Aug 8, 2013

ஷிப் ஆப் தீசியஸ் >>> பிளாட்டோ தத்துவம் >>> காமராஜர்.


நண்பர்களே...
நல்ல படம் நம்மை அலைக்கழிக்கும்.
தேட வைக்கும்.
 ‘ஷீப் ஆப் தீசியஸ்’ என்னை ‘பிளாட்டோ’ தத்துவத்திற்குள் துரத்தியது.

என் கையில் வைத்திருக்கும்  ‘பிளாட்டை’ விற்க படாதபாடு பட்டுக்கொண்டு
இருக்கிறேன்.
இச்சூழலில்,
‘பிளாட்டோவை’ தேடிப்படிக்கும் முரண்சுவை... சுவாரஸ்யமாக இருக்கிறது.
‘பிளாட்டோ’  என்ற தத்தவஞானியின் பெயரிலிருந்துதான்...
‘பிளாட்’ என்ற பெயரே உருவாகி இருக்கிறது.


*********************************************************************************
பிளாட்டோ பற்றிய அறிமுகமாக தமிழ் விக்கிப்பீடியா குறிப்பை அப்படியே தருகிறேன்.

பிளாட்டோ (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். 
பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் அறிஞராவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவ தர்க்கங்களை எழுதியுள்ளார். 
இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் அகாடமியை நிறுவினார். 
இவர் தனது ஆதரவாளர் சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டிலின் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார். 
பிளாட்டோவின் உரையாடல்கள், தத்துவம், தர்க்கம், நெறிமுறைகள், சொல்வளம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளை கற்பிக்க பயன்பட்டது.
*********************************************************************************

பிளாட்டோ பற்றி படிக்கும் போது அவர் உருவாக்கிய முக்கிய கருத்தாக்கம் என்னை பிரமிக்க வைத்தது.

"மக்களை ஆளும் அரசாங்கம் நேர்மை தவறாதிருக்க வேண்டும்.

அரசாங்கத்தில் மக்களின் சார்பாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு கடுமையான சட்டத்திட்டங்கள் இருக்க வேண்டும்.

 அவர்களுக்கென்று சொத்துக்கள் வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கக் கூடாது. 

சம்பளமும் கிடையாது.

பொது உணவு நிலையங்களில் உணவும்,
அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள அரசாங்க கட்டடத்தில் தங்கவும், 
தூங்கவும் அனுமதிக்க வேண்டும்.

அப்படி செய்வதால் சுயநலம் அவர்களிடம் இருக்காது. 

இலஞ்சங்களுக்கு விலை போகமாட்டார்கள். 

அவர்களுடைய குறிக்கோள் சமூதாயத்தில் ´நேர்மை´ என்னும் அறத்தை நிலைநாட்டுதல் ஒன்றையே குறியாக கொண்டு செயல்பட வேண்டும்." 



நமது பெருந்தலைவர் காமராஜர் இந்த தத்துவத்தை படித்தாரா என எனக்குத்தெரியாது.
ஆனால் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
அந்த படிக்காத மேதைக்கு இப்பதிவை காணிக்கையாக்குகிறேன்.




அடுத்தப்பதிவில் சந்திப்போம்.




6 comments:

  1. பிளாட்டோவின் கருததுக்கள் இன்றைய அரசில் மருந்துக்காவது இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க...தைரியலட்சுமி.
      உங்கள் கருத்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.
      இதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல.

      Delete
  2. ஏதன்ஸ் நகரம் முதல் கல்விக்கூடத்திற்கு மட்டுமல்லாது உலகின் முதல் ஜனநாயகத்தை தோற்றுவித்தர்க்காகவும் சரித்திரத்தில் இடம் பிடித்த நகரம்.'all roads leads to rome' ரோம் எப்படி மகிழ்ச்சியின் குறியீடாகவும் கலை ரசனையின் குறியீடாகவும் விளங்குகிறதோ அதேபோல் ஏதன்ஸ் தத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குறியீடாக விளங்குகிறது.அப்படிப்பட்ட ஏதன்ஸ் மற்றுமொரு கொடுஞ்செயலுக்கும் பொறுப்பேற்றிருக்கும் நகரம்.ஜனநாயகத்தின் குரியீடாகவிலங்கும் அந்நகரம் சாக்ரட்டீஸை விஷம் வைத்துக்கொன்றது.
    சாக்ரட்டீஸ் பிளாட்டோவின் குரு,பிளாட்டோ அரிஸ்டாட்டிலின் குரு, அரிஸ்டாட்டில் மாவீரன் அலைக்சாந்தரின் குரு.இவர்கள் குரு சிஷ்ய உறவின் உன்னதம்.

    பிளாட்டோ தத்துவம் மற்றுமல்லாது ராணுவத்திலும் தனது சேவையை ஆற்றியுள்ளார்.அதுமற்றுமல்லாது இசையிலும்,கவிதையிலும் அதீத ஆர்வம் கொண்டவர் மற்றும் gymnasium கற்றவர்.தனிமனித சுதந்திரத்தையே தன வாழ்வின் இறுதிவரை பெரிதும் வலியுறித்தினார்.மொத்தத்தில் தன் வாழ்வின் அணைத்து நாட்களையும் பயனுள்ளவிதத்தில் கழித்துள்ளார்.காமராஜரை இவர் தத்துவங்களுடன் ஒப்பிட்டது அருமை.

    ReplyDelete
    Replies
    1. கிரேக்க நாகரீகம், வரலாறு, தத்துவ மேதைகள் என எல்லாவற்றையும் பின்னூட்டம் வாயிலாக ஒரு முன்னோட்டம் வழங்கியதற்கு நன்றி...வினோத்.

      Delete
  3. நண்பரே
    பெருந்தலைவர்
    பிளாட்டோ தத்துவங்கள் படித்திருக்க நியாயமில்லை
    அவருக்கு பிறவியிலேயே அமைந்த குணம் இது....
    சிலர் தத்துவங்களை சொல்பவர்களாக இருப்பார்கள்...
    இவர் தத்துவமாய் வாழ்ந்தவர்...
    அவர் அருகில் பாலகனாக நின்று அவர் பேசுவதை கேட்ட பாக்கியம் எனக்கு உண்டு...நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் சிறுவனாக இருக்கும் போது, பெருந்தலைவரிடம் நேரிடையாக உரையாடும் பெரும் பாக்கியம் எனக்கும் கிட்டி இருக்கிறது.

      வருகை தந்து பெருந்தலைவரை போற்றியதற்கு நன்றி...நண்பரே.

      Delete

Note: Only a member of this blog may post a comment.