந்து தப்பிக்க எத்தனிக்கும் முனைப்பையும்...
சொற்சித்திரங்களாக்கி இருக்கிறார்
‘வசனகர்த்தா கமல்’.
இந்தப்பகுதியின் இறுதி வார்த்தையான ‘ஆச்சா’ எதை குறிக்கிறது ?
இது வரை பிளாஷ்பேக்கை சரளமாக சொன்ன நிருபமா,
இனி தன்னுடைய  ‘மனதில்’ இருப்பதை எடிட் பண்ணிப்பேசப்போகிறாள்  என்பதை விளக்க ‘ஆச்சா’வை போட்டிருக்கிறார் படைப்பாளி கமல்.

நிருபமா : சொல்லி வச்சாப்ல...
நம்ம ஜெகன்நாத் மாமா இவர் ஜாதகத்தை
கொண்டு வர்றார்.
இவரும் கரெக்டா ஸ்டேட்ஸ்ல இருந்தார்.
ஸோ...

ஜெகன்நாத்தும், விஸாமும் இந்திய உளவுத்துறை அதிகாரிகள்.
இருவருமே திட்டமிட்டு தங்களது அமெரிக்க ஆப்பரேஷனின் ஒரு பகுதியாக இந்த திருமணத்தை திட்டமிட்டு நடத்தியது புலப்படுகிறது.
இருவருமே உற்றார் உறவினர்களிடம் கூட தங்கள் பணியை மறைப்பதை கடமையாகக்கொண்டவர்கள் என்பதும் புரிகிறது.
[ இரண்டாம் முறை பார்க்கும் போதுதான் இது விளங்கும்.]

சைக்யாட்ரிஸ்ட் : புரியுது...
அதான் வயசு வித்தியாசம் கூட பாக்காம... 
மிஸ்டர்.விஸ்வநாதனை கட்டிக்க சம்மதிச்சிங்களா ?

கதாநாயகனுக்கும்...கதாநாயகிக்கும் உள்ள வயது வித்தியாசத்தை ‘பேலன்ஸ்’
செய்துள்ளார் கமல்.

நிருபமா : அப்கோர்ஸ்...இட் வாஸ் எ மேரேஜ் ஆப் கன்வீனியன்ஸ்.
அவருக்கும் இதுல என்ன சவுகரியமோ தெரியல...
தெரிஞ்சுண்டேதான் ஒத்துண்டார்...விஸ்.

சைக்யாட்ரிஸ்ட் : விஸ்...

நிருபமா : ஓ...விஸ்...என் ஹஸ்பண்ட் பேரு.

சைக்யாட்ரிஸ்ட் : ஓ...நீங்க வச்ச பெட் நேமா ?.

நிருபமா : பெட்டுமில்ல...குட்டுமில்ல.
எல்லோரும் அப்டி கூப்டா...நானும் அப்டி கூப்ட்டேன்.
ஆரம்பத்துல இருந்தே...அந்த மாதிரி கொஞ்சல்-கிஞ்சல்லாம் கிடையாது.
நான் ஹானஸ்டா அவர்ட்ட சொல்லிட்டேன்.
நான் வந்தது படிக்கத்தான்.
எனக்கு படுத்துண்டே...படிக்கிற பழக்கமில்லேன்னேன்.
அவரும் சிரிச்சுண்டே ஒத்துண்டுட்டார். 
ஹி ஹேஸ் எ கிரேட் சென்ஸ் ஆப் ஹ்யூமர்...யூ நோ.

‘படுத்துண்டே...படிக்கிற பழக்கமில்ல’...
இந்த டயலாக் மட்டும்  'குறள்' மாதிரி...
விளக்கத்தை கொஞ்சம் ‘உள்ளே போய்’ தேடணும்.

கணவனது தோற்றம்...பாடி லேங்குவேஜ்...இவற்றால் அசூயை அடைந்த நிருபமா அவனோடு செக்ஸ் வைப்பதை தவிர்க்க எண்ணியுள்ளாள்.
உடலுறவு வைத்திருந்தால்... ‘புரிந்திருப்பாள்’...
கணவனை ‘முஸ்லிம்’ என கண்டு பிடித்திருப்பாள்.
It is a Wonderful  'Situational - Logic'. 

இறுதியில் வரும் ‘ஜேம்ஸ்பாண்ட்’ காட்சியில் நிருபமா நிச்சயமாக தெரிந்திருப்பாள்.

படத்தின் கதாநாயகன் இந்துவா ? முஸ்லிமா ? என்ற சுவாரஸ்யப்புதிருக்கு விடை நிருபமா கதாபாத்திரம் சொன்னால் மட்டுமே நம்ப வேண்டும்.
கதாநாயகன் + அஷ்மிதா + ஜெகன்நாத் & கோ சொல்வதை நம்ப முடியாது.
நம்பவும் கூடாது.
ஏனென்றால், இவர்கள் பொய் சொல்வதை குலத்தொழிலாக கொண்ட உளவாளிகள்.

இரண்டாம் முறை பார்க்கும் போது  ‘புரிந்து ரசித்ததில்’...
எனக்கு மிகவும் பிடித்த சூப்பரான காட்சி இதோ...



விஸ் : மாமாஜியும்...டாக்கின்ஸனும் ஏதோ ப்ரீப் பண்ணணுமாம் நம்பளை.
ஓவர் த டின்னர்.

அஷ்மிதா [ அண்ட்ரியா ] : எப்டி ?....அதும் நிருபமா எதிர்க்க !.

விஸ் : நிருபமா டின்னருக்கு...வரல.

அஷ்மிதா : வரமாட்டான்னு... ‘ஆகாஸ்வாணி’ சொல்லித்தா ?.

விஸ் : எக்ஸாக்ட்லி. 

இந்தக்காட்சியில்,
வசன உச்சரிப்பில்...‘பிராம்மண உச்சரிப்பையும்’...
உடல் மொழியில்... பெண்மைத்தன்மையையும்...
‘விஸ் கதாபாத்திரம்’  தவிர்த்திருப்பதாக காட்சியமைத்துள்ளார் படைப்பாளி கமல்.
அஷ்மிதா காரெக்டரும் அதே போல் காஷுவலாக உரையாடும்.
உடல் மொழியும் மாறுபடும்.
பின்னால் வரும் “ இங்க எல்லோருக்குமே டபுள் ரோல்” என்ற வசனத்தை இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்.

சக உளவாளியான அஷ்மிதாவோடு உரையாடுகையில்...
‘பிராம்மண உச்சரிப்பு +  பெண் தன்மையை’ விலக்கி...
அடுத்தக்காட்சியில்...
நிருபமாவுடன் உரையாடும்போது  ‘பிராம்மண உச்சரிப்பு + பெண் தன்மையை’ தொடர்வதாக காட்சியமைத்த படைப்பாளி கமலை கலா ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.



‘ஆகாஸ்வாணி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம்...
பின்னால் வரும் ஒரு காட்சியில் அஷ்மிதா,
நிருபமாவை பார்த்து... “ உங்க ஆபிஸ் பூரா ‘பக்’ பண்ணியிருக்கோம்” எனச்சொல்லும் போது விளங்கும்.
அதாவது, நிருபமா-தீபக் அலுவலக உரையாடல்கள் முழுக்க ஒட்டுக்கேட்கப்படுகிறது என்பதை வசனம் மூலமாகவே விளக்கியுள்ளார் படைப்பாளி கமல்.
ஆகாஸ்வாணி = ஒட்டுக்கேட்கும் நடவடிக்கைக்கு ஏற்படுத்தப்பட்ட 
‘கோட் வேர்ட்’

நிருபமா-தீபக் ரகஸ்யக்காதலை தெரிந்தும்... ஒன்றுமே தெரியாதவன் போல்
உரையாடுவான் விஸ்.
இதற்கு அஷ்மிதா,ஜெகன்னாத்,டாக்கின்சன் ரியாக்‌ஷனை கவனியுங்கள்.
தேர்ந்தெடுத்த உளவாளிகளின் பாவனை இருக்கும்.
ஏனென்றால் உளவாளிகளுக்கு பொய் பேசுவதுதான் குலத்தொழில்.
மாறாக,  ‘நிருபமா-தீபக்&கோ’ பொய் பேசுவதில் தடுமாறுவதை காட்டி நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளார் படைப்பாளி கமல்.  

இப்படத்தில் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.
ஒருத்தொருக்கொருத்தர் சளைக்காமல் நடித்து இயக்குனர் கமலுக்கு பெருமை
சேர்த்துள்ளனர்.
HATS OFF ! ALL ACTORS !!

‘விஸ்வரூபம்’ - துளியூண்டு விமர்சனம்’ என்ற பதிவு...
எனது பதிவுகளிலேயே அதிக ‘பேஜ் விசிட்’ பெற்று...
முதலிடம் பெற்றிருக்கிறது.
நன்றி நண்பர்களே!.

VISWAROOPAM - துளியூண்டு விமர்சனம் பதிவைப்படிக்க இங்கே செல்லவும்.

இப்படத்தை குப்பை என எழுதிய ஆண் \ பெண் பதிவர்கள் அனைவருக்கும்...
ஒரு தாழ்மையான வேண்டுகோள்...

நிருபமா தீபக்குடன் ஊர் சுற்றி விட்டு வந்து படுக்கையில் படுப்பாள்.
அவளது கணவன்  ‘விஸ்’ கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு ‘குறட்டை’ ஒலி எழுப்புவதற்கு காரணம் என்ன ?

கண்டு பிடித்து... பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
ப்ளீஸ்.

அறிவிப்பு :  விஸ்வரூபத்தை பற்றி,
பதிவர்கள் கூட்டத்தை கூட்டி அழைத்தால்...
இந்தியாவில் எந்த மூலைக்கும் வந்து விவாதிக்க நான் தயார்.
போலி ஐ.டி போக்கிரிகளிடம்...வலைத்தளத்தில் கூட விவாதிக்க மாட்டேன்.
எனது நேரத்தை வீணடிக்கும் வீணர்களின் கமெண்டை ‘ஸ்பேம்’ செய்து வருகிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Feb 12, 2013

VISWAROOPAM \ 2013 \ விஸ்வரூபம் துளியூண்டு விமர்சனம்.


நண்பர்களே...
விஸ்வரூபம் பெற வேண்டிய நியாயமான வெற்றியை பெற்று விட்டது.
பெற்ற வயிறு குளிர்ந்து விட்டது...என்பதை சமீபத்திய கமலின் பேட்டியில் உணர முடிந்தது.
“இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தோம்” என தமிழன்னை மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இஸ்லாமிய சகோதரர்களிடம் கமல் உரிமையுடன் பிரியாணி கேட்டதில் உள்ள நியாயங்களை இனி பார்ப்போம்.
அதே நேரத்தில், கமல் அமெரிக்காவிற்கு படம் நெடுகிலும் ஆப்படித்த இடங்களையும் விளக்குகிறேன்.
ஏனென்றால் பதிவர்கள் சிலர் திட்டமிட்டு,
விஸ்வரூபம் அமெரிக்காவை தூக்கி பிடித்திருப்பதாக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

[ 1 ] விஸ்வரூபம் படத்தை  ‘தீமெட்டிக் ஆக்‌ஷன் திரில்லராக’ படைக்க ஆசைப்பட்ட படைப்பாளி கமல் தனது முதல் ஷாட்டை  ‘தீமெட்டிக்காக’ புறாக்களில் ஆரம்பிக்கிறார்.
புறாக்கள் பறக்கும் கூண்டிலேயே, படத்தின்  டைட்டில்களை தொடருகிறார்.
டைட்டில் இறுதியில், ஒரு இஸ்லாமியர் ஒரு புறாவை பிடிப்பார்.
அடுத்த ஷாட்டில் பறக்க விடுவார்.
புறா அமெரிக்க கொடியை நோக்கி பறக்கும்.

புறாக்கால்களில்  ‘சீசியம்’ அடைக்கப்பட்ட குழல்களை கட்டி விட்டு, அமெரிக்க கண்காணிப்பு சாதனங்களை ஏமாற்றி...
மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பை நிகழ்த்தப்போவதாக...
பிளாஷ்பேக்கில், ஒமர் கதாநாயகனிடம் விவரிக்கும் போதுதான்...
படத்தின் ஆரம்பக்காட்சிகளுக்கு விளக்கம் கிடைக்கும்.

[ 2 ] இப்படி படம் முழுக்க, கேள்வியை ஒரு இடத்திலும்...
விடையை மற்றொரு இடத்திலும் வைத்து கமல் படைத்துள்ளார்.

[ 3 ] புரியாதவர்கள் படத்தை பலமுறை பார்க்க வேண்டும்.
சில புண்ணாக்கு பதிவர்கள், விஸ்வரூபத்துக்கு விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என தங்கள் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.

[ 4 ] கோடம்பாக்க ஜாம்பவான்களே  நடுங்கி...ஒடுங்கி கிடக்கிறார்கள்.

[ 5 ] ‘கமல் அமெரிக்க அடிவருடி’ என்ற குற்றச்சாட்டுக்கு வருவோம்.
ஆரம்பக்காட்சியில் அமெரிக்க கொடியை காட்டும் போது,
 ‘டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட் வைத்திருப்பார்.
காமிரா  ‘செமி டாப் ஆங்கிளில்’ இருக்கும்.
நம்முடைய பார்வையில் அமெரிக்க கொடி கீழே இருக்கும்.
அமெரிக்க இயக்குனர்கள் பிற நாட்டுக்கொடியை,
இதே முறையில் ஷாட் வைத்து மட்டப்படுத்துவார்கள்.
பதிலடி கொடுத்து கமல் ஷாட் வைத்துள்ளார்.
இதெல்லாம் விளங்கி விடுமா ‘உண்மைத்தமிழனுக்கு’.

[ 6 ] கதாநாயகனை தமிழ் பேசும் இந்திய முஸ்லிமாக படைத்ததற்கு,
படைப்பாளி கமலுக்கு முதல் மரியாதை செலுத்த வேண்டும்.
அவன் பிராம்மணனாக மாறு வேடமிட்டு அமெரிக்காவில் தங்கும் போதும் ‘தொழுவதற்கு’ செல்லும் இஸ்லாமிய வழமை மாறாத தன்மையுடன் இருப்பதாக படைத்து அதன் மூலம் திரைக்கதை திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.

[ 7 ] ஒமரின் ஆட்கள் கதாநாயகனையும்,அவனது மனைவியையும் கட்டி வைத்து உதைத்து விசாரிக்கும் போது முதலில் தனது பெயர்  ‘தாபிக்’ எனக்கூறுவான்.
மேலும் மேலும் அடி விழவே...தனது பெயர்  ‘நாசர்’ என மாற்றிக்கூறுவான்.
இந்த இரண்டு பெயர்களுக்கும் உரிய கதாபாத்திரங்கள்
‘ஆப்கானிஸ்தான் பிளாஷ்பேக்கில்’ வருவார்கள்.

[ 8 ] ஒமரின் ஆட்கள் விசாரிக்கும் போது...
கதாநாயகனான, இந்திய முஸ்லீம் உளவுத்துறை அதிகாரி...
தனக்கு பிடித்தமான தாபிக்-நாசர் என்ற இரண்டு பெயர்களையும்...
தனது புனை பெயராக பயன்படுத்துகிறான் என காட்சி அமைத்துள்ளார் படைப்பாளி கமல்.
[ குழலூதும் கண்ணனை பிடித்ததால்தான்,  ‘முத்தையா’ கண்ணதாசனாக பரிணாமம் பெற்றார்]

[ 9 ] ‘தாபிக்’ ...என்பவர்  ஜிகாதி அல்ல என்றே ஒமர் அறிமுகப்படுத்துவார்.
தாபிக்,பண்புள்ள விவசாயி மற்றும் வியாபாரி என்றே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

‘நாசர்’ ...ஒமரின் மகனாக இருந்தாலும் தான் போராளியாக விரும்பவில்லை எனவும் டாக்டராவதே தனது லட்சியமாகக்கூறுவான்.
தாயிடம் விளையாடும் போது கூட அவன் டாக்டராக மாறி விளையாடுகிறான்.

[ 10 ] தாபிக், நாசர் இருவருமே, கதாநாயகனான- இந்திய உளவுத்துறை அதிகாரியின் நடவடிக்கையின் மூலமாகவே பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
இந்தக்குற்றவுணர்ச்சி கதாநாயகனுக்குள் ஊறிக்கிடப்பதை...
“ அழிக்க முடியாத பாவம் என் நெற்றியில எழுதியிருக்கு” என்ற வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.

தாபிக், நாசர்...இந்த இரு காரெக்டர்களின் பெயரை,
கதாநாயகனான இந்திய முஸ்லிம் தனது புனை பெயராக பயன்படுத்துவதின் மூலமாக படைப்பாளி கமல் கூறும்  'REDEMPTION SEEKING' முயற்சி விளங்குகிறதா ?

[ 11 ] தாலிபனாக பிரதிபலிக்கப்படும் ஒமரின் ஆங்கில மொழி வெறுப்பு,
பெண்ணுரிமை மறுப்பு, பாட்டு...நடனம் போன்ற கலைகளின் மீது நாட்டமுடையோருக்கு வழங்கப்படும் தண்டனைகள்...
என படைப்பாளி கமல் மிகச்சரியான அளவில் இத்திரைக்கதையில்
 ‘ஆப்கன் மீது வெள்ளைக்காரர்களால் திணிக்கப்பட்ட விளைவுகளை’ பிரச்சனைகளாக தொட்டுக்காட்டி உள்ளார்.

[ 12 ] தாலிபன் பற்றி நீங்கள் இன்னும் விரிவாகத்தெரிந்து கொள்ள,
இரண்டு உலக சினிமாக்களை பரிந்துரைக்கிறேன்.

# ஒசாமா [ OSAMA \ 2003 \ Afghanistan \ Directed by Siddiq Barmak ]


# காந்தகார் [ KANDAHAR \ 2001 \ Iran \ Directed by Mohsen Makhmalbaf ]


[ 13 ] ஆப்கானிஸ்தான் கிராமத்தை,
படை விமானங்கள் குண்டு போட்டு சீரழித்திருப்பார்கள்.
சீரழிந்த மலைக்கிராமம் திரையில் காட்டப்படும் போது,
கழுகின் குரலை மட்டும் பின்னணி சப்தமாக ஒலிக்கச்செய்திருக்கிறார் படைப்பாளி கமல்.

கழுகு = அமெரிக்க தேசியப்பறவை = பிணம் தின்னும் குணம் கொண்ட பறவை.
.
கமலை,  ‘அமெரிக்க அடி வருடி’ என அலறும் அறிவாளிகளே!
இதற்கு வேறு அர்த்தம் சொல்ல முடியுமா உங்களால் ?

[ 14 ] சரித்திரத்தின் பக்கங்களை உரசிக்கொண்டு பிறந்த வசனங்கள் இவை...
ஒமர் : அப்பன் இல்லாம வளர்ற பசங்க ரொம்ப உஷாரா இருப்பாங்க....
[ சிரித்து விட்டு ] சும்மா தமாஷ்.

விஸாம் : அப்பன் யாரென்றெ தெரியாத பசங்க...
அதை விட உஷாரா இருப்பாங்க...
[ இடைவெளி விட்டு ] தமாஷ். 

இந்த வசனத்துக்கு அர்த்தம் வேறொரு காட்சியில் கிடைக்கும்.

மூதாட்டி : பிரிட்டிஷ்காரன் வந்தான்....
ரஷ்யாக்காரன் வந்தான்....
அப்புறம் தாலிபான்...
அமெரிக்கா...
இப்ப நீ வந்திருக்க...

முன்னாடி வால் முளைத்த குரங்குகளா...

ஆப்கானிஸ்தானை சீரழித்தவர்களை...
மூதாட்டியின் வசனம் மூலமாக அம்பலப்படுத்துகிறார் படைப்பாளி கமல்.
அனைவருமே ஆப்கான் பெண்களை சீரழித்தவர்கள்தான்.
ஒமரின் தாயாரும் இப்படி சீரழிக்கப்பட்டவர்தான்.
ஒமரின் வயதை கணக்கிட்டு...
அக்காலக்கட்டத்தில் ஆப்கானில் நுழைந்தவர்களை கணக்கிட்டால்...
ஒமரின் தாயாரை சீரழித்தவர்கள் யாரெனெத்தெரியும்.

இந்த சரித்திர சோக விளைவுகளின் காரணகர்த்தாக்களை பற்றி என்றாவது
 ‘அமெரிக்க அடி வருடி’ பதிவாளர்கள் எழுதியிருக்கிறார்களா?

[ 15 ] “ அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்” ...
என்ற வசனம் நிறைய பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வசனம் பேசப்பட்ட பிறகு அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தகர்த்தெறிவதை படமாக்கியிருப்பார் படைப்பாளி கமல்.

அமெரிக்கர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல...
முதலில் நம்மிடம் நம்பிக்கையை விதைப்பார்கள்...
செயல்பாட்டின் மூலமாக தகர்த்தெறிவார்கள்...
என்றே இக்காட்சியின் மூலமாக விளக்குகிறார் படைப்பாளி கமல்.

இப்படத்திற்கு முழுமையான விமர்சனம்,
 ‘விஸ்வரூபம்- இரண்டாம் பாகம்’ வெளி வந்த பிறகுதான் எழுதமுடியும்...
எழுத வேண்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.