
உலகசினிமாதரத்திற்க்கு தமிழ்சினிமாவை உயர்த்தும் முயற்ச்சியில் தனது பங்காக ஆடுகளத்தை வழங்கிய வெற்றிமாறனுக்கு மிலிட்டரி சல்யூட்.பொல்லாதவனிலேயே தன்னை இனம் காட்டிய வெற்றிமாறன் ஆடுகளத்தில் இன்னும் ஸ்ட்ராங்காக நிறம் காட்டி உள்ளார்.குப்பைகளை கூவிக்கூவி விற்ற சன் நிறுவனம் முதல்முறையாக நல்லபடத்தை நாடெங்கிலும் சேர்த்து விமோசனம் தேடிக்கொண்டது.

சேவல் சண்டையை களமாக வைத்து அட்டகாசம் பண்ணி இருக்கிறார்.நிச்சயமாக இயக்குனருக்கு அமரோஸ் பெரோஸ்தான் இன்ஸ்பிரேசனாக இருந்திருக்க முடியும்.முதல்மரியாதை,பருத்திவீரன்,சுப்பிரமணியபுரம் படத்திற்க்கு இணையான மதுரை மண்வாசனையை சுவாசித்தேன் ஆடுகளத்தில்.
சேவல் சண்டையை கிராபிக்சில் காட்டிய இயலாமை எனக்கு புரிகிறது.நண்பர்களே...இங்கேதான் நல்ல படைப்பை தர ஆயிரம் தடைகள்....அதில் தலையாயது சென்சார்.ஸ்ரேயாவின் 50 சதவீத மார்பை காட்டிக்கூட சென்சாரிடம் யு சர்ட்டிபிகேட் வாங்கிவிடமுடியும்.கோழியை துரத்தி பிடிக்கும் காட்சி கூட இன்று படமாக்க முடியாது.மிருக வதை என்று சென்சார் அனுமதி மறுத்திருக்கும்.நல்லவேளை எலிப்பத்தாயம் அன்றே வந்து விட்டது.இன்று எடுத்திருந்தால் அடூர் கோபால கிருஷ்ணன் சென்சாரிடம் சிக்கி சீரழிந்திருப்பார்.
ஆடுகளத்தில் பாடல் காட்சி கூட ஹைக்கூ கவிதையாய் கவர்கிறது.சண்டைக்காட்சிகளில் இன்னும் நிஜத்தன்மை வெளிப்படுத்தியிருக்கலாம்.

கவிஞர் வா.மு.ச.ஜெயபாலன் முதல் படத்திலேயே என்னமா நடிச்சிருக்கிறார்.கனத்த மீசை...கயமையை ஒளித்து ஓளிரும் கண்கள்...அட்டகாசம் ஐயா..ஆனால் ராதாரவி டப்பிங் குரல் சிறு நெருடல்தான். கிஷோருக்கு சமுத்திரக்கனியின் மதுரைக்குரல் படு கச்சிதம்.



பாடல்களில் சிக்ஸர் அடித்த ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் சில இடங்களில் சொதப்பி பல இடங்களில் சர்வ தேசத்தரம் காட்டியிருக்கிறார்.
கிளைமாக்ஸ் இப்படத்தில் மிக மிக கச்சிதம்.ரெகுலரான தமிழ் சினிமா கிளைமாக்ஸ் போல பயணித்து சரேலென யூட்டெர்ணெடுத்து புதிய பாதையில் பயணித்திருக்கிறார் இயக்குனர்.
ஆடுகளம் தமிழ் சினிமாவின் புதிய தளம்.
தலைவரே
ReplyDeleteவெற்றிமாறன் உலக தமிழ்சினிமாவின் நம்பிக்கைஒளி
பொல்லாதவனுக்கும் ஆடுகளத்துக்கும் இடைப்பட்ட மூன்று வருடத்தில் இவர் நிச்சயம் நிறைய ஹோம்வொர்க் செய்திருப்பார் என நம்பினேன், பொய்க்கவில்லை.படம் விரைவில் பார்ப்பேன்.எழுதுவேன்.
நன்றி கீதப்பிரியன்.இயக்குனருக்கு இரண்டாவது படம் மரணக்கிணறு.நல்ல பயிற்ச்சி இருந்தால்தான் தாண்டமுடியும்.வெற்றிமாறன் புதிய ஸ்டைலில் தாண்டியுள்ளார்.
ReplyDeleteஅருமையான விமர்சனம் நண்பரே
ReplyDeleteரொம்பவும் சீரியசாகவும் ப்ரோபஷனலாகவும் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்... ஆனாலும் சொல்லியாக வேண்டும்: நாயகி படத்தை சிறிதாக வ்ளியிட்ட உங்களுக்கு எனது கண்டனங்கள்...
ReplyDeleteIt is the New concept in tamil...
ReplyDeleteI like very much the intervel shot...
நன்றி தர்ஷன்.இது விமர்சனம் இல்லை.நல்ல தமிழ் சினிமாவிற்க்கு என் நெஞ்சம் மகிழ்ந்ததில் உருவான கருத்துரை.
ReplyDeleteநன்றி பிரபாகரன்.நண்பர் தர்ஷனுக்கு சொன்ன பின்னுட்டம்தான் உங்களுக்கும்.தாப்ஸியின் சுவாரஸ்யமான பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய படம் கிடைக்கவில்லை.கிடைத்ததும் போட்டு உங்கள் தாபத்தை தணிக்கிறேன்.அப்போது சாபத்தை வாபஸ் வாங்குங்கள்.
ReplyDeleteநன்றி பரிதி.இண்டர்வெல் என்ற கான்சப்ட்டே தமிழ்சினிமாவில் ஒழிய வேண்டும் என்ற தவத்திலிருப்பவன் நான்.கேண்டீன்காரர்கள் சாபத்தை பெற்றாலும் பரவாயில்லை.மலேசியாவில் எந்தப்படத்துக்கும் இண்டர்வெல் விடமாட்டார்கள்.தமிழ்சினிமாவில் இடைவேளை என்ற கார்டு மட்டும் தோன்றி மறைந்து படம் தொடர்சியாக ஒடிக்கொண்டிருக்கும்.இடைவேளை ஒழிவது இயக்குனருக்கு...திரைக்கதையாசிரியருக்கு நல்லது. ஏன் ரசிகர்களாகிய நமக்கும்தான்.
ReplyDeleteமுதல் படத்தில் கூட bicycle thieves பாதிப்பு இருப்பதாகவே எனக்குப்பட்டது. ஆனால், ஆடுகளம் பார்த்த பிறகு அவரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. தமிழின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக வெற்றிமாறன் பிரதிபலிக்கிறார்.
ReplyDelete