Dec 25, 2013

தீதும் நன்றும் பிறர் தர வாரா / வரும் !


நண்பர்களே...
இளையராஜா ஓய்வெடுக்க வேண்டும் என ஒரு ‘ஓட்டை வாய் ஓணான்’ சொல்லுச்சு!
உடனே சில ‘பேஸ்புக்’ ஜால்ராக்கள்  ‘ஜைங் ஜக்’ போட்டது.
எந்த நேரத்துல இந்த ‘சனியன் சகடை’   ‘சாக்கடை வாயை’ திறந்துச்சோ...
தெரியல...
உலகம் போற்றிய உயர்ந்த இசையை  ‘ஓநாய்க்கு’ கொடுத்தவர்... ஆஸ்பத்திரியில படுத்துட்டாரு!

மானம்...ரோஷம்..சூடு..சுரணை உள்ள ஒருத்தன் தேடிப்போய்...
செருப்பை எடுத்து  ‘ஓணான் செவுளை’ பேத்து...
 ‘சாக்கடை வாயை’  ‘சாத்தி’ இருந்தான்னா...
அது  ‘தீதும் நன்றும் பிற தர வாரா’.

இயக்குனர் ‘லேவ் டியாஸ்’  ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா / வரும்’ என இரண்டையுமே சொன்ன படமே.
 ‘நோர்டி, த எண்ட் ஆஃப் ஹிஸ்டரி’.
இன்றைய சமுதாயச்சூழலில் ‘இரண்டுமே’ நடக்கிறது.
இந்த ‘யதார்த்தத்தை’ படமாக்கி இருக்கிறார் ‘லேவ் டியாஸ்’.


அன்பான...அழகான...அருமையான கணவன் - மனைவி.
 ‘சித்தாந்தத்தால்’ உந்தப்பட்ட  ஒருவன் செய்த  ‘இரட்டை கொலையால்’,
 ‘அப்பாவி’ கணவன் சிக்குகிறான்.
செய்யாத குற்றத்திற்காக  ‘அரசுச்சிறையில்’ சித்திரவதைப்படுகிறான் கணவன்.
செய்த குற்றத்திற்காக  ‘மனச்சிறையில்’ சிதிலமடைகிறான் ‘சித்தாந்தவாதி’.
குழந்தை குட்டியோடு ‘சமுதாயச்சிறையில்’ சிக்கி சீரழியாமல் இருக்க போராடுகிறாள் மனைவி.
இந்த  ‘முக்கோணத்தில்’ பயணிக்கிறது இத்திரைக்கதை.


விசா இல்லாமல்...விமானம் இல்லாமல்....
பார்வையாளனை பிலிப்பைன்ஸ் கூட்டிச்செல்கிறார் லேவ் டியாஸ்.
 ‘இருநூற்று ஐம்பது நிமிடம்’ அங்கேயே வாழ வைக்கிறார்.
வாழ்நாள் முழுக்க ‘அசை போட’ அபூர்வ தருணங்களை அள்ளி அள்ளி திணித்து அனுப்புகிறார்.
 ‘ஆயிரம் தலைமுறைகளை கவரும் அபூர்வ சிந்தாமணி’ ‘லேவ் டியாஸ்’.


‘சித்தாந்தவாதியின்’ சிந்தனைகள்... சி த ற லா கி... வெடித்து சிதறுகிறான்.
 ‘சிதறியவன்’ ‘சொந்த சகோதரியையே’ கற்பழிக்கிறான்.
இந்த வன்முறைக்காட்சியை ‘லேவ் டியாஸின்’ ஆளுமை அற்புதமாக காட்சிப்படுத்துகிறது.

கேமரா,  ‘வன் கலவி’ நடக்கும் அறைக்கு வெளியிலே தயங்கி நின்று விடுகிறது.
சகோதரியின்  ‘கதறல்’...
சித்தாந்தவாதியின்  ‘மூச்சிறைப்பு’...
கட்டிலின் ‘க்றீச்...க்றீச்...’
இவைகள்தான் ‘அறைக்குள்’ நடக்கும் அவலத்தை அம்பலப்படுத்துகிறது.
‘கற்பழிக்கப்பட்டவள்’.... ‘கற்பழித்தவன்’....
இருவர் மேலும் இரக்கத்தை...
ஏற்படுத்திய ஒரே படம் இதுதான்.

ஒரு படைப்பாளி கையில் ‘அபரிமிதமான காசு’ இருந்தால்,
அவனது படைப்பில் ‘கிரியேட்டிவ்’ இருக்காது.
உ.ம் : மிஷ்கினின் ‘முகமூடி’.
காசு இல்லேன்னாதான் ‘கிரியேட்டிவ்’ கொடி கட்டி பறக்கும்.
ஹெலிகாப்டர் மூலம் எடுக்கப்பட வேண்டிய ஒரு ‘ஷாட்டை’ ...
‘ரிமோட் மூலம் இயங்கும் பொம்மை ஹெலிகாப்டர்ல’...
கேமராவை ‘பிக்ஸ்’ பண்ணி ’ஷூட்’ பண்ணி அசத்தி இருக்காரு
‘லேவ் டியாஸ்’.

கேட்ட காசை அள்ளிக்கொடுக்க ‘சசிகுமார்’ என்ற  ‘சீவக சிந்தாமணி’... சிரிப்போடு காத்திருக்க...
என்  ‘தலைமுறை படைப்பாளி’ அள்ளித்தெளித்ததில்...
‘அவலம்தான்’ இருக்கிறது.
நம்ம ஆளு  ‘கிரியேட்டிவை’ பாருங்க...

மருத்துவ மனை காட்சி...
‘ஏதோ ஒரு கட்டிடத்தை’  ‘ஆஸ்பத்திரியாக்கணும்’.
ரெண்டு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ‘ஜிகு ஜிகுன்னு’ பெங்குயின் மாதிரி நடந்து ‘கட்டிடத்தை’ விட்டு வெளியில போவாங்க...

மீண்டும் அதே மருத்துவ மனை காட்சி...
அதே, ரெண்டு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ‘ஜிகு ஜிகுன்னு’ பெங்குயின் மாதிரி நடந்து ‘கட்டிடத்துக்கு’ உள்ளே போவாங்க...

வாய் மட்டும் காது வரை கிழியுது....
‘என் படத்தை  ‘இரான் படமே’ எட்டி பிடிக்க முடியாது’.
ஆனா,  ‘கிரியேட்டிவிட்டி’ கிழிஞ்சு தொங்குது!


வராது...வராது...நம்ம ஆளுங்களுக்கு ‘உலக சினிமா’ எடுக்க வராது...

ஏன் வரணும்?...எதுக்கு வரணும்?...

ஏண்டா...ஏண்டா....ஏஏஏஏஏஏஏஏண்ண்ண்ண்ண்ண்ண்டா.

அய்யோ...இப்படி தனியா புலம்ப வுட்டுட்டானுவளே...

எப்பா...நீ எங்க இருக்க?


‘தொலை தூரத்தில் வெளிச்சம்’  என ஏ.ஆர் ரஹ்மான் குரல் காதில் நம்பிக்கை பாய்ச்சுகிறது.
‘லேவ் டியாஸ்’ போன்று ‘காலத்தை விஞ்சும் படைப்பாளியாக, ‘உருவாக...உருவாக்க’ காத்திருக்கிறேன்.

2 comments:

 1. வணக்கம்
  இசைஞானி இளையராஜாவின் உடல் நலம் குணமடைய இறைவனைப்பிராத்திப்போம்... வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. //உருவாக...உருவாக்க’ காத்திருக்கிறேன்.//

  நாங்களும்..!

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.