நண்பர்களே...
மனசு சரியில்லை...காரணம் நீங்க நினைக்கிறது இல்லை.
மதுரை புத்தகக்கண்காட்சியில் நான் இல்லை.
தொடர்ந்து போன் வந்து கொண்டே இருக்கிறது.
ஏன் வரல?
என்னா ஊர் தெரியுமா?
என்னை அங்கே கொண்டாடுவார்கள்...சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு.
பல்கலை கழக பேராசிரியர்கள் முதல் ஓய்வு பெற்ற நீதிபதிகள் வரை...
எல்லோரும் எனக்கு வாடிக்கையாளர்கள் அல்ல...ரசிகர்கள்.
நான் சொல்ற படத்தைதான் வாங்குவாங்க...
சொல்ற பணத்தை தருவாங்க.
புதிதாக வந்திருக்கும் ‘பப்பாசி’ நிர்வாகிகளுக்கு...உலகசினிமா ‘கற்பூரம்’ என அறியாதவர்கள்.
முன்னாள் நிர்வாகிகள்...உலக சினிமாவும் இலக்கியமே...
அது மக்களை சென்றடைய வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள்.
அதே போன்ற ‘கொள்கை தங்கங்கள்’ பதவிக்கு வரும் வரை காத்திருக்கிறேன்.
ஹலோ மதுரை...வருவேன்...மீண்டும் வருவேன்.
கடந்த எனது பதிவுகள்...என்னை ஒரு ரவுடியாக...போக்கிரியாக சித்தரித்து விட்டது.
காரணம் நானேதான்.
என்னை ஒரு கோணத்தில் சித்தரித்து இருந்தேன்...
இப்போது... மற்றொரு கோணத்தில் நான்...
அதற்கு முன்பாக உங்களிடம் மூன்று கேள்விகள்.
1. ரோஷமான் பார்த்திருக்கிறீர்களா?
2. அந்த நாள்?
3.அட்லீஸ்ட்... விருமாண்டி?
பாத்தவங்க உள்ளே வந்து ‘நாற்காலில’ உக்காருங்க...
பாக்காதவங்க என் முன்னாடி தரையில உக்காருங்க...
உண்மை... என்பது என்ன?
அதை தேடிய படங்கள்தான்...மேற் சொன்ன மூன்று படங்கள்.
எளிய உதாரணம்...
ரோட்டில் ‘கார்-சைக்கிள்’ விபத்து.
போலிஸ்காரர் வருகிறார்.
எப்படி நடந்திச்சி... ?
நான் உடனே...
“ சார்... கார்காரன் மேலதான் தப்பு.
அவன் பயங்கர ஸ்பீடா வந்தான்.
சைக்கிள்காரரு...பாவமா...ஓரமாத்தான் போய்ட்டிருந்தாரு.
அவன் ஹார்ன் அடிக்கல..பிரேக்கும் பிடிக்கல..
இடிச்சு தள்ளிட்டு ஓடப்பாத்தான்.
நாந்தான்... குறுக்காட்டி மறிச்சு நிறுத்துனேன்....”
என ‘உண்மையை’ ஹிட்&ரன்னாக்கினேன்.
பேசும் போது எனது கையிலிருந்த ‘சேகுவேரா...வாழ்வும் போராட்டமும்’ என்ற புத்தகத்தை போலிஸ்காரர் கண்ணில் படாமல் தவிர்த்தேன்.
சம்பவத்தை முழுவதும் கண்ணால் பார்த்த அய்யர்...
“ நேக்கு ஒண்ணும் தெரியாது...பகவான் சாட்சியா நான் எதுவும் பாக்கல ”
கார்க்காரன் உண்மை...
“ நான் நார்மல் ஸ்பீட்லதான் வந்தேன்.
ஹார்ன் அடிச்சேன்.
சைக்கிள்காரன் அவனா உள்ளே வந்து விழுந்தான் ”.
சைக்கிள்காரன் உண்மை...
“ நான் சிவனேன்னு ஒரமா போயிட்டிருந்தேன்.
இந்த கார்காரன் கொலை வெறியோட வேகமா வந்து இடிச்சு தள்ளிட்டு ஓடப்பாத்தான்.
அய்யாதான் நிறுத்துனாங்க... ”
இப்படி பத்து பேர்...பத்து உண்மையை சொல்கிறார்கள்.
விவரமான போலிஸ்காரர்...
கார்காரரை தனியே தள்ளிக்கொண்டு போகிறார்.
இப்போது ரிசர்வ் பேங்க் நோட்டுகள்..ஒரு உண்மையை எழுதுகிறது.
அப்புறம் உண்மை... பத்திரிக்கை,லோக்கல் டிவி,வக்கீல்கள்,ஜட்ஜ் என பல்வேறு வடிவமெடுக்கிறது.
இப்படி ஒரு சம்பவத்தை... ‘புளோஅப்’ படத்தில் இயக்குனர் அண்டனியோனி..ஒரு உண்மையை எழுதுவாரு...
‘சம்பவமே நடக்கல’
கடவுளே வந்து ஒரு உண்மையைச்சொன்னாலும்...
இயக்குனர் மணிவண்ணன் மறுப்பாரு.
“ யோவ்...நீ மேல ‘டாப் ஆங்கிள்ள’ உக்காந்துட்டு பாத்தா...
எப்படி பெர்பக்டா தெரியும்.?
கண்ணுல... என்ன ஜூம் லென்ஸ் வச்சிருக்கியா?
இப்போ புரியுதா... ‘100% உண்மை’ என்ற ஒன்று கிடையாது.
உண்மைக்கு மிகநெருக்கமான ஒன்றைத்தான் நாம் உண்மை என உணருகிறோம்...அல்லது உணர வைக்கப்படுகிறோம்.
இப்போது நான் கடந்த பதிவில் குறிப்பிட்ட ‘வெட்டுச்சம்பவத்துக்கு ’ போவோம்.
எனது நண்பன் பார்வையில்...
“ வருகைப்பதிவேடு ஐடியா அவனோடதுதான்.
ஆனா சண்டைக்கு..நாந்தான் அவனை இழுத்துட்டு போனேன்.
எல்லோர் கையிலயும் வெட்டருவா வச்சிருக்கோம்.
இவன் வச்சிருந்த அருவா இருக்கே...
ஒருத்தன் தலையை குனிஞ்சு வெட்டிக்கன்னு...தலையை குடுத்தாக்கூட துண்டாக்கிறதுக்கு பத்து நாளாகும்.
அவ்வளவு ஷார்ப்பான அருவாளைத்தான் தேர்ந்தெடுத்து வச்சுகிட்டான்.
சண்டை ஆரம்பிச்சதும் அதைக்கூட வீசி எறிஞ்சிட்டு ஓடுன ஓட்டம் இருக்கே...ஒலிம்பிக்ல கூட ஓட முடியாது.
அவன் வீசி எறிஞ்ச அருவா...என் பெரியப்பா கையில பட்டு பெரும் காயம் ஆயிருச்சு,
அதுக்கு... பாண்ட் எய்டு ஒட்டி...காயத்தை மறைச்சோம்.”
“ டேய்... என் இமேஜ்ஜை டோட்டலா டேமேஜ் பண்ணிட்ட..
நான் கஷ்டப்பட்டு ‘ரோஷமான் ஆங்கிள்’ போட்டு ரவுடி மாதிரி பார்ம் ஆனா... போட்டு உடச்சிட்டியே...”
‘ரோஷமான் ’ சொல்லும் நீதி என்னன்னா...
உண்மையை தேடுறதெல்லாம் தேடு....
ஆனா, மனித நேயத்தோடு வாழுன்னு முடிச்சிருப்பாரு அகிராகுரோசுவா.
என்னோட மனிதாபிமானத்தை... நான் அப்பப்போ..பதிவுகளில் சொல்றேன்.
இப்போ...நடிகர் திலகம்-கமல் மேட்டர்.
சாந்தி என்ற படம்.
கவியரசர் கண்ணதாசன் பாட்டெழுதி...மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி...இசையமைத்து...டி.எம்.எஸ் வசீகரக்குரலில் பாடி ரெக்கார்டிங் ஆகி விட்டது.
சிவாஜி சார்...சூட்டிங்குக்கு ‘டேட்’ தரல...
இழுத்துகிட்டே போனாரு.
தயாரிப்பாளரும்...இயக்குனரும் நேரில போய் கேட்டதுக்கு...
“ மூணு பேரும் மாஸ்டர் பீஸ் மாதிரி கொடுத்துட்டாங்க...
நான் சரியா பண்ணலன்னா... ‘ஸ்கீர்ன்ல’ நான் காணம போயிருவேன்.
என்னை நான் காப்பாத்தியாகணும்.
என்ன பண்றதுன்னு முழிச்சுகிட்டு இருக்கேன்.
கொஞ்சம் டைம் கொடுங்க ” என்று வேண்டுகோள் விடுத்தார்.
‘ஐடியா’ கிளிக் ஆனதும்... கூப்பிட்டு ‘டேட்’ கொடுத்தார்.
என்னா...ஆக்டிங்.
அவரு கையில இருக்கிற சிகரெட்...அந்தப்புகை..
அது கூட அற்புதமா நடிச்சிருக்கு..
பாட்டை பாருங்க...[ பாடல் பிரதியின் தரம்...பேய் பட எபெக்ட்ல...பயங்கரமா இருக்கு ]
இந்தப்பாட்டுதான் கமலுக்கு மிகவும் பிடித்த சிவாஜி பாடல். இந்தப்பாட்டை பல்வேறு நடிகர்களின் பாணியில் கமல் பாடி நடித்ததை... பாக்கணுமே... அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும். இந்தப்பதிவு எந்தப்பதிவரையும்...உள் குத்தவில்லை. ஏன்னா...நான் எந்த வீடீயோ பதிவையும் பார்க்கவில்லை. இனி யார் வீடீயோ பதிவு போட்டாலும் ‘சூப்பர் ’ன்னு சொல்லப்போறேன். அடுத்தப்பதிவுக்கு... ‘முகமூடி’ அணிஞ்சுட்டு வாரேன்.