Mar 6, 2012

அரவான்???


அரவான் மிகுந்த எதிர்பார்ப்போடு போய்....மிகுந்த ஏமாற்றத்துடன் வேதனையுடன் திரும்பினேன்.
நானே தோற்றது போல் ஒரு வேதனை.
வசந்தபாலன் இரண்டு மேட்சுகளில் செஞ்சுரி அடித்து மூன்றாவதில் டக் அவுட் ஆகி விட்டார்.
அற்ப்புதமாக வரவேண்டிய காவியம் திரைக்கதை குளறுபடிகளால் கறை படிந்த ஒவியமாகி விட்டது.

பிரேவ்ஹார்ட்,ஒமர் முக்தார் போன்று பாதிப்பு தரக்கூடிய கிளைமாக்ஸ்....அதன் வலுவிழந்து பொலிவில்லாமல் தோற்றமளிக்கும் காரணத்தை தேடுங்கள்.... வசந்தபாலன்.

படத்தின் இறுதியில் வரும் டைட்டில் கார்டுக்கும் இப்படத்திற்க்கும் என்ன சம்பந்தம்?
எத்தனை உலக சினிமா பார்த்திருப்பீர்கள் வசந்த பாலன்?
எந்த இயக்குனராவது இப்படி அபத்தமாக டைட்டில் கார்டு போட்டு உள்ளாரா?

படத்திடம் ரசிகனை நெருங்க விடாமல் செய்யும் அறப்பணியில் முதலிடம் திரைக்கதைக்கு...இரண்டாமிடம் ஒளிப்பதிவு.
பீரீயட் படத்திற்க்கு வரவேண்டிய மூட்.... ரசிகனிடம் அறவே வராத அளவுக்கு துரத்தி...துரத்தி அடிக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பரத்திற்க்கு எதற்க்காக அப்பகலிப்டோ ஆதிவாசி மேக்கப்?

படத்தின் இறுதி காட்சியை இயேசுநாதர் சிலுவையில் அறையப்படும் காட்சி போன்று வடிவமைத்ததில் கற்பனை வறட்சி அப்பட்டமாக தெரிகிறது.

இப்படம் தமிழில் வந்த மிகச்சிறந்த கலைப்படைப்பு என யாராவது பாராட்டினால் அவர்கள்தான் உங்கள் முதல் எதிரி.
உங்கள் வளர்ச்சியை முடக்கிப்போடும் அத்தகைய விமர்சனங்களை ஒதுக்கி போட்டால் மேலும் வளர்ச்சி அடைவீர்கள். 

12 comments:

  1. //ரத்திற்க்கு எதற்க்காக அப்பகலிப்டோ ஆதிவாசி மேக்கப்?// நல்ல பன்ச் கேள்வி..
    வசந்தபாலன் இந்த படத்தை அறவே மறந்துவிட்டு, முன்பு போல நல்ல முயற்சிகளோடு திரும்புவார் என எதிர்பார்ப்போம்..

    ReplyDelete
  2. @JZ
    வணக்கம் நண்பரே!

    //வசந்தபாலன் இந்த படத்தை அறவே மறந்துவிட்டு, முன்பு போல நல்ல முயற்சிகளோடு திரும்புவார் என எதிர்பார்ப்போம்..//

    நிச்சயம் வசந்தபாலன் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்.

    ReplyDelete
  3. ஆஹா.... இந்தப் படத்தைப் பத்தி எனக்கு எந்த எதிர்பார்ப்புமே இல்லை. நல்லா இருக்குன்னு எல்லாரும் சொன்னா, பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனா, இப்ப பார்க்கலாமா வேணாமான்னு யோசிக்கிறேன்.. வசந்தபாலனைப் பத்தி எனக்கு ஒரு கருத்து இருக்கு. உலகப் படம் எடுக்கிறேன் பேர்வழின்னு நினைச்சிக்கிட்டு, படம் எடுக்குறாரு. ஆனா அந்த அளவு சரக்கு அவருகிட்ட இல்லை. அவரோட அத்தனை படங்களிலும் வசனம் யாராவது இலக்கியவாதிதான். அது ஒன்னு மட்டுமே உலகப் படத்துக்கு இணை ஆயிறாது. எதுக்கும் பார்க்க முயல்கிறேன்...

    ReplyDelete
  4. //இப்படம் தமிழில் வந்த மிகச்சிறந்த கலைப்படைப்பு என யாராவது பாராட்டினால் அவர்கள்தான் உங்கள் முதல் எதிரி.
    உங்கள் வளர்ச்சியை முடக்கிப்போடும் அத்தகைய விமர்சனங்களை ஒதுக்கி போட்டால் மேலும் வளர்ச்சி அடைவீர்கள். // இதை அவர் புரிந்துக்கொள்வார் என்று தான் நினைக்கிறேன்

    ReplyDelete
  5. ஆளாளுக்கு அவரவர் கருத்துக்களை சொல்றாங்க. குழப்பமா இருக்கு. நான் படத்தைப் பார்த்துவிட்டு முடிவெடுக்கிறேன். விமர்சனத்திற்கு நன்றி.

    ReplyDelete
  6. படம் நல்லாவே இல்லையா....எனக்கு பிடித்து இருந்தது...ஒருவேளை...உங்களை மாதிரி சினிமாவிலே ஊறி இருந்தால் எனக்கும் பிடித்திருக்காதோ..?

    ReplyDelete
  7. @கருந்தேள் கண்ணாயிரம்

    நண்பரே! கட்டாயம் படம் பாருங்கள்.சில காட்சிகள் மிக நன்றாக நிறைவாகவே இருக்கிறது.

    ReplyDelete
  8. @ஆர்ம்ஸ்டாராங்க் விஜய்

    நண்பரே!வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. @ஹாலிவுட் ரசிகன்
    நண்பரே!
    கட்டாயம் படம் பாருங்கள்.
    நிச்சயம் தவிற்க்க வேண்டிய படம் அல்ல.
    தரமான படைப்பாக வர அனைவருமே உழைத்திருக்கிறார்கள்.
    அந்த வியர்வைக்கு மரியாதை செலுத்தும் விதமாக படத்தை பார்க்கலாம்.

    ReplyDelete
  10. @கோவைநேரம்
    நண்பரே!
    இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் உழைத்திருந்தால் உங்களோடு நானும் மகிழ்ந்திருப்பேன்.
    இது வரை வந்த அத்தனை தமிழ் சினிமாவின் உயரத்தை தாண்டும் வல்லமை இக்கதையில் இருந்தது.
    திரைக்கதை சொதப்பலால் எல்லாமே விரயமாகி விட்டது.

    ReplyDelete
  11. நேற்றே பதிவை படித்தேன் அண்ணா, இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.
    நான் என்னவோ பல விமர்சனங்கள் படிக்க, படம் நன்றாக இருக்கும் என்று நினைத்துவிட்டேன்..தங்களது எழுத்துக்கள் வேறு விதமான ஒன்றை சொல்கிறது..வசந்த பாலன் அவரை எனக்கு பிடிக்கும்..எனக்கு உலக சினிமா என்றால் எதுவும் தெரியாது, ஆனால் அவர் எடுக்கும் படங்கள் சமீபக்காலத்திய படங்களோடு ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமானவை (என் பார்வையில்)..
    பதிவு வழக்கம் போல அருமை..அடிக்கடி விமர்சனம் செய்யுங்கள் அண்ணா, நன்றி.

    ReplyDelete
  12. @குமரன்
    அன்புத்தம்பி குமரா!
    இப்படத்தை கட்டாயம் பார்...
    உலக அளவில் தமிழ் சினிமாவை கொண்டு நிறுத்தும் பவர்புல் கதையை...உள்ளூர் சந்தையை குறி வைத்து படமாக்கியதால்...படம் பப்படமாகி விட்டது.

    வெயில்,அங்காடி தெரு போன்ற படங்களால் என்னை கவர்ந்த வசந்த பாலன் இன்றும் நான் நேசிக்கும் இயக்குனர்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.