Sep 18, 2013

கோபப்பட்ட கலைஞர்கள் கூடிய...மூடர் கூடம்.

நண்பர்களே...
நகைச்சுவை என்ற பெயரில்,
‘கூத்தடித்த கூத்தபிரான்கள்’ கொட்டைகளை திருகி...
‘மதுரை கோனார் கடை கோலாவாக்கி’ விட்டார்கள்...
‘மூடர் கூடம்’ படைப்பாளிகள்.
வாழ்த்துக்கள்...தோழர்களே.மூடர் கூடத்தை,
‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்’....
 ‘வயிற்று வலி’ வந்தவர்களும் ரசிப்பார்கள்...
 ‘வலிப்பு வந்தவர்கள்’ மிக மிக ரசிப்பார்கள்.

‘மும்பை எக்ஸ்பிரஸ்ஸில்’ கமல் ஏற்றி வைத்த  ‘பிளாக் காமெடி’...
 ‘ஆரண்ய காண்டத்தில்’ அட்டகாசம் செய்து...
 ‘சூது கவ்வியதில்’ பட்டாசாக வெடித்து...
 ‘மூடர் கூடத்தில்’...இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறது.
இன்னும் கடக்க வேண்டிய தூரம் இருக்கிறது.


இயக்குனர் நவீன்...இந்த ‘பிளாக் காமெடி’ வகையறாவில் ஜொலித்த கமல், தியாகராஜன் குமாரராஜா, நலன் குமாரசாமி போன்றோர் வரிசையில்
இடம் பிடித்து விட்டார்.
நடிகராகவும் வசீகரித்து உள்ளார்.
அவரது பிரத்யேக ஆளுமை மிக்கக்குரலில் வசனங்கள் தீப்பிடிக்கின்றன.
நவீன் பேசும் முக்கால் வாசி வசனங்களில்,
‘சிவப்பு சிந்தனை’ சீராக இழைந்து இருக்கின்றன.வசதி படைத்தவன் தர மாட்டான்....
வயிறு பசித்தவன் விட மாட்டான்’.
இதுவே இப்படத்திலுள்ள  ‘மையக்கரு’.
அம்பானிகளிடமும், ஆ.ராசாக்களிடமும்  கொள்ளையடிப்பதை கொள்கையாக்கலாம்...தப்பில்லை.

இயக்குனர் நவீனையும்...அவரது சக கூட்டாளி கலைஞர்களையும் வாழ்த்தி
வரவேற்போம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


11 comments:

 1. பிளாக் காப்பி தெரியும், அதென்ன பிளாக் காமெடி.. செப்புங்கள் குருவே!!

  ReplyDelete
 2. இந்தியன் படத்தில் கவுண்டமணியை ஒட்டகம் கடித்து விடும்.
  கவுண்டமணி கதறுவார்.அப்போது மனிஷா கொய்ராலா ஒட்டகத்தை நினைத்து கவலைப்பட்டு ஒரு டயலாக் சொல்வார்.
  அது 100% அக்மார்க் பிளாக் காமெடி.
  என் ஆசான் எழுத்தாளர் சுஜாதா...இதில் மாஸ்டர்.

  ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில்...
  டெலிபோன் பூத்தில் ஒருவன் செத்து கிடப்பான்.
  அவனை தேடி வந்த பாண்ட்...
  டெலிபோன் மீது வைக்கப்பட்ட ஒரு அட்டையை...
  அவன் மீது வைத்து விட்டுப்போவார்.

  அட்டையில்... ‘அவுட் ஆப் ஆர்டர்’ என எழுதி இருக்கும்.

  பிளாக் காப்பியும்...பிளாக் காமெடியும் ஒன்றே.
  இரண்டுமே சுவையாக இருக்கும்....அதே சமயத்தில் கசக்கும்.

  ReplyDelete
 3. பிளாக் காமெடி ...இப்போதான் நானும் தெரிந்து இருக்கிறேன்..மூடர் கூடம் இன்னும் பார்க்கல..போகவேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. போகும் போது என்னையும் கூட்டிட்டு போங்க.
   இன்னொரு தடவை பாக்கணும்.

   Delete
 4. சுருக்கமாவும்.. அதே சமயம் சொல்ல வந்த விசயத்தை தெளிவாகவும் சொல்லிட்டீங்க..
  இன்னும் படத்தை பாக்கல. கண்டிப்பா பாத்துடுவேன்.
  :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க...வாங்க...
   பேஸ்புக் புகுந்த வீடாக இருக்கலாம்.ஆனால் தாய் வீடான பதிவுலகை மறக்காமல் விஜயம் செய்யுங்கள்...இந்திரா.
   [ சமீபத்தில் கூட...கோவையில் பதிவர்கள் ஒன்று கூடி பேசும் போது உங்களை நினைவு கூர்ந்து பேசினோம்.]

   Delete
 5. UCR- One doubt.

  Is Mumbai Express the first well-known black comedy in Tamil Cinema ?

  ReplyDelete
 6. நான் பார்த்த வரையிலும்...
  கேள்விப்பட்ட வகையிலும்....
  ‘மும்பை எக்ஸ்பிரஸ்தான்’ முதன்முதலாக ‘பிளாக் காமெடி’ வகையில் எடுக்கப்பட்ட படம்.

  ReplyDelete
 7. ஒரு காமெடி வந்து உடனே சிரித்தால் சாதா காமெடி.
  சில நொடிகள்; கழித்து சிரித்தால் ப்ளாக் காமெடி .
  சரியா?

  ReplyDelete
  Replies
  1. பிளாக் காமெடியை அப்படி சில வார்த்தைகளில் சொல்ல முடியாது.

   விக்கிப்பீடியாவின் எளிய விளக்கம் இது...

   A black comedy (also known as black humor, dark comedy, dark humor, adult humor, or adult comedy) is a comic work that employs black humor, which, in its most basic definition, is humor that makes light of otherwise serious subject matter, or gallows humor.[1] The definition of black humor is problematic; it has been argued that it corresponds to the earlier concept of gallows humor.

   இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள...

   http://en.wikipedia.org/wiki/Black_comedy

   Delete
 8. http://hollywoodraj.blogspot.in/2013/09/2013_19.html

  :(

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.