Oct 1, 2012

A Touch Of Spice - 2003 \ Greece & Turkey \ மெட்ராஸா...சென்னையா... \ பாகம் = 04



நண்பர்களே...
கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்ட,
‘ எ டச் ஆப் ஸ்பைஸ்’ திரைப்படத்தில்,
புலம் பெயர்தலின்... ‘சுனாமி தாக்குதலில்’ சிக்குண்ட  ‘திக்கற்ற தாத்தாக்களை’ பார்த்தோம்.
 ‘இன்னும்’ பலரை...பார்க்கவிருக்கிறோம்.

இப்போது பெனிஸ்ஸின் டெலிபோனை ஓட்டுக்கேட்போம்.


Isn't he here?
What do you mean he's not?

Maybe he got lost...

What?

Where did it happen?


இக்காட்சியின்  ‘ஷாட் கம்போசிசனை’ [ Shot Composition ] ... ஏற்கெனவே ‘ஹேராமில்’ [ Hey Ram - 2000 \ India \ Directed by Kamal Hassan ]  பார்த்தோம்.
மீண்டும் விளக்கம் பெற... ஹேராம் பதிவை காண்க...

எக்ஸ்டர்னல் - இண்டர்னல் ஷாட் கம்போசிஷேன் விளக்கம் காண ...ஹேராம் பதிவிற்குள் செல்க...

பெனிஸ்ஸின் உரையாடல் மூலமாக...
தாத்தா வரவில்லை...
உடம்பு சரியில்லை...
என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது.
ஆனால்....Where did it happen?... என்ற கேள்விக்கு...
எதிர் முனையில்... என்ன பதில் கிடைத்தது?
தெரியாது.

இது போன்ற,  ‘சஸ்பென்டட் ஆன்சர்’ [Suspended Answer ] இலக்கியத்தில் சுவையூட்டுகின்றன என...
பிரான்ஸ் நாட்டின், இலக்கிய திறனாய்வாளர்
 ‘ரோலன் பார்த்’ [Roland_Barthes ]குறிப்பிடுவார்.
இக்கேள்விக்கான விடையை இயக்குனர் நமக்கு பின்னால் விளக்குகிறார்.
நாம் அப்போது விரிவாக அலசுவோம்.

இஸ்தான்புல்லில், தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை...
இரண்டு ‘ ஷாட்’ மூலம் விளக்குகிறார் இயக்குனர் .

இப்போது படம் பிளாஷ்பேக்கில் பயணிக்கிறது.

காமிரா, அகிலா கிரேனில் சவுகரியமாக அமர்ந்து கொண்டு....
இஸ்தான்புல்லின்  ‘டாப்காபி’ அரண்மனையை உள்ளடக்கிய அழகிய காட்சியில் தொடங்கி...

கூட்டமாக பறக்கும் பறவைக்கூட்டங்கள் ,சிறகடித்து கலைவதை பதிவு செய்து...
‘திரைவலதில்’ பிரவேசிக்கும் மதகுரு, வானுயர்ந்த மசூதி ஸ்தூபியில் நின்று கொண்டு ; அரபிக்குரலில் துதிப்பதை, பக்தியோடு கடந்து...
அராபிய கட்டிடக்கலையின், வட்ட வடிவமைப்போடு கூடிய மசூதி
மேற் கூறையை மரியாதையோடு கடந்து...
வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் தரைக்கம்பளத்தை அலட்சியமாக ஒதுக்கி...
ராணுவ அணி வகுப்பு போல் வரிசையாக நின்றிருக்கும் புகை போக்கிகளின்
சல்யூட்டை ஏற்று...
கடந்து வரும் போது,
ஊடாக ‘ கான்ஸ்டாண்டிநோபில் 1959 ’ என்ற வார்த்தைகள் தோன்றி மறைகிறது .

1959 ல்  ‘இஸ்தான்புல்’ என்றழைக்கப்பட்ட நகரை...
அதன் பழைய பெயரான  ‘கான்ஸ்டாண்டிநோபில்’ என இயக்குனர் குறிப்பிட்டதன் நோக்கம் என்ன?

மெட்ராஸா...சென்னையா என்ற கேள்வி போலத்தான்,
கான்ஸ்டாண்டிநோபிலா...இஸ்தான்புல்லா என்ற கேள்வியும்.

இந்தக்கேள்வியும்...இதற்கான விடையும்தான்... இந்தப்படமே.

நீண்ட... நெடிய  ‘சிங்கிள் ஷாட்டின்’ மற்றப்பகுதிகளை  அடுத்தப்பதிவில் காண்போம்.

 ‘சிங்கிள் ஷாட்டை’ காணொளியில் காண்க....




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.