Aug 13, 2013

ஐயாயிரம் ரூபாய்க்கு சம்சங் ப்ளுரே ப்ளேயர் !


நண்பர்களே...
புதிதாக சம்சங் BD E5300 ப்ளூரே ப்ளேயர் ரூ 5,000/-க்கு கிடைக்கிறது.
சீப் & பெஸ்ட்டாக இருக்கிறது.
டிவி எல்.இ.டி அல்லது எல்.சி.டி வைத்திருப்பவர்கள் மட்டும் ப்ளூரே ப்ளேயர் வாங்குவது நல்லது.
அப்போதுதான் நீங்கள் ப்ளூரே குவாலிட்டியை அனுபவிக்க முடியும்.


பழைய டிவிக்களை வைத்திருப்பவர்கள் ப்ளூரே பிளேயரை வாங்க வேண்டாம்.
அது சத்யராஜோடு நஸ்ரியாவை, ஜோடி சேர்ப்பதற்கு... ஒத்த பாவம்.
Full H.D. TV வைத்துக்கொண்டு... DVDயில் படம் பார்ப்பது அதை விட பாவம்.
நஸ்ரியா இருக்க... நதியாவை... ஜெயம் ரவிக்கு ஜோடி சேர்க்கலாமோ?


[ நஸ்ரியா பற்றி எழுதவும்...புகைப்படம் போடவும்...
அகில உலக நஸ்ரியா ரசிகர் மன்றத்தலைவர் பதிவர் கோவை ஆ.வி. [சுருக்கமாக... கோவை ஆனந்த விஜயராகவன்.] அவர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளது.]

3டி டிவி வைத்திருப்பவர்கள் இந்த ப்ளேயர் வாங்க வேண்டாம்.
ஏனென்றால் இது 3டி ப்ளூரே டிஸ்குகளை ப்ளே செய்யாது.
அதற்கென்று இதை விட அட்வான்ஸ் மாடல் உள்ளது.
அதை தனி பதிவாக விளக்குகிறேன்.

பைரேட்டட் ப்ளூரே டிஸ்குகள் சென்னை பர்மா பஜாரில் 100 ரூபாய்க்கு வாங்கி செல்ல கையை பிடித்து இழுக்கிறார்கள்.
இந்த டிஸ்குகளை விருப்பத்துடன் உள் வாங்கி ‘நச்சென்று’ படம் காட்டும் இந்த சம்சங் ப்ளேயர்.
ஷோ ரூம்களில் வாங்கும் சம்சங் பிளேயர் மிகவும் கற்புள்ளது.
ஒரிஜினல் காப்பிரைட் டிஸ்கை மட்டுமே முத்தமிட்டு கவ்விக்கொள்ளும்.
பைரேட்டட் டிஸ்குகளை ‘தூ’ என துப்பி விடும்.
யானையை விட  ‘தொரட்டிக்கு’ செலவழித்து மாளாது.

இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் குரியர் மூலமாக உங்களை வந்தடையும்.
சம்சங் BD E5300 ப்ளூரே ப்ளேயர் வேண்டுவோர் 
90039 17667 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


15 comments:

 1. //சத்யராஜோடு நஸ்ரியாவை, ஜோடி சேர்ப்பதற்கு... ஒத்த பாவம்//

  ஐயோ, ஏன் இந்த விபரீத கற்பனை? நினைச்சு பார்க்கவே முடியலே.. ப்பா...

  ReplyDelete
  Replies
  1. படு பயங்கரமான ஜோடி ஒன்றை கற்பனை செய்து பார்த்தேன்.
   அதுதான் இது!
   மன்னிக்கவும்...எனக்கு இந்த பாவத்தை செய்வதை தவிற வேறு வழி தெரியவில்லை.

   Delete
 2. //நஸ்ரியா பற்றி எழுதவும்...புகைப்படம் போடவும்...
  அகில உலக நஸ்ரியா ரசிகர் மன்றத்தலைவர் பதிவர் கோவை ஆ.வி.//

  ஆஹா.. படிக்கும்போதே நெம்ப சந்தோசமா இருக்கே..

  ReplyDelete
  Replies
  1. நெனச்சேன்...நஸ்ரியான்னாலே உங்களுக்கு ... ‘நமநமக்குமே’

   Delete
 3. விசிட் பிளேயருக்கும், நஸ்ரியாக்கும் என்ன சம்பந்தம்?! வர வர உங்க அலும்பு தாங்க முடியலைப்பா!

  ReplyDelete
  Replies
  1. விசிடி பிளேயரா!
   அது எங்க முன்னோர்கள் உப்யோகித்த புராதனப்பண்டம்.
   மேடம்...லேட்டஸ்ட்டுக்கு வாங்க.

   லேட்டஸ்ட்டா இப்ப எங்க கண்ணுக்கு...
   அழகு + கவர்ச்சி + திறமை = நஸ்ரியா அல்லது சம்சங் ப்ளூரே ப்ளேயர்.

   Delete
 4. அன்பு நண்பரே,
  உங்களின் வாசகன் நான். கோவையைச் சேர்ந்தவன். என் சகோதரன் சினிமாவில் இயக்குனன் ஆகும் முயற்சியில் இருக்கிறார். மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அவர் இயக்கத்தில் ஒரு குறும்படம் செய்திருக்கிறார். அவரின் முதல் குறும் படம் உங்களின் பார்வைக்கு. உங்களுக்குப் பிடித்திருப்பின் நண்பர்களுக்குச் சொல்லவும். உங்களின் அறிவுரைகளும் ஆலோசனைகளையும் வேண்டி இதனை உங்களுக்கு அனுப்பி உள்ளேன்.

  http://www.youtube.com/watch?v=Cac2bIHDL6s

  சு.செந்திலரசு.

  ReplyDelete
  Replies
  1. கட்டாயம் பார்த்து விடுகிறேன்.

   அறிவுரை...ஆலோசனை சாதித்தவர்களிடம் மட்டும்தான் கேட்க வேண்டும்.

   படம் பற்றிய என் கருத்தை மட்டும் சொல்கிறேன்.
   உங்கள் இ.மெயில் முகவரியை தெரிவிக்கவும்.
   என் மீது வைத்த அன்பிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி.

   Delete
  2. நன்றி..

   ssenthilarasu@gmail.com

   Delete
  3. நன்றி. என் மின்னஞ்சல் ssenthilarasu@gmail.com உங்களின் மேலான கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்....

   Delete
 5. 5000 ரூபாய் மாதிரி அந்த டிவி வாங்கவும் ஒரு வழி சொன்னால் அல்லது அனுப்பி வைத்தால் புண்ணியமாக போகுமே?

  ReplyDelete
  Replies
  1. 5000 ரூபாய்க்கு சைனா டிவி செட்டுகள் கிடைக்கிறது.
   ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக அவை இருக்கும்.
   அதே தரத்தில் உள்ள சம்சங்,சோனி டிவிக்களுக்கு நாம் 15,000/- கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
   பிராண்டுகளுக்கு நம்மை பழக்கி விட்டார்கள்.
   அரிசியையே...பிராண்டாக்கி விற்று வருகிறார்கள் நம்மவர்கள்.

   Delete
 6. ஏன்! சத்யராஜ் நஸ்ரியாவுக்கு அல்வா தரக்கூடாதா?

  ReplyDelete
  Replies
  1. சத்யராஜ் அல்வாவுக்கு...கஸ்தூரிதான் மயங்குவார்.
   நஸ்ரியாவுக்கு கொடுத்தா ‘நோ...தாங்ஸ் தாத்தா’ன்னு சொல்லிடும்.
   அதுக்கு...சத்யராஜ் மயங்கிருவார்.

   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா.
   [எப்படியேல்லாம் மடக்குறாங்க ]

   Delete
 7. //ஷோ ரூம்களில் வாங்கும் சம்சங் பிளேயர் மிகவும் கற்புள்ளது.
  ஒரிஜினல் காப்பிரைட் டிஸ்கை மட்டுமே முத்தமிட்டு கவ்விக்கொள்ளும்.
  பைரேட்டட் டிஸ்குகளை ‘தூ’ என துப்பி விடும்.//
  This Samsung Bluray must be a pirated version of original.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.