Sep 23, 2012

In A Better World - 2010 \ Denmark \ அன்பே ஆயுதம்நண்பர்களே...பழைய பதிவுகளின் லேபல்களை ஒழுங்கு செய்து கொண்டிருந்தேன்.
தவறுதலாக இப்பழைய பதிவு...வெளியாகி விட்டது.
மன்னிக்கவும்.பின்லேடனை ஒழித்து கட்டி விட்டதாக மார் தட்டுகிறது அமெரிக்கா.
பிணத்தைக்கூட கடலில் வீசி விட்டோம் என்று கொக்கரிக்கிறார்  ‘ஜனநாயகச்சக்ரவர்த்தி’ ஒபாமா.

இரட்டை கோபுரத்தை தகர்த்தது தீவிரவாதம் என்றால்
வியட்நாமில்....
ஆப்கானிஸ்தானில்....
ஈராக்கில்....
லிபியாவில்....
செய்ததற்கு பெயர் ஜனநாயகமா?

உலகத்தின் அனைத்து தீவீரவாதத்துக்கும் குத்தகைக்காரனான...
 ‘அமெரிக்கா’ திருந்தி...
அணு ஆயுதங்களையெல்லாம் அழித்து விட்டு...
அன்பை ஆயுதமாக தரித்தால்....?

இதைத்தான் In A Better World என்கிற திரைப்படம் பாடமாக போதிக்கிறது.
தனது இயக்கத்தால்...
இப்படத்திற்க்கு ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்
இரண்டு அவார்டுகளையும்...
ஒருசேர வாங்கி தந்திருக்கிறார் இயக்குனர் Sussanne Bier.
[நம்மூர் சுகாசினி,ரேவதி எங்கே?]


இப்படத்தின் கதை இரண்டு டிராக்கில் பயணித்து...
அன்பென்கிற ஜங்சனில் இணைந்து...
மனிதநேயம் என்கிற ஒரே டிராக்கில் பயணிக்கிறது.


அண்டன்... சூடானில் பணி புரியும் டாக்டர்.
இவர் பணி புரிவது அப்பல்லோ மாதிரி பைவ் ஸ்டார் மருத்துவமனை அல்ல.
புழுதி பறக்கும் வெட்ட வெளியில்...
சூரியனையும்,மழையையும்...பெயருக்கு மறைப்பது போல்...
பாவ்லா காட்டும்...  ‘ கொட்டகைதான்’ மருத்துவமனை.

அண்டன்,
கழுத்தில் ஸ்டெத்தும்...
இதயத்தில் மனித நேயமும் மட்டுமே வைத்து பணி புரிகிறார்.
கள்ளமில்லாத அந்த கருப்பின மக்களின் புன்னகையை  பீஸாக பெற்றுக்கொள்கிறார்.


அண்டனின் குடும்பம் டென்மார்க்கில்.
மனைவியும் டாக்டர் ஜாதியே...


இவர்களது விவாக பந்தம்... ‘ரத்து’ என்கிற புள்ளியை நோக்கி
பிடிவாதமாக நகருகின்றது.
இவர்களது மூத்த மகன்தான் எலியாஸ்.
இவனுக்கு துணையாக பள்ளியில் வந்து சேருகிறான் கிரிஸ்டன்.


கிரிஸ்டன் லண்டனில், தாயை கேன்சருக்கு தின்னக்கொடுத்து விட்டு தந்தையோடு தாயகம் திரும்பியவன்.
தாயை சரியாக பராமரிக்காமல் சாவில் தள்ளியது தந்தையே என்று உறுதியாக நம்புகிறான் கிறிஸ்டன்.


இந்த மன அழுத்தம்...
வன்முறையை வழிமுறையாக்குகிறது.
நண்பன் எலியாசை அடித்த...போக்கிரி மாணவனுக்கு ‘மரண அடியை’ பரிசளிக்கிறது.


வன்முறை பழக்கம்...வழக்கமாகி...எலியாசின் தந்தையை அடித்த ரவுடியின் காரை பாம் வைத்து தகர்ப்பதில் முடிகிறது.
எதிர்பார்த்தபடி... கார் வெடிப்பது நடக்கிறது.
எதிர்பாராதபடி... எலியாஸ் விபத்தில் சிக்கியதும் நடக்கிறது.

எலியாஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறான்.
எலியாஸ் உயிர் பிழைத்தானா?
கிறிஸ்டன் திருந்தினானா?
விடை தருகிறது கிளைமாக்ஸ்.

இப்படத்தில் வரும் இயற்கையழகு காட்சிகள்...
பல அர்த்தத்தை பொதிந்து வருகின்றது.
இதற்காகவும்...
ஆபாசமில்லா...காவியத்தன்மை இருப்பதாலும்... குடும்பத்தோடு பார்க்கலாம்.

 ‘உலக தாதா’ ஒபாமாவுக்கு... இப்படத்தின் டிவிடி அனுப்ப உத்தேசம்.

படம் பெற்ற விருதுகள் பட்டியல்...விக்கிப்பீடீயா உபயத்தோடு.

 On 19 January 2011, it made the short list for Best Foreign Language Film[11] and on 25 January, it was selected as one of the final five nominees[12] and won as the Danish entry for the Best Foreign Language Film at the 83rd Academy Awards.[13] The film also won for Best Foreign Language Film at the 68th Golden Globe Awards.[14] Additionally, it won:
 • Rome International Film Festival 2010:[15]
  • Marc’Aurelio Audience Award for Best Film
  • Marc'Aurelio Grand Jury Award
 • Sevilla Festival de Cine 2010:[16]
  • Best Director
  • Best Screenplay
 • Tallinn Tarta, Black Nights Film Festival 2010:[15]
  • Best Male Actor
 • Thessaloniki International Film Festival 2010:[15]
  • Creative Excellence Award

படத்தின் முன்னோட்டம்... கானொளியில் காண்க.


5 comments:

 1. //[நம்மூர் சுகாசினி,ரேவதி எங்கே?]//

  என்ன இப்புடி சொல்லிட்டீங்க? தனிரத்னம் படத்துல சுகாசினி பிசி. மொக்கைத்தனமா டயலாக் எழுதி , அது உலகிலேயே சிறந்த படம்னு விளம்பறப்படுத்தனுமில்ல. அதுக்குதான்

  ReplyDelete
 2. //ஒபாமாவுக்கும் ஒரு டிவிடி அனுப்ப உத்தேசம். //

  இத மட்டும் செஞ்சீங்க, அப்புறம் வீட்டை சரௌன்ட் பண்ணிருவாங்க. யோசிக்கிற மக்கள் இருக்கிறது அரசுக்குப் புடிக்காது தெரியுமில்ல :-)

  ReplyDelete
 3. மணிரத்னம் பாவங்க...அவரே ஒரு ஹிட் கொடுக்க அல்லாடிட்டு இருக்காரு.
  //வீட்டை சரௌன்ட் பண்ணிருவாங்க//
  இதுல இப்படியெல்லாம் சைடு எபக்ட் வருமா?

  ReplyDelete
 4. உலக சினிமா டி வி டி க்கள் சென்னையில் எங்கு கிடைக்கும்? குறைந்த விலையில் - மன்னிக்கவும் என் பண வசதி அப்படி...

  ReplyDelete
  Replies
  1. சரவணா, பர்மா பஜார் போனீங்கன்னா 30 ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா ஒரு சில கடைகள்ள தான் நிறைய படங்களும், நல்ல தரத்திலும் கிடைக்கும். நிறைய டிவிடி வாங்குனா விலை குறைவாகவும் தருவாங்க. அலி பாய் கடைன்னு ஒண்ணு இருக்கு (GPO வுக்கு நேர் எதிரே, ஆனா கடை பேரு அலி பாய்னு இருக்காது). அங்க நல்ல படங்கள் எல்லாம் கிடைக்கும். அவங்களே கூட சில நல்ல படங்களை சொல்லி எடுத்து தருவாங்க.

   Delete

Note: Only a member of this blog may post a comment.