Sep 28, 2013

மிஷ்கினை, நேற்று மட்டம் தட்டினோம்...இன்று கை தட்டுவோம்.

நண்பர்களே...
படம் பார்க்காதவர்கள் என் பதிவை படிக்கலாம்.
காரணம், படத்தில் உள்ள ஒரு பிரேமைப்பற்றி கூட எழுதப்போவதில்லை.


மிஷ்கின், தனது படைப்புகளை விட அதிகமாக பேசி வாங்கி கட்டியவர்.
தன் தவறை உணர்ந்து எதுவுமே பேசாமல், தன் படைப்பை பேச விட்டிருக்கிறார்.
தனது பாணியை, மிகச்சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.
வாழ்த்துக்கள் மிஷ்கின்.


‘சரக்கு காலி’...
‘அவர்கிட்ட இனிமே விஷயம் இல்ல’...
என்ற குரல்கள் ஓங்கி முன்னணியில் ஒலித்து கொண்டிருந்தது.
அனைத்திற்கும் இப்படத்தின் பின்னணி இசை மூலம் பதில் சொல்லி இருக்கிறார் ராஜா.
பின்னணி இசையில், அன்றும்...இன்றும்....என்றுமே ராஜா என்பதை
இன்றைய தலைமுறைக்கு நிரூபித்து இருக்கிறார்.


பாலா, மிஷ்கின் போன்றவர்கள் படைப்புகளில் அபூர்வமான மனிதர்களை தரிசிக்க முடியும்.
அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை.
அந்த கதாபாத்திரங்கள் தரும் அனுபவம்...
பார்வையாளனுக்கு கிடைக்கும் வரம்...அதுவே ரசனையின் பேரானந்தம்.
அதை கெடுக்க விரும்பவில்லை.

படத்தில் எல்லோருமே தங்கள் திறமைகளை நிரூபித்து இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கிடைக்க வேண்டிய நியாமான வெற்றியை தருவதன் மூலம் ரசிகர்கள்  ‘ரசனையை’ நிரூபிக்க வேண்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

17 comments:

  1. Really...? Ulaga Cinema Rasigan sonna sariya than irukkum. So.. Miskinukku padam parthu vittu kai kulukkalam thaane..!

    ReplyDelete
    Replies
    1. படம் பாருங்கள் நண்பரே...பதிவும் போடுங்கள்....
      முகநூலிலும் பகிருங்கள்.
      இந்த ஜானரில் மிஷ்கின் எப்போதுமே ராஜ நடை போடுவார்.இந்த தடவை...ராஜாவோடு.
      அதுதான் ஸ்பெஷல்.

      Delete
  2. ரசனையின் பேரானந்தத்தை பார்க்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. படம் பார்த்து அனுபவியுங்கள்...நண்பரே.

      Delete
  3. தந்திரமாக விமர்சனம் எழுதாமல் பதுங்கிய நீங்க, ஓநாயா? ஆட்டுக்குட்டியா? சொல்லுங்க பாஸ் சொல்லுங்க!!

    ReplyDelete
    Replies
    1. மிஷ்கின் பார்வையில்...
      படத்தின் கதையை விமர்சனமாக எழுதுபவர்கள் ஓநாய்கள்...
      படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக பதிவெழுதுபவர்கள் ஆட்டுக்குட்டிகள்.

      Delete
  4. இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். இங்கே ரிலீஸ் ஆகவில்லை. டிவிடி ப்ரிண்ட் வரும்வரை வெயிட் பண்ண வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. அடடா...தியேட்டர் அனுபவம் டிவிடியில் கிடைக்காது.
      என்ன செய்வது !
      கடல் கடந்து வாழும் தமிழனுக்கு பல சமயம் ‘டிவிடியே துணை’.

      Delete
  5. எந்த படைப்பாளியும் முக்கிய சமயங்களைத் தவிர வாயைத் திறக்கவே கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே அவர்களின் படைப்புகள் பேசப்படும். அதுவே அடுத்த கட்டத்திற்கும் நகர்த்தும். குறிப்பாக உங்களால் எப்படி இப்படி சாதிக்க முடிந்தது என்று கேட்கும் போது மேலே கையை காட்டக்கூடாது என்று இபிகோ வில் ஒரு சட்ட ஷரத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு படைப்பாளி அவனது படைப்பை பற்றி ஒரு வார்த்தை பேசக்கூடாது.
      நம்மை பேச வைக்க வேண்டும்...படைப்பின் மூலமாக.

      /// உங்களால் எப்படி இப்படி சாதிக்க முடிந்தது என்று கேட்கும் போது மேலே கையை காட்டக்கூடாது என்று இபிகோ வில் ஒரு சட்ட ஷரத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.///

      தலைக்கு மேலே காட்டினால் கூட பரவாயில்லை நண்பரே!
      தன் தலையை காட்டும் ‘தலைக்கனங்களை’ என்ன செய்வது?




      Delete
  6. படத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம். கதையை சொல்லாமல் மற்ற அம்சங்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எந்த விமர்சனமும் படிக்காமல்தான் நான் படத்தை பார்க்க விரும்புவேன்.
      அந்த அனுபவம் அற்புதமானது.

      என்னை கவர்ந்த அம்சங்களை தனிப்பதிவாக்கி தருகிறேன்.
      பத்து நாள் போகட்டும்.

      Delete
  7. பெரும் எதிர்பார்ப்பை தங்களது இரசனை எழுத்தால் கிளப்பி விட்டிருக்கிறீர்கள். தமிழில் சிறந்த படங்கள் வெளிவரவேண்டும் எனக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன். நல்லதை காணுறும்போது வாழ்த்தும் பண்பு - பாராட்டும் பண்பு மதிக்கப்பட் வேண்டியது. வாழ்த்துகள்!!

    ReplyDelete
  8. பாராட்டுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  9. படம் பார்த்துவிட்டேன்...ராஜாவின் இசையில் மிஸ்கினின் மிரட்டலில் படம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. படம்தான் நல்லாயிருக்கே!
      மக்கள் ஆதரவுதான் இல்லை!!

      ஒட்டு மொத்த தமிழகமும் ‘ராஜா ராணி’ பாக்கத்தான் போய்ட்டு இருக்கு.
      அந்த கூட்டத்துல 10 சதவீதமாவது இந்த படத்துக்கு வந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்!

      Delete
  10. அசத்திய படம்....இரு கேரக்டர்களும், மனதில் நின்று விடும் அந்த ஏக்க முகத்துடன் கூடிய குழந்தையும் நச்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.