
எல் வயலின் மிகச்சிறிய படம்.ஆனால் மிகச்சிறந்த படம்.மெக்சிகோவில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் கதை நிகழும் நாடு எது என்று சுட்டிக்காட்டவில்லை.இதனாலேயே இப்படத்தை பாதிக்கப்பட்ட எந்த ஒரு நாட்டோடும் பொருத்தி பார்க்க முடியும்.இலங்கை என்றால் இலங்கை .....பர்மா என்றால் பர்மா.சொந்த நாட்டு ராணுவத்தாலேயே பழி வாங்கப்படும் அனைத்து நாட்டு மக்களுக்கும் இப்படத்தை அர்ப்பணித்துள்ளார் இயக்குனர் Francisci Vargas

படத்தின் டைட்டில் காட்சியிலேயே ராணுவத்தின் வன்முறை தொடங்கி விடுகிறது.ஆண்களுக்கு அடி உதை...பெண்களுக்கு வன் புணர்ச்சி..அதிர்ச்சிமிக்க இக்காட்சிகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க வருகிறது ஒரு வயலின் இசை.

Don Plutarco ஊனமுற்ற தனது ஒரு கையில் வயலின் போவைக்கட்டிக்கொண்டு அற்ப்புதமான இசையை தானமாக வழங்குகிறார்.மகன் கிடார் இசைக்க.... பேரன் பொதுமக்களிடம் கையேந்தி பணத்தை சன்மானமாக பெறுகிறான்.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்தது இதற்க்காகவா???????மகன் கெரில்லாப்போராளிகளில் ஒருவன் என்பதும் ஆயுதம் வாங்க வந்திருப்பதும் அடுத்தடுத்த காட்சிகள் புலப்படுத்துகின்றன.திரும்பி கிராமத்துக்கு வரும்போது எதிரில் கிராமமே காலியாகி ஒடி வந்து கொண்டு இருக்கிறது.ராணுவம் அந்த மலை கிராமத்தை வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது. டான் ப்ளுட்டார்க்கோவின் மருமகள்,பேத்தி உட்ப்பட பெரும்பாலோர் ராணுவத்தால் இழுத்து செல்லப்படுகின்றனர்.டானின் போராளி மகன் தப்பித்து போராளிக்குழுவினரோடு கலக்கிறான்.

டான் பக்கத்து கிராமத்து பணக்காரனிடம் நிலத்தை அடமானமாக வைத்து ஒரு கோவேறு கழுதையை பெற்று வருகிறார்.தனது வயலினை மட்டும் எடுத்துக்கொண்டு கிராமத்தை ஆக்கிரமித்திருக்கும் ராணுவத்தினரை சந்திக்க கழுதை மேல் சவாரி செய்து வருகிறார்.ராணுவம் கைது செய்து கேப்டன் [விஜயகாந்த் அல்ல]முன்னால் நிறுத்துகிறது.

என் சோளக்காடு அறுவடைக்கு காத்திருக்கிறது.பாராமரிக்க வந்தேன்.
கையில் என்ன?
வயலின்.
எங்கே வாசி?
இசை இரும்பு இதயத்தை கரும்பாக மாற்றி டானின் வசமாக்குகிறது.தினமும் டான் சோளக்காட்டை பார்வையிடலாம் பதிலுக்கு தனக்கு வயலின் கற்று தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறான்.
டான் சோளக்காட்டை பார்வையிட்டு அங்கே ரகசியமாய் புதைக்கப்பட்டிருந்த ஆயுதப்புதையலில் இருந்து கொஞ்சம் புல்லட்களை எடுத்து வயலின் பாக்சுக்குள் வைத்து மறைத்து கடத்துகிறார்.

கடத்தல் வெற்றிகரமாக நடந்ததா?
டான் மாட்டிக்கொண்டாரா?
போராளிக்குழுக்கள் என்ன ஆனது?
கிளைமாக்ஸ் விவரிக்கிறது ....படத்தை பாருங்கள்.
பிளாக்&ஒயிட்டில் படமாக்கி கலைபடைப்பாக நமக்கு சமர்ப்பித்தவர் ஒளிப்பதிவாளர் Martin Boege. டான் ப்ளுட்டார்க்கோவாக வாழ்ந்திருப்பவர் Angel Tavira.
இவரது முகத்தில் முதுமை வரைந்த சுருக்கங்கள்.... அல்ல அல்ல ...அது அந்த மலைவாழ் மக்களின் நெருக்கடிகள்.சமகால அரசியல் படங்களில் இது ஒரு மாஸ்டர்பீஸ்.எல் வயலினை தனது முதல் படைப்பாக தந்து உலகமெங்கும் 32 விருதுகளை வாரிக்குவித்திருக்கிறார் எழுதி இயக்கி தயாரித்த Francisco Vargas.

இப்படத்திற்க்கு போட்டியாக 2005 லேயே வ குவார்ட்டர் கட்டிங் தயாரித்து மோத விட்டிருக்கவேண்டும்.ஜஸ்ட் மிஸ்.....