Jun 10, 2011

Life Is Beautiful-1997[இத்தாலி]துன்பம் வரும்போது சிலர் சிரிப்பார்..பலர் அழுவார்..இவன் ?

துனபம் வரும்போது சிரிங்க என்றார் வள்ளுவர்.
இப்படத்தின் நாயகன்...
 மிஸ்டர்.வள்ளுவர் சொன்னதை ஒவர்டேக் பண்ணி புதிய சரித்திரம் படைக்கிறான்
தனக்கு துன்பம் வரும் போது பிறரை சிரிக்க வைத்து மகிழ வைப்பதை கலையாகக்கொண்டு வாழ்ந்து மறைகிறான்.
Vincenzo Cerami துணையோடு எழுதி இயக்கி நடித்து உலகின் அத்தனை
விருதுகளையும் வாரிக்குவித்தார் Roberto Benigini

இப்படத்தை கோணங்கள் பிலிம் சொசைட்டியில் திரையிட்டபோது மிகப்பிரபலங்கள் வந்திருந்தார்கள் .படத்தின் இறுதியில் அவர்கள் சொன்னக்கருத்தை இப்பதிவில் காணலாம்.

இப்படத்தில் தந்தை,தாய்,மகன் என குடும்பமே கொடுஞ்சிறையில் தள்ளப்படுவதை கண்டு நான் நடுங்கிப்போனதை உடன்பிறப்பே உணர்ந்திருப்பாய்.ஆனால் சிறையில் தள்ளிய கொடியவர்களோடு கூட்டணி கண்டு மண்ணோடு மண்ணாய் மக்கிப்போனவன் உன் அண்னன் என நாளை வரலாறு இயம்பும்.  இது போன்ற படங்கள் தமிழில் தொடர்ந்து வருமானால் தமிழ் திரைஉலகமும் எனக்கு ஒய்வு கொடுத்து விட்டதை உணர்ந்து விடை பெற தயாராகி விட்டேன்.

கடந்த ஆட்சியில் இந்த சொசைட்டி மாதம் நான்கு படங்களை திரையிட்டு மக்களை சொல்லொணாத்துயரத்தில் ஆழ்த்தி வந்ததை நான் அறிவேன்.புதிய சட்டமன்ற வளாகத்தை ஒழித்து,சமச்சீர்கல்வியை வங்காள விரிகுடாவில் வீசி.... மக்களுக்கு பல நன்மைகளை தொடர்ந்து எனது கழக அரசு செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.இது போன்ற சொசைட்டிகளையும் நாடெங்கும் தடைசெய்து ஆணையிடுகிறேன்.அண்ணா நாமம் வாழ்க.

இந்தப்படம் என் நாட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பதை அறிந்து உள்ளூர மகிழ்ந்தாலும் வெளியில் காட்டமாட்டேன்.இப்படத்தில் யூதர்களை அழித்து ஒழிக்கும் காட்சிகளை மிகவும் ரசித்தேன்.இலங்கை தமிழர்களை அழித்தொழிப்பதை நண்பர் ராஜபக்சே படமெடுத்து அனுப்பியுள்ளார்.அது இதை விட சூப்பர்.

ண்ணா...இப்படத்துல உள்ள நல்ல சீன் எல்லாத்தையும் உருவி என் படத்துல வச்சுட்டேங்கண்ணா...குருவி,அழகிய தமிழ் மகன் படமும் பாருங்க...
அது என்னோட ஒலக சினிமா.

அல்லோ...அல்லல்லோ..
.இங்க...இங்க...
இங்க பாருங்க...
பேசுறது மட்டும்தான் கேக்கும்...பாக்க முடியாது...மலேசியாவில் இருக்கேன்.
இந்தப்படத்தோட ஹீரோவும் நானும் ஒண்ணு.எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரி நடிப்போம்.
ஆனா ஒண்ணு சொல்றன்...இந்த ஜெர்மன் நாசிகளை விட மோசமான பாவிங்க நம்ம தமிழங்க...
நான் போற இடத்துக்கெல்லாம் எவ்வளவு கூட்ட்ம்..
கூட்டம் கூட்டமா வந்தாங்க..
 சிரிச்சாங்க..
ஒட்டை மாட்டும் மாத்தி குத்து குத்துன்னு குத்திட்டாங்க.
 மாப்பு...வச்சீட்டீங்களாடா ஆப்பு

சார்...சார்...
ஸாரி சார்...நல்லா தூங்கிட்டிருந்தீங்க...டிஸ்டர்ப்பண்ணிட்டேன்.உங்ககிட்ட எல்லா டிவிடியும் கிடைக்கும்னு பிரண்ட் சொன்னான்
அண்ணா ஹசாரே,பாபா ராம் தேவ் காமெடி சீரியல் டிவிடி இருக்கா?

8 comments:

  1. தெளிவா குழப்பிட்டீங்க!!
    ஆமா இந்த படத்தோட பெயரை சொல்லித்தான் இந்த பதிவை போடணுமா??
    இதுக்கு "இத்தாலி"ன்னு வேற Label போட்டு வைச்சிருக்கீங்களே..

    ReplyDelete
  2. எனக்கு மிகப் பிடித்த படங்களில் ஒன்று....

    Roberto Benigini + பிடித்தமான இயக்குனர் Jim jarmuschயோடு சேர்ந்து கலக்கிய Down by law மற்றும் Coffee & Cigarettes (சின்ன வேடம்தான் என்றாலும்)....எனக்கு ரொம்ப பிடிக்கும்..நீங்க பாத்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன்....

    தலைப்ப பாத்துட்டு நா என்னமோ ஏதோன்னோ ஓடி வந்தா......
    ஜோக் சொல்லியிருகேன் .....சிரிங்க...மாதிரி இருக்குதுங்கோ.......

    ReplyDelete
  3. நண்பரேJZ... ஆரம்பிக்கும் போது எப்பவும் போல சீரியசா எழுத ஆரம்பிச்சேன்.இந்தப்படத்துக்கு எல்லோரும் எழுதியிருப்பார்கள்.அதிகம் பேர் இதை பார்த்தும் இருப்பார்கள்.எனவேதான் நடையை மாற்றினேன்.கருந்தேள் பிளாக்கில் கமெண்ட் போடும் போது முயற்ச்சித்தேன்.எப்பவுமே அரசியலை கலப்பது எனக்கு பிடித்த ஒன்று.இது எனது கன்னி முயற்சி.

    ReplyDelete
  4. ஜீ வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. கொழந்தாய்...
    //Roberto Benigini + பிடித்தமான இயக்குனர் Jim jarmuschயோடு சேர்ந்து கலக்கிய Down by law மற்றும் Coffee & Cigarettes (சின்ன வேடம்தான் என்றாலும்)....எனக்கு ரொம்ப பிடிக்கும்..நீங்க பாத்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன்//
    நான் இந்தப்படங்கள் பார்க்கவில்லை.ஆனால் பார்க்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது.

    ReplyDelete
  6. //தலைப்ப பாத்துட்டு நா என்னமோ ஏதோன்னோ ஓடி வந்தா......
    ஜோக் சொல்லியிருகேன் .....சிரிங்க...மாதிரி இருக்குதுங்கோ....//
    கொழந்த...நிச்சயமா தெரியும்...நான் எழுதியதை படித்தால் சிரிப்பு வராது.ஆனால் நீங்கள் வாய் விட்டு சிரித்து என்னை பாராட்டும் தகுதியை நிச்சயம் அடைவேன்.

    ReplyDelete
  7. // ஆனால் நீங்கள் வாய் விட்டு சிரித்து என்னை பாராட்டும் தகுதியை நிச்சயம் அடைவேன் //

    Much words..அய்யய்யோ......என்ன சார்...நா ஜோவியலா சொன்னா......தகுதி அது இதுன்னுலாம் சொல்லிட்டீங்க.........

    ReplyDelete
  8. பதற வேண்டாம் குழந்த...உக்களுக்கு சொல்வது போல் நேயர்களுக்கு அளித்த விளக்கம் அது.மேலும் இந்தப்பதிவு தினசரி அரசியலை உற்று நோக்குபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.கிட்டத்தட்ட எழுத்தில் மிமிக்ரி முயற்ச்சி செய்துள்ளேன்.ஒரு நண்பர் இப்பதிவை பார்த்து விட்டு சொன்னார்.மூன்று பேரை மட்டுமே அவரால் புரிந்து கொள்ள முடிந்தது என்றார்.குமுதம் ஆறு வித்தியாசத்தை விட எளிதாகப்புரிவார்கள் என நான் நினைத்தது அட்டர் ப்ளாப்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.