Feb 9, 2011

Viva Cuba-2005 பட்டாம்பூச்சிகளின் பயணம்

விவா கியூபா சிறந்த குழந்தைகள் படமாக உலகமெங்கும் விருதுகளை அள்ளிய படம்.விவா என்றால் வாழ்க.கியூபா என்றால் நமக்கு உடனடி தர்ஷன் சே&பிடல்.இந்தப்படம் பாருங்கள்..இனி இந்தப்பட்டாம் பூச்சிகள்..... மாலு&ஜோர்கிடோ..... காட்சியளிப்பார்கள்.
இப்படத்தை இயக்கி பாராட்டை குவித்த இரட்டையர்கள் Juan Carlos Cremata&Iraida Malberti Cabrera.
மாலு 12 வயது சிட்டுக்குருவி...அப்பர் கிளாஸ் அம்மா....டைவர்ஸ் அப்பா.....அன்பேசிவமான பாட்டி...
ஜோர்கிடோ 11 வயது குறும்பன்....மிடில் கிளாஸ் அம்மா,அப்பா....

இரண்டு குழந்தைகளும் கிளாஸ்மேட்ஸ்&பிரண்ட்ஸ்.....
இவர்களது பெற்றோர்கள் டாம்&ஜெர்ரிதான்.....
மாலு அம்மா:அவனோட பழகாதே...அவங்கெல்லாம் லோகிளாஸ்
ஜோர்கிடோ அம்மா:அந்த குட்டி கூட பேசாதே...திமிர் பிடிச்ச பணக்கார ஜாதி...
இந்த போதனைகளை எரித்து நட்பு என்கிற பீனிக்ஸ் பிறக்கிறது.மாலுவின் பாட்டி இறந்ததும் மாலுவின் அம்மா தனது காதலனுடன் வாழ அமெரிக்கா செல்ல முடிவெடுக்கிறாள்.மாலு அம்மாவை விட்டுவிட்டு அப்பாவிடம் செல்ல ரகசிய திட்டம் போடுகிறள்.மாலுவுக்கு துணையாக இவனும் ஒடி வர தயார்...இங்கே பிறக்கிறது அழகிய ரோடு மூவி.

கிட்டத்தட்ட காஷ்மீர் To கன்யாகுமரி பயணம்.இங்கே கியூபாவின் ஆன்மாவை தரிசிக்கலாம்...குழந்தைகளின் பயம்,கோபம்,பொறாமை,அன்பு என அனைத்தையும் பாசாங்கில்லாமல் காட்டியிருக்கிறார்கள் இயக்குனர்கள்.இவர்கள் பயணிக்கும் இடங்கள்...சந்திக்கும் மனிதர்கள் நம் மனதில் பச்சை குத்தி குடியேறுகிறார்கள்.


இப்படம் பார்க்கும் போது சே இன்னும் கியூபாவில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதை உணரமுடிகிறது.நம் தலைவர்கள் எலெக்சன் வரும்போதுதான் காமராஜர்,அண்ணா.எம்ஜியாரை நினைவுபடுத்தி கொண்டாடுவார்கள்.
தயவு செய்து விஜய் படம் பார்க்கும் குழந்தைகளை விவா கியூபா,சில்ட்ரன் ஆப் ஹெவன்,சாங் ஆப் சாரோ,ஸ்பிரிட்டட் அவே பார்க்க வையுங்கள்.நல்லது நடக்கும்.

9 comments:

 1. நல்ல அறிமுகம்... ஆனால் நல்ல விமர்சனம் என்று சொல்ல முடியவில்லை... இன்னும்கூட வேறு விதத்தில் எழுதியிருக்கலாம்...

  ReplyDelete
 2. //தயவு செய்து விஜய் படம் பார்க்கும் குழந்தைகளை விவா கியூபா,சில்ட்ரன் ஆப் ஹெவன்,சாங் ஆப் சாரோ,ஸ்பிரிட்டட் அவே பார்க்க வையுங்கள்.நல்லது நடக்கும்//

  இந்த ஒரு விஷயத்தை தவிர, நல்ல பதிவு. தெளிவாக இருக்கிறது.


  கிங் விஸ்வா
  தமிழ் காமிக்ஸ் உலகம் - சமீபத்திய வார இதழ்களில் வந்த காமிக்ஸ் பற்றிய நிகழ்வுகள்

  ReplyDelete
 3. நன்றி பிரபாகரன்.நான் விமர்சனம் எழுதுவதில்லை.அதற்க்கான தகுதியும்,பட்டறிவும்,மொழிப்புலமையும் என்னிடம் கிடையாது.நான் பார்த்து மகிழ்ந்த உலக சினிமாக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதே எனது நோக்கம்.

  ReplyDelete
 4. நன்றி கிங் விஸ்வா.தமிழ்நாட்டில் விஜய்க்கு இருக்கும் குழந்தை ரசிகர்கள் வேறு யாருக்கும் கிடையாது.விஜய் படத்துக்கு மட்டும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரும் அதிசயம் நடக்கிறது.அடம் பிடித்து சுறா படத்தைக்கூட பார்க்க வைத்து விடுகிறார்கள்.அவர்களை திசை திருப்பும் வல்லமை நான் சொன்ன படங்களில் உண்டு.இதை பரிசோதித்து வெற்றி கண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 5. தலைவரே நலமா?
  மிக நல்ல படம் இது,அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்.விஜய்க்கு குழந்தைகள் மட்டுமல்ல் எப்படித்தான் இத்தனை சேச்சி ரசிகர்களோ என்றும் வியக்கிறேன்.

  ReplyDelete
 6. தேங்க்ஸ் தல, உங்களிடம் திருப்பூரில் வாங்கிய படங்களையே ஒரு வண்டி போஸ்ட் போடலாம் அதுக்குள்ள இன்னொரு மூவியா? சூப்பர். :-)

  ReplyDelete
 7. நலம் கீதப்பிரியன்.மொத்த கேரளாவே விஜயைக்கொண்டாடுகிறது.நான் என்னுடைய புத்தகக்கண்காட்சியின் அனுபவத்தில் சொல்கிறேன்.உலகசினிமா ரசனையில் இன்று தமிழகம் முன்னேறிக்கொண்டிருக்கிறது.கேரளா பின் தங்கிவிட்டது.தமிழகத்தில் பிள்ளையார் சுழி போட்டது விகடனும் செழியனும்.

  ReplyDelete
 8. முரளிக்குமாரிடம் நல்ல பதிவை எதிர்பார்த்து பதிவுலகம் காத்திருக்கிறது...நானும்தான்.

  ReplyDelete
 9. படம் நோட்டட்... சீக்கிரம் பார்க்கப்படும்..

  //தயவு செய்து விஜய் படம் பார்க்கும் குழந்தைகளை விவா கியூபா,சில்ட்ரன் ஆப் ஹெவன்,சாங் ஆப் சாரோ,ஸ்பிரிட்டட் அவே பார்க்க வையுங்கள்.நல்லது நடக்கும்//

  என்னாது? நான் என்னமோ, விவா கியூபா,சில்ட்ரன் ஆப் ஹெவன்,சாங் ஆப் சாரோ,ஸ்பிரிட்டட் அவே பார்க்கும் குழந்தைகளை, மருத்துவர் விசய் படங்கள் பார்க்க வைக்கலாம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன் :)

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.