Oct 5, 2010

The Boy in the striped pyjamas-மரணம் தரும் ரணம்





John Boyne நாவலை படமாக்கியவர் Mark Homan.




ஆனநதவிகடனில் எஸ்.ராமகிருஸ்ணன் அற்புதமாக அறிமுகம் செய்து இருந்தார் இப்படத்தை.




படித்தவர்கள் விலகி வேறு பிளாக் போய்விடுங்கள்.மற்றவர்கள் பின் தொடருங்கள்.




ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்த வதை படலம்தான் கதைக்களம்.இந்த கொலைக்களம் பற்றி அறியாமல் இந்த ஊருக்கு வருகிறான் ப்ரூணோ என்கிற ஜெர்மானியச்சிறுவன் பெற்றோரோடு, கூடவே சகோதரியும்...




தந்தை ஹிட்லரின் ராணுவ அதிகாரி..




தூரத்தில் இருக்கும் பேக்டரியின் உயரமான சிம்னியில் இருந்து வரும் கரும் புகையில் யூதர்களின் ஆவி கலந்திருப்பதை அறிந்ததும் துடிக்கிறாள் ப்ரூனோவின் தாய்...ரசிக்கிறார்கள் தந்தையும் சகோதரியும்...இது எதுவும் அறியாத ப்ரூனோ யூதக்கேம்பில் வசிக்கும் ஸ்மியூல் என்ற யூதச்சிறுவனோடு இருக்கிறான் நட்ப்போடு..அந்த நட்ப்பின் ஆழம் அவனை மரணத்துக்கு கூட்டி செல்கிறது.ஆயிரம் யூதர்கள் கொல்லப்படுவதை ரசித்த ப்ரூனோவின் தந்தை, தன் மகனை மரணப்படுகுழியிலிருந்து மீட்க துடிக்கும் தவிப்புதான் கிளைமாக்ஸ்..




டிவி,செய்திதாள்களில் வரும் மரணச்செய்திகள் எதுவுமே நம்மை பாதிப்பது இல்லை...உற்றார்...உறவினர் அச்செய்திகளில் இல்லாதவரை....




1995ல் திரு.நாகேஸ் அவர்களை தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்யச்சந்தித்தேன்.வெளிநாடு செல்வதாகக்கூறி மறுத்தார்.சூழ்நிலை புரியாமல் வற்ப்புறுத்தினேன்.செய்தித்தாளை தூக்கிப்போட்டு ,இந்தச்செய்தியில் நீயோ..உன் சொந்தக்காரங்களோ இருந்திருந்தால் இங்கு வந்திருக்கமாட்டாய் என கோபித்தார்.செய்தித்தாளை காலையிலேயே படித்து விட்டுத்தான் சென்றிருந்தேன்.




செய்தி...பெட்ரோல் டேங்கர் லாரி மீது மணமகள் குடும்பத்தார் சென்ற வண்டி மோதி அனைவருமே மரணம்...மணமகளை தவிர...




இச்செய்தியின் பாதிப்பில் நாகேஸிருந்தார்..நான் இல்லை..




வெளிநாடெல்லாம் அவர் செல்லவேயில்லை என்பதை பிற்பாடு தெரிந்து கொண்டேன்..




இப்படம் பார்த்த பிறகு புரிந்து கொண்டேன்... நாகேஸ் ப்ரூனோவின் தாய் கேரக்டர்.....




நான்....????????????????

12 comments:

  1. சார், இந்தப் படத்தையும் நீங்கள்தான் எனக்கு அனுப்பியிருந்தீர்கள்.

    தன்னைத் தெரியாது என்று பொய் சொன்ன ப்ரூனோவை மன்னிக்கும் ஸ்மியுலை மறக்கமுடியுமா? சிறுவர்கள்கூட பெரியவர்களாகிவிடுகிறார்கள் பல சமயங்களில்!

    ReplyDelete
  2. நம்மை சார்ந்தவர் அதில் இல்லாதவரை மற்றவரின் சோகம் நம்மை பெரிதும் பாதிப்பதில்லைதான். நல்லதொரு படம். நிச்சயம் பார்க்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  3. மோகன்...ஸ்மியூல் முகமும் மறக்கமுடியாது.அந்த முகம் மோனாலிசாவின் ஜெராக்ஸ்.

    ReplyDelete
  4. எஸ்.கே சீக்கிரம் பாருங்கள்.இல்லையென்றால் சுறா,வேட்டைக்காரன்,குருவி மூன்றையும் ஏககாலத்தில் பார்க்கும்படி தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  5. //ஸ்மியூல் முகமும் மறக்கமுடியாது//

    You are right. ஸ்மியூலின் புகைப்படத்தையும் இணைத்தற்கு நன்றி...

    ReplyDelete
  6. விமர்சனம் சுருக்கமாக இருந்தாலும் அதன் வீரியம் உணரமுடிகிறது.மரணம் மட்டுமல்ல எந்தப்பிரச்சினையுமே நமக்கு நடக்காதவரை அதன் வீரியம் உணரப்படுவதில்லை.படம் தேடிப்பார்க்கிறேன் கிடைத்ததும் பகிர்கிறேன்.அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  7. Many thanks for sharing sir.

    ReplyDelete
  8. சமகாலத்தில் வந்த அருமையான படம்,அந்த டாக்டர் வேடம் ஒன்று மிகவும் பாதித்தது,எனக்கு பிதாமகன்,ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி நினைவுக்கு வந்தது,

    ReplyDelete
  9. இந்தப் படத்த போன வாரம் star moviesல பார்த்தேன்(பாதிதான்..)மீதியையும் பார்க்கணும்.

    எனக்கு மிகப்பிடித்த ஆளுமைகளில் ஒருவர் நாகேஷ்..அவர் குறித்து ஒரு பதிவை நீங்கள் எழுத வேண்டும்.....

    ReplyDelete
  10. //தூரத்தில் இருக்கும் பேக்டரியின் உயரமான சிம்னியில் இருந்து வரும் கரும் புகையில் யூதர்களின் ஆவி கலந்திருப்பதை அறிந்ததும் துடிக்கிறாள் ப்ரூனோவின் தாய்.//

    அருமை. படத்தின் போஸ்டரே கதை சொல்லுகிறது. :)
    சீக்கிரமே பார்க்கிறேன் நண்பரே.உங்களால் நான் பார்க்க வேண்டிய படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.நன்றி. :)

    ReplyDelete
  11. இப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. கட்டாயம் பார்ப்பேன்.

    இந்த வரிகள், மனதை மிகவும் பாதித்தன.

    ‘தூரத்தில் இருக்கும் பேக்டரியின் உயரமான சிம்னியில் இருந்து வரும் கரும் புகையில் யூதர்களின் ஆவி கலந்திருப்பதை அறிந்ததும் துடிக்கிறாள் ப்ரூனோவின் தாய்’

    நாகேஷ் பற்றி எழுதுங்கள். எனக்குப் பிடித்த ஒரு மனிதர்.

    ReplyDelete
  12. பின்னுட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.குழந்தை&கருந்தேள்.... நாகேஸ் பற்றி நிச்சயம் எழுகிறேன்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.