Aug 19, 2013

பாசமலர் - டிஜிடல் பரவசம்.


நண்பர்களே...
பாசமலரை டிஜிடல் ஒளிபரப்பில் பார்த்தேன்.
டிஜிடல் துல்லியத்தில், 90% சக்கை...10 % மொக்கை.
கோவை அர்ச்சனாதியேட்டரில் 4K புரஜக்‌ஷனில்,
70 M.M. திரையில் பார்க்கும் போது,
‘பழைய சாதத்தை' ‘பைவ் ஸ்டார் ஹோட்டலில்’ சாப்பிட்ட அனுபவம்.

அரிஸ்டாட்டில் பார்முலாவில் ‘காஸ் & எபெக்ட்’ பெர்பக்டாக ஒர்க்கவுட் செய்து திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் ஹாலிவுட் தரத்தில் ஒரு மாற்று கூட குறையாமல் இருக்கிறது.
நம்ம ஜாம்பவான்கள் அப்பவே பின்னி இருக்கிறார்கள்.



நடிகர் திலகமும், நடிகையர் திலகமும் போட்டி போட்டு அசத்துகிறார்கள்.
ஜெமினி கணேசனும் தன் பங்கை மிகச்சிறப்பாக செய்ததால்தான் முந்தைய இருவரும் ஸ்கோர் செய்ய முடிந்திருக்கிறது.


நடிகர் திலகமும், ஜெமினி கணேசனும் மோதும் அனைத்து காட்சிகளுமே பவர்புல்லாக இருக்கிறது.
தொழிலாளர்கள் நீக்கப்பட்ட பிரச்சனைக்கு ஜெமினி கணேசன் உரிமைக்குரல் எழுப்பும் காட்சி...
தொழிலாளர்களை ஜெமினியிடம் பிரித்தாள...
நடிகர் திலகம் தனது குரலில்....
நயவஞ்சகம், தந்திரம், பாசம், பரிவு, பரிதாபம், கோபம், நக்கல், நையாண்டி, ஆணவம், பெருமை, அகங்காரம், அதிகாரம் எத்தனை ரசங்களை கொட்டுகிறார்.
சத்தியமாக சொல்கிறேன்.
இப்படி ஒரு காட்சியில் இத்தனை  ‘ரசங்களையும்’ ஒருங்கிணைத்து நடிக்க... உலகில் இது வரை பிறக்கவில்லை.


வசனங்களில் ஆரூர்தாஸ் வாழ்ந்திருக்கிறார்.
வசன ரீதியாக திரைக்கதையை நகர்த்தி இருந்தாலும் காட்சி ரீதியாகவும் ட்ரீட் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பீம்சிங்.

தங்கவேலு, சரோஜா, நம்பியார்,
நடிகர் திலகத்தின் நாடக குருவும்...
இயக்குனர், நடிகர் சந்தான பாரதியின் தந்தையுமான...சந்தானம் என...
நம்மை விட்டுப்பிரிந்த பல மேதைகளின் பங்களிப்பை...
இப்படத்தில் தரிசிக்கலாம்.

கவியரசரும்...மெல்லிசை மாமன்னர்களும் சரித்திரம் படைத்த காவியம் இது.
ஆயிரம் முறைக்கு மேல் கேட்டும் அலுக்காத வரிகளும், இசை வடிவங்களும்
டிடிஎஸ் தொழில் நுட்பத்தில் புதிய பரவசத்தை வழங்குகிறது.
பழைய இசையை சிதைக்காமல் அப்படியே தந்த புண்ணியவான்களுக்கு... கோடி நமஸ்காரம்.
[ கர்ணன் படத்தில்,  ‘மெருகூட்டுகிறேன்’ என்று ரீமிக்ஸ் செய்து...
காதில் கந்தகத்தை எரித்தார்கள்.]

பாசமலரை இது வரை பார்த்திராதவர்கள் கட்டாயம் பாருங்கள்.
எந்த தலைமுறையிலும்...இனி இப்படி ஒரு படம் கிட்டாது.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

12 comments:

  1. ///நம்ம ஜாம்பவான்கள் அப்பவே பின்னி இருக்கிறார்கள்...///

    உங்களுக்கு இப்ப தான் தெரியுமாக்கும்...! சென்னை பதிவர் திருவிழாவில் வந்து நேரில்.....................?!!!

    ReplyDelete
    Replies
    1. ஓரளவு விபரம் தெரிந்த பிறகுஅகண்ட திரையில் இப்போதுதான் பழைய படங்களை பார்க்க முடிகிறது டிஜிடல் புண்ணியத்தால்.
      பாசமலரில் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் எள் முனையளவு கூட தவறு காண முடியவில்லை.
      அந்த வியப்புதான் பதிவில் வெளிப்பட்டது.

      பதிவர் திருவிழாவுக்கு ஒரு முடிவோடதான் வர்றீங்களா!

      Delete
  2. பதிவர் சந்திப்பு களை கட்டும் போலிருக்கே..

    ReplyDelete
    Replies
    1. ஆமா...என்னை நிறைய பேரு போட்டுத்தள்ள காத்திருப்பது தெரிகிறது.

      Delete
  3. நானும் இதை திரையரங்கில் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. நாளென்ன செய்யும்...கோளன்னெ செய்யும்...என்று திடமுடன் திரைப்படம் பார்க்க கிளம்பிய உங்கள் ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பரே!நலமுடன் விரைந்து வருவீராக!!

      Delete
  4. பாசமலர் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது. தியேட்டரிலிருந்து வெளிவரும்போது கண்ணீருடன்தான் வெளிவந்தேன். மலர்ந்தும் மலராத பாடலை நினைத்தாலே கண்ணில் நீர் நிறைந்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. நிஜ வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்து விட்டாலும்,
      இப்படம் நம் மனதை நேரடியாக தாக்கி கண்களில் நீரில் வரவழைக்கிறது.

      Delete
  5. //‘பழைய சாதத்தை' ‘பைவ் ஸ்டார் ஹோட்டலில்’ சாப்பிட்ட அனுபவம்// இப்படியெல்லாம் எழுத உங்களை விட்டால் ஆள் இல்லை :-) பாசமலர் படம் நான் சிறுவனாக இருந்த போது டிவியில் என் அம்மாவுடன் பார்த்த நியாபகம். படம் முடிந்ததும் அழுதுகொண்டிருந்தார்கள். என் அம்மாவை அழ வைத்த படமென்பதால் மீண்டும் இந்தப் படத்தைப் பார்க்க விரும்பவில்லை...

    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில் தினத்தந்தியில் ஒரு செய்தியை படித்தேன்.
      நம்ம ஊரு பழைய சாதத்தை அமெரிக்காகாரன் ஆராய்ச்சி செஞ்சு கண்டு பிடிச்சிருக்கான்.பழைய சாதம் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்.
      எனவேதான் ‘பழைய சாதத்தை’ உவமையாக்கினேன்.

      பாசமலர் எனக்கும்...பல பிளாஷ்பேக்குகளை ஞாபகப்படுத்தும் வல்லமை கொண்டது.

      Delete
  6. Thank you World Cinema Fan...

    Fantastic writeup about Pasa Malar, a movie should be in top 10 of best Indian cinema.

    No word to describe about our Nadigar Thilagam.... just keep watch him in movies for generations to come.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.