சீரியசான உலக சினிமா மத்தியல்... இப்படம் ஒரு ஜாலி திருவிழா.ஆனால் திருவிழாவில் பலி கொடுப்பது உண்டே...இங்கு பலியாடு சினிமா ஹீரோக்கள்.
ஹாலிவுட்டில் இருந்துகொண்டு ஹீரோக்களை இப்படி காயடித்த ஆண்மகன் வுடி ஆலன்...எழுதி இயக்கி இருக்கிறார்.
1930 ல் துவங்குகிறது படம்.அமெரிக்கா எத்தியோப்பியாவாக இருந்த காலம்.
கதாநாயகி சிசிலியா, அன்றாடம் அடி வாங்குகின்ற அடித்தட்டு மக்களில் ஒருத்தி.அவளின் தினசரி ஒரே சந்தோசம் சினிமா.ஒரே படத்தை தினசரி பார்ப்பாள்.ஒரு நாள் அவள் தினசரி பார்க்கும் சினிமா ஹீரோ,திரையில்
இருந்து நேரடியாக சிசிலியாவிடம் பேச ஆரம்பிக்கின்றான்.அது மட்டுமல்ல.. திரையில் இருந்து குதித்து சிசிலியாவின் சீட்டுக்கு அருகில் வந்து உரையாட ஆரம்பிக்கின்றான்..திரையில் இருக்கும் மற்ற காரக்டர்கள் திகைக்கின்றன.....சிசிலியாவும் திகைக்கிறாள்.... மற்ற ஆடியன்சும் திகைக்கிறார்கள்.....ஏன் படம் பார்க்கும் நாமும் திகைக்கிறோம்.இப்படி இருக்கவேண்டும் திரைக்கதை.நம் திரைக்கதாசிரியர்கள் வுடிஆலன் மூத்திரத்தை குடிக்கவேண்டும்..
இதற்க்கு பிறகு படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நீங்கள் பார்த்து அனுபவிக்கவேண்டியது .ஒரே ஒரு காட்சி மட்டும் சொல்லிவிடுகிறேன்....ப்ளீஸ்.....சினிமா ஹீரோவாக நடித்த....நடிகன் ...அவனும் களத்தில் குதிக்கிறான்..இவனது அறிமுக காட்சியிலேயே நடிகர்களது முகத்திரைகளை கிழிக்கிறார் வுடிஆலன்.'இப்படி உன் பட காரக்டர் ஊருக்குள் புகுந்து கலாட்டா செய்கிறதே' ...என்று கேட்டால் அலட்சியமாக தலை குலுக்குவான்.லாயர் போன் பண்ணி,'அடே பாவி அந்த காரக்டர் ஏதாவது கொலை ,கொள்ளை,கற்ப்பளிப்பு..... இப்படி எது செய்தாலும் மவனே நீதான் ஜெயிலுக்கு போகவேண்டும்' என்று எச்சரித்த பிறகு பதறி ஓடுவான் சிசிலியாவையும்,தனது காரக்டரையும் சந்திக்க.
இந்த இடத்தில்..... நமது ஊர் ஹீரோ மகள் திருமணம்.... ரசிகர்கள் வரக்கூடாது எச்சரிக்கை....சார் சமீபத்தில் நம்ம படம் ரீலிசாகணும்-மந்திராலோசனை ....ஊருக்கு ஊர் விருந்து பல்டி அறிக்கை.... ஞாபகம் வந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல..
சினிமா நடிகன் நிஜம் வேறு...நிழல் வேறு என்பதை சிசிலியாவுக்கும் நமக்கும் தெளிய வைக்கிறார் இயக்குனர்... கிளைமாக்ஸில்.....
வசூலில் மட்டுமல்ல விருதுகளையும் வாரி குவித்தது இப்படம்.
எனக்கு வூடி ஆலன் படங்கள் பிடிச்சாலும், அவர் பொண்ணு மாதிரி அனைவரும் நினைச்சிருந்த ஒருவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு தெரிஞ்சதும் அவர் மேல் இருந்த மதிப்பு நிறையவே கொறஞ்சிருச்சு
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/Woody_Allen#Soon-Yi_Previn
மிக நல்ல அறிமுகம் ,பார்த்துவிடுகிறேன்
ReplyDeleteஅப்புடிப்போடு !! இது நல்ல பகடியாக இருக்கிறதே :-) பார்த்தே தீரவேண்டுமே :-) சூப்பர் !!
ReplyDeleteசினிமா நடிகன் நிஜத்தில் வேறு ஒருவன் என்பதை நமது வெறிபிடித்த ரசிகர்கள் உணரவேண்டும்... அப்போதுதான் தமிழ்நாடு உருப்படும் ..
வுடி ஆலன் நல்ல இயக்குநர் மற்றும் நடிகர் அவரின் இந்த படத்தை பார்த்ததில்லை! நான் பார்த்த அவரின் முதல் படம் Everything You Always Wanted
ReplyDeleteto Know About Sex* முதலில் பார்த்த போது சரியாக புரியவேயில்லை!:-)
குழந்தாய்...கலைஞனது படைப்பை மட்டும் பார்க்கவேண்டும்..பெட்ரூமை எட்டி பார்க்கக்கூடாது.
ReplyDeleteஎன் இனிய தேளு...ரசிகனை வெறியனாக்கி குளிர் காயாத நடிகர்களில் முக்கியமானவர்கள் கமல் மற்றும் சிவக்குமார்.
ReplyDeleteஎஸ் கே நமக்கு புரியவில்லை என்பது படைப்பாளியின் குற்றமல்ல..எனக்கு தார்க்காவ்ஸ்கி படங்கள் அட்ச்சரம் புரியாது .இதற்க்கு பொருள்... நான் இன்னும் வளரவில்லை.என் கடையில் தார்க்காவ்ஸ்கி வாங்கும் நபர்களை சற்று பொறாமை கலந்த வியப்புடன் பார்ப்பேன்.எனது பொறாமை லிஸ்ட்டில் நமது குழந்தையும் அடக்கம்.
ReplyDeleteகீதப்பிரியன்..பின்னூட்டத்துக்கு நன்றி
ReplyDelete//குழந்தாய்...கலைஞனது படைப்பை மட்டும் பார்க்கவேண்டும்//
ReplyDeleteஏன் சார்..அதுக்குன்னு Stepdaughterஆ Mia Farrow கூட சேர்ந்து தத்தெடுத்த பொண்ணு கூடவே உறவு வெச்சுகிட்டு-கல்யாணம் பண்றத என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியல...எனக்கு இந்த வகையான விஷயங்கள ஜீரணிக்க கஷ்டமாயிருக்கு....
பதினைந்து வயதில் தங்கப்பதக்கம் படம் பார்த்தேன்.அதில் ஒரு காட்சி.மகனது முதலிரவு காட்சிக்கு டெக்கரேட் பண்ணி ரெடி பண்ணும் ரூமில் சிவாஜியும் கே ஆர் விஜயாவும் உறவு கொள்வதாக காட்சி வரும்.அந்த வயதில் அவர்கள் செய்த்து தப்பாகப்பட்டது.இன்று 50 வயல் எனக்கு அது நியாயமாகப்படுகிறது.ப்ராய்ட் படியுங்கள் குழந்தை .உங்களுக்கு நெறைய விடை கிடைக்கும்
ReplyDelete//உலக சினிமா ரசிகன் said...//
ReplyDeleteஉண்மைதான் சார்! ஒரு படைப்பை புரிந்துகொள்வது என்பது நம் அனுபவம், அறிவு, பொறுமை, ரசனை போன்ற விஷயங்களை சார்ந்துள்ளது!
சார்...
ReplyDeleteஃபிராய்டின் Interpretation of Dreams, Oedipus Complex, It-Ego-Superego குறித்து எனக்கு கொஞ்சத்திலும் கொஞ்சமே தெரிஞ்சிருந்தாலும்..எனக்கு இதுவரை இந்த மாதிரி விஷயங்கள் பெரிய அதிர்ச்சியே..இன்னும் வயது வளர வளர இந்த மாதிரி செய்திகள் பழகிருமோ என்னவோ...
(கீதப்பிரியன் Incest என்ற வகை குறித்த படம் எழுதியது ஞாபகம் வருகிறது)
ஒரு சில வார்த்தைகள் தவிர நல்ல விமர்சனம்.
ReplyDeleteஅப்பா...கொழந்தை..பிராய்ட்ன்னு ஒரு கத்தி வீசினேன்.மொண்ணையாக்கிட்டியே..என் கண்களுக்கு நீ ஒரு திருஞானசமபந்தன்
ReplyDeleteநண்பரே..கருத்துக்கு நன்றி.அந்த வார்த்தைகள் என் கிராமத்தில் சர்வசாதரணம்.இருந்தாலும் இனி தவிர்ப்பேன்.
ReplyDeleteசார் நான் பெரும்பாலும் ஒரு படம் நல்ல படமா இல்லையா என்று மட்டுமே தெரிந்துக்கொள்வேன். மற்றபடி கதை குறித்த ஒரு ஒன் லைன் அல்லது அதுகூடத் தெரியாமலேயே படம் பார்க்கவிரும்புவேன். அதன்படி உங்கள்பதிவைப் படிக்காமல் இப்போதுதான் படம் பார்த்தபிறகு படித்துப் பின்னூட்டமிடுகிறேன்.
ReplyDeleteதிரையிலிருந்து அந்த கேரக்டர் நாயகியைப் பார்த்துப் பேசும் காட்சி உடனே புரியவில்லை. புரிந்ததும் ஆஹா இதுவல்லவோ படம் என்று தோன்றியது. மிகவும் ரசித்தேன். ஒரு பதிவாக எழுதுமளவுக்கு நிறைய தோன்றியது.அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...