Dec 20, 2012

கும்கி - உலகசினிமாவா?... கமர்சியல் சினிமாவா?

நண்பர்களே...
‘கும்கி’ என்ற பட்டத்தை நமீதாவுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கி இருந்தேன்.
‘கும்கி’ பற்றி அரைகுறை புரிதலில் வழங்கிய பட்டம் அது.
கும்கி என்ற  படமாவது சரியான புரிதலோடு எடுக்கப்பட்டிருக்குமா ?
என்ற கேள்வியுடன்தான் படம் பார்க்கச்சென்றேன்.

வார நாட்களில் இரவு 10 மணி காட்சிக்கு...
1000 பேருக்கு மேல் அமரும்  'கோவை அர்ச்சனா' திரையரங்கு ஹவுஸ்புல்.
‘கும்கி’ படம் சூப்பர் ஹிட்.
சந்தேகமே இல்லை.


சிவாஜி கணேசனுக்கு ஒரு பராசக்தி போல்...
விக்ரம் பிரபுவுக்கு இப்படம் அமைய வாய்ப்பிருந்தும் அமையவில்லை. இப்படம் அத்தகைய தகுதியை அடைய முயற்சிக்கவேயில்லை.

அகிரா குரோசுவாவின் ‘செவன் சாமுராயை’ தழுவி நிறைய படங்கள் வந்திருக்கின்றன.
உ.ம் : மெக்னிபெசண்ட் செவன், பக்ஸ் லைப் [கார்ட்டூன் படம்]
 ‘கும்கி’யின் கதை,  ‘செவன் சாமுராய்  இன்ஸ்பிரேஷனில்’ வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நன்றாக கவனிக்க....
காப்பி அடிக்கப்படவில்லை.
இதற்காக பிரபு சாலமோனுக்கு ஸ்பெஷல் பாராட்டு.

‘தாங்க் யூ ஜீசஸ்’ என கொட்டை எழுத்தில் டைட்டில் போடுவது எதற்காக ?
படத்தில் கேரள பாரஸ்ட் ஆபிசருக்கு ‘மோசஸ்’ எனப்பெயரிடக்காரணம் ?
‘சீனு ராமசாமி’ நீர்ப்பறவையை  கிருத்துவ மதப்பின்னணியில் படமெடுத்தது ஆரோக்கியம்.
பிரபு சாலமோன்  செய்தது மதப்பிரச்சார நெடி. 


யானை, மலைவாழ் மக்கள், அதிகார வர்க்கம், என முக்கோணத்தில் பயணப்பட்ட திரைக்கதை  ‘காதல்’ என்ற வழக்கமான குறுகிய வட்டத்தில் சிக்கிக்கொண்டது.
அற்புதமான உலகசினிமாவாக்கப்படவேண்டிய கதையும் கதைக்களமும் இருந்தும் சாதாரணக்காதல் கதையாக்கி விட்டார் இயக்குனர்.

தம்பி ராமையா சில இடங்களில் எரிச்சலைடைய வைத்தாலும் பல இடங்களில் படத்தை அவர்தான் நகர்த்துகிறார்.
‘கவுரவம்’ படத்தில் இடம் பெற்ற நாகேஷ் காமெடியை அப்படியே காப்பியடித்து எரிச்சல் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.


‘நானும் செத்துருவேன்’ என்ற வசனத்தின் மூலம் தனது காதலை வெளிப்படுத்தும் இடத்தில் இயக்குனரோடு கை கோர்த்திருக்கிறார்
லஷ்மி மேனன்.
அழகும் நடிப்பும் ஒருங்கே வரப்பெற்ற இந்த வனதேவதையை தமிழ் ரசிகர்கள் ஆராதிப்பதில் ஆச்சரியமில்லை.


ஹாலிவுட் நேர்த்தியில் இருந்த படத்தின் ஒளிப்பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒரு ஸ்டில் போட்டாகிராபர்.
பிரபு சாலமோன்தான் அவரை முதன்முதலாக  ‘மைனா’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய வைத்து அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
சூப்பர் 35 எம்.எம். கேமராவை பயன்படுத்தி,
தமிழ்நாட்டில் தேனி மற்றும் குரங்கனி,
கேரளாவின் அடர்ந்த காடுகள்,
கர்நாடகா ஜோக் பால்ஸ்,
ஆந்திராவின் மஞ்சள் பூக்கள் பிரதேசம் என இயற்கை வண்ணத்தை அள்ளி நிறைத்து விட்டார் வெள்ளித்திரையில்.
குறிப்பாக ஜோக் பால்சை,  ‘அகிலா கிரேன்’ உதவியோடு அவர் படமாக்கிய விதம் பிரம்மாண்டம்.
அச்சமில்லை அச்சமில்லை படத்தில் நடித்த குற்றால அருவி...
புன்னகை மன்னனில் நடித்த அதிரப்பள்ளி அருவி...
ரோஜாவில் நடித்த ஒகனேக்கல் அருவி...போல்
மிகவும் கவர்ந்து விட்டது  ‘ஜோக் பால்ஸ்’.

படத்தின் இறுதிக்காட்சியில் ‘கொம்பன் யானை’ விழும் பள்ளத்தை இரவுக்காட்சியாக படமாக்கப்பட்டுள்ளது.
அதே இடத்தை, வேறொரு காட்சியில்... பகல் காட்சியாக  ‘அகிலா கிரேன்’ உதவியோடு படமாக்கி ஆடியன்ஸ் மனதில் விதைத்து வித்தை புரிந்ததை மிகவும் ரசித்தேன்.


கலை இயக்குனர் வைர பாலன் தேனி பகுதியில் மலைகிராமத்தை சிருஷ்டித்ததில் நிஜத்தன்மை இருக்கிறது.
தோட்டத்தரணி,சாபு சிரில்,ராஜீவன் போல் உயர்ந்த இடத்தை அடையும் தகுதி இவருக்கு இருக்கிறது.

என்னிடம் ஆபிஸ் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்தவர்,
இப்படத்தில் பணி புரிந்திருக்கிறார்.
அவர் சொன்ன தகவல்.
தேனியில் ஒரு லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ஆறு ஏக்கரில் நெல் வயல், பூந்தோட்டம் பயிர் செய்து படமாக்கினார்களாம்.
ஐந்து கோடி முப்பது லட்சம் படத்தின் மொத்த செலவு.
பிரபு சாலமோனுக்கு கிடைத்த லாபம் வெறும் இருபது லட்சமே.
ஆனால், திருப்பதி பிரதர்ஸ் & க்ரீன் ஸ்டூடியோ  ‘ஞானவேல்’ தலாஆறு கோடி சம்பாதித்து உள்ளனர்.
தினமும் ஒரு யானைக்கு வாடகை 25,000 + உணவு 25,000 = 50,000 ரூபாய் செலவு
ஒரு யானையை மட்டும் 70 நாள், சூட்டிங்கில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

யானை நடிப்பதில் சிவாஜி,கமல் மாதிரி பின்னி பெடலெடுக்குமாம்.
ஒரே டேக்தானாம்.
“ யானை குழந்தை மாதிரி...
சூட்டிங்கில் கஷ்டப்படுத்தவேயில்லை” .

விக்ரம் பிரபு ஒரு மாதம் தங்கியிருந்து கும்கி யானைகளிடம் பயிற்சி பெற்றாராம்.
ஆச்சரியமில்லை.
‘சிவாஜி’ பரம்பரை அல்லவா !

உலகசினிமாவாக எடுத்திருக்ககூடிய சப்ஜக்டை கமர்சியல் சினிமாவாக்கி
பிரபு சாலமோன் பெற்றது வெறும் இருபது லட்சம்தானே.
உலகசினிமாவாக எடுக்கப்பட்டிருந்தால் இதை விடப்பணமும்,பெயர், புகழ் கிடைத்திருக்குமே !

‘லைப் ஆப் பை’ படத்தில்  ‘இன்டர் ஸ்பெஸிபிக் ஸ்ட்ரக்கிள்’ சிச்சுவேஷனை  ‘இன்ட்ரா ஸ்பெஸிபிக் ஸ்ட்ரக்கிளாக’ அமைத்திருக்கிறார்.
இயக்குனர்  ‘ஆங் லீ’.

‘கும்கி’படத்தில்  ‘இன்ட்ரா - ஸ்பெஸிபிக் ஸ்ட்ரக்கிளை’
‘இன்டர் - ஸ்பெஸிபிக் ஸ்ட்ரக்கிளாக’ அமைத்திருக்கிறார்
இயக்குனர் பிரபு சாலமோன்.

‘இன்டர் - இன்ட்ரா ஸ்பெசிபிக்’ விளக்கம் காண ஹேராம் பதிவிற்கு செல்லுங்கள்.
ஹேராம் = 028 பதிவைக்காண... 

'Man - Made = Catastrophe'
‘Man V/S Animal Conflict’ ஆகியது சரியாகப்படவில்லை.
‘தீமட்டைஸ்’  பண்ணுவதில்  ‘பிலாஸபிகல் எரர்’ [Philosophical Error ] இருக்கிறது.

யானை சைவம்.
மனிதனை சாப்பிட ஊருக்கு வரவில்லை.
யானையின் ஏரியாவை மனிதன் ஆக்கிரமித்ததால் அதற்கு தீர்ப்பெழுத வருகிறது.
அதற்கு சுப்ரீம் கோர்ட்டெல்லாம் தெரியாது.
ஆனால் இயக்குனர் ‘கொம்பனை’ மட்டும் வில்லனாக்கி விட்டார்.
வில்லனாக்கப்பட வேண்டிய  ‘மனிதனை’ விட்டு விட்டார்.

" Earth belongs to all Species"

திராபையான கிராபிக்ஸ்,பின்னணி இசை, கருத்தாக்கம் என பல விஷயங்கள்  நெருடினாலும் படம் பிடித்திருந்தது.
காரணம் சிவாஜி,பிரபு மேல் உள்ள தனிப்பட்ட ப்ரியமா !
நாம் மிகவும்  நேசிக்கும் யானையா!
அல்லது கண் கவரும் குறிஞ்சி நில அழகா தெரியவில்லை.
ஆனால் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும்.
படத்தின் கிளைமாக்ஸ்.
சான்சே இல்லை.
ஐரோப்பிய படங்களின் ‘ஒப்பன் எண்ட் கிளைமாக்ஸ்’ இப்படத்தில் தெளிவாக கையாளப்பட்டிருக்கிறது.
‘மாரல் டென்சன்’ பவர் புல்லாக இருந்தது.
உதிரி பூக்கள்,மூன்றாம் பிறை, ஹேராம்,காதல்,வழக்கு எண்18 \ 9
இந்த படங்களின்  ‘கிளாசிக் கிளைமாக்ஸ்’ அருகில் இப்படத்தின் கிளைமாக்ஸை சேர்க்கலாம்.
இத்தகைய கிளைமாக்ஸ் தமிழ் சினிமாவை ஒரு படி மேல தூக்கி நிறுத்தும்.

HATS OFF PRAPHU SOLOMON.

இரண்டு முறை பார்த்து விட்டேன்.
தயவு செய்து இப்படத்தை தியேட்டரில் பாருங்கள்.

படத்தின் டிரைலரை காணொளியில் காண்க...
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.4 comments:

 1. //உலகசினிமாவாக எடுக்கப்பட்டிருந்தால் இதை விடப்பணமும்,பெயர், புகழ் கிடைத்திருக்குமே !//

  கமலை தவிர இப்போ உள்ள எல்லாரும் சினிமாவை கமர்ஷியலா மட்டும் தான் பாக்கிறாங்க.. காரணம் உலக (அ) எதார்த்த சினிமாவில் புகழ் கிடைக்கும்.. பணம்..?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...உலக சினிமா எடுத்தால் ஒரு படத்துக்கு நிச்சயம்
   20 லட்சத்திற்கு மேல் லாபம் கிடைக்கும்.
   புகழ் காலத்திற்கும் அழியாது.

   இன்றும் ரோஷமான்,பைசைக்கிள் தீவ்ஸ் பார்க்கப்படுகிறது.
   பேசப்படுகிறது.எழுதப்படுகிறது.ஆராயப்படுகிறது.

   Delete
  2. உண்மை.. ஆனால் கோடிகளில் பணம் கொழிக்கும் மரத்தில் லட்சம் எனும் காய் கவர விரும்புவார்களா?

   Delete
 2. நல்ல விமர்சனம் தந்தமைக்கு நன்றி.


  Tamil Latest Movie News

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.