Mar 23, 2012

மார்லன் பிராண்டோ-நிஜத்தில் நடிக்காதவன்


மார்லன் பிராண்டோ தனது நடிப்பால் என்னை வசீகரித்ததை விட அவரது சுய சரிதத்தை படித்ததின் மூலமாக என்னை முழுக்க ஆட் கொண்டார்.
படிக்க...படிக்க.... என்னுள் எழுந்த அவரது உயரம் இமயமலையை கடுகாக்கும் கம்பீரம் கொணடது.
தனது பலகீனங்களை,தவறுகளை அப்பட்டமாக சுய சரிதத்தில் சொன்ன நடிகன் வேறு யாரும் இல்லை என நினைக்கிறேன்.

அஜயன் பாலா மொழி பெயர்ப்பில் எதிர் பதிப்பகத்தார் வெளியிட்ட மார்லன் பிராண்டோ என்ற நூலில் எனக்கு பிடித்த அம்சங்களில் சிலவற்றை மட்டும் உங்களொடு பகிர்ந்து கொள்கிறேன்.

சூப்பர்ஸ்டார் இமேஜில் மிதக்கும் நடிகர்கள் கட்டாயம் இதை படிக்க வேண்டும்...

‘மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை தேவ தூதராக கருதுகின்றனர்.
அந்த ஒருவருக்கு இந்த தேவதூதப்பதவி பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் மக்கள் அதை வலுக்கட்டாயமாக அவர்களிடம் திணித்து விடுகின்றனர்.
தங்களுடைய உணர்வுகளின் தேவைகளில் அந்த நபருக்காக ஆழமான ஒரு இடத்தை உருவாக்கி தருகின்றனர்.
ஏனெனில் நாம் கடவுளைப்போல சாத்தான்களை குறித்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்’.

வளர்ச்சியடைந்த நாடுகள்.... வளரும் நாடுகளுக்கு உதவி செய்வது எத்தனை போலியான நாடகம் என்பதை தோலுரித்து காட்டுகிறார் தனது எழுத்தில்....

 “பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து,இந்தோனேசியா போன்ற தெற்க்காசிய நாடுகளுக்கு படப்பிடிப்பு நிமித்தம் சென்ற போது...
காலனியாதிக்கம் முடிந்த பின்னும்.... வளர்ச்சியந்த நாடுகள்...
அந்நாட்டின் பொருளாதாரங்களை சீரழிப்பதை என்னால் கண்கூடாக உணர முடிந்தது.
வெளிநாட்டு உதவி என்ற பெயரால் அந்த நாடுகளை வளர்ந்த நாடுகள் தங்களது அரசியல் சுய காரியங்களுக்கு பயன்படுத்தி சுரண்டி வருகின்றன”.

பிராண்டோவின் வார்த்தைகள் எத்தனை சத்தியம் என்பதற்க்கு...
கூடங்குளம் இன்றைய சாட்சி.

 “அதிகாரத்தில் இருக்கும் தனி மனிதனோ அல்லது அரசாங்கமோ மக்களை தேசம் என்னும் பெயரால் எவ்வளவு தூரம் அடிமைகளாக்கி தன்னிஷ்டத்திற்க்கு தவறான பாதைகளில் அவர்களை அழைத்து செல்கிறது”....
பிராண்டோவின் இந்த வரிகள் கடும் மின் வெட்டை ஏற்ப்படுத்தி தமிழெகமெங்கும் கூடங்குளம் மக்களுக்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கையை ஞாபகப்படுத்தியது என்றால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

இந்தியாவில் பீகாரில் பயணித்து அங்கு நிலவும் சாதீயக்கொடுமைகளை ஆவணப்படமாக்கி உள்ளார் பிராண்டோ.
அதை அமெரிக்க திரையரங்குகளிலோ...தொலைக்காட்சியிலோ வெளியிட முடியவில்லை.
தனது விரக்தியை...கோபத்தை தனது வைர வரிகளில் பதிவு செய்துள்ளார்.
 “அமெரிக்க மனம் இதர மக்களின் துன்பங்களின் மீது ஒரு போதும் அக்கறை கொள்வதில்லை”.


காட்பாதர் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்க பிராண்டோ போகாமல் சச்சின் லிட்டில் பெதர் என்ற அமெரிக்க பூர்வீகக்குடிமகளை அனுப்பி புரட்சி செய்தார் பிராண்டோ...
இத்தனை காலமாக இனத்தின் பெயரால் அமெரிக்க பூர்வீகக்குடிமக்கள் எவ்வளவு தூரம் பழி வாங்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிக்கையாக ஆஸ்கார் அரங்கில் வாசிக்க வைத்து உலகின் கவனத்துக்கு கொண்டு சென்ற மாபெரும் போராளி பிராண்டோ.
அது மட்டுமல்ல.... அந்த மக்களுக்காக தனது வாழ் நாளை செலவழித்துள்ளார் பிராண்டோ என்பதை அறிந்து கொள்ள முடிகிறது இந்நூலால்.

மது...மங்கை என கொண்டாட்டத்துடன் இருந்தாலும்...
உண்மையான புரட்சி கலைஞர் மார்லன் பிராண்டோதான்.

நூலின் பெயர் : மார்லன் பிராண்டோ
மொழி பெயர்ப்பு : அஜயன் பாலா
வெளியிடு : எதிர்
விலை :  ரூ.250.00
தகவல் தொடர்புக்கு : 04259 226012, 98650 05084.
   

15 comments:

  1. Already i know about marlien actor . He is hollywood sivaji. Thank you for article . Really buy a book about marlien

    ReplyDelete
  2. @கார்த்திகேயனி
    மார்லன்ட் பிராண்டோவுக்கு ஹாலிவுட் சிவாஜி என்ற பொருத்தமான பட்டம் கொடுத்து உள்ளீர்கள்.
    மிக்க நன்றி.
    விண்ணுலகில் பிராண்டோவும்,சிவாஜியும் ஒரு சேர மகிழ்ச்சியை பறிமாறிக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அஜயன் சார்.. அவரது எழுத்துக்களுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம்.. இப்போது அடிக்கடி பேசும் அளவிற்கு நண்பராக மாறிவிட்டார்.. இந்த நூலை பலரிடம் கொண்டு சேர்க்க முயன்றதற்கு நன்றி..

    ReplyDelete
  4. அட ... இன்றைக்கு தான் இவரைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி ரசிகரே.

    ReplyDelete
  5. @காஸ்ட்ரோ கார்த்தி
    நண்பரே!
    அஜயன் பாலாவின் மொழிபெயர்ப்பு திறன் பற்றி பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன்.மன்னிக்கவும்.

    வெகு எளிதாக வாசகனை உள்ளே வளைத்துப்போடும் மொழி பெயர்ப்பு எழுத்தாளர்கள் மிகக்குறைவு.
    மிகச்சிறந்த மொழி ஆளுமை இருப்பதால் அஜயன் பாலாவின் நடை திருநெல்வேலி அல்வா போல் திகட்டாமல்... சுளுவாக... உள்ளே இறங்கி விடுகிறது.

    வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. @ஹாலிவுட்ரசிகன்
    //அட ... இன்றைக்கு தான் இவரைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். //
    இது மகாக்கொடுமை...ஹாலிவுட்ரசிகன் என்று பெயர் வைத்துக்கொண்டு இன்னும் காட்பாதர் பார்க்காமல் இருப்பது மன்னிக்க முடியாத குற்றம் நண்பா....

    காட்பாதர் என்றால் மார்லன் பிராண்டோ....
    மார்லன் பிராண்டோ என்றால் காட்பாதர்.... நினைவுக்கு வரவேண்டும்.

    ReplyDelete
  7. //இது மகாக்கொடுமை...ஹாலிவுட்ரசிகன் என்று பெயர் வைத்துக்கொண்டு இன்னும் காட்பாதர் பார்க்காமல் இருப்பது மன்னிக்க முடியாத குற்றம் நண்பா....//

    ஹி ஹி ... ஒத்துக்கிறேன். இப்பொழுதும் ஹார்ட் டிஸ்கில் 720p version வைத்திருக்கிறேன். ஆனா படம் இன்னும் பார்க்கல. ஒரு நல்ல HDTV வாங்கி ... அதில் தான் Godfather மூன்றையும் மற்றும் சில படங்களையும் மீண்டும் ப்ளுரேயில் டிஸ்கில் பார்த்து உணரவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டும் தான் காரணம்.

    கூடிய சீக்கிரம் டீவி வாங்கிடுவேன்னு நினைக்கிறேன். இல்லாட்டி என் 20 inch கம்ப்யுட்டர் ஸ்கிரீன்ல சரி பாத்துக்கலாம்.

    ReplyDelete
  8. ப்ளாக் பெயரையும் என் பெயரையும் சீக்கிரமே மாற்றிவிடுகிறேன். :P

    ReplyDelete
  9. @ஹாலிவுட் ரசிகன்
    // இப்பொழுதும் ஹார்ட் டிஸ்கில் 720p version வைத்திருக்கிறேன். ஆனா படம் இன்னும் பார்க்கல. ஒரு நல்ல HDTV வாங்கி ... அதில் தான் Godfather மூன்றையும் மற்றும் சில படங்களையும் மீண்டும் ப்ளுரேயில் டிஸ்கில் பார்த்து உணரவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டும் தான் காரணம்.//

    புளூ ரே குவாலிட்டியில் காட்பாதரை பார்க்க காத்திருப்பது தவமல்லவா...
    இது புரியாமல் உளறி விட்டேன்...மன்னிச்சு...நண்பா...

    ReplyDelete
  10. @ஹாலிவுட்ரசிகன்
    //ப்ளாக் பெயரையும் என் பெயரையும் சீக்கிரமே மாற்றிவிடுகிறேன்.//
    நான் விளையாட்டாக குறிப்பிட்டதை சீரியசாக எடுக்க வேண்டாம்.
    ஹாலிவுட்ரசிகன் என்பது கம்பீரமான...கவர்ச்சியான பெயர்.
    ஆயிரம் பதிவர்கள் மத்தியில் தனித்து தெரியும் பெயர்.
    பெயருக்கேற்ற தகுதியும் திறமையும் உங்களிடம் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ரசிகரே. ஹாலிவுட்ரசிகன் என்ற பெயர் ஆங்கிலப்படங்கள் பற்றி பேச மட்டுமே ஒத்துப்போகும் போலத் தோன்றுகிறது. தொலைக்காட்சி நாடகங்கள், வீடியோ கேம் பற்றி எழுதுவற்கு சரிவருமா தெரியவில்லை.

      என் பெயரை மாற்றாவிட்டாலும், ப்ளாக்கின் பெயரை சீக்கிரமே நான் எழுதும் பதிவுகளுக்கு ஏற்றது போல மாற்றவேண்டும். சம்பந்தமில்லாமல் இருக்கிறது பெயர்.

      ஏதாச்சு பெயர் ஐடியா இருந்தா சொல்லவும்.

      Delete
  11. பிராண்டோவை ஒரு நல்ல நடிகராக மட்டுமே எனக்குத் தெரியும் சார்.. அவருடைய இன்னொரு முகத்தை பற்றிய அறிமுகத்தை கொடுத்திருக்கிறீர்கள். மிகுதியை வாசித்தறியப் போகிறேன்.. நன்றி சார்!

    ReplyDelete
  12. எனக்கு மிகப் பிடித்த ஒரு ஆளுமை. நமது நாட்டில் மிகச் சிறந்த இசையமைப்பாளர்கள்,நடிகர்கள்,இயக்குனர்கள்,நடன கலைஞர்கள்,இன்னும் பல துறைகளில் மிகச் சிறந்த ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், கலைஞர்கள் - என்று பார்த்தால் மிகச் சில பேரே.

    தன்னைச் சுற்றி நடக்கும் - நடந்த - சில விஷயங்களில் கலைஞர்கள் தங்கள் நிலைப்பாடை வெளிப்படுத்த வேண்டுமா என்பது குறித்து பல கேள்விகள் தர்க்கங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் - எனக்கு பிராண்டோ போன்ற கலைஞர்கள் தான் பிடிக்கும்.

    சாப்ளின் அளவுக்கு கட்ஸ் உள்ள ஆள், பிராண்டோ மாதிரியான ஆள், பாப் டிலன் மாதிரியான ஆட்களே எனக்கு எப்போதும் ஆதர்சம்.

    சிவாஜி - பிராண்டோ, நடிப்புடன் மட்டுமே இருவைரையும் ஒப்பீடு செய்ய முடியுமே தவிர, மேற்கொண்டு இதுபோன்ற விஷயங்களில் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  13. @கொழந்த
    பிராண்டோ பற்றி எழுதும்போதே நினைத்தேன்...
    உங்கள் பின்னூட்டம் வரும் என்று...
    என் கணிப்பை மெய்பித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  14. superb nice please post more articles

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.