Nov 12, 2013

கமல் பிறந்த நாளில் ஜெமோ! தமிழர்களே...குதத்தை இன்னும் குனிந்து காட்டுங்கள்!!

/// 7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். 
அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.

வாசலில் அவரே நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார். 
கட்டித்தழுவி வரவேற்றார். 
நான் நினைத்த அளவுக்குப் பெரிய கூட்டம் இல்லை என்றாலும் எங்குபார்த்தாலும் பிரபலங்கள் என்பது ஒரு திகைப்பை உருவாக்கியது.

தமிழ்த்திரையுலகில் எனக்கு முதலில் அறிமுகமான நண்பர் கமல்.
2000 வாக்கில் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு ஒருநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘நான் கமலஹாசன் பேசறேன்’ என்று அறிமுகம்செய்துகொண்டார் ‘உங்க தீவிர வாசகன்…’
எனக்கு அப்போது யாரோ மிமிக்ரிசெய்கிறார்கள் என்ற எண்ணம்தான் இருந்தது. 
என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. 
அவரே அந்நாவலில் வாசித்த பல நுட்பமான இடங்களை விவரித்துப்பேசினார்
அதன்பின் இத்தனை நாட்களில் என்னுடைய அத்தனை படைப்புகளுக்கும் உடனடி வாசகராக அவரே இருந்திருக்கிறார். கொற்றவை அவரை பெரிதும் கவர்ந்தது. 
தொடர்ச்சியாகப் பலமுறை கூப்பிட்டு அதைப்பற்றி பேசினார். அதன்பின் இன்றையகாந்தி. 
கடைசியாக அறம். 
அவரைக் கவராத படைப்பைப்பற்றி அவர் பெரும்பாலும் வாயைத்திறப்பதில்லை
அவர் நட்சத்திரம் என்பதனாலேயே நான் அவரைப்பற்றி இன்றுவரை ஒரு வரிகூட எழுதியதில்லை. 
அவரை நேரில் சந்திப்பதையே கூடுமானவரை தள்ளிப்போட்டு வந்தேன். 
நேரில் சந்தித்த தருணங்கள் எல்லாமே உற்சாகமானவை. அவர் பேச்சினூடாகவே எனக்குப் பல எழுத்தாளர் பெயர்கள் – உதாரணமாக கர்ட் வேன்கட் -அறிமுகமாயின என்று சொன்னால் அவரைத்தெரிந்தவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்.

கமல் நடுவே என்னிடம் வந்து நின்று தீவிரமாக உரையாட ஆரம்பித்தார். 
ஏற்கனவே பேசி நிறுத்திய புள்ளியில் இருந்து பேச ஆரம்பிப்பது அவரது வழக்கம். 
இலக்கியமும் வரலாறும் சந்திக்கும் இடங்கள் அவருக்கு பிடித்தமானவை. 
இலக்கியத்திற்கு ஒரு வரலாற்றுக்காரணத்தைச் சொல்வதில் எப்போதுமெ ஒரு நுட்பமான பார்வை அவருக்குண்டு
வெள்ளையானை கிடைத்தது என்றார். 
நான் கொண்டு வர மறந்து விட்டிருந்தேன். 
‘அதெல்லாம் மை காயறதுக்குள்ள இங்க வந்திரும்’ என்றார். 
ஐஸ்ஹவுஸின் போராட்டம் பற்றி ஏற்கனவே அவர் வாசித்து அறிந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.
‘எங்க ஏரியால்ல?’
நெடுநேரம் என்னிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. 
அதிமுக்கியமனிதர்கள் பின்பக்கம் அவருக்காகக் காத்திருந்தனர். 
அவரது உற்சாகத்தில் விரிசலை உண்டுபண்ணவும் முடியவில்லை. 
ஒரு தம்பதிகளைச் சந்திக்க அவர் திரும்பியபோது நான் மெல்ல நகர்ந்துவிட்டேன்.

இரா.முருகன் வந்தார்.
‘எழுத்துருச் சண்டை போடுங்க போங்க’ என்று கமல் தன்னை அனுப்பியதாகச் சொன்னார். ///


ஜெமோவின் வாக்குமூலம்.

வருடா வருடம் பிறந்த நாள் வருகிறது.
இந்த ஆண்டு ஜெமோவை அழைத்து வெண் சாமரம் வீசத்தேவை என்ன?

தமிழர்களே...குதத்தை இன்னும் குனிந்து காட்டுங்கள்.

8 comments:

  1. //வருடா வருடம் பிறந்த நாள் வருகிறது.
    இந்த ஆண்டு ஜெமோவை அழைத்து வெண் சாமரம் வீசத்தேவை என்ன?//
    என்ன??

    ReplyDelete
    Replies
    1. ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.

      Delete
  2. Replies
    1. ஜெயமோகன் என்கிற இலக்கிய வியாதி, தமிழ் எழுத்துக்களை ஓழித்து விட்டு ஆங்கில எழுத்துக்களை கொண்டு வர திட்டம் தீட்டி, அதற்கான பரப்புரையை தொடர்ந்து செய்து வருகிறது.
      அது கமல் என் பக்கம்தான் என கட்டியம் கூறி இருக்கும் கட்டுரைதான் இது.

      Delete
  3. இல்லை ஐயா... நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது.. கமல் ஏற்கனவே ஜெயமோகனை பற்றி பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.. காரணம் கமல் ஒரு தீவிர தமிழ் இலக்கிய ஆர்வலர்.. ஜெயகாந்தனை தன் சினிமா ப்ரிவ்யூவிற்கு அழைத்திருக்கிறார்.. அந்த வகையில் தற்போது ஜெமோ.... ஜெமோ சற்செயலாக சென்னையில் இருந்திருப்பதால் அவர் கூப்படப்பட்டிருக்கலாம்.. ஆக எழுத்துருவிற்கும் இந்த மீட்டிங்கிற்கும் முடிச்சு போடத் தேவையில்லை என்றே தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. /// இரா.முருகன் வந்தார்.
      ‘எழுத்துருச் சண்டை போடுங்க போங்க’ என்று கமல் தன்னை அனுப்பியதாகச் சொன்னார். ///

      இது ஜெமோ எழுதியது.

      தமிழை விட ஜெமோவிடம் பாசம் பொங்கியதால்தான் பிறந்த நாள் அழைப்பு.
      எனவேதான் ஜெமோ எக்களமிடுகிறது.

      வால்மார்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர்...
      தமிழை அழிக்க நினைத்த எழுத்தாளனிடம் மண்டி இட்டதற்கு காரணம்...
      காசு...பணம்...துட்டு...Money...Money.

      Delete
  4. //தமிழை விட ஜெமோவிடம் பாசம்///
    அய்யா எனக்கு ஒன்றுமே புரியவில்லை...இதற்கு என்ன அளவுகோல்.. தெர்மாமீட்டர் தனியாக கடையில் கிடைக்குமா..?
    ///தமிழை அழிக்க நினைத்த எழுத்தாளனிடம்//
    அய்...புதுசா இருக்கு,, ஜெமோ அழிக்க நினைத்தால் தமிழ் அழிந்து போக பென்சிலால் தமிழை எழுதியிருக்கிறாரா... எந்தக் கொம்பனும் அழிக்க முடியாத மொழிதான் தமிழ்... நீங்கள் ஜெமோ மீது கோபம் கொள்ளுங்கள் அது உங்கள் உரிமை.. ஆனால் நீங்கள் லிங்க் செய்ய நினைப்பதுதான் தவறான லிங்க்....

    ReplyDelete
  5. இவர்களால் எல்லாம் தமிழ் அழிந்துவிடாது!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.