Oct 4, 2012

Hey Ram \ 2000 \ காந்தியை விட ஹேராம் திரைப்படம் சிறந்தது...எப்படி ? \ ஹேராம் = 025

நண்பர்களே...
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 143 வது பிறந்த நாளை...
சமீபத்தில் தொலைக்காட்சிகள் கொண்டாடின.
அதில் கலைஞர் தொலைக்காட்சி மிகச்சிறப்பான இரு படங்களை திரையிட்டு புகழ் சேர்த்துக்கொண்டது.
ஒன்று...ரிச்சர்டு அட்டன்பரோ இயக்கிய  ‘காந்தி’
[ Gandhi \ 1982 \ India & U.K \ Directed by Richard Attenborough ] .


மற்றொன்று கமலஹாசன் இயக்கிய ‘ஹேராம்’.
 [ Hey Ram \ 2000 \ India \ Directed by Kamal Hassan ]



டெக்னிக்கல் விஷயங்களில் இரண்டுமே சூப்பிரியர் படங்கள்.
ஆனால்  ‘அட்டன்பரோவின் காந்தியை’ விட...
 ‘கமலின் ஹேராம்’ சிறந்த படம் எனக்கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது.
அவற்றை  ‘ஹேராம் திரைப்படத்தொடரின்’ இறுதிப்பகுதியில்,
எழுத முடிவு செய்திருந்தேன்.
கலைஞர் தொலைக்காட்சி இரண்டு சிறந்த படங்களையும்,
ஒரே நாளில்  திரையிட்டு விட்ட காரணத்தால்...
இரண்டையுமே ஒப்பீடு செய்து எல்லோருமே பார்த்திருப்பீர்கள்.
ஒப்பிடுவதற்கு இரண்டுமே, மிகச்சரியான சிறந்த படங்கள்.
எனவே, ஒப்பிட்டு பார்த்து நான் தெரிந்து கொண்ட கருத்துக்களில்...
சிலவற்றை மட்டும் முன்னோட்டமாக இப்பதிவில் காண்போம்.

 ‘அட்டன்பரோவின் காந்தி’,
ஹாலிவுட்டின் சக்ஸஸ் பார்முலாவான... அரிஸ்டாட்டிலியன் பொயட்டிக்ஸில்
[ Aristotelian Poetics ] உள்ள காஸ் & எபெக்டில்
[ Cause & Effect ]  இயங்குகிறது.
எனவே பார்வையாளர்கள் எளிதாக விளங்கிக்கொள்ள முடியும்.
ஆனால்,பிரச்சனைகளில் உள்ள அடிப்படை காரணங்களை படமும் பேசாது.
படம் பார்ப்பவர்களையும் யோசிக்க விடாது.
இம்மாதிரி படங்கள்  ‘கல்லா கட்டி விடும்’.

 'கமலின் ஹேராம்',
ஐரோப்பிய தீமட்டிக் எக்ஸ்புளோரேஷன்ஸ் + ப்யூச்சரஸ்டிக் சொல்யூஷனோடு
[  Thematic Explorations + Futuristic Solution ] சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த பார்முலாவில் எடுக்கப்பட்ட  'கமலின் ஹேராம்',
எந்த காலத்திலும், பார்வையாளர்களுக்கு சவாலாக இருக்கும்.
காலத்தை கடந்து நிற்கும்.
ஆனால்   ‘ஓடாது’...
எனவே ‘கல்லா கட்டாது’

*********************************************************************************
 ‘இந்திய நியோ ரியலிஸ்டிக் சினிமாவின் தந்தை’ என்றழைக்கப்படுபவர்   ‘திரையுலக மேதை’ நிமாய் கோஷ்.
திரையுலக மாமேதைகளான ரித்விக் கட்டக், சத்யஜித் ரே...
இருவருக்குமே குரு இவர்தான்.
இந்திய-பாக்கிஸ்தான் பிரிவினையில்,
‘டாக்கா To கல்கத்தா’ புலம் பெயர்ந்தவர்.
இந்தப்பிரச்சனையை அடிப்படையாக வைத்து,
இந்தியாவின் முதல் நியோ ரியலிடிஸ்டிக் திரைப்படமான  ‘சின்னமோல்’  என்ற காவியத்தை உருவாக்கினார்.


அதனால் எழுந்த பிரச்சனையால்,
 ‘கல்கத்தா To சென்னை’ புலம் பெயர்ந்தார்.
 ‘இயக்குனர் சிகரம்’ கே. பாலச்சந்தருக்கு, குருவாகவும்...ஒளிப்பதிவாளராகவும் ஆரம்பகால படங்களில் பணியாற்றினார்.
தமிழில் முதல் நியோ ரியலிஸ்டிக் திரைப்படமான  ‘பாதை தெரியுது பார்’ என்ற காவியத்தை உருவாக்கினார்.
நிமாய்கோஷ்,  ‘அட்டன்பரோவின் காந்தியை’ பார்த்து விட்டு...
சொன்ன விமர்சனம் இது...
 “ இப்படம் வன்முறைக்காட்சிகளின் தொகுப்பாக இருக்கிறது.
ஆனால் வன்முறைக்கான காரணங்களை ஆராயவில்லை ”.

மேலும் அவர் சொன்ன மிக முக்கியமான ஆய்வை...
ஹேராம் தொடரின் இறுதியில் சொல்வது சாலச்சிறந்தது.

*********************************************************************************

 ‘கமலின் ஹேராமில்’,
காந்தியின் கதாபாத்திரம்  உலாவுவது சொற்ப நேரமே...
ஆனால் காந்திக்கு, வாழ்நாள் சவாலாக இருந்த...
இந்து-முஸ்லிம் பிரச்சனை படம் முழுக்க போதிய அளவு விவரிக்கப்பட்டிருக்கும்.

‘ அட்டன்பரோவின் காந்தியில்’ ,
காந்தி கதாபாத்திரம் படம் முழுக்க வந்தாலும்...
இந்து - முஸ்லிம் பிரச்சனையை கொஞ்சம் கூட விவாதிக்கவேயில்லை.

 ‘கமலின் ஹேராமில்’, காந்தி ஒரு இடத்தில் கூட...
 “ ஹேராம் ” என்று சொல்லவேயில்லை.
இந்து - முஸ்லிம் வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்ற ஆதங்கம் கொண்டவர் கமல்.
என்ன இருந்தாலும் கமல்,
இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை உள்ளவர் அல்லவா!

[ இக்கருத்தை போன பதிவில் பின்னூட்டத்தில் தெரிவித்த...
நண்பர்  ‘சண்டியர் கரனுக்கு’ நன்றி.]

‘அட்டன்பரோவின் காந்தியில்’ காந்தி சுடப்பட்டு இறக்கும் தருவாயில்
“ஹேராம்” எனக்கூறி உயிரை விடுவதாக வரலாற்றை திரித்து காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.
 “ஹேராம்” என காந்தியை சொல்ல வைத்து எடுக்கப்பட்டிருப்பதால்...
இந்து - முஸ்லிம் பிரச்சனை இந்தியாவில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற விஷ வித்து...
 ‘அட்டன்பரோவின் காந்தியில்’ இடப்பட்டிருப்பதை உணர முடிகிறது.
என்ன இருந்தாலும் ரிச்சர்டு அட்டன்பரோ,
வெள்ளைக்காரன் அல்லவா !.

சமீபத்தில் மறைந்த பிரிட்டிஷ் மார்க்சிஸ்ட் & சரித்திர ஆய்வாளர்
Eric Hobsbawm கூறிய ஆய்வு இது...
“ சரித்திரத்தை தனிநபர் வழியாக பார்க்கக்கூடாது.
சித்தாந்தங்களின் வழியாக பார்க்க வேண்டும் ”.

அட்டன்பரோ, ‘காந்தி’ வழியாகத்தான் இந்திய சரித்திரத்தை பார்த்திருக்கிறார்.

கமல்  'இந்திய சரித்திரத்தின்' வழியாக காந்தியை பார்த்திருக்கிறார்.

*********************************************************************************

அடுத்த பதிவில்,  ‘கான்ஸ்டாண்டிநோபில்’ என்றழைக்கப்பட்டு...
தற்போது  ‘இஸ்தான்புல்’ என்றழைக்கப்படும் நகரத்தில் சந்திப்போம்.

Eric Hobsbawm பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயா செல்ல...
இங்கே ‘கிளிக்’கவும்.


13 comments:

  1. தயவு செஞ்சு எனக்கொரு டிவிடி அனுப்புங்க..மறுபடியும் பார்க்குறேன்...ஒண்ணும் விளங்கல...புல்லா ஸ்டடி பண்ணிட்டு உங்ககூட பேசறேன்...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜீவாவுக்கு... ஹேராம் டிவிடி ஒண்ணு பார்சல்.

      Delete
  2. Welcome back!!!!!

    அட்டன்பரோ,காந்தி வழியாக இந்திய சரித்திரத்தை பார்த்திருக்கிறார்.

    கமல் இந்திய சரித்திரத்தின் வழியாக காந்தியை பார்த்திருக்கிறார். very nice!

    I was waiting for such deep rooted simple words - you have brought the whole essence of both films and their difference in just two sentences - mesmerising. aaha! aaha! aaha!

    ReplyDelete
    Replies
    1. நிறைஞ்ச மனசோட...வஞ்சனையில்லாம பாராட்டுகிறீர்கள்.
      நன்றி...நன்றி...நன்றி.

      Delete
  3. Eric Hobsbawm passed away on October 1 - a day before Ganhiji's birth anniversary. That you have quoted him in this blog in itself is a good tribute to this eminent historian. Let his soul rest in peace.

    ReplyDelete
    Replies
    1. போன பின்னூட்டத்தில் நீங்கள் என்னை பாராட்டுவதற்கு காரணகர்த்தாவே...இந்த மேதைதான்.

      மார்க்ஸியத்தை மலர வைப்பதே இம்மகானுக்கு இப்பூவுலகம்
      செய்ய வேண்டிய நிஜ அஞ்சலியாக இருக்கும்.

      Delete
  4. உலக சினிமா ரசிகன் அண்ணனுக்கு வழக்கம்.. உங்கள் பல பதிவுகளை தொடர்ந்து (குறிப்பாக ஹேராம் சீன் பை சீன் விவரிப்பு) வாசித்து வரும் எனக்கு இன்றுதான் கமெண்ட்?? பண்ண முடிந்தது.. என்னை பொறுத்தவரை "ஹேராம்":கமலின் முந்திரிகொட்டைதனம்.. பின்ன? பல ஆண்டுகள் கழித்து செய்ய வேண்டிய படத்தை பத்து வருசத்துக்கு முன்னரே அவரை செய்ய சொன்னது யாராம்?

    நாங்களும் பல வருட கமல் ரசிகர்கள்தாம்.. கமல் தொடர்பாக நாம் எழுதிய கமல் ஹாசனும் உலக நாயகனும் இந்த பதிவில் , ஹேராம் பற்றி ஒரு வரி கூட நாம் எழுதவில்லை, அதற்கு காரணமும் தெரியவில்லை... கமலின் சமீப காலம் தொடர்பான நமது எண்ணத்தை பதிந்தோம், நேரமிருந்தால் வாசித்து தங்கள் கருத்து கூறவும்...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...இப்போது ஹேராம் வெளி வந்தால் புரிந்து கொள்ளப்பட்டு விடும் என்ற தங்களின் அதீத தன்னம்பிக்கை என்னை அதிசயிக்க வைத்து விட்டது.

      தங்கள் பதிவை ஏற்கெனவே படித்து விட்டேன்.
      தங்கள் பதிவில்...எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது.
      இருந்தாலும்...
      ஹேராமைத்தவிர மற்ற கமல் படங்கள் குறித்து விவாதிக்க விரும்பவில்லை.

      வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி.

      Delete
    2. நன்றி பாஸ்கரன் ஐயா.. ஹேராம், இப்போ வெளிவந்திருந்தாலும் புரிஞ்சிக்க கஷ்டமான படம்னு சொல்றீங்களா? இருக்கலாம். தெரியல.

      Delete
    3. ஹேராம் ரசித்து பார்க்கவேண்டிய படம், பொழுதுபோக்கிற்கு பார்க்க பட வேண்டியது அல்ல...

      Delete
  5. அருமையான அழகான ஒப்பீடு...இரண்டின் சாராம்சம் இறுதி வரிகளில் நச்.

    ReplyDelete
  6. இந்த தொடரை தொடர்ந்து படித்துவிட்டு இடையில் விட்டுவிட்டேன் அண்ணா..இப்பதான் வந்தேன்..தேடிய போதே கண்ணுக்கு அம்சமா தென்பட்டது பதிவின் டைட்டில்தான்.காரணம் ரெண்டுமே சிறந்த படங்கள்..மனதை கவர்ந்த படைப்புகள்..அழகாக விளக்கத்துடன் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.