Dec 14, 2011

கேரளாவில் நான் பட்ட பாடு

டிசம்பர் 2லிருந்து 19 வரை எர்ணாக்குளத்தில் கொச்சி புத்தகக்கண்காட்சியில் இருந்தேன்.
ஊடகங்கள் முல்லைப்பெரியார் பிரச்சனையை, தினமும் தலைப்பு செய்திகளாக்கி வெடிமருந்தை நிரப்பிக்கொண்டே இருந்தது.
மேடைகளில் பேச்சாளர்கள் மனிதவெடிகுண்டுகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

தமிழ் பேப்பர்களை பார்த்தால் இங்குள்ளவர்கள் அதே வேலையை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
தமிழ்நாட்டிலிருந்து பத்து பேர் ஸ்டால் போட்டிருந்தோம்.
உள்ளூர பயம் ரம்பம் போல் அறுத்து கொண்டிருந்தது.
ஆனால் கேரள மக்கள் எங்கள் பயத்தை அர்த்தமற்றதாக்கி விட்டார்கள்.
யாருமே எங்களை விரோதி போல் பாவிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் ஸ்டாலில்நல்ல கூட்டம்...
நல்ல வியாபாரம்.
‘கேரள கவுமதி’என்ற நூற்றாண்டு கண்ட பத்திரிக்கை ஆசிரியர் என்னை பேட்டி கண்டு பத்திரிக்கையில் பிரசுரித்து என் ஸ்டாலை பிரபல்யபடுத்தி விட்டார்.

கேரளாவில் இன்றும் ஆட்டோ 15ரூபாய்க்கு வருகிறார்கள்.
அதே தூரத்திற்க்கு சென்னையில் 30ரூபாயும்...கோவையில் 40ரூபாயும் உரித்து விடுவார்கள்.
 தியேட்டரில் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் 50ரூபாய்க்கு புல் ஏசி போடுகிறார்கள்.


சரவணபவன் மாதிரி ஏ கிளாஸ் ஹோட்டலில் 45 ரூபாய்க்கு புல் மீல்ஸ் சாப்பாடு.
மொத்த கேரளாவே மிடில் கிளாஸ் சொர்க்கமாக இயங்கி கொண்டிருக்கிறது.
கேயிஸ் என்ற ஹோட்டல் பிரியாணி உலகின் டாப்10ல் அடங்கும்.
அவர்கள் உணவையே மருந்தாக்கி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
சாம்பார்,ரஸம் எல்லாவற்றிலும் பெருங்காயம்.
மீன் குழம்பில் இஞ்சி...
பாயாஸத்தில் சுக்கு...
இறால் வறுவலில் பூண்டு என சாமர்த்தியமாக இணைத்து விடுகிறார்கள்.

என்னடா ஒரே பாராட்டு மயமா இருக்கே....தலைப்புக்கு சம்பந்தம் இல்லியேன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே தலைப்புக்கு வந்துட்டேன்.
புதிய உலக சினிமா டிவிடி விற்ப்பதுக்கு படாதபாடு பட்டேன்.
இன்னும் அவர்கள் அகிரா குரோசுவா,சத்யஜித்ரே போன்ற இயக்குனர்களை தாண்டி வரவில்லை.
சமீபத்திய இயக்குனர்களில் கிம்கிடுக் மட்டுமே அறிந்து வைத்துள்ளனர்.
ரோடு ஹோம்,வே ஹோம் டிவிடி விற்ப்பதற்க்கு கதகளி ஆடவேண்டி வந்தது.
தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் புண்ணியத்தால் சர்வ சாதரணமாக உலக சினிமா அறிவுப்புரட்சியே நடந்துள்ளது என்பதை உணர முடிந்தது.

கடைசி நாள் கேரளத்து பைங்கிளி ஒன்று வந்து, ஹிரோசிமா மான் அமர் இருக்கா என்று கேட்டாள்.
சந்தோசமாக தேடி எடுத்து கொடுத்தேன்.
விஸ்காம் ஸ்டூடண்டா? எனகேட்டேன்.
ஆமாம் என்றாள் பெருமிதம் பொங்க...

மேன் வித் எ மூவி கேமரா டிவிடியை இலவசமாகக்கொடுத்தேன்....
வருங்கால மீரா நாயருக்கு... 

21 comments:

  1. சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் போடுறீங்களா...

    ReplyDelete
  2. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் முழு மண்ணையுமே தாறுமாறாகப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு நடுவே உங்கள் இடுகை ஒரு நல்ல செய்தி. வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
  3. ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க அண்ணா :)

    நான் கூட தலைப்ப பாத்து பயந்துட்டேன்... மக்கள் மத்தியில எந்த பிரச்சனையும் இல்ல அண்ணா... அரசியல்வாதிங்க தான் தேவையில்லாத பிரச்சனை பண்றாங்க.. :(

    எல்லா புத்தக கண்காட்சிக்கும் போறீங்க... சென்னைக்கு அடுத்த மாசம் வருவீங்களா??? வந்தா கண்டிப்பா நான் உங்கள பாக்கணும்.

    ReplyDelete
  4. பிலாசபி பிரபாகரன் சொன்னது....
    //சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் போடுறீங்களா...//

    வணக்கம் சென்னை...
    வருகிறேன் சென்னை...

    ReplyDelete
  5. ஷர்மி சொன்னது....
    //ஒரு சிலர் செய்யும் தவறுகளால் முழு மண்ணையுமே தாறுமாறாகப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு நடுவே உங்கள் இடுகை ஒரு நல்ல செய்தி. வாழ்த்துக்கள் தோழரே...//

    மலையாளம் என்பது பல நூறு ஆண்டுகளூக்கு முன்னே தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் பிறந்த குழந்தை.
    அப்படி பார்த்தால் அவர்கள் சேர நாட்டை சேர்ந்த தமிழர்களே.
    1947 அரசியல்வாதிகள் நம்மை இந்தியா என்று இணைத்தார்கள்.
    2011ல் பிரித்தாளும் அரசியல்வாதிகள் வல்லமை பெற்று வருகிறார்கள்.
    இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற கவலை இதுதான்.

    என் கருத்துக்கு வலுவூட்டியதற்க்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
  6. கனகு சொன்னது....
    //நான் கூட தலைப்ப பாத்து பயந்துட்டேன்... மக்கள் மத்தியில எந்த பிரச்சனையும் இல்ல அண்ணா... அரசியல்வாதிங்க தான் தேவையில்லாத பிரச்சனை பண்றாங்க.. //

    மன்னித்து விடு நண்பா...
    பற்றியெறியும் சூழலில் இப்படி ஒரு தலைப்பு வைத்தது தப்பு..
    அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

    //எல்லா புத்தக கண்காட்சிக்கும் போறீங்க... சென்னைக்கு அடுத்த மாசம் வருவீங்களா??? வந்தா கண்டிப்பா நான் உங்கள பாக்கணும்.//

    சென்னை புத்தகக்கண்காட்சி என்பது நீண்ட நாள் கனவு.
    இந்த வருடமாவது என் விண்ணப்பம் நிராகரிக்கப்படக்கூடாது.
    உங்கள் ஆசிகள்...வாழ்த்துக்கள்...என் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும்.

    ReplyDelete
  7. //புதிய உலக சினிமா டிவிடி விற்ப்பதுக்கு படாதபாடு பட்டேன்.//.
    நிறைய மலையாள படங்கள் உலக சினிமா தரத்துக்கு இருப்பதால் ஏனோ அவர்கள் தனியாக உலக சினிமாவை தேடி வாங்குவது இல்லை போலும்..

    ReplyDelete
  8. கேரளா பற்றிய தகவல்கள் அருமை!
    என்ன செய்வது நாம் சந்திக்கும் சிலரை மட்டுமே வைத்து ஒட்டுமொத்தமாக எடை போட வேண்டியுள்ளது!

    ReplyDelete
  9. யாரும் யாருக்கும் எதிரி இல்லை...எல்லாம் சூழ்நிலைகளே முடிவு செய்கிறது மாப்ள!

    ReplyDelete
  10. கண்டிப்பா இந்த முறை கிடைக்கும் :) நாம சந்திக்கிறோம்.. :)

    ReplyDelete
  11. ராஜ் சொன்னது...
    //நிறைய மலையாள படங்கள் உலக சினிமா தரத்துக்கு இருப்பதால் ஏனோ அவர்கள் தனியாக உலக சினிமாவை தேடி வாங்குவது இல்லை போலும்..//

    இல்லை நண்பா...புதிய உலக சினிமா பற்றிய பரப்புரையை அவர்களது வெகு ஜன ஊடகங்கள் செய்வதில்லை.பிலிம் சொசைட்டிகளும் செயல் இழந்து கிடக்கின்றன.
    இப்போது மலையாள சினிமா உலகில் மசாலா படங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.
    விஜய் படத்தையும்,தெலுங்கு டப்பிங் படத்தையும் போட்டி போட்டு பார்க்கின்றனர்.
    மக்கள் மசாலா படங்கள்தான் பார்க்க வேண்டும் என்று ஆளும் அதிகார வர்க்கம் திட்டம் போட்டு செயல் படுத்தி வருகிறது.

    ReplyDelete
  12. ஜீ சொன்னது...
    //கேரளா பற்றிய தகவல்கள் அருமை!
    என்ன செய்வது நாம் சந்திக்கும் சிலரை மட்டுமே வைத்து ஒட்டுமொத்தமாக எடை போட வேண்டியுள்ளது!//
    பாராட்டுக்கு நன்றி நண்பரே!
    அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது.ஆங்கில புலமை மிக்க இரு மலையாளிகள் உரையாடும்போது தாய் மொழியிலேயே உரையாடும் பண்பை...
    ஆங்கிலம் தெரிந்த தமிழர்கள் உடனடியாக காப்பியடித்தாக வேண்டும்.

    ReplyDelete
  13. விக்கியுலகம் சொன்னது...
    //யாரும் யாருக்கும் எதிரி இல்லை...எல்லாம் சூழ்நிலைகளே முடிவு செய்கிறது மாப்ள!//

    சத்தியமான வார்த்தைகள் நண்பரே!

    ReplyDelete
  14. கனகு சொன்னது...
    //கண்டிப்பா இந்த முறை கிடைக்கும் :) நாம சந்திக்கிறோம்.//

    நல்வாக்கு சொன்ன கனகு வாய்க்கு ஊட்ட... கிருஷ்ணா ஸ்வீட்டோடு வருகிறேன்.

    ReplyDelete
  15. கேரளாவுல நிறைய சீப் தான்

    ReplyDelete
  16. உங்களின் வலைப் பதிவை கடந்த சில மாதங்களாக படித்து வருகிறேன். சொல்ல போனால் நீங்கள் என் வலைபதிவுக்கு ஒரு பெரிய உத்வேகம். தங்களின் இப்பணியை மேலும் தொடர வாழ்த்துக்கள். முடிந்தால் உங்களை உங்கள் கடையில் வந்து சந்திக்கிறேன்.

    ReplyDelete
  17. சி.பி.செந்தில் குமார்
    //கேரளாவுல நிறைய சீப் தான்//
    சிபி சொன்னது சரியே....கேரளாவில் பிகர்,ட்ரிங்ஸ் சீப்தான்னு நீங்க சொன்னதை நான் எழுத மறந்து விட்டேன்.

    ReplyDelete
  18. @ராஜவேலு சொன்னது....
    //உங்களின் வலைப் பதிவை கடந்த சில மாதங்களாக படித்து வருகிறேன். சொல்ல போனால் நீங்கள் என் வலைபதிவுக்கு ஒரு பெரிய உத்வேகம். தங்களின் இப்பணியை மேலும் தொடர வாழ்த்துக்கள். முடிந்தால் உங்களை உங்கள் கடையில் வந்து சந்திக்கிறேன்.//

    உங்கள் பாராட்டுக்கு தகுதி உடையவனாக என்னை வளர்த்து கொள்கிறேன்.
    மிக்க நன்றியுடன் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. சார், நானும் கொச்சினில்தான் இருக்கேன். இங்க தமிழ் புத்தக்கம் கிடைப்பது ரொம்ப அறிதாகத்தான் இருக்கு. ஆனந்த விகடன் கிடைக்குது ,குமுதம் கிடைக்குது ஏன்... துக்ளக் கூட கிடைக்குது. இதை தவிர வேற புத்தகம் கிடைப்பதில்லை. எதாவது பார்த்து செய்யுங்க...

    ReplyDelete
  20. சென்னை புத்தக கண்காட்சியில் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறோம்

    ReplyDelete
  21. Hi,

    I'm a world cinema fanatic, who is residing in Trivandrum for years. I'm happy to see great collection of movies from your stall, during the Book exhibition at Tirupur [28th February]. I also purchased two DVDs from your stall. [The great train robbery & The five men army].

    First of all, I would like to thank you for having such a great collection of Akira Kurosawa's master pieces. I was admired on seeing the living DVD copies of Rashomon, Seven samurai, City of God, The Good, Bad and Ugly, Ben-Hur, Singing in the Rain and so on. Your stall, still exhibits that there are people who likes real movies, than the fashionable sci-fi / action movies.

    Keep your good work and keep the real cinemas alive.

    PS : Ayya.. naanum pacha tamishan dhaanayya. Indha valayilae tamizhil evvaru 'Comments' ezhuduvadhu endru theriyavillai. Aagayal dhaan aangilathil yezhudiyullaen. Siramathirku mannikavum.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.