Mar 13, 2012

சிதம்பர ரகசியம்

பிப்ரவரி 24 முதல் மார்ச் 4ம்தேதி வரை சிதம்பரம் புத்தகக்கண்காட்சி... அண்ணாமலை பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
நானும் பங்கு பெற்றேன்.
உலகசினிமாவா!கிலோ என்ன விலை?எனக்கேட்டனர் சிதம்பரம் மக்கள்.
அது போக சிதம்பரத்தில்500ரூபாய்,1000 ரூபாய்க்கு கடுமையான தட்டுப்பாடு.
எல்லா ஊரிலும் 10 ரூபாய் நோட்டுக்குத்தான் சிரமப்படுவோம்.
சிதம்பரத்தில் 10 ரூபாய் நோட்டு மட்டும்தான் பார்க்க முடிந்தது.


சரி வந்தது வந்தோம்...
புண்ணியத்தை தேடுவோம்....
என சிதம்பரம் நடராஜப்பெருமானை தரிசிக்க ....
பவுர்ணமி இரவு அர்த்த ஜாம பூசைக்கு சென்றேன்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் வரும் நேரம் அது என ராம கிருஷ்ணா மட ஸ்டால் நண்பர் வற்புறுத்தி அழைத்து சென்றார்.
மிக அளவான கூட்டம்தான்.
வாத்தியங்கள் முழங்க பெருமான் பள்ளியறைக்குப்போகும் காட்சி சிலிர்ப்பை ஏற்ப்படுத்தவில்லை.
பவர்கட்டில் கோயிலே இருட்டாக....
பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில்...
குளிர்ந்த சூழலில்...
அந்தப்பிரகாரத்தில் தெய்வீகம் இருந்தது.
பிரசாதமாக தம்ளரில் பால் கொடுத்தார்கள்.
என் வாழ் நாளில் கண்டிராத சுவை அந்தப்பாலில் இருந்தது.

அடுத்த நாள் காலையில் கோயிலுக்குப்போனேன்.
முக்கிய சன்னிதானங்களில் அர்ச்சகர்கள் பெரிய நோட்டை வைத்துக்கொண்டு  பெயர்,முகவரி,பிறந்த நாள்,நட்சத்திரம் என... இறந்த நாளைத்தவிற மீதி எல்லா டேட்டாவையும் கேட்டு...
 விபூதி பிரசாதம் அனுப்ப...
 சர்வீஸ் சார்ஜாக 1000 ரூபாய் கேட்கிறார்கள்.
 “1000 ரூபாயா! நான் அதை சிதம்பரத்தில் பார்க்கவேயில்லை” என தப்பித்து வந்தேன்.
ஆளரவமற்ற மண்டபத்தில் ஒரு வெள்ளைக்காரன் மட்டும் அங்குள்ள தூண்களை சுற்றி சுற்றி வந்தான்.
அவனோடு நானும் இணைந்து பார்த்தேன்.
நம் முன்னோர்கள் செதுக்கி வைத்த பொக்கிஷங்களை கண்டேன். நாட்டியக்கலையின் அத்தனை அம்சங்களையும் சிற்பமாக்கி வைத்துள்ளார்கள்.
அதன் அழகை வர்ணிக்க கண்ணதாசன் பிறக்க வேண்டும்.


சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் பாண்டியன்... “ பகல் உணவுக்கு புத்தூர் என்ற கிராமத்துக்கு போவோம்” என்றார்.
டவுண்பஸ்ஸில் ஏறி புத்தூர் சென்றோம்.
கொள்ளிடம் தாண்டி இருக்கிறது புத்தூர் என்ற சிற்றூர்.
ஏகப்பட்ட கார்கள்...வேன்கள் என மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது.
பொறுமையாக காத்திருந்து இடம் பிடித்தோம்.
தலை வாழை இலை போட்டு சோற்றை கொட்டினார்கள்.
மிரண்டு போனேன்.
சைட் டிஷ்ஷாக சிக்கன்,இறால்,வஞ்சிர மீன் வறுவல் வாங்கி சாப்பிட்டேன்.
இதற்க்கு ஈடு இணையான சுவை உலகிலேயே இருக்காது எனச்சொல்லலாம்.
இன்றும் ஒலைக்கொட்டகையில் அமைந்திருக்கும் ஜெயராமன் சாப்பாட்டுக்கடை சுவையின் ரகசியத்தை கேட்டு தெரிந்து கொண்டேன்.
ஜெயராமன் சொந்தமாக படகு வைத்துள்ளார்.
அதில் போய் பிடித்து வரும் இறால்,மீன் மட்டுமே சமையலுக்கு உபயோகிக்கிறார்கள்.
அதனால்தான் பிரஷ்&ஸ்பெஷல் டேஸ்ட் கிடைக்கிறது.

சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சிதம்பரம் கீழ ரத வீதியில் கிருஷ்ண விலாஸ் ஒன்றே கதி... 

8 comments:

  1. நல்ல கலவையான பதிவு!

    ReplyDelete
  2. Enakku solli...
    Irukkalaame....

    Santhichirukkalaame...

    ReplyDelete
  3. நானும் அந்த கடையில் ஒருமுறை சாப்பிட்டிருக்கிறேன்! தெய்வீக ருசி என்றால் அதுதான்!மீண்டும் நினைவூட்டியது உங்கள் பதிவு!

    ReplyDelete
  4. நல்ல சுவையான பதிவு...

    உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

    ReplyDelete
  5. @மதுரை அழகு
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. @NAAI-NAKKS
    அடடா...தங்களை சந்திக்கும் சான்ஸ் மிஸ் பண்ணி விட்டேனே!
    பரவாயில்லை...நல்லதொரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் நாம் சந்திப்போம்.

    ReplyDelete
  7. @கணேசன்
    //நானும் அந்த கடையில் ஒருமுறை சாப்பிட்டிருக்கிறேன்! தெய்வீக ருசி என்றால் அதுதான்!//
    ஜெயராமன் கடையில் சாப்பிட்டவர்கள் பாக்கியவான்கள்.

    ReplyDelete
  8. adichi utrathukkum oru alavu illayappa?? naan neenga solra athe puthoora searthanvanthaan. avarkitta Boat ellam illa.. Pakkathila Palayarnnu oru seashore irruku.. anga irrunthuthan vangittu varrar.. and then he is alws using natural masala for the taste.. and Kari aduppu.. no gas..
    iththan tastekku reason boss.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.