உதிரிப்பூக்கள் தமிழில் நான் பார்த்த முதல் உலகசினிமா.தமிழில் வந்த முதல் உலகசினிமா பாதை தெரியுது பார்.இயக்கியவர் இந்தியாவின் முதல் உலகசினிமாவான சின்னமோளை உருவாக்கிய நிமாய்கோஸ்.தயாரித்தவர்கள் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள்.இப்படம் ஓடினால் தங்கள் தொழில் நாறி விடும் என்று கருதிய ஏ.வி.எம் போன்ற மசாலா நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து படத்தை வாங்கி பிட் படங்கள் ஓடும் நாலாந்தர தியேட்டர்களில் ரீலிஸ் செய்து மக்களைச்சென்றடையாமல் பார்த்துக்கொண்டனர்.எம்.பி.சீனிவாசன் இனிய இசையில் வெளியான பாடல்கள் மட்டும் இன்றும் நம் செவிக்கு உணவளித்துக்கொண்டிருக்கிறது.
தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே.....
......................................................................
.............................................................................
சிட்டுக்குருவி பாடுது தன் பெட்டை துணை தேடுது......
சின்னசின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்......
உதிரிப்பூக்களை உருவாக்கிய மகேந்திரன் உருவானது முள்ளும் மலரும் படத்தில்தான்.தங்கப்பதக்கம் போன்ற மசாலா படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த மகேந்திரனுக்கு கதையே கேட்க்காமல் வாய்ப்பளித்தார் ஆனந்தி பிலிம்ஸ் வேணுச்செட்டியார்.ஆனால் படத்தை பாதியில் நிறுத்தச்சொல்லிவிட்டார்.காரணம் கேட்டதற்க்கு,”ரஜினி கை,காலை ஆட்டி நடித்தால்தான் ரசிப்பார்கள்....நீ ரஜினிக்கு கை இல்லாமல் படமெடுக்குறீயாமே..என் காசை கரியாக்கவா..போ வீட்டுக்கு”என்றார். கமல் கேள்விப்பட்டு சமரசம் செய்தார்.படம் நட்டமானால் நான் அடுத்த படத்துக்கு கால்ஸீட் தருகிறேன் என்று உறுதியளித்தார் கமல்.ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பெண்டிங்...இனி பைசா தரமுடியாது எனச்செட்டியார் முரண்டு பிடிக்க இப்போதும் கை கொடுத்தது கமல்.அந்தப்பாடல் படமாக்க கைக்காசை கொடுத்தார் கமல்.அந்தப்பாடல் ..செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்......
இவ்வளவு உதவி செய்த கமலும்...உதவி பெற்ற மகேந்திரனும் ஏன் இணைந்து ஒரு படம் கூட தரவில்லை????????
ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு மவுஸ் வேலை செய்யமுடியாது.
முள்ளும் மலரும் மகத்தான வெற்றிபெற்றதில் அப்படத்தின் ஒளிப்பவாளர் பாலுமகேந்திராவின் பங்கு அதிகம் என்று மீடியாவும்,சினிமா இண்டஸ்ட்ரியும் சேர்ந்து கதைத்தன.எனவேதான் அசோக்குமாரோடு கை கோர்த்தார்.இவர்களது கூட்டணியில் வந்த வெற்றி படைப்புகள்
நெஞ்சத்தை கிள்ளாதே,உதிரிப்பூக்கள்,மெட்டி.
தமிழ்சினிமா உலகசினிமா பாதையில் கூட்டிச்சென்ற டிரண்ட்செட்டர் மகேந்திரன்.அந்தப்பாதை அடைத்து மசாலா பாதையில் திருப்பிவிட்டது ஏவி.எம்.என்னின் முரட்டுக்காளையும்,சகலகலாவல்லவனும்.
மகேந்திரனின் மாஸ்டர்பீஸ் உதிரிப்பூக்கள்.இன்றளவும் இப்படத்தின் தரம் இமயம்.
மனைவியின் தங்கை அழகிய நங்கை....அவளை தாரமாக்க துடிக்கிறான் நாயகன்.இவனது ஆசைக்கு எண்ணெய் வார்க்கும் சுயநலமிகளால், பலியாகிறான்.இவனது குழந்தைகள் உதிரிப்பூக்களாகின்றன.
விஜயன்,அஸ்விணி,சாருஹாசன்,சரத்பாபு என அனைவருமே யதார்த்தப்பிரதிகள்.
இளையராஜா இசையில் மோனாலிசப்பாணி கடைப்பிடித்திருப்பார்..... அழகிய கண்ணே பாடலில்..ஒரு தாயின் சந்தோசமும்,மனைவியின் துக்கமும் சரிவிகிதக்கலவையாக ஒலிக்கும்.பின்னணி இசையாக அநேககாட்சிகளில் மவுனத்தை இசையாக வழியவிட்டிருப்பார்.
படத்தின் டைட்டிலில் கதை புதுமைப்பித்தன் என்று வரும்.கதை படித்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும்.மகேந்திரன் மகத்துவம் தெரியும்.
இப்படத்தின் பாக்ஸாபிஸ் வெற்றி எல்லா பொய்களையும் கலைத்துவிட்டது.ஈரான் நாட்டு பிலிம் இன்ஸ்ட்யூட்டில் இப்படம் பாடம்.இந்திய அரசும் இப்படத்தை பெருமைக்குறிய சொத்தாக வாங்கி பெருமை சேர்த்துக்கொண்டது.
சார் அருமை. நீண்ட நாட்களுக்குமுன் பார்த்தது. இப்போது இந்தப் பதிவின் மூலம் திரும்ப அசைபோட முடிந்தது.
ReplyDelete//ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு மவுஸ் வேலை செய்யமுடியாது// :)
ஆமாம் அது மிக யதார்த்தமான படம். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கும்!
ReplyDeleteபுதுமைப்பித்தனின் "சிற்றன்னை "என்ற சிறுகதையையே மகேந்திரன் படமாக்கினார். எனக்கு பிடித்த தமிழ்ப் படங்களில் முதல் இடத்தில் வைத்திருக்கும் படம்.ரொம்ப அற்புதமான விமர்சனம்.நன்றி!
ReplyDeleteதமிழில் சிறந்த படமாக கருதும் படங்களெல்லாம்,வன்முறை, காதல் சம்பந்தப்பட்ட படமாகவே இருக்கிறது. உதிரிப்பூக்கள் போல படங்கள் பார்ப்பது கானல் நீராகவே இருக்கும்போல,
ReplyDeleteதலைவரே
ReplyDeleteமிக அருமையான சினிமாவை மிக அழகாக சொன்னீர்கள்,இது,முள்ளும் மலரும்,போன்றவை தென்இந்திய சினிமாவின் கௌரவமாகும்,எப்போதெல்லாம் நல்ல உலகசினிமாக்கள் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த ஏவிஎம் வினியோகஸ்தராக மாறி,அதை அப்படியே கைப்பற்றி படப்பெட்டியை திறக்காமல் கன்னியாகவே வைத்திருக்கும்,இதே போலதான் ஜான் ஆப்ரஹாமின் அக்ரஹாரத்தில் கழுதையையும் செய்தனர்.கிராதகர்கள்.அந்த படம் நடிப்பில், மேக்கிங்கில் கோட்டை வீட்டிருந்தாலும் நல்ல கதையை கொண்டது.அதனால் தான் தேசிய விருது கிடைத்தது,அதையும் இவர்கள் இப்படித்தான் வாங்கி ஃப்லிமையே மக்கச்செய்துவிட்டார்கள் என படித்தேன்.இது போல நிறைய கலைதுரோகம் செய்துள்ளனர்.
மேலும் ஒரு விஷயம்
ReplyDeleteஒரே கணிணியில் ஒரு மவுஸ் அல்ல 4 மவுஸ் கூட வேலை செய்யும்,என்ன அத்தை யூஎஸ்பி போர்ட் இருந்தால் போதும்,இதை முயன்றும் பார்த்துள்ளேன்.
இதில் இசைஞானியின் குரலில் ஏ இந்த பூங்காத்து தாலாட்ட என்னும் மிக அருமையான யாரும் கவனியாமல் போன பாடல் ஒன்று உண்டு.ஏவிஎம் இசைஞானியை 80களின் பிற்பாதியில் புறக்கணித்ததற்கு முக்கிய காரணமே இசைஞானியின் பேரலல் சினிமாவிற்கான அபாரமான பங்களிப்பும்,அதனால் அவைகளுக்கு கிடைத்த வரவேற்பும் அடங்கும்.
ReplyDeleteநன்றி மோகன்.நன்றிஎஸ்.கே.நீங்கள் பார்த்த படத்திற்க்கு பதிவு போட எண்ணினேன்.உதிரிப்பூக்கள் சரியான தேர்வுதான் என்பதை உங்கள் பின்னூட்டம் நிரூபித்துவிட்டது.
ReplyDeleteநண்பரே மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்னது...”நான் சிற்றன்னை சிறுகதை பாதி படித்த உடன் அப்படியே மூடி வைத்து விட்டேன்.அப்போது தோன்றிய பொறியில் உருவானதுதான் உதிரிப்பூக்கள்.முழுக்க படிக்காததற்க்கு காரணம் அதன் பாதிப்பு முழுக்க வந்துவிடும் என்பதால்தான்”
ReplyDeleteநன்றி கீதப்பிரியன்..ஜான் ஆப்ரஹாமின் தகவல் எனக்கு புதிது.எனக்கு கம்ப்யூட்டர் அறிவு ஜீரோ..ஓரே உறை ..இரண்டு கத்தி... மாற்றாக எழுதினேன்.கருத்து தப்பிவிட்டது.டைட்டில் பாடலாக வரும் ஏ இந்த பூங்காத்து தாலாட்ட... இன்னும் என் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.
ReplyDeleteஎனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இந்தப் படத்தை எங்குமே பார்க்க முடியாமல் மூணு வருசத்திற்கு முன்னாடிதான் மோசர்பியர் டிவிடி கிடைச்சது. ரொம்பவே இயல்பான கேமரா கோணங்கள்.
ReplyDeleteநீங்க தியோடர் பாஸ்கரனின் "சித்திரம் பேசுதடி" படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். இதுபோன்ற தகவல்கள் இருக்கும் ஏதாவது புத்தகங்களையும்-நீங்க படிச்சிருந்தா-அதை குறிப்பிட்டீங்கனா நல்லாயிருக்கும்
குழந்தாய்..அறந்தை நாராயணன் தமிழ் சினிமாவின் கதை,மகேந்திரனின் சுயசரிதம் ,மகேந்திரனின் நண்பர் சொன்னது ஆகியவற்றை தொகுத்து எழுதியுள்ளேன்
ReplyDeleteபாலுமகேந்திரா முக்கியமான நேரத்தில் ஒத்துழைக்காமல் குடைச்சல் கொடுத்ததாகவும், கமல் தன் சொந்தபொறுப்பில் ருத்ரையாவை அனுப்பி படத்தை முடிக்க உதவி செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு
ReplyDelete