Dec 2, 2013

தமிழ் சினிமா டைட்டிலுக்கு ‘மலையாள எழுத்தை’ பயன்படுத்தலாமா?

கோவா திரைப்பட திருவிழாவில் ‘தேசிய திரைப்பட ஆவணக்காப்பகம்’ 

கண்காட்சி அரங்கு அமைத்து இருந்தனர்.

இந்திய மொழிகளில் வந்த சிறந்த திரைப்படங்களின் போஸ்டரை 

காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

தமிழ் படங்களில் வேதம் புதிது, ஏழாவது மனிதன், நெஞ்சத்தை கிள்ளாதே

பெரியார் போன்ற படங்களின் போஸ்டர் ‘தமிழில்’ இருந்தது.



இயக்குனர் ஜான் ஆப்ரஹம் இயக்கி வெளி வந்த ‘அக்மார்க் தமிழ் படமான’ 


‘அக்ரஹாரத்தில் கழுதை’ பட போஸ்டர் ‘மலையாளைத்தில்’ இருந்தது.
தமிழ் எழுத்தை மலையாளத்தில் மாற்றி ‘ஜெயமோகன்’ வேலை பார்த்த 

புண்ணியவான் யாரோ?




மனிரத்னத்தின் ‘அஞ்சலி’ பட போஸ்டரும் ‘இந்தி’ பதிப்புக்கானது.




இந்தத்தவறை தேசிய ஆவணக்காப்பகம் தொடர இனியும் நாம் 

அனுமதிக்கக்கூடாது.

தேசிய திரைப்பட ஆவண காப்பகத்துக்கு இது குறித்து மின்னஞ்சல் அனுப்ப 

முடிவு செய்துள்ளேன்.

பதிவுலக நண்பர்கள், இப்பணியைச்செய்ய வேண்டி விரும்பி 

கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் குரல் ஒலிக்க வேண்டிய முகவரி :

National Film Archive of India,
P.O.Box No: 810,
Law College Road,
Pune - 411004.


nfaipune@gmail.com


4 comments:

  1. Replies
    1. உங்கள் ஆசி கிடைத்ததே...நிச்சயம் அடுத்த வருடம் பலன் இருக்கும்.
      நன்றி நண்பரே!

      Delete
  2. மலையாள இயக்குநர் என்பதற்காக தமிழ் படம் மலையாளப் படமாகிடுமோ. இதுவே மலையாளப் படம் தமிழ் எழுத்தில் இருந்திருந்தால் நாடே கொந்தளித்திருக்கும், ஊடகங்கள் பொங்கியிருக்கும். தமிழனின் தோல் தடித்திருப்பதால் சொரணைக் கெட்டு கிடக்கின்றோம். மின்னஞ்சல், அஞ்சல் முகவரி இருந்தால் தாருங்கள் முட்டுவோம் கதவை, திறக்கச் செய்வோம். ஒரு சிறிய திருத்தம் எழுத்து என்பது லிபி, எழுத்துரு என்பது Font ஆகும். ஆகவே எழுத்து என்ற இடத்தில் எழுத்துரு என எழுத வேண்டாம். நன்றிகள்!

    ReplyDelete
  3. National Film Archive of India,
    P.O.Box No: 810,
    Law College Road,
    Pune - 411004.

    nfaipune@gmail.com

    உங்கள் குரலும் ‘இந்திய திரைப்பட ஆவணக்காப்பகத்தில்’ ஓங்கி ஒலிக்கட்டும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.