Sep 27, 2013

சிவாஜிக்கு நடிக்க தெரியாது !


நண்பர்களே...
முகநூலில் ‘சிவாஜிக்கு நடிக்க தெரியாது’ என அலறிய ஒரு நிலைத்தகவலை பார்த்தேன்.
சமீப காலமாக அந்த நபர்,
‘நான் ஆனையை செய்கிறேன்...
பூனையை செய்கிறேன்’ 
என இணையத்தில்  ‘உண்டியல் குலுக்குவதையும்’ பார்த்து வருகிறேன்.
‘தகரம் கண்டு பிடிக்காத காலத்திற்கு முன்பே உண்டியல் கண்டு பிடித்தவர் போலும்’.
மிகச்சிறப்பாக அந்த கலையை செய்து வருகிறார்.

சாதனை படைத்தவர்களை திட்ட வேண்டியது.
அதன் மூலம், அவர்களை விட உயர்ந்தவன் என மாய பிம்பத்தை ஏற்படுத்துவது.
இக்கலையில் மாஸ்டர்... சாரு.
இவர் சிஷ்ய பிள்ளையாக உருவெடுத்து கிளம்பி உள்ளார்.

கன்னடத்தில் சமீபத்தில் ஒருவர் இணையம் வழியாக பணம் திரட்டி அற்புதமாக படம் எடுத்து இருக்கிறார் என்ற செய்தி படித்தேன்.
இந்த ‘விஷப்பூச்சி’ எந்த காலத்திலும் இது போன்ற ஆக்க பூர்வமாக செயல் படப்போவதில்லை.

நண்பர்களே...
இது போன்ற  ‘அறைகுறைகளுக்கு’ பணம் அனுப்பும் பாவச்செயலை செய்யாதீர்கள்.
விஷச்செடியை வளர்த்து விடாதீர்கள்.

கீழ்க்கண்ட இணைப்பில் சென்று அந்த நபரின் நிலைத்தகவலில் உங்கள் எதிர்ப்பினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிவாஜிக்கு நடிக்க தெரியாது என்ற பதிவிற்கு செல்ல...


13 comments:

 1. உண்மை... அவர் எங்கே நடித்தார்...? அப்படியே கொடுத்த பாத்திரத்திற்கேற்ப மாறி விடுவதால், அவர் நடிப்பதே இல்லை...

  ReplyDelete
  Replies
  1. நடிப்புக்கலை பற்றி அரிச்சுவடி கூட அறியாத ‘அரைகுறைகள்’ இணையத்தில் டைப்புகின்றன.
   இந்த விஷ வித்துக்களை முளைக்க விடக்கூடாது...நண்பரே.

   Delete
 2. Neenga poturukkara photove 1000 badhil solludhe :)

  ReplyDelete
  Replies
  1. கலைக்கண்களால் மட்டுமே இதை உணர்ந்து தரிசிக்க முடியும்.
   காமாலைக்காரனுக்கு என்ன தெரியும்?

   Delete
 3. //மனிதன் நினைப்பதுண்டு
  வாழ்வு நிலைக்கும் என்று...

  "காலில் விலங்கு இட்டோம்,
  அதை
  கடமை என அழைத்தோம்"// பக்தியை விட இதில் உள்ள தத்துவார்த்தமே என்னை கவர்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...அவன்தான் மனிதனை விமர்சித்து இருந்தால் நான் எதிர் வினையாற்றி இருக்க மாட்டேன்.
   சிவாஜிக்கு ‘மெத்தெட் ஆக்டிங்’ தெரியுமா? என்ற ஆணவ...அதிகார...செருக்கு...நிறைந்த வார்த்தைகளை எப்படி பொறுக்க முடியும்?
   புழு கூட புலியாகும்.

   Delete
 4. சரியாத்தான் சொல்லிருக்கார். ஒரு சில இயக்குனர்களைத் தவிர மொத்த சினிமா உலகமும் கடைசிவரை அவரை திரைப்பட நடிகராக அல்லாமல் நாடக நடிகராத்தான் வைத்திருந்தது.
  பாவம் அவரும் என்ன செய்வார், இயக்குனர்கள் பீம்சிங், ஏ.பி.நாகராஜன் படங்களில் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்..

  மனைவி மூக்கு சிந்திய கையுடன் சோறு விளம்பும்போது, விரக்தியின் எல்லைக்கே சென்ற ஓர் தனிமனித உணர்ச்சியை முகத்தில் காண்பிப்பது அத்தனை எளிதல்ல. அப்படிபட்டவரை கடைசி வரை அவர் தலையில் குருவிக்கூடை கட்டிவைத்து தமிழ்சினிமாவுக்கு பெரிய துரோகம் இழைத்துவிட்டனர்

  ReplyDelete
  Replies
  1. சிவாஜியின் கால கட்டம் வேறு.
   இன்றைய கால தரத்தை வைத்து அவரை ஒப்பிடுவதே தவறு.

   தனுஷ் அற்புதமான நடிகர்தான்.
   ஆனால் அவரை ‘வீர பாண்டிய கட்டபொம்மனாக’ கற்பனை செய்து பார்த்து...தனுஷ் ஒரு நடிகனே இல்லை என்பது எத்தகைய அபத்தம்.

   Delete
 5. ‘தகரம் கண்டு பிடிக்காத காலத்திற்கு முன்பே உண்டியல் கண்டு பிடித்தவர் போலும்’.\\ஆஹா............ ரூம் போட்டு யோசிச்சீங்களோ, இப்படி அருமையான ஒரு வாக்கியத்தை அமைக்க!!

  ReplyDelete
  Replies
  1. அந்த வாக்கியம் எனது சரக்கல்ல.திமுகவில் உள்ள கோவை மு.ராமநாதன் ஒரு மேடையில் சொன்னது.
   அவர் சொன்னது...
   “தகரம் கண்டு பிடிக்கத காலத்திற்கு முன்பே உண்டியல் கண்டு பிடித்தவன் கம்யூனிஸ்ட்காரன்”.

   Delete
 6. சிவாஜிக்கு நடிக்கத் தெரியவில்லை என்று சொல்பவர்களை எல்லாம் ஒரு ஆளாக நினைத்துக்கொண்டு அவர்களுக்கு பதில் சொல்வதே முட்டாள்தனம் என்று நான் நினைக்கிறேன். விடுங்கள். சில உண்மைகள் புரிய சிலருக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அவ்வளவே.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே ‘மேற்படி நபருக்கு’ எல்லா உண்மையும் தெரியும்.
   தெரிந்து கொண்டே வேண்டுமென்றே செய்த அராஜகம் இது.
   எதற்காக தெரியுமா?
   காசு...பணம்...துட்டு...MONEY...MONEY.

   Delete
 7. i have read that article,please understand the full story .the start from rich and come down.
  why not?
  he have his old clothes and shoe.i think this man never watch the full Movie.
  thanam

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.