Nov 2, 2010

Shine-1996 இசைமேதை



மேதைகள் பிறப்பதில்லை...உருவாக்கப்படுகிறார்கள் என்பார்கள்.இதற்க்கு சரியான உதாரணம் David Helfgott.

இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பியோனோ மேதையின் வாழ்க்கை பாடம்தான் படம்.

ஆஸ்திரேலியாவில் உருவான இப்படத்தை இயக்கியவர் Scot Hicks

கொட்டும் மழையில் டேவிட் அறிமுககாட்சியிலேயே அவரது காரெக்டரின் எக்ஸெண்ட்ரிக் தன்மையை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.பின்பு பிளாஷ்பேக் உத்தியில் டேவிட்டின் கடந்தகால வாழ்க்கை அற்ப்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.சிறு வயதிலேயே டேவிட் படிப்பது... விளையாடுவது... தூங்குவது.... எல்லாமே பியோனோ.உள்ளூர் போட்டிகளில் வெற்றி வாகை சூடியதன் பயனாக நல்ல பியோனோ டீச்சர் பரிசாக கிடைக்கிறார்.14 வயதில் அமெரிக்கா செல்ல வாய்ப்பு வருகிறது.தந்தை சர்வாதிகாரத்துடன் அனுப்ப மறுக்கிறார்.பியோனோடீச்சர் இவனை அனுப்பி வைக்க சர்வ வழிகளிலும் போராடுகிறார்.தாயாரும் மறுக்கிறார்... “அவனை விட்டுவிடுங்கள்...இன்னும் அவன் படுக்கையை ஈரமாக்குகிறான்”

19வயதில் லண்டன் ராயல் காலேஜ் ஆப் மியூசிக் அழைக்கிறது.இப்போது தந்தையின் எதிர்ப்பை மீறி புறப்படுகிறது இந்த பியோனோ புயல்.இவனது இசை திறமை வளர்கிறது..... கூடவே எக்ஸெண்ட்ரிக் தன்மையும்.உதாரணமாக ஒரு காட்சி... எதிரில் வரும் பெண்ணுக்கு வணக்கம் சொல்கிறான்.அந்தப்பெண்ணோ பேயைக்கண்டது போல் மிரண்டு ஓடுகிறார்.காரணம் மேலே புஃல்சூட் அணிந்த ஜேம்ஸ்பாண்ட்...கீழே ஜட்டி அணியாத ஆதாம்.

Rachmaninoffஎன்ற மேதையின் 3வது இசைக்கோர்வையை வாசித்து பதக்கம் வெல்கிறான்.ஆனால் முற்றிலும் மனநிலை பிறண்டு போகிறான்.மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடையாமல் திரும்புகிறான்.முறிந்த மனதிற்க்கு மூலிகையாக சில்வியா வருகிறாள்.இவனது வெற்றிக்கு பின்னால் நிற்க்கிறாள்.
இப்படத்தின் இளையராஜா David Hirschfelder .இவரது இசைக்காக ஒருமுறை.....

டேவிட்டாக வாழ்ந்தவர்Geoffrey Rush.இவரது நடிப்புக்காக ஒரு முறை..... என பலமுறை பார்க்கலாம்....தப்பில்லை.

6 comments:

  1. நல்ல அறிமுகம்!
    Geoffrey Rush-ன் நடிப்பை House on Haunted Hillல் பார்த்துள்ளேன்.

    Shakespeare in Love, Quills, The Life and Death of Peter Sellers ஆகிய படங்களில் அவர் நடிப்பு நன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. Thanks a lot for sharing sir.

    ReplyDelete
  3. தலைவரே நல்ல அறிமுகத்துக்கு நன்றி.விரைவில் இதையும் பார்ப்பேன்.

    ReplyDelete
  4. நன்றாக இருந்தது... பதிவிறக்க லிங்குகள் எங்கே...

    ReplyDelete
  5. நன்றி கீதப்பிரியன்&பிரபாகரன் பதிவிறக்கம் பற்றிய தகவல்களுக்கு கீதப்பிரியனிடம் தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.